இரண்டாம் ஜமாஅத் கூடுமா? விரிவான விளக்கம்

            By மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,


நமது தமிழகத்தில் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளில் ஒன்று இரண்டாவது ஜமாஅத் பிரச்சினையாகும்.

இதனால் பல இடங்களில் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. இத்தகைய இரண்டாவது ஜமாஅத் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் தான் விடப்பட்டது.

ஆனால் வேண்டுமென்றே ஜமாஅத்திற்கு வராமல் இருப்பது, ஜமாஅத் நடக்கும் பொழுது வெளியில் நின்று பேசிக் கொண்டு இருந்து விட்டு இமாம் ஸலாம் கொடுக்கும் சமயத்தில் வந்து இரண்டாவது ஜமாஅத் நடத்துவது, இந்த இமாம் பித்அத்காரர் இவர் பின்னால் தொழமாட்டோம் என்று கூறி ஜமாஅத்தை புறக்கணிப்பது, பின்னர் ஜமாஅத் நடத்துவது,  ஏதாவது பள்ளிவாசல்களில் இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டால் 10 பேர், 10 பேராக வந்து இரண்டாவது ஜமாஅத் தொடர்ந்து நடத்துவது என்று எல்லை மீறப்பட்ட பொழுது தான் பல்வேறு இடங்களில் பிரச்சினைகள், தகராறுகள் ஏற்பட்டன.

சில இடங்களில் இத்தகைய தகராறுகள் காவல்நிலையம் வரை கூட சென்றுள்ளன.

தொழுகையின் நோக்கமே முஸ்லிம்களை ஒன்றிணைப்பது தான். உன்னதமான அந்நோக்கத்தை இல்லாமல் ஆக்கிடும் ஒன்றாக இது மாறியது வேதனையிலும் கொடிய வேதனை.

இது விஷயத்தில் மார்க்கத்தின் நிலைப்பாட்டினை தெரிந்து கொள்ள வேண்டும்.

மார்க்க ஃபத்வா

கேள்வி: ஒரு பள்ளிவாசலில் ஜமாஅத் முடிந்த பின்பு இரண்டாவது ஜமாஅத் நடத்தக்கூடாது என்பதற்கு ஆதாரம் இருக்கின்றதா? எதனால் இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக (ஜாயிஸ்) இல்லை…?

பதில் : இமாம் நியமிக்கப்பட்ட ஜமாஅத் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே தொழுகையாக தொழுவது தான் ஷரீஅத்தின் அடிப்படை. ஏனெனில், அவர்கள் ஒரே நபியை பின்பற்றி, ஒரே இறைவனை, ஒரே கிப்லாவை முன்னோக்கி வணங்குவது  போன்று ஒரே இமாமின் கீழும் தொழ வேண்டும்.

ஜமாஅத் முடிந்த பின்பு பள்ளிக்கு வரும் நபர் வேண்டுமென்றே தாமதமாக வந்தால் இவர் ஜமாஅத் முடிந்த பின்பு ஜமாஅத் நடத்தி தொழுதாலும் இவருடைய குறையை அது அடைக்காது.

அதே நேரத்தில் வேண்டுமென்றே இவ்வாறு செய்யவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் இப்படி ஆகி விட்டது எனில், இவர் ஜமாஅத் முடிந்த பின்பு தனியாக தொழுதாலும் இவருக்கு ஜமாஅத்தில் தொழுத கூலி கிடைக்கும். பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.

477 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدٍ يَعْنِي ابْنَ طَحْلَاءَ عَنْ مُحْصِنِ بْنِ عَلِيٍّ عَنْ عَوْفِ بْنِ الْحَارِثِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا
رواه ابوداود
.....அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்
எவர் அழகிய முறையில் ஒழு செய்து பள்ளிவாசலுக்கு மக்கள் ஜமாத்தாக தொழுது முடித்த பின்பு வந்தாரோ அவர் தனியாக தொழுதாலும் அவருக்கு ஜமாஅத்தில் தொழுதவரின் கூலி கிடைக்கும். ஜமாஅத்தில் தொழுதவரின் கூலியிலும் குறைவு ஏதும் ஏற்படாது”.
                                         (நூல் : அபூதாவூது477)

ஒரே ஜமாஅத்தில் தொழுவது நபியை மகிழ்விக்கும்

ஒரே ஜமாஅத்தில் ஒரே தொழுகையாக முஃமின்கள் தொழுவது  எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்று சொன்னார்கள் நபி (ஸல்)

426 حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى ح و حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى قَالَ أُحِيلَتْ الصَّلَاةُ ثَلَاثَةَ أَحْوَالٍ قَالَ وَحَدَّثَنَا أَصْحَابُنَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَقَدْ أَعْجَبَنِي أَنْ تَكُونَ صَلَاةُ الْمُسْلِمِينَ أَوْ قَالَ الْمُؤْمِنِينَ وَاحِدَةً

رواه ابوداود

378 - ناه بندار ، نا محمد بن جعفر ، نا شعبة ، عن عمرو بن مرة ، عن عبد الرحمن بن أبي ليلى قال : أحيلت الصلاة ثلاثة أحوال ، والصيام ثلاثة أحوال ، فحدثنا أصحابنا أن رسول الله صلى الله عليه وسلم قال : « لقد أعجبني أن تكون صلاة المؤمنين أو المسلمين واحدة
رواه ابن خزيمة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ முஃமின்களின் அல்லது முஸ்லிம்களின் தொழுகை ஒரே தொழுகையாக ஆவது எனக்க மகிழ்ச்சியளிக்கின்றது.”
                         (நூல் : அபூதாவூது426, இப்னு குஸைமா378)

பள்ளியில் இரண்டாம் ஜமாஅத் நடத்தாத நபி (ஸல்)

7012 - حدثنا محمد بن هارون ، نا هشام بن خالد الأزرق ، نا الوليد بن مسلم ، نا معاوية بن يحيى ، عن خالد الحذاء ، عن عبد الرحمن بن أبي بكرة ، عن أبيه ، « أن رسول الله صلى الله عليه وسلم أقبل من بعض نواحي المدينة يريد الصلاة ، فوجد الناس قد صلوا ، فذهب إلى منزله ، فجمع أهله ، ثم صلى بهم
رواه الطبراني
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வெளியே சென்றிந்தார்கள். பின்பு திரும்பி வரும் பொழுது தொழுவதற்காக பள்ளிக்கு வந்தார்கள். அப்போது தொழுகை முடிந்து விட்டது. நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குப் போய் குடும்பத்தார்களை சேர்த்து, அவர்களுக்கு வீட்டில் வைத்து ஜமாஅத்தாக தொழுதார்கள்.” ( தப்ரானி7012)

பள்ளியில் இரண்டாம் ஜமாஅத் நடத்தாத இப்னு மஸ்ஊது (ரழி)

9275 - حَدَّثَنَا إِسْحَاقُ بن إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ عَلْقَمَةَ، وَالأَسْوَدَ"أَقْبَلا مَعَ ابْنِ مَسْعُودٍ إِلَى الْمَسْجِدِ"فَاسْتَقْبَلَهُمُ النَّاسُ قَدْ صَلَّوا، فَرَجَعَ بِهِمَا إِلَى الْبَيْتِ فَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ، وَالآخَرَ عَنْ شِمَالِهِ، ثُمَّ صَلَّى بِهِمَا"
رواه الطبراني
“(மூத்த தாபியீன்களான) அல்கமா, அஸ்வத் இருவரும் நபித்தோழர் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்களுடன் பள்ளிக்கு வந்தனர். மக்கள் ஜமாஅத் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு அவ்விருவரில் ஒருவரை வலப்புறமும், மற்றொருவரை இடப்புறமும் நிற்க வைத்து ஜமாஅத் நடத்தினார்கள்.” (நூல் : தப்ரானி9275)

ஜமாஅத் முடிந்த பின்பு பள்ளியில் தனியாக தொழுத நபித்தோழர்கள்

ஜமாஅத் முடிந்த பின்பு பள்ளிக்கு வந்தால் நபித்தோழர்கள் இரண்டாம் ஜமாஅத் நடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். தனியாகவே தொழுவார்கள். நபித்தோழர்கள் குறித்த பின்வரும் தகவல் இதற்கு ஆதாரம்.

(4) حدثنا وكيع عن أبي هلال عن كثير عن الحسن قال كان أصحاب محمد صلى الله عليه وسلم إذا دخلوا المسجد وقد صلي فيه صلوا فرادى
رواه ابن ابيشيبة في مصنفه وعبد الرزاق في مصنفه

“மூத்த தாபியீன்களில் ஒருவரான இமாம் ஹஸன் பஸரி (ரஹ்) அறிவிப்பதாவது : ஜமாஅத் முடிந்த பின்பு பள்ளிக்கு நபித்தோழர்கள் வந்தார்கள் எனில், அவர்கள் தனியாகவே தொழுவார்கள்.” (நூல் : முஸன்னஃப் அபீ ஷைபா158-4, முஸன்னஃப் இப்னு அப்துர் ரஸ்ஸாக்)

தாபியீன்களும் இரண்டாம் ஜமாஅத்தை ஆதரிக்கவில்லை

பள்ளிவாசலில் ஜமாஅத் முடிந்த பின்பு இரண்டாம் ஜமாஅத்தை தாபியீன்களும் ஆதரிக்கவில்லை. அறிவிப்பாளர் தொடருடன் கிடைக்கும் பின்வரும் செய்தி இதற்கு ஆதாரம்

قَالَ سَحْنُونٌ ، عن ابْنِ الْقَاسِمِ ، عن مَالِكٍ ، عن عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْمُجَبَّرِ ، قَالَ : دَخَلْتُ مَعَ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ مَسْجِدَ الْجُحْفَةِ وَقَدْ فَرَغُوا مِنَ الصَّلَاةِ فَقَالُوا : أَلَا تَجْمَعُ الصَّلَاةَ ؟ فَقَالَ سَالِمٌ : لَا تُجْمَعُ صَلَاةٌ وَاحِدَةٌ فِي مَسْجِدٍ وَاحِدٍ مَرَّتَيْنِ
رواه مالك في المدونة الكبري )

“அப்துர் ரஹ்மான் அல் முஜப்பர் அறிவிப்பதாவது: தாபியின்களில் ஒருவரான சாலிம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்களுடன் நான் ஜுஹ்பா பள்ளிக்குள் நுழைந்தேன். அப்போது மக்கள் தொழுகையை முடித்திருந்தார்கள். மக்கள் சாலிம் (ரஹ்) அவர்களிடம் நீங்கள் ஜமாஅத் நடத்தக்கூடாதா? என்று கேட்டனர்.

ஒரு பள்ளிவாசலில் இரண்டு தடவை ஜமாஅத் நடத்தப்படாது என்று சாலிம் (ரஹ்) அவர்கள் பதிலளித்தார்கள்.” ( நூல் : முதவ்வனதுல் குப்ரா – இமாம் மாலிக்)


ஸலஃபுஸ் சாலிஹீன்கள் என்றழைக்கப்படும் இமாம்கள் இரண்டாம் ஜமாஅத்தை ஆதரிக்கவில்லை

இரண்டாம் ஜமாஅத்தின் விஷயத்தில் தெளிவாக தங்களின் கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இமாம் மாலிக் (ரஹ்) தமது அல் முதவ்வனதுல் குப்ரா எனும் கூறியதாவது,

فَلَوْ كَانَ رَجُلٌ هُوَ إِمَامُ مَسْجِدِ قَوْمٍ وَمُؤَذِّنُهُمْ أَذَّنَ وَأَقَامَ فَلَمْ يَأْتِهِ أَحَدٌ ، فَصَلَّى وَحْدَهُ ، ثُمَّ أَتَى أَهْلُ ذَلِكَ الْمَسْجِدِ الَّذِينَ كَانُوا يُصَلُّونَ فِيهِ ؟ قَالَ : فَلْيُصَلُّوا أَفْذَاذًا وَلَا يَجْمَعُونَ ؛ لِأَنَّ إِمَامَهُمْ قَدْ أَذَّنَ وَصَلَّى

“ஒரு பள்ளியில் நியமிக்கப்பட்ட இமாம் இருந்தார். அது ஒரு ஜமாஅத்தின் பள்ளிவாசல். பள்ளி முஅத்தின் பாங்கு சொன்னார். யாரும் வரவில்லை. பின்பு இகாமத் சொல்லப்பட்டது. இமாம் தொழ வைத்தார். தொழுகை முடிந்த பின்பு வழமையாக தொழும் ஜமாஅத்தார்கள் வந்தார்கள் எனில், அவர்கள் தனியாக தொழுவார்கள். ஜமாஅத் நடத்த மாட்டார்கள். ஏனெனில், அவர்களின் இமாம் பாங்கு சொல்லி தொழுகை நடத்தி விட்டார்.” (நூல் : முதவ்வனதுல் குப்ரா – இமாம் மாலிக்


இரண்டாம் ஜமாஅத் பழக்கம் எப்போது தோன்றியது?

இஸ்லாமிய வரலாற்றில் பள்ளிவாசல்களில் வழமையாக , எப்போதும் இரண்டாம் ஜமாஅத் நடத்தும் பழக்கம் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டில் தான் உருவானது. இதனை இமாம் சமக்க்ஷரி தமது  اعلام الساجد في احكام المساجد (இஃலாமுஸ் சாஜித் ஃபீ அஹ்காமில் மஸாஜிது) எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

இரண்டாம் ஜமாஅத் ஏன் கூடாது?

முஃமின்களை ஓரணியில் ஒன்றிணைக்கக் கூடியதாக தொழுகை உள்ளது. யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்றிருந்த அரபுக்களை தொழுகையில் ஒரு இமாமின் கீழ் இணைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

இந்த ஒற்றுமைக்கு குந்தகத்தை ஏற்படுத்தியதால் தான் இரண்டாவது பள்ளிவாசலை முனாஃபிக்கள் கட்டியதை வல்லோன் திருக்குர்ஆனில் கண்டித்தான். (காண்க அல்குர்ஆன் (9:107)

திருக்குர்ஆனின் அரபி வாசகம்
قال الله تعلي: وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ9:107

இத்தகைய பிரிவினைகள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே யுத்தத்தங்களில் கூட இரண்டாம் ஜமாஅத் அங்கீகரிக்கப்படவில்லை.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பல யுத்தங்கள் நடந்தன. கிட்டதட்ட 80 யுத்தங்கள் நடந்ததாக வரலாற்றாசிரியர் இப்னு இஸ்ஹாக் கூறுகிறார்.

சுமார் 19 யுத்தங்களில் நபி (ஸல்) அவர்களே நேரடியாக கலந்து கொண்டதாக புகாரியில் நபிமொழி காணப்படுகிறது.

தொழுகை நடத்த தகுதியுள்ள அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) அலி (ரழி) போன்ற பல சஹாபிகள் அவற்றில் கலந்து கொண்டுள்ளனர்.

இங்கே அலட்சியம், பொடுபோக்குத்தனம், இயக்க காரணம் ஆகியவற்றுக்காக இரண்டாம் ஜமாஅத்தில் பிடிவாதம் காட்டப்படுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் எனும் சரியான காரணம் இருந்தும், அவ்வாறே இமாமத் செய்ய தகுதியான பலர் இருந்தும் யுத்தத்தில் கூட இரண்டாம் ஜமாஅத்தை அல்லாஹ் வழிகாட்டவில்லை.

யுத்தம் நடக்கும் பொழுதும் இமாமின் கீழ் ஒரு பிரிவினர் தொழுகையில் பங்கேற்க வேண்டும். மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிக்க வேண்டும்.

தொழுபவர்கள் இமாமுடன் ஒரு ரக்அத்தை சேர்ந்து தொழுது விட்டு அவர் நின்றிக்கும் நிலையில், தனியாக இன்னொரு ரக்அத்தை தொழுது தொழுகையை பூர்த்தி செய்வார்கள். இவர்கள் உடனே எழும்பிச் சென்று போர் செய்து கொண்டிருப்பவர்களை தொழுகைக்கு அனுப்பி வைத்து விட்டு போரில் பங்கெடுப்பார்கள்.

அதுவரை போர்க்களத்தில் இருந்தவர்கள் இமாம் நின்ற நிலையில் அவரை வந்து சேர்வார்கள். அவருடன் ஒரு ரக்அத்தையும், தனித்து இன்னொரு ரக்அத்தையும் தொழுது தொழுகையை முடிப்பார்கள்.

இதுவே இஸ்லாத்தில் அச்சத் தொழுகை என்றழைக்கப்படுகின்றது.

போர்த் தொழுகையில் கூட இரண்டாம் ஜமாஅத்தை இஸ்லாம் வழிகாட்டவில்லை.(காண்க அல்குர்ஆன் 4:102)

قال الله تعالي: وَإِذَا كُنْتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلَاةَ فَلْتَقُمْ طَائِفَةٌ مِنْهُمْ مَعَكَ وَلْيَأْخُذُوا أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُوا فَلْيَكُونُوا مِنْ وَرَائِكُمْ وَلْتَأْتِ طَائِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّوا فَلْيُصَلُّوا مَعَكَ وَلْيَأْخُذُوا حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُوا لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُمْ مَيْلَةً وَاحِدَةً وَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ كَانَ بِكُمْ أَذًى مِنْ مَطَرٍ أَوْ كُنْتُمْ مَرْضَى أَنْ تَضَعُوا أَسْلِحَتَكُمْ وَخُذُوا حِذْرَكُمْ إِنَّ اللَّهَ أَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا4:102



முதல் ஜமாஅத்துக்கு வருவதற்கே பாங்கு சொல்லப்படுகிறது

பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு மக்கள் வர பாங்கு சொல்லப்படுகின்றது. பாங்கின் மூலம் இமாம் நடத்தும் முதல் ஜமாஅத்தே நாடப்படுகின்றது. இரண்டாம் ஜமாஅத் அல்ல.

பிரபலமான நபிமொழி ஒன்று இதற்கு ஆதாரம். அதில் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டிருப்பார்கள். “தொழுகை ஜமாஅத் நடத்த ஒருவரை நியமித்து விட்டு நான் சில மனிதர்களை கூட்டிக் கொண்டு தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்கு விறகு கட்டைகளுடன் போய், தொழுகைக்கு வராதவர்களை தீயிட்டு கொளுத்திட நாடுகிறேன்.” (காண்க புகாரி2242)

2242 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِالصَّلَاةِ فَتُقَامَ ثُمَّ أُخَالِفَ إِلَى مَنَازِلِ قَوْمٍ لَا يَشْهَدُونَ الصَّلَاةَ فَأُحَرِّقَ عَلَيْهِمْ
رواه البخاري

இந்நபிமொழியில் தொழுகை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது முதல் ஜமாஅத் தொழுகையைத் தான். ஏனெனில், தான் நடத்தும் முதல் ஜமாஅத்திற்குத் தான் வேறொரு ஆளை நியமித்து விட்டு போவதாக சொன்னார்கள்.

ஜமாஅத்திற்கு வராதவன் முனாஃபிக்

நபிமொழிகளில் நாம் காண்கிறோம். ஃபஜ்ர் தொழுகைக்கு வராதவர்களை நபி (ஸல்) அவர்கள் முனாஃபிக் (நயவஞ்சகன்) என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

பள்ளியில் நடக்கும் இரண்டாம் ஜமாஅத் அப்பெயரை நீக்குமா? என்றால், நீக்காது என்பதே பதில். மேலே நாம் குறிப்பிட்ட நபிமொழிகளில் நபி (ஸல்) அவர்கள் வராதவர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்களும், வேறு சில நபிமொழிகளில் ‘முனாஃபிக்கள்’ என்று குறிப்பிடப்பட்டவர்களும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களே..
இவருக்கு சதகா கொடுப்பவர் யார்? எனும் நபிமொழியின் விளக்கம்

ஜமாத் முடிந்து விட்ட பள்ளிவாசலில் இரண்டாம் ஜமாஅத் நடத்தும் பழக்கம் நபி (ஸல்), சஹாபாக்கள், தாபியின்கள், தபவுத் தாபியின்களின் வாழ்க்கையில் இல்லை என்பதற்கு  மேலே ஏராளமான ஆதாரங்களை குறிப்பிட்டோம்.

ஜமாஅத் நடத்துவதற்கு தகுதியான நபர்கள் பலர் இருந்தும் ஆபத்துக்கள் நிறைந்த யுத்தங்களில் கூட இரண்டாம் ஜமாஅத் நடத்திட அல்லாஹ் வழிகாட்டவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினோம்.

இங்கே இரண்டாம் ஜமாஅத் நடத்துவதை கொள்கையாக கொண்டுள்ளவர்கள் பின்வரும் நபிமொழி ஒன்றினை ஆதாரமாக கூறுவதுண்டு. எனினும் அதனை ஆதாரமாக கொள்ள முடியாது என்பதே உண்மை.

10596 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ ثُمَّ جَاءَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ قَالَ فَصَلَّى مَعَهُ رَجُلٌ
رواه احمد

“பள்ளிவாசலில் தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்து முடித்திருந்தார்கள். அப்போது ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்கள் தோழர்களைப் பார்த்து இப்படிக் கேட்டார்கள். இவருக்கு சதகா யார் கொடுப்பார்? உடனே சபையில் இருந்த ஒரு தோழர் அவருடன் தொழுதார். ” (நூல் : முஸ்னத் அஹ்மது10596)

வேறு சில அறிவிப்புகளில், فانصرف كي يصلي وحده   தனித்து தொழ அவர் திரும்பினார் என்று வந்துள்ளது. இதன் மூலம் ஜமாஅத் முடிந்து விட்டால் தனித்து தொழுவதே சஹாபிகளிடம் அறியப்பட்டிருந்தது என்பது தெரியவரும்.

நபி (ஸல்) இன்னொரு நபரை அவருடன் சேர்த்து தொழுவதை தர்மம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் அவர் முகத்தில் தெரிந்த கவலை. அதனைப் போக்கவே இப்படிச் சொன்னார்கள். அவர் வழமையாக அப்படி வருபவர் அல்ல. அவ்வாறே இத்தகைய இரண்டாம் ஜமாஅத் பழக்கமும் அப்போது நடைமுறையில் இல்லை.

இதனை அவருக்கு அப்போது மட்டும் வழங்கப்பட்ட சலுகையாக சஹாபிகள் கருதினார்கள். தர்மம் எனும் வாசகம் அதனையே உணர்த்துகிறது.

ஆதலால் தான் சஹாபிகள் பிற்காலத்தில் பள்ளிவாசலில் இரண்டாம் ஜமாஅத் நடத்துவதை வழமையாக்கவில்லை.

ஸலஃபி அறிஞர் நாசிருத்தீன் அல்பானியின் ஃபத்வா.

அவரும் இதனை ஆதரிக்கவில்லை

நாஸிருத்தீன் அல்பானியின் ஃபத்வா

فتاوى العلامة محمد ناصر الدين الألباني - مجلة الأصالة - (1 / 2)
السؤال 44: ما الحكم الشرعي في صلاة الجماعة الثانية في المسجد؟
الجواب: اختلف الفقهاء في حكم صلاة الجماعة الثانية، ولكن قبل ذكر الخلاف، وبيان الراجح من المرجوح لا بد من تحديد الجماعة التي اختلفوا فيها.
موضوع الخلاف هو في جماعة تقام في مسجد له إمام راتب ومؤذن راتب، أما الجماعات التي تقام في أي مكان: في دار، أو مسجد طريق، أو دكان فلا مانع من تكرار الجماعة في هذه المواطن.
ويأخذ العلماء الذين يقولون بكراهة تعدد الجماعة في مثل هذا المسجد-الذي له إمام راتب ومؤذن راتب-هذا الحكم من استدلالين اثنين: أحدهما نقلي من الشارع، والآخر نظري وهو تأمل الرواية، والحكمة من مشروعية صلاة الجماعة.
أما النقل: فقد نظروا فوجدوا أن النبي صلى الله عليه وسلم ظل طيلة حياته يصلي بالناس جماعة في مسجده، ومع ذلك فكان الفرد من أصحابه إذا حضر المسجد وقد فاتته الجماعة صلى وحده ولم ينتظر ، ولم يلتفت يمينا ويسارا-كما يفعل الناس اليوم يطلبون شخصا أو أكثر ليصلي أحدهم بهم إماما.

ولم يكن السلف يفعلون شيئا من هذا؛ فإذا دخل أحدهم المسجد ووجد الناس قد صلوا صلى وحده، وهذا ما صرح به الإمام الشافعي في كتابه(الأم)-وكلامه في الواقع من اجمع ما رأيت من كلام الأئمة في هذه المسألة-حيث قال:

(وإذا دخل جماعة المسجد، فوجدوا الإمام قد صلى صلوا فرادى، فإن صلوا جماعة أجزأتهم صلاتهم، ولكني أكره لهم ذلك، لأنه لم يكن من أحوال السلف)
ثم قال:(وأما مسجد في قارعة الطريق-ليس له إمام راتب ولا مؤذن راتب-فلا بأس من تعدد الجماعة فيه).
ثم قال:

(إنا قد حفظنا أن جماعة من اصحاب النبي صلى الله عليه وسلم فاتتهم صلاة مع الجماعة، فصلوا فرادى مع أنهم كانوا قادرين على ان يجمعوا فيه مرة أخرى، لكنهم لم يفعلوا ؛ لأنهم كرهوا أن يجمعوا في مسجد مرتين).
هذا كلام الشافعي، وما ذكره من ان الصحابة كانوا يصلون فرادى إذا فاتتهم صلاة الجماعة -ذكره معلقا بصيغة الجزم لهذا المعلق، ووصله الحافظ أبو بكر ابن أبي شيبة في كتابه المشهور (المصنف) رواه بإسناد قوي عن الحسن البصري أن الصحابة كانوا إذا فاتتهم صلاة مع الجماعة صلوا فرادى.


وذكر هذا المعنى ابن القاسم في(مدونة الإمام مالك) عن جماعة من السلف، كنافع مولى ابن عمر، وسالم بن عبد الله، وغيرهم أنهم كانوا إذا فاتتهم الصلاة صلوا فرادى ولم يعيدوها جماعة أخرى.
وأيضا روى الإمام الطبراني في (معجمه الكبير) بإسناد جيد عن ابن مسعود أنه خرج مع صاحبين له من بيته الى المسجد لصلاة الجماعة، وإذا به يرى الناس يخرجون من المسجد وقد انتهوا منها، فعاد وصلى بهما إمام في بيته،

 فرجوع ابن مسعود- وهو من هو في صحبته للرسول صلى الله عليه وسلموفي معرفته وفقهه للإسلام-لو كان يعلم مشروعية تعدد الجماعات في المسجد الواحد لدخل بصاحبيه وصلى بهما جماعة؛ لأنه يعلم قول الرسول صلى الله عليه وسلم : "أفضل صلاة المرء في بيته إلا المكتوبة".

 فما الذي منع ابن مسعود أن يصلي هذه المكتوبة في المسجد؟ علمه انه إن صلاها في المسجد فسيصليها وحده، فرأى أن يجمع بهما في بيته أفضل من ان يصل هو ومن معه، كل على انفراد في المسجد.


فهذه المجموعة من النقول تؤيد وجهة نظر الجمهور الذين كرهوا تعدد الجماعة في المسجد الموصوف بالصيغة السابقة.
ثم لا يعدم الإنسان أن يجد أدلة أخرى مع شئ من الاستنباط والنظر الدقيق فها،

فقد روى الإمامان البخاري ومسلم من حديث أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم:" لقد هممت أن آمر رجلا فيحتطبوا حطبا، ثم أخالف إلى أناس يدعون الصلاة مع الجماعة فأحرق عليهم، والذي نفس محمد بيده، لو يعلم أحدهم انه يجد في المسجد مرماتين حسنتين لشهدهما"؛ ففي هذا الحديث تهديد الرسول صلى الله عليه وسلم المتخلفين عن حضور صلاة الجماعة في المسجد بالتحريق بالنار، فانا أرى أن هذا الحديث وحده يشعرنا بالحكم السابق، أو يشعرنا بما ذكر الإمام الشافعي ووصله ابن أبي شيبة؛ وهو أن الصحابة لم يكونوا يكررون الصلاة جماعة في المسجد،ذلك لأننا إن سوغنا أن الجماعة الثانية والثالثة كانت مشروعة في المسجد، ثم جاء هذا الوعيد الشديد من رسول صلى الله عليه وسلم للمتخلفين عنها، ويترتب على تخلفهم عنها هذا الوعيد الشديد ؟
فإن قيل:هي الجماعة الأولى.


قيل: إذن هذه الجماعة الأخرى غير مشروعة، وإن قيل: إن هذا الوعيد إنما يشمل المتخلف عن كل جماعة مهما كان رقمها التسلسلي؛ حينئذ لم تقم الحجة من رسول الله صلى الله عليه وسلم مطلقا على أي متخلف عن أي جماعة؛ لأنه لو فاجأ بعض المتخلفين حينما أناب عنه، فجاء إلى بيوتهم فوجدهم يلهون مع نسائهم وأولادهم فأنكر عليهم:لماذا لا تذهبون للصلاة مع الجماعة ؟ فيقولون:نصلي مع الجماعة الثانية أو الثالثة،فهل تقوم حجة للرسول صلى الله عليه وسلم عليهم؟ لذلك فإن هم الرسول صلى الله عليه وسلم بإنابة شخص يقوم مقامه، وأن يفاجئ المتخلفين عن صلاة الجماعة فيحرق عليهم بيوتهم-لأكبر دليل على انه لم يكن هناك جماعة ثانية إطلاقا.هذا بالنسبة إلى النقول التي اعتمد عليها العلماء.

أما النظر؛ فهو على الوجد الآتي: صلاة الجماعة قد جاء في فضلها أحاديث كثيرة منها الحديث المشهور"صلاة الجماعة تفضل صلاة الفذ بخمس وعشرين- وفي رواية: بسبع وعشرين-درجة" فهذه الفضيلة إنما جاءت لصلاة الجماعة.
وجاء في بعض الأحاديث :"أن صلاة الرجل مع الرجل أزكى عند الله من صلاته وحده، وصلاة الرجل مع رجلين أزكى عند الله من صلاته مع رجل"، وهكذا كلما كثرت الجماعة وأفرادها، تضاعف أجرها عند ربها.

فإذا تذكرنا هذا المعنى ثم نظرنا عاقبة القول بجواز تكرار الجماعة في المسجد الذي له إمام راتب فإن هذه العاقبة أسوأ عاقبة بالنسبة لمثل هذا الحكم الإسلامي ألا وهو صلاة الجماعة؛ ذلك لأن القول بتكرار الجماعة سيؤدي إلى تقليل عدد الجماعة الأولى، وهذا ينقض الحث الذي يفيده حديث:" صلاة الرجل مع الرجل أزكى عند الله من صلاته وحده..."؛لان هذا الحديث يحض على تكثير الجماعة، والقول بتكرار الجماعة في المسجد يؤدي -بالضرورة إلى تقليل عدد أفراد الجماعة الشرعية الأولى ، وتفريق وحدة المسلمين.

وشئ أخر يقتضيه النظر السليم وهو أن نتذكر أن حديث ابن مسعود في(صحيح مسلم)نحو حديث ابي هريرة:"لقد هممت أن آمر رجلا فيصلي بالناس..... إلى آخره "،جاء هذا الحديث في حق المتخلفين عن صلاة الجمعة، فإذا علمنا أن ابن مسعود صب وعيدا من نوع واحد على كل ممن يتخلف عن صلاة الجمعة، وعن صلاة الجماعة، حينئذ نعرف أن هاتين الصلاتين من حيث التصاقهما بصلاة الجماعة فإن هذا الوعيد يعني ان لا جماعة ثانية بعد كل من الصلاتين؛فصلاة الجمعة-حتى ان-حافظ على وحدتها وعلى عدم القول بمشروعية تعددها في المسجد الواحد جميع العلماء على اختلاف مذاهبهم، لذلك تجد المساجد غاصة بالمصلين يوم الجمعة، وإن كان لا يفوتنا أن نتذكر أن من أسباب امتلاء المساجد يوم الجمعة هو أن هناك من يحضر الجمعة ولا يحضر الصلوات الأخرى،

ولكن مما لا شك فيه أن امتلاء المساجد يوم الجمعة بالمصلين سببه أن المسلمين لم يتعودوا-والحمد لله-أن يكرروا صلاة الجمعة في المسجد الواحد، فلو أن المسلمين عاملوا صلاة الجماعة كما عاملوا صلاة الجمعة وكما كان الأمر عليه في عهد الرسول صلى الله عليه وسلم، لكادت المساجد أن تمتلئ بالمصلين، لأن كل حريص على الجماعة سيكون قائما في ذهنه أنه إن فاتته الصلاة الأولى، فلا يمكن له أن يتداركها فيما بعد، فيكون هذا الاعتقاد حافزا له على الحرص الشديد على صلاة الجماعة، والعكس بالعكس تمام، إذا قام في نفس المسلم أنه إن فاتته هذه الجماعة الأولى فيوجد جماعة ثانية وثالثة....وعاشرة أحيانا،فهذا مما سيضعف همته وحرصه عن الحضور للجماعة الأولى.
بقي لدينا أمران اثنان:

الأول-أن نبين أن الذين ذهبوا إلى عدم مشروعية الجماعة الثانية على التفصيل السابق، وكراهة فعلها هم جمهور الأئمة من السلف، وفيهم الأئمة الثلاثة:أبو حنيفة ومالك والشافعي،والإمام احمد معهم في رواية، لكن هذه الرواية غير مشهورة عند أتباعه اليوم، وإن كان ذكرها أخص تلامذته وهو أبو داود السجستاني؛

 فقد روى عنه في كتاب(مسائل الإمام أحمد) أنه قال: "إن تكرار الجماعة في المسجدين الحرمين أشد كراهة"، فهذا-من باب التفضيل-يشعرنا بأن الكراهة في المساجد الأخرى موجودة بتكرار الجماعة ؟، ولكنها أشد في المسجدين، وهو في هذه الرواية يلتقي مع الأئمة الثلاثة.
الثاني-أن الرواية الأخرى عن الإمام أحمد والمشهورة عن اتباعه فعمدته فيها هو ومن تابعه من المفسرين حديث يرويه الترمذي والإمام أحمد وغيرهما من حديث أبي سعيد الخدري، أن رجلا دخل المسجد والرسول صلى الله عليه وسلمقد صلى وحوله أصحابه، فأراد هذا الرجل أن يصلي، فقال عليه الصلاة والسلام: "ألا رجل يتصدق على هذا فيصلي معه"، فقام رجل فصلى معه، وفي رواية لأبي بكر البيهقي في (سننه الكبرى)

 أن هذا الرجل هو أبو بكر الصديق، لكن هذه الرواية في إسنادها ضعف، والرواية الصحيحة لم يسم فيها الرجل، فقد احتجوا بهذا الحديث وقالوا: إن الرسول صلى الله عليه وسلم أقر الجماعة الثانية !
والجواب على هذا الاستدلال هو أن نلاحظ أن الجماعة التي تضمنها الحديث هي جماعة إنسان دخل المسجد بعد الجماعة الأولى، ويريد أن يصلي وحده،فحض الرسول صلى الله عليه وسلم أصحابه الذين كانوا قد صلوا معه أن يقوم أحدهم فيتطوع ويصلي نافلة، ففعل وكذلك وقع؛ فهذه الجماعة مؤلفة من شخصين: إمام ومأموم، الإمام مفترض والمأموم متنفل، فمن هو الذي عقد هذه الجماعة ؟ لولا المتنفل ما كان هناك جماعة ، إذن هذه الجماعة تطوع وتنفل، وليست جماعة فريضة، والخلاف إنما يدور حول جماعة فريضة ثانية، ولهذا فإن الاستدلال بحديث أبي سعيد على موضع النزاع غير صحيح،

والذي يؤكد هذا أن الحديث يقول:"ألا رجل يتصدق على هذا فيصلي معه"، وهذه الحادثة-التي وقعت-فيها متصدق، وفيها متصدق عليه، فلو سألنا أقل الناس فهما وعلما: من المتصدق؟ ومن المتصدق عليه في هذه الحالة التي أقرها الرسول صلى الله عليه وسلم ؟ سيكون الجواب: المتصدق هو المتنفل الذي صلي الفريضة وراء رسول الله صلى الله عليه وسلم ، والمتصدق عليه هو الذي جاء متأخرا.

السؤال نفسه إذا طرحناه في الجماعة التي هي موضع النزاع: دخل ستة أو سبعة المسجد، فوجدوا الإمام قد صلى فأمهم أحدهم وصلى بهم جماعة ثانية، فمن هو المتصدق من هؤلاء، ومن هو المتصدق عليه ؟لا أحد يستطيع أن يقول كما استطاع أن يقول في الصورة الأولى، فهذه الجماعة التي دخلت بعد صلاة الإمام كلهم يصلي فرض الوقت، ليس هناك متصدق ولا متصدق عليه، وسر هذا واضح في الصورة الأولى: المتصدق هو الرجل المتنفل الذي صلى وراء الرسول صلى الله عليه وسلم وكتبت صلاته بسبع وعشرين درجة، فهو إذن غني وبإمكانه أن يتصدق على غيره، والذي صلى إمام-

ولولا ذلك المتصدق عليه لصلى وحيدا-فقير، وهو بحاجة إلى من يتصدق عليه؛ لأنه لم يكتسب ما اكتسب المتصدق عليه.
وواضح سبب كون هذا متصدقا وهذا امتصدقا عليه، أما في صورة النزاع فالصورة غير واضحة؛ لأنهم كلهم فقراء، كلهم فاتتهم فضيلة الجماعة الأولى فلا ينطبق قول الرسول صلى الله عليه وسلم :" ألا رجل يتصدق على هذا فيصلي معه"، فعلى مثل هذه الحالة لا يصح الاستدلال بهذه الحادثة، ولا على هذه المسألة التي هي موضع البحث.

ونضم جهة أخرى من استدلالهم هي قوله عليه الصلاة والسلام:"صلاة الجماعة تفضل صلاة الفذ بسبع وعشرين درجة"، فاستدلوا بإطلاق ؛أي أنهم فهموا أن (أل)في كلمة الجماعة للشمول؛ أي أن كل صلاة جماعة في المسجد تفضل صلاة الفذ، ونحن نقول بناء على الأدلة السابقة:إن (أل) هذه ليست للشمول، وإنما هي للعهد؛ أي أن صلاة الجماعة التي شرعها الرسول صلى الله عليه وسلم ،وحض الناس عليها، وأمر الناس بها، وهدد المتخلفين عنها بحرق بيوتهم، ووصف من تخلف عنها بأنه من المنافقين-هي صلاة الجماعة التي تفضل صلاة الفذ، وهي الجماعة الأولى والله تعالى أعلم.






















Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.