(குறிப்பு: இனிவரும் வாரங்களில் விடுபடாமல் வெள்ளிமேடை வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.)


மனிதர்களாகிய நமது வாழ்க்கை பல்வேறு ஏற்றத் தாழ்வுகளை கொண்டது.

மகிழ்ச்சி, முன்னேற்றம், வெற்றி, பாராட்டுக்கள் போன்றவை மட்டுமே வாழ்க்கையில் ஏற்படுவதில்லை.

மாறாக துக்கமும், தோல்வியும் வாழ்க்கையில் கிடைக்கவே செய்யும். பாராட்டுக்கள் கிடைப்பது போன்று விமர்சனங்களும் – வசைபாடல்களும் அடுத்தவர் தரப்பில் இருந்து பாய்ந்து வரவே செய்யும்.

பொறுமை அவசியம்

மனித வாழ்க்கை மாறுபட்ட பல நிலைகள் கொண்டது. எல்லா காலமும் எந்த மனிதனும் ஒரே நிலையிலேயே இருந்து விட மாட்டான்.

ஆதலால் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறும் பொழுது அல்லது மாற்றப்படும் பொழுது அதை தாங்கிடும் பக்குவமும் – பொறுமையும் மனிதனுக்கு அவசியம்.

ஆம். விருப்பமில்லாதவை வாழ்வில் நிகழும் பொழுதும், துன்பங்கள் – தோல்விகள் அணிவகுத்து வரும் பொழுதும் மன உளைச்சலில் மனிதன் மடிந்து போகாமலிருக்கவும்,  மனமொடிந்து அல்லாஹ்வின் அருளில் இருந்து நிராசையாகி விடாமல் இருக்கவும் மனிதனுக்கு பொறுமை மிக மிக அவசியமே.

ஏனெனில்,இந்த துன்பங்கள் – வேதனைகள் அகலும்; இருள் நீங்கி வாழ்வில் வெளிச்சம் தோன்றும்; முன்னேற்றமான ஒருகாலம் வரத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை நிச்சயம் பொறுமையே விதைக்கும்.

பொறுமை மனிதனின் பண்பு

உயர்ந்தோன் அல்லாஹ் தன்னை பொறுமையாளன் என்கிறான். பொறுமையாளர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறுகிறான்.

 قال الله تعالي :يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ 2:153

திருக்குர்ஆனில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுமையை பாராட்டி கூறுகிறான்.

பொறுமையைத் தவிர வேறெந்த பண்பையும் இவ்வளவு அதிகமாக பாராட்டியதாக நாம் காண முடியவில்லை.

இன்னும் விளக்கி கூறுவதென்றால், பொறுமை மனித இனத்துக்கே உரிய சிறப்புக் குணமாகும். மேன்மைமிக்க இக்குணத்தை விலங்குகளிடமோ அல்லது வானவர்களிடமோ எதர்பார்க்க இயலாது.

ஏனெனில், விலங்குகள் இச்சைகளின் அடிப்படையில் வாழக்கூடியவை. அவற்றின் அசைவையும், போராட்டத்தையும் இச்சைகளே தீர்மானிக்கின்றன. இச்சைகளை அடக்கும் ஆற்றலை அவற்றுக்கு அல்லாஹ் தரவில்லை.

வானவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தில் வாழ்பவர்கள். ஆசைகள் அவர்களிடத்தில் இல்லாததால் அதை கட்டுப்படுத்துதல் என்ற பேச்சே அவர்களின் விஷயத்தில் வராது.

சோதனைகள் வாழ்வில் உண்டு

قال الله تعالي: أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آَمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ 29:2

நபிமார்களில் பலர் பலவிதமான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். நபித்தோழர்கள், சங்கைக்குரிய இமாம்கள் என வரலாற்றில் மதிப்பிற்குரியவர்களாக வாழ்ந்த எல்லோரும் சோதனைகளுக்கு ஆட்பட்டே இருக்கின்றனர்.

படைத்த ஏக இறைவன் அல்லாஹ் சோதனைகளின் போது மனிதனிடம் பொறுமையை எதிர்பார்க்கிறான். தன் மீது மனிதன் நம்பிக்கை வைத்துள்ளானா? அல்லது புலம்பித் தீர்த்து நிராசையாகிறானா? என்று பரிசோதிக்கிறான்.

قال   الله تعالي : وَلَا تَيْئَسُوا مِنْ رَوْحِ اللَّهِ إِنَّهُ لَا يَيْئَسُ مِنْ رَوْحِ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْكَافِرُونَ12:87

வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைந்திட

அறிவும், முன்னேற்றங்களும், செல்வங்களும், பதவிகளும் பெரும் போராட்டங்களுக்கும் – மகத்தான பொறுமைக்கு பின்னால் தான் கிடைக்கும்.

ஒரே நாளில் – ஒரே இரவில் யாரும் நிச்சயம்  அறிவாளியாகி விட முடியாது. அவ்வாறே  நியாயமான வழியில் செல்வந்தராகி விடவும்  முடியாது.  லட்சியங்களை அடைய வேண்டுமானால் பொறுக்க வேண்டும். பொறுத்தார் தான் பூமியாள்வார்.

கேவலப்படுவதும் அடிவாங்கவதும் பொறுமை அல்ல..

பொறுமை என்ற பதம் தப்பிதமான பொருளில் சில இடங்களில் ஒலிக்கின்றது.  எதிரிகளின் சூழ்ச்சிகளும், தாக்குதல்களும் அணிவகுத்து வரும் பொழுது முகத்தை சோகமாக வைத்த நிலையில் கையை முட்டில் கட்டிக் கொண்டு ஓரமாக உட்கார்வதும், பின்னங் கைகளை கட்டிக் கொண்டு எதிரிகளுக்கு முன்னால் மண்டியிடுவதும் பொறுமை அல்ல.  இஸ்லாம் அதனை கோழைத்தனம் என்கிறது.

களத்தில் பின்வாங்காமல் – சரணடையாமல் தாக்குதல்களையும், நரித்தனங்களையும் முறியடிக்கும் வரை போராடுவதையே பொறுமையாக இஸ்லாம் பார்க்கின்றது. பின்வரும் வசனம் இக்கருத்தில் அமைந்ததே.

قال الله تعالي: يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 3:200

பொறுமை ஈமானில் பாதி

حدثنا أبو عبد الرحمن محمد بن الحسين السلمي ، أنا محمد بن الحسن بن الحسين بن منصور ، أنا جعفر بن محمد بن سليمان الخلال ، نا يعقوب بن حميد ، نا محمد بن خالد المخزومي ، عن سفيان الثوري ، عن زبيد ، عن أبي وائل ، عن عبد الله ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « الصبر نصف الإيمان  رواه البيهقي في شعب الايمان

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَاللَّفْظُ لِشَيْبَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ  رواه مسلم






Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.