நூறு குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பது நீதித்துறை சார்ந்த நெறியாகும்.
ஆனால் நாம் வாழும் நமது இந்திய தேசத்தில் உன்னதமான இந்த நெறி சமீபகாலமாக காற்றில் பறக்க விடப்பட்டு வருகிறது.

மாலேகான், டில்லி ஜும்ஆ மஸ்ஜித், அஜ்மீர் ர்கா, ஐதரபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் கைது  செய்யப்பட்டு பல ஆண்டுகள் சிறை , சித்ரவதை போன்றவற்றிற்கு பிறகு விடுதலை செய்யப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

தொடர்ந்து மத அடிப்படையில் முஸ்லிம்கள் இங்கே தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஒன்றை நாம் கவனத்தில் வைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட இந்த இளைஞர்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தார்கள் என்பதைத்தவிர வேறு எந்த பாவத்தையும் செய்திருக்கவில்லை

قال الله تعالي : وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ  85:8

அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை அனுமதிக்காத இஸ்லாம்
இன, மத அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அனுமதிக்காது
قال الله تعالي : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ 5:8

அப்பாவிகள் தண்டிக்கப்படுவதின் வழிகளை இஸ்லாம் பின்வரும் எச்சரிக்கைகள் மூலம் தடுக்கின்றது. அவை,

1.     நீதித்துறை எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டிய துறை

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ وَلِيَ الْقَضَاءَ فَقَدْ ذُبِحَ بِغَيْرِ سِكِّينٍ» رواه ابو داود


2.தீர்ப்புக்கு முன்பு நீதிபதி ஆய்வு செய்வது

எழுதி கொடுக்கப்பட்ட தாளை படித்து விட்டு, தீர்ப்பு தருவதை இஸ்லாம் அனுதிக்கவில்லை.
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ، وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ  رواه البخاري
3.     கோபத்தில் தீர்ப்பு செய்யக்கூடாது

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالُوا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَقْضِي الْقَاضِي بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ» رواه البخاري

4. குற்றஞ்சாட்டப்பட்டவர் கருத்தை  கூற அனுமதி தருவது, அதனை செவிதாழ்த்தி கேட்பது


حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الجُعْفِيُّ، عَنْ زَائِدَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ حَنَشٍ، عَنْ عَلِيٍّ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا تَقَاضَى إِلَيْكَ رَجُلَانِ، فَلَا تَقْضِ لِلأَوَّلِ حَتَّى تَسْمَعَ كَلَامَ الآخَرِ، فَسَوْفَ تَدْرِي كَيْفَ تَقْضِي»، [ص:611] قَالَ عَلِيٌّ: «فَمَا زِلْتُ قَاضِيًا بَعْدُ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ
رواه الترمذي

5.தவறான தீர்ப்பு அளித்தால் நீதிபதி மறுவுலக வாழ்க்கை பாழாகும்

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ تَوْبَةَ قَالَ: حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو هَاشِمٍ، قَالَ: لَوْلَا حَدِيثُ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ، اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، رَجُلٌ عَلِمَ الْحَقَّ فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ، وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ جَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ» ، لَقُلْنَا: إِنَّ الْقَاضِيَ إِذَا اجْتَهَدَ فَهُوَ فِي الْجَنَّةِرواه ابن ماجه
ஆனால் அப்சல் குருவின் வழக்கில் அவருக்கு தண்டனை தரப்பட்டது சாட்சியத்தின் அடிப்படையில் அல்ல... மாறாக பெரும்பான்மை மக்களின் திருப்திக்காக ... என்று உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டது..

60 சதவீத மதசார்பற்ற மக்களும், 30 சதவீத முஸ்லிம்களும் இந்த தீர்ப்பின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில் திரை மறைவு இரகசியமாக அவரை இங்கே தூக்கிலிடப்பட்டது.

நாட்டில் வெறும் இரண்டு சதவீதம் இருக்கக்கூடிய இந்துவவாதிகளை திருப்திபடுத்திடவே இந்த தீர்ப்பும் தரப்பட்டது. அதை இப்போது அமல்படுத்தவும் செய்யப்பட்டது.

ஒருவனை அல்லது ஒரு சமூகத்தை திருப்திபடுத்த தீர்ப்பு என்றால் சட்டங்களும், நீதித்துறையும் அவசியமில்லை தான்.
தமது எண்ணப்படி தீர்ப்புகள் தந்து வந்த பழைய கால முறை மன்னராட்சியை நோக்கி இந்நாட்டை இந்துத்துவவாதிகள் அழைத்து செல்வதாக தெரிகிறது.

இனிவரும் காலங்களில் ஒருவனை அல்லது ஒரு சமூகத்தை குற்றவாளி ஆக்கிடவும், தண்டனைகள் தந்திடவும் ஓட்டெடுப்பு நடத்தும் நிலைக்கு கூட இந்நாட்டை அவர்கள் அழைத்துச் செல்லும் வாய்ப்பு இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை..
 3


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.