தரமான மனிதர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

பொதுவாக மனிதர்களில் தரமானவர்கள் எப்போதும் குறைவாகவே இருப்பதுண்டு.

قال الله تعالي: وَقَلِيلٌ مِنْ عِبَادِيَ الشَّكُورُ 34:13
قال الله تعالي: وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ 3:123

திருக்குர்ஆனில் கூட வல்லோன் அல்லாஹ், தனக்கு நன்றி செலுத்தும் அடியார்கள் மிகக் குறைவு தான் என்கிறான்.

பொதுவான மனிதர்களில் இருந்து தரமானவர்களை பிரித்தறிவற்காகத் தான் சோதனைகளும், தேர்வுகளும் உலகியல் நடைமுறைகளாக உள்ளன.

இது தேர்வுக் காலம். மாணவர்களில் தரமானவர்களை கண்டெடுக்கவே மாநில அளவிலும், தேசிய அளவிலும் பள்ளித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

படைத்த ஏக இறைவனும் இதனை ஒப்புக் கொள்கிறான். மனிதர்களில் நல்ல அமல்கள் செய்து தனக்கு பிரியமாக நடந்து கொள்பவர்களை இனம் காணவே மனிதனை சோதித்தறிவதாக கூறுகிறான்.

قال الله تعالي: وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَلَئِنْ قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ  11:7

وقال ايضا : إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا 18:7

وقال ايضا : الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ 
الْعَزِيزُ الْغَفُورُ 67:2

தரம்  மிக முக்கியமானது

எல்லாவற்றிலும் தரம் மிக முக்கியமானது. பொருட்களாக இருக்கட்டும்; அல்லது செயல்களாக இருக்கட்டும்; அல்லது மனிதர்களாக இருக்கட்டும் எப்படியிருந்தாலும் தரம் மிக முக்கியமானதாகும்.

தரமற்றவை மதிப்பிற்குரியவையாக கருதப்படாது. அவை இருந்தும் வீணானதாகவே கருதப்படும்.

பேணிக்கையும், இக்லாசும் இல்லாத தொழுகை மற்றும் நோன்புகளை வீணானவையாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்கு தரமின்மையே முக்கிய காரணம்.

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ رواه البخاري

حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ  رواه ابن ماجه

தரமான பணியார்கள் தேவை

குறிப்பாக எந்த ஒரு பணியும் தரமானதாக அமைந்திட தரமான பணியாளர்கள் தேவை.

தரமில்லாதவர்களின் பணிகள் அவை உலக வேலையாக இருந்தாலும் அல்லது மறுவுலக நன்மைக்குரிய வேலையாக இருந்தாலும் விழலுக்கு இறைத்த நீர் தான்.

قال الله تعالي: فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ 107:5

தரமான ஒரு நிலையை அடையாதவரை அனாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறுவதின் நோக்கமும் அது தான்.

قال الله تعالي: وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ17:34


தரமான பணிகள்

தரம் , ஒழுங்கு போன்றவை பணிகளில் அவசியம். தரமானவையே மதிப்பிற்குரியவை. தரமான ஒழுங்கான பணியையே அல்லாஹ்வும் விரும்புகிறான்.
                                                                                                                           
حَدَّثَنَا بَكْرُ بن مُقْبِلٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بن وَهْبٍ الْكُوفِيُّ، حَدَّثَنَا قُطْبَةُ بن الْعَلاءِ الْغَنَوِيُّ، حَدَّثَنَا أَبِي الْعَلاءِ بن الْمِنْهَالِ، عَنْ عَاصِمِ بن كُلَيْبٍ الْجَرْمِيُّ، عَنْ أبِيهِ، أَنَّهُ خَرَجَ مَعَ أَبِيهِ إِلَى جَنَازَةٍ شَهِدَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا غُلامٌ أَعْقِلُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"يُحِبُّ اللَّهُ لِلْعَامِلِ إِذَا عَمِلَ أَنْ يُحْسِنَ".رواه الطبراني في المعجم الكبير

பிராணிகளை அறுக்கும் பொழுது அவற்றை ஒழுங்காக அறுங்கள் என்று சொன்னதும் அந்த அர்த்தத்தில் தான்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ
ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ فَلْيُرِحْ ذَبِيحَتَهُ رواه البخاري

விவாதத்தில் ஈடுபடும் பொழுதும் தரமாகவும், ஒழுங்காகவும் விவாதத்தில் ஈடுபடுமாறு வல்ல நாயன் அல்லாஹ் கட்டளையிடுகிறான். எதிலும் தரம் தேவை என்பதே அதன் நோக்கம். 

قال الله تعالي: وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ  16:125

தீமைகளையும் கூட தரமாகவும், கண்ணியமாகவும், ஒழுங்காகவும் தடுங்கள் என்பதே அல்லாஹ்வின் கட்டளை.
قال الله تعالي: ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ  41:34

தரமான பணிகளுக்கு தரமான ஊதியம்

பணிகளுக்கு தரமான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதுவே பணியை நிரந்தரமாக்கும். தரமான பணிகள் வெளிப்பட உதவும். தரமான ஊழியர்கள் கிடைக்கும் பட்சத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சம்பளத்தை இலகரங்களில் அள்ளி வழங்குவதின் மர்மமும் இதுவே.

கூலியில் தரமான கூலியை கேட்கும் படியே இஸ்லாம் கட்டளையிடுகிறது. இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் செய்த நற்காரியங்களுக்காக மறுமையில் அல்லாஹ் வழங்கும் கூலியே சுவர்க்கம். அதில் கூட தரமான, மிக உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்சினை கேட்குமாறு கூறினார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

قال رسول الله صلي الله عليه وسلم : فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ
رواه البخاري

தரமான மனிதர்கள் தேவை

மனிதர்களில் தரமானவர்கள் தங்கத்தை விட மதிப்பு மிக்கவர்கள்.

தரமான ஒரு மனிதர் ஆயிரம் நபர்களை விட சிறந்தவர். ஏனெனில்ட, தரமான மனிதர்களே எந்த ஒன்றுக்கும் தகுதியானவர்கள்.

தலைமையேற்கவும், பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றவும் தரமானவர்களே தேவை. தரமில்லாதவர்கள் எதற்கும் உதவ மாட்டார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي أَبُو الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ الْعَظِيمُ السَّمِينُ يَوْمَ الْقِيَامَةِ لَا يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ وَقَالَ اقْرَءُوا
{ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا }رواه البخاري

தரமான மனிதர்கள் தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்ட உமர் (ரழி)

حدثنا أبو بكر بن إسحاق ، أنا بشر بن موسى ، ثنا عبد الله بن يزيد المقري ، ثنا حيوة بن شريح ، أخبرني أبو صخر ، أن زيد بن أسلم حدثه ، عن أبيه ، عن عمر رضي الله عنه أنه قال لأصحابه : « تمنوا » ، فقال بعضهم : أتمنى لو أن هذه الدار مملوءة ذهبا أنفقه في سبيل الله وأتصدق ، وقال رجل : أتمنى لو أنها مملوءة زبرجدا (1) وجوهرا فأنفقه في سبيل الله وأتصدق ، ثم قال عمر : « تمنوا » فقالوا : ما ندري يا أمير المؤمنين ، فقال عمر : « أتمنى لو أنها مملوءة رجالا مثل أبي عبيدة بن الجراح ، ومعاذ بن جبل ، وسالم مولى أبي حذيفة ، وحذيفة بن اليمان » رواه الحاكم

தங்கம், வெள்ளியை விட தரமான மனிதர்களான அபூ உபைதா (ரழி), முஆது இப்னு ஜபல் (ரழி), சாலிம் (ரழி) , ஹுதைஃபா (ரழி) போன்றோரையே உமர் (ரழி) அவர்கள் விரும்பினார்கள்.

இவர்கள் அனைவரும் உயிரோடு இருந்த காலத்தில் தான் இரு பெரும் வல்லரசுகளுக்கெதிராக போர் தொடுக்கப்பட்டு வெற்றி கிட்டியது.

உமர் (ரழி) அவர்களின் சாதனைகளுக்கு தூணாக நின்றவர்கள் இவர்களே. இவர்கள் இறந்த பிறகு இவர்களைப் போன்றவர்கள்
எனக்கு வேண்டுமே! என்றார்கள் உமர் (ரழி

தரமானவர்களை ஊக்கப்படுத்துதல்

தரமானவர்களும், தகுதிமிக்கவர்களும் நாகரிக சமுதாயத்தின் சொத்துக்கள். இறைவன் உவந்தளித்த முத்துக்கள். அவர்களை அரசும், சமுதாயமும் பயன்படுத்த வேண்டும்.

தற்கால உலகில் விருதுகள், ஊக்கத் தொகைகள், பரிசுகள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படுவதின் பின்னணியும் இதுவே.

தரமானவர்களை சரியாக பயன்படுத்த தெரியாததை விட  பெரிய துரதிர்ஷ்டம் ஒரு சமுதாயத்திற்கு வேறு எதுவும் இல்லை.

இதை புரிந்து செயல்பட்ட காலம் வரையிலும் முஸ்லிம்கள் வெற்றி மேல் வெற்றி கண்டார்கள். 


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.