மன்னிப்பா – மரண தண்டனையா?
21.02.2014
by அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி
23 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள்
என்பதற்காக மரண தண்டனை கைதிகளை விடுவிடுத்திட நடந்த முயற்சிகள் மீண்டும்
நீதிமன்றத்தினால் இடைக்காலமாக தடை விதிக்கப்பட்ட நிலையில், நாகரிக சமுதாயத்தில்
மரண தண்டனை அவசியமா? என்ற விவாதம் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கின்றது.
இஸ்லாத்தை பொருத்தவரை மரண
தண்டனையை மன்னிப்புக்குட்பட்ட மரண தண்டனை, மன்னிப்புக்குட்படாத மரண தண்டனை என்றும்
இரண்டு வகைப்படுத்தலாம்.
திருமணம் செய்த பின்பு
விபச்சாரத்தில் ஈடுபடுபவனுக்கு தரப்படும் மரண தண்டனை மன்னிப்புக்குட்படாத மரண
தண்டனையாகும்.
அதே நேரத்தில் கொலை,
தேசத்துரோகம் ஆகியவற்றுக்காக தரப்படும் மரண தண்டனை மன்னிப்புக்குட்பட்ட மரண
தண்டனையாகும்.
மன்னிப்பது யார்?
தேச துரோக வழக்குகளில்
மன்னிக்கும் அதிகாரத்தை நாட்டின் ஆட்சியாளருக்கு வழங்கும் இஸ்லாம், கொலை
வழக்குகளில் தண்டிக்கும் அதிகாரத்தையும், மன்னிக்கும் அதிகாரத்தையும் நாட்டின்
ஆட்சியாளருக்கோ, நீதித்துறைக்கோ தராமல் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு
தருகிறது.
قال الله تعالي: يَا
أَيُّهَا الَّذِينَ آَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ
وَالْأُنْثَى بِالْأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ
بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ
وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ (178) وَلَكُمْ
فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ (179)2:178,179
மரண தண்டனை கைதிகளை மன்னித்தல்
மரண தண்டனை கைதிகளுக்கு கூட அவர்களை தண்டித்து ஆக
வேண்டும் என்று இஸ்லாம் பிடிவாதம் காட்டியதில்லை.
மாறாக அவர்கள் தவறு செய்வதற்கு காரணமான காரணிகளை
ஆராய்ந்து மன்னித்து விட்ட வரலாறு இஸ்லாத்தில் இருக்கவே செய்கின்றது.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த சம்பவம் இதற்கு
ஆதாரம்.
பத்ரு
சஹாபி ஹாதிப் (ரழி) அவர்கள் விஷயத்தில் மன்னித்த இஸ்லாம்
3684 - حَدَّثَنِي إِسْحَاقُ
بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ قَالَ سَمِعْتُ
حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ
الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
بَعَثَنِي
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا مَرْثَدٍ الْغَنَوِيَّ
وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَكُلُّنَا فَارِسٌ قَالَ انْطَلِقُوا حَتَّى
تَأْتُوا رَوْضَةَ خَاخٍ فَإِنَّ بِهَا امْرَأَةً مِنْ الْمُشْرِكِينَ مَعَهَا
كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ
فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا حَيْثُ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا الْكِتَابُ فَقَالَتْ مَا مَعَنَا
كِتَابٌ فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا فَقُلْنَا مَا كَذَبَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَتُخْرِجِنَّ الْكِتَابَ أَوْ
لَنُجَرِّدَنَّكِ فَلَمَّا رَأَتْ الْجِدَّ أَهْوَتْ إِلَى حُجْزَتِهَا وَهِيَ
مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتْهُ فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ
قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلِأَضْرِبَ عُنُقَهُ
فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا حَمَلَكَ عَلَى مَا
صَنَعْتَ قَالَ حَاطِبٌ وَاللَّهِ مَا بِي أَنْ لَا أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ
وَرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ
الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي وَلَيْسَ أَحَدٌ
مِنْ أَصْحَابِكَ إِلَّا لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ
بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ صَدَقَ وَلَا تَقُولُوا لَهُ إِلَّا خَيْرًا فَقَالَ عُمَرُ إِنَّهُ
قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلِأَضْرِبَ عُنُقَهُ
فَقَالَ أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى
أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمْ الْجَنَّةُ
أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ
وَرَسُولُهُ أَعْلَمُ
رواه البخاري
தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மரண
தண்டனைக்குள்ளாவது தற்காலத்தில் கூட எல்லா நாடுகளிலும் அமலில் உள்ளது.
அப்படிப்பட்ட தேசத் துரோக வழக்கில் குற்றம்
சாட்டப்பட்டவர் தான் ஹாதிப் (ரழி). அவரைத் தான் மன்னித்தார்கள் ஆட்சியாளர் அண்ணல்
நபி (ஸல்) அவர்கள்.
தனது தந்தையை கொன்ற முஸ்லிம்களை மன்னித்த ஹுதைபா
(ரழி) அவர்கள்.
தனது தந்தையை உஹத் யுத்தத்தில் தவறுதலாக கொன்ற
முஸ்லிம்களை மன்னித்த ஹுதைஃபா (ரழி)
3758 - حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ
سَعِيدٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ
عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ فَصَرَخَ إِبْلِيسُ
لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ فَرَجَعَتْ
أُولَاهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ
بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي قَالَ قَالَتْ
فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ
اللَّهُ لَكُمْ قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ
خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ
{ بَصُرْتُ }
عَلِمْتُ مِنْ الْبَصِيرَةِ
فِي الْأَمْرِ وَأَبْصَرْتُ مِنْ بَصَرِ الْعَيْنِ وَيُقَالُ بَصُرْتُ
وَأَبْصَرْتُ وَاحِدٌ
رواه
البخاري
மிஸ்தஹ் விஷயத்தில் மன்னித்த அபூபக்ரு (ரழி)
قَالَتْ فَقَالَ أَبُو بَكْرٍ وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ
لِقَرَابَتِهِ مِنْهُ وَفَقْرِهِ وَاللَّهِ لَا أُنْفِقُ عَلَيْهِ شَيْئًا أَبَدًا
بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ
{ وَلَا يَأْتَلِ أُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ أَنْ يُؤْتُوا
أُولِي الْقُرْبَى إِلَى قَوْلِهِ أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ
}
قَالَ حِبَّانُ بْنُ مُوسَى
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ هَذِهِ أَرْجَى آيَةٍ فِي كِتَابِ اللَّهِ
فَقَالَ أَبُو بَكْرٍ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي
فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ وَقَالَ لَا
أَنْزِعُهَا مِنْهُ أَبَدًا
رواه
مسلم
மரண தண்டனைக்கு எதிரான அணியில் இந்திய முஸ்லிம்கள்
நமது இந்திய தேசத்தில் மரண தண்டனைக்கு எதிரான அணியில்
தான் முஸ்லிம்களாகிய நாம் நிற்போம்.
ஏனெனில், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று வானாளவ புகழ்ந்து
கூறப்பட்டாலும், சட்டத்துறை, ஆட்சித் துறையில் முதல் நீதித்துறை வரை இன
ரீதியாகவும், மத ரீதியாகவும் வேற்றுமையும், பாகுபாடும் காட்டப்படும் நாடு நமது
இந்திய நாடு.
முஸ்லிம்களுக்கும், தலித்களுக்கும் ஒரு நீதி –
மற்றவர்களுக்கு ஒரு நீதி என்பது இந்நாட்டின் எழுதப்படாத விதியாகும்.
கருணை மனுக்கள் தாமதமானால் மாநில அரசு, மத்திய அரசு கலந்து
பேசி கைதிகளை விடுவிக்கலாம் என்பது கூட இரண்டு முஸ்லிம் கைதிகளை இரவோடு இரவாக
குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் தூக்கில் போட்டு விட்டு, மீதமுள்ள கருணை மனு
நிலுவையில் உள்ள 18 பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்ற நிலைக்கு பிறகே உச்ச நீதிமன்றம்
கருத்து தெரிவித்துள்ளது.
ஏன் எதிர்க்கிறோம்?
நீதியான இறைச்சட்டமான இஸ்லாமிய சட்டத்தில் மரண தண்டனையை
ஆதரிக்கும் முஸ்லிம்களாகிய நாம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட சட்ட நடைமுறைகளில்
மரண தண்டனையை ஆதரிக்க இயலாது.
ஏனெனில், ஜோடிக்கப்படும் பொய் வழக்குகள், அநீதியான
தீர்ப்புகளால் இந்நாட்டில் மற்ற எல்லோரையும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்
முஸ்லிம்கள் தாம்.
கம்யூனிஸ்ட்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என யாரும் ஆதரவாக
குரல் கொடுக்காத சமுதாயமான முஸ்லிம்களுக்கெதிராக அது தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம்
நமக்கு இல்லாமல் இல்லை.
ஏற்கனவே அப்சல் குரு விவகாரத்தில் இச்சமுதாயம் அனுபவம்
பெற்றிருக்கின்றது.
என்கவுண்டர் கொலைகளுக்கு எதிராக யார் குரல்
கொடுப்பது?
தண்டனை என்ற பெயரில் நீதித்துறையால் சட்டப்பூர்வமாக
செய்யப்படும் கொலை தான் மரண தண்டனை.
இது நாட்டில் அவ்வளவு எண்ணிக்கையில் தரப்படுவதில்லை.
அரிதான வழக்குகளில் தான் மரண தண்டனை தரப்படுகின்றது.
இதனை எதிர்த்து தான் இந்தியாவிலும். இந்தியாவுக்கு
அப்பால் வெளிநாடுகளிலும் பலத்த குரல்கள் ஒலிக்கின்றன.
ஆனால் நமது இந்திய தேசத்தில் போலீஸ் மற்றும்
ராணுவத்தினால் ஒரு நாளைக்கு மூன்று நபர்கள் கொல்லப்படுவதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
சட்டப்பூர்வமில்லாத இந்த என்கவுண்டர் கொலைகளை எதிர்த்து
இங்கு குரல் கொடுப்பார் யாருமில்லை…