நரேந்திர மோடி : இந்தியாவின் ஏரியல் ஷரோன்
18.04.2014 
                          மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,

பாராளுமன்ற தேர்தலின் ஓட்டுப் பதிவு நாள் நெருங்கிய கட்டத்தில் நாம் எல்லோரும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

இஸ்லாத்தையும், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் அழிப்பதை இலட்சியமாகக் கொண்டு இயங்கும் அரசியல் கட்சி ஒன்று ஆட்சியை பிடிக்கும் என்று ஊடகங்கள் கூறிவரும் நிலையில், முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் உதவியின் மீதும் நமது நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

இந்த கட்சியினர் உதவி செய்வார்கள், அந்த அமைப்பினர் நமக்கு ஆதரவாக இருப்பார்கள், அந்தக் கட்சியினர் நம்மை காப்பார்கள் என்று மற்றவர்களின் மீது நாம் நம்பிக்கை வைப்பதை விடவும், மற்றவர்களின் உதவிகளையும், ஆதரவுகளையும் நாம் தேடுவதை விடவும் படைத்த வல்லோன் அல்லாஹ்வின் உதவியை நாம் அதிகம் தேட வேண்டும்.

அல்லாஹ்வின் உதவியே முழு பயனைத் தரும்

இந்திய முஸ்லிம்களாகிய நாம், மிகவும் நெருக்கடியில் இருக்கும் இத்தருணத்தில் ஒன்றை மனதில் வைக்க வேண்டும்.

உதவிகளில் அல்லாஹ்வின் உதவி மட்டுமே முழுமையான பயனை அளிக்கும். முஃமின்களாகிய நமக்கு அவனின் உதவி மிகவும் அவசியமானதும் கூட.

ஒருவருக்கு அல்லது ஒரு சமுதாயத்துக்கு அல்லாஹ்வின் உதவி கிடைத்து விட்டதெனில், அவரை அல்லது அச்சமுதாயத்தை உலகமே திரண்டு எதிர்த்தாலும் தோற்கடிக்க இயலாது.

அவ்வாறே ஒருவருக்கு அல்லது ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ்வின் உதவி நிறுத்தப்பட்டு விட்டதெனில், பக்கபலமாக ஏராளமான மனிதர்களும் – ஆயுதங்களும் உடனிருந்தாலும் அவரால் அல்லது அச்சமுதாயத்தினால் வெற்றி பெற இயலாது.

இவை திருக்குர்ஆன் மொழிந்துள்ள உண்மை வார்த்தைகள். துளியளவும் இதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

قال الله تعالي: إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُون 3:160

قال الله تعالي إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ

وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
 8:10,11

சிறுபான்மையினருக்கு வெற்றியைத் தரும் அல்லாஹ்

சிலசமயம் வலிமையும், பண – படை பலமும் கொண்ட பெரும்பான்மையினருக்கு எதிராக இறையச்சம் கொண்ட சிறுபான்மையினரை அல்லாஹ் வெற்றி பெற வைத்துள்ளான்.

வரலாற்றில் தாலுாத்தின் படையினர் இதற்கு உதாரணம்.

قال الله تعالي :فَلَمَّا فَصَلَ طَالُوتُ بِالْجُنُودِ قَالَ إِنَّ اللَّهَ مُبْتَلِيكُمْ بِنَهَرٍ فَمَنْ شَرِبَ مِنْهُ فَلَيْسَ مِنِّي وَمَنْ لَمْ يَطْعَمْهُ فَإِنَّهُ مِنِّي إِلَّا مَنِ اغْتَرَفَ غُرْفَةً بِيَدِهِ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آَمَنُوا مَعَهُ قَالُوا لَا طَاقَةَ لَنَا الْيَوْمَ بِجَالُوتَ وَجُنُودِهِ قَالَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو اللَّهِ كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ2:249

முஃமின்கள் மூலம் உதவி

நாம் உண்மை முஃமின்களாக வாழ்ந்தோமெனில், அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிட்டும். அல்லாஹ்வின் உதவி பல வழிகளில் கிடைக்கலாம். மனிதர்களின் மூலம் கிடைப்பதாக இருப்பின் அது முஃமின்களின் வழியாக மட்டுமே கிடைக்கும்.

வெற்றியின் வழியும், அதன் தளவாடங்களும் முஃமின்களே.

قال الله تعالي هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ8:62

மலக்குகளின் மூலம் உதவி

வல்லோன் அல்லாஹ் மனிதர்களின் வழியில் மட்டுமல்ல.. மலக்குகளின் மூலமாகவும் உதவி செய்வான். வானில் இருந்து இறங்கி அல்லாஹ் நாடியவர்களுக்கு அவர்கள் உதவி செய்வார்கள்.

இது பத்ரு, கன்தக் (அகழ்) , ஹுனைன் யுத்தங்களில் நடந்தது.

قال الله تعالي إِذْ يُوحِي رَبُّكَ إِلَى الْمَلَائِكَةِ أَنِّي مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِينَ آَمَنُوا
8:12
قال الله تعالي ثُمَّ أَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَى رَسُولِهِ وَعَلَى الْمُؤْمِنِينَ وَأَنْزَلَ جُنُودًا لَمْ تَرَوْهَا وَعَذَّبَ الَّذِينَ كَفَرُوا وَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ9:26

சுற்றுச் சூழலின் மூலம் உதவி

இங்கேயுள்ள அரசியல் சூழ்நிலைகளை கண்டு முஸ்லிம்களாகிய நாம் அஞ்சத் தேவையில்லை. இந்தச் சூழ்நிலை நிச்சயம் மாறும். நாம் உண்மை முஃமின்களாக இருந்தால், நமக்கு சாதகமான சூழ்நிலைகளை அல்லாஹ் ஏற்படுத்தவே செய்வான்.

தோல்வியின் விளிம்பில் இஸ்லாமியர்கள் நின்ற சில சமயங்களில் சுற்றுச் சூழலை மாற்றி அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உதவி செய்துள்ளான்.

முஸ்லிம்களுக்கு சாதகமாகவும், எதிரிகளுக்கு பாதகமாகவும் சூழ்நிலை மாற்றப்படுவதின் மூலமாகவும் இவ்வுதவி முஃமின்களுக்கு கிடைக்கும்.

வரலாற்றில் கன்தக் யுத்தமும், பத்ரு யுத்தமும் இதற்கு ஆதாரம்.

பத்ருப் போரில் அன்று இரவு பொழிந்த மழையே முஃமின்களுக்கு வெற்றிக்கான அருளாக அமைந்தது.

قال الله تعالي إِذْ يُغَشِّيكُمُ النُّعَاسَ أَمَنَةً مِنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِنَ السَّمَاءِ مَاءً لِيُطَهِّرَكُمْ بِهِ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطَانِ وَلِيَرْبِطَ عَلَى قُلُوبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْأَقْدَامَ8:11

இவ்வாறே கன்தக் போரில் சூழ்நிலையை எதிரிகளுக்கு பாதகமாக்கி முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை தந்தான்.

அப்போரில் கடும் புயலை அல்லாஹ் வீசச் செய்தான். அது முஷ்ரிக்குகளின் கூடாரங்களை பிய்த்து எறிந்ததோடு, அவர்களை நாலாபுறமும் சிதறடித்தது. அவர்கள் முற்றுகையை முடித்துக் கொண்டு மக்காவை நோக்கி விரண்டோடிட அப்புயலே காரணமாக அமைந்தது. பின்வரும் திருக்குர்ஆன் வசனம் இதற்கு ஆதாரம்.

قال الله تعالي فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا 33:9

முஃமின்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது

எக்காரணம் கொண்டும் முஃமின்களாகிய நாம் நம்பிக்கை இழக்கக்கூடாது. நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகள் வெற்றி பெற்று விடுவார்களோ என்று.

இச்சமயத்தில் ஹிஜ்ரத்தின் போது நமது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட இறைவன் மீதான நம்பிக்கை நமக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து மதீனா நோக்கிய ஹிஜ்ரத் பயணத்தில் சவ்ர் குகையில் தங்கியிருந்தார்கள். அச்சமயத்தில் நபியை தேடி எதிரிகளும் அங்கு வந்து விட்டார்கள்.

எதிரிகள் குகைக்கு வெளியே பேசியது உள்ளே நபி (ஸல்) அவர்களுக்கும், அன்னாரின் மீது உயிரையே வைத்திருந்த அன்புத் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கும் நன்கு கேட்கிறது.

அபூபக்கர் (ரழி) பதறுகிறார். அவர்கள் உள்ளே பார்த்து விட்டால் என்ன ஆகும்? என்று பயந்தவராக  நபி (ஸல்) அவர்களிடம் இவ்வாறு கூறுகிறார். “அவர்களில் ஒருவர் எட்டிப் பார்த்தால் நம்மை கண்டு விடுவார்!.”

அச்சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை ‘அவர்கள் உண்மையான இறைத்தூதர்’ என்பதற்குரிய அத்தாட்சி.

அபூபக்ரே! இரண்டு பேர் என்று ஏன் கூறுகிறீர்..? மூன்றாமவனாக அல்லாஹ் இருக்கின்றான்! (நூல் :புகாரி)

திருக்குர்ஆன் இதனை இப்படி எடுத்தியம்புகிறது. “தமது தோழரிடம் அந்நபி சொன்னார். கவலைப்படாதீர்.. அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்.” ( அல்குர்ஆன் 9:40)


கடினமான அத்தருணத்தில்  நமது நபி (ஸல்) அவர்களின் உள்ளம் எப்படி இத்துணை அமைதியாக இருந்தது? எதிரிகள் குகை வாசலில் நிற்கும் நிலையில், அவர்கள் எப்படி பதட்டப்படாமல் இருந்தார்கள்?

அல்லாஹ்வின் உதவியின் மீதான நம்பிக்கையே தவிர அதற்கு வேறு காரணம் இல்லை.

பண பலம், படை பலம், அதிகார பலம், அரசியல் பலம், பெரும்பான்மை பலம் ஆகியவை நமது எதிரிகளுடன் இருக்கலாம். ஆனால் நம்முடன் ‘அல்லாஹ் இருக்கின்றான்’ என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.



இந்தியாவின் ஏரியல் ஷரோன் மோடி

1982 ம் ஆண்டு ஷாப்ரா – ஷாத்திலா படுகொலை மூலம் புகழடைந்து பின்பு ஆட்சியை பிடித்தவர் இஸ்ரேல் பயங்கரவாதி ஏரியல் ஷரோன்.

2001 முதல் 2006 வரை பிரதமர் பதவி வகித்த இவர் வாழ்வின் கடைசிக் காலக்கட்டங்களில் சுமார் எட்டு ஆண்டுகள் கோமாவில் இருந்து இறந்து போனார்.

வெறுப்பை விதைத்து பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்து, பல பத்தினி முஸ்லிம்களை கற்பழிக்கப்பட காரணமாகி,  இப்போது பிரதமர் பிரதமர் பதவியை அடையத் துடிக்கும் மோடி, குஜராத் கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி இஸ்லாத்தை ஏற்றாலே தவிர அவருடைய பாவக்கறை அழியாது.

قال الله تعالي وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ 26:227








Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.