சத்திய மார்க்கமான இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்தக்கூடிய மார்க்கமாகும்.

இனங்கள், நிறங்கள்,  பேசும் மொழிகள், நாடுகள் இவற்றுக்கு அப்பால் உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் ‘சகோதரர்கள்’ என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இஸ்லாம் வலியுறுத்தும் உலக சகோதரத்துவம்

இஸ்லாம் உலக சகோதரத்துவத்தை வலியுறுத்துகின்றது. ஆதலால் தான் ,குறிப்பிட்ட இனம், குறிப்பிட்ட நிறம், குறிப்பிட்ட மொழி என்ற வேற்றுமை அரசியலையும், வெறுப்புக் கொள்கையையும் இஸ்லாம் எப்பொழும், எந்தக் காலத்திலும் ஆதரித்ததும் இல்லை. அங்கீகரித்ததும் இல்லை.

அவ்வாறே படைத்த ஏக இறைவன் அல்லாஹ் தன்னை குறிப்பிட்ட இனத்தவருடனோ, குறிப்பிட்ட மொழியினருடனோ நெருக்கமாக்கிக் கொண்டதுமில்லை.

மாறாக தன்னை رب العالمين  (எல்லா மக்களின் இறைவன்) என்றே கூறுகிறான்.

இவ்விடம் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும். அல்லாஹ்வை முஸ்லிம்கள் மட்டும் தான் வழிபடுகிறார்கள். எனினும் ‘முஸ்லிம்களின் இறைவன்’ என்று கூட தன்னை அவன் கூறவில்லை.

ஏனெனில், மனிதர்கள் எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள். அல்லாஹ்வின் அடிமைகள் என்ற அடிப்படையில் ‘மனிதர்கள் எல்லோரும் சகோதரர்கள்’ என்பதையே இதன் மூலம் அல்லாஹ் புரிய வைக்கிறான்.

இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் மக்காவை வெற்றி கொண்ட சமயத்தில் மக்களுக்கு நிகழ்த்திய உரையில்  நபி (ஸல்) அவர்கள் இப்படி சொன்னார்கள்.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الْجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا فَالنَّاسُ رَجُلَانِ بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللَّهِ وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللَّهِ وَالنَّاسُ بَنُو آدَمَ وَخَلَقَ اللَّهُ آدَمَ مِنْ تُرَابٍ قَالَ اللَّهُ
{ يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ } رواه الترمذي

மனிதர்கள் எல்லோரும் ஒரு தந்தைப் பிள்ளைகள், ஒரு தாய்ப் பிள்ளைகள் என்ற உணர்வே இஸ்லாம் ஊட்டும் உணர்வாகும்.

قال الله تعالي: يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا 4:1

‘எல்லோரும் சகோதரர்கள்’ என்பது இஸ்லாம் கற்றுத் தந்த அறநெறியாக இருந்ததால் தான் அடிமையாக இருந்தவர் தலைவராக ஆன அதிசயம் இஸ்லாமிய வரலாற்றில் நடந்தது.

கருப்பர் ஒருவர் மிக வெண்மையாக பிறந்த மனிதர்களுக்கு தலைவரான அதிசயமும், அரபியர் அல்லாத ஒருவர் அரபுகளுக்கு தலைவரான அதி அற்புதமும் இஸ்லாமிய வரலாற்றில் அரங்கேறின.

இந்த அதிசயங்கள் அனைத்தும் பிற்காலத்தில் தலைமைப் பஞ்சத்தினால் ஏற்பட்டன என்றும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

மாறாக இவையனைத்தும் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் தான் அன்னாரால் செயல்படுத்தப்பட்டன.

நபி (ஸல்) அவர்களின் அடிமையாக இருந்தவர் நபித்தோழர் ஜைது இப்னு ஹாரிசா (ரழி) அவர்கள்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நடந்த போரான மூத்தா யுத்தத்தில் முதல் தளபதியாக அவரைத் தான் நியமித்தார்கள்.
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ مُؤْتَةَ زَيْدَ بْنَ حَارِثَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ قُتِلَ زَيْدٌ فَجَعْفَرٌ وَإِنْ قُتِلَ جَعْفَرٌ فَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ قَالَ عَبْدُ اللَّهِ كُنْتُ فِيهِمْ فِي تِلْكَ الْغَزْوَةِ فَالْتَمَسْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَوَجَدْنَاهُ فِي الْقَتْلَى وَوَجَدْنَا مَا فِي جَسَدِهِ بِضْعًا وَتِسْعِينَ مِنْ طَعْنَةٍ وَرَمْيَةٍ  رواه البخاري

அது மட்டுமல்ல.. அன்னார் உயிருடன் இருந்தவரை மதீனாவில் இருந்த  அனுப்பபட்ட யுத்தக் குழுக்களின்  தலைமை பதவி அவர்களுக்கே தரப்பட்டது. பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ قَالَ حَدَّثَنِي وَائِلُ بْنُ دَاوُدَ قَالَ سَمِعْتُ الْبَهِيَّ يُحَدِّثُ عَنْ عَائِشَةَ قَالَتْ
مَا بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدَ بْنَ حَارِثَةَ فِي جَيْشٍ قَطُّ إِلَّا أَمَّرَهُ عَلَيْهِمْ وَلَوْ بَقِيَ بَعْدَهُ اسْتَخْلَفَهُ     رواه احمد

நிறம் அங்கே பிரச்சினையாக இல்லாததால் தான் மக்கா வெற்றியின் புனித கஅபாவினுள் நுழைந்த பொழுது நபி (ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்? என்பது பற்றி கருப்பு நிறத்தவரான பிலால் (ரழி) அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலைமை உமர் (ரழி) அவர்களின் மகனாருக்கு  நிலவியது.

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا سَيْفُ بْنُ سُلَيْمَانَ سَمِعْتُ مُجَاهِدًا يَقُولُ
أُتِيَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي مَنْزِلِهِ فَقِيلَ لَهُ هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ دَخَلَ الْكَعْبَةَ قَالَ فَأَقْبَلْتُ فَأَجِدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ وَأَجِدُ بِلَالًا عِنْدَ الْبَابِ قَائِمًا فَقُلْتُ يَا بِلَالُ أَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكَعْبَةِ قَالَ نَعَمْ قُلْتُ فَأَيْنَ قَالَ بَيْنَ هَاتَيْنِ الْأُسْطُوَانَتَيْنِ ثُمَّ خَرَجَ فَصَلَّى رَكْعَتَيْنِ فِي وَجْهِ الْكَعْبَةِ
رواه البخاري


அது உமர் (ரழி) க்கோ அவரது மகன் அப்துல்லாஹ் (ரழி) அவர்களுக்கோ வெறுப்பாக தெரியவில்லை.

வரலாற்றில் இன்னோர் உதாரணம்


لما جاء المسلمون لفتح مصر وتوغلوا فيها حتي وقفوا امام حصن بابليون رغب المقوقس في المفاوضة مع المسلمون فارسل اليهم وفدا ليعلم ما يريدون ثم طلب مهنم ان يرسلوا اليه وفدا فارسل اليه عمرو بن العاص عشرة نفر فيهم عبادة بن الصامت وكان عبادة اسود شديد السواد طويلا حتي قالوا ان طوله اشبار

وامره عمرو هو الذي يتولي الكلام .فلما دخلوا علي المقوقس تقدمهم عبادة علي المقوقس وهابه المقوقس لسواده وقال لهم نحوا عني هذا الاسود وقدموا غيره ليكلمني

 وقال رجال الوفد جميعا هو افضلنا رأيا وعلماوهو سيدنا وخيرنا والمقدم علينا وانما نرجع الي قوله ورأيه وقد امره الامير دوننا بما أمره, وامرنا ألا نخالف رأيه وقوله , وفقال لهم : كيف رضيتم ان يكون هذا الاسود افضلكم وانما ينبغي ان يكون هو دونكم؟

قالوا كلا انه وان كان اسود كما تري فإنه من افضلنا موضعا وافضلنا سابقة وعقلا ورأيا وليس ينكر السواد فينا , فقال المقوقس لعبادة , تقدم يا اسود وكلمني برفق فإني اهاب سوادك , وان اشتد كلامك علي ازددت لك هيبة, فقال وقد رأي فزع المقوقس من السواد : ان في جيشنا الف اسود هم اشد سوادا مني


“முஸ்லிம் படைகள் எகிப்தை வெற்றி கொள்ள ஒரு கோட்டை யை முற்றுகையிட்டிருந்தன. கோட்டைக்குள்ளிருந்த எகிப்திய ஆட்சியாளர் முகவ்கிஸ் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்தான்.

முஸ்லிம் படைகளின் தளபதியாக இருந்த அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் பத்து நபர்களை அனுப்பி வைத்தார்கள்.

அவர்களுக்கு தவைராக நபித்தோழர் உபாதா இப்னு ஸாமித் (ரழி) அவர்களை அனுப்பினார்கள். அவர்கள் மிகவும் கருப்பு நிறம் கொண்டவர்கள். அதனை அருவருத்த மன்னர் இவருடன் பேச எனக்கு பயமாக உள்ளது. வேறு யாராவது இருக்கிறீர்களா? என்று முஸ்லிம்களிடம் கேட்டான்.

முஸ்லிம்கள் அவர் தான் எங்களில் சிறந்தவர். அறிவாளி. தளபதியால் இக்குழுவுக்கு தலைமை தாங்கும் படி நியமிக்கப்பட்டவர் என்றனர்.

அரசன் சொன்னான். அருவருப்பானவரே.. என்னிடம் தூர நின்று பேசுவீராக.. உம்மை பார்த்தாலே பயமாக உள்ளது.
அதற்கு உபாதா சொன்னார்கள். “அரசனே.. என்னை விட கொடிய கருப்பர்கள் எங்களின் படையில் ஆயிரம் நபர்கள் உள்ளனர்”
                         ( நூல் : மின் ரவாயிஇ ஹளாரதினா)

மனிதன் கண்டுபிடித்த இனவெறி - மொழி வெறி

எல்லோரும் ஒன்று என்று இஸ்லாத்தில் கூறப்பட்டதால் தான் இனம் பிரிவினையாக தெரியவில்லை. மொழி பிரிவினையாக தெரியவில்லை. நிலம் பிரிவினையாக தெரியவில்லை. அவற்றால் எந்த பிரச்சினையும் அங்கே ஏற்படவில்லை.

நவீன உலகில் எல்லா நாடுகளிலும் பிரச்சினை ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் மனிதன் கண்டுபிடித்த கொள்கைகள் தான்.

அல்லாஹ் பூமி முழுவதையும் மனிதனுக்கு என்கிறான்.

قال الله تعالي: قُلْ يَا عِبَادِ الَّذِينَ آَمَنُوا اتَّقُوا رَبَّكُمْ لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَأَرْضُ اللَّهِ وَاسِعَةٌ 39:10

ஆனால் இந்த மனிதன் பூமியை பங்கு போட்டான். இந்த நிலம் உனக்கு. இந்த நிலம் எனக்கு என்று பிரித்தான்.

படைத்த இறைவன் எல்லோரும் ‘சகோதரர்கள்’ என்கிறான். ஆனால் இந்த மனிதன் தான் தேசியவாதம், நாட்டுப்பற்று, தேசபக்தி என்று புதுவாதம் பேசினான்.

பக்கத்து நாட்டின் மீது வெறுப்பை உருவாக்கிட இக்கொள்கைகளை பிடித்து விடாமல் தொங்கினான்.

மனிதர்களை பல இனத்தவர்களாகவும், பல மொழி பேசுபவர்களாகவும் படைத்தது இறைவனின் அத்தாட்சி என்கிறான் படைத்த இறைவன்.

 قال الله تعالي: وَمِنْ آَيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِلْعَالِمِينَ 30:22

ஆனால் மனிதன் இயற்கையான் இவ்வேற்றுமைகளின் மூலம்  படிப்பினை பெறாமல், அதன் மூலம் இறைவனை உணராமல் வெட்டிக் கொண்டு செத்து மடிகிறான். ஒருவனை ஒருவன் அழித்து வாழ்கிறான்.

பக்கத்து நாட்டுக்காரனை வெறுப்பதற்காக மனிதன் தீனி போட்டு வளர்த்த தேசியவாதம் இப்போழுது நமது இந்திய தேசம், பக்கத்து நாடான இலங்கை உட்பட எல்லா நாடுகளிலும் கொஞ்சம் சுருங்கி உனது மொழி, உனது மாகாணம், உனது பகுதி என்ற பிரிவினைக்கும், நீ தமிழன் – நான் கன்னடன். நீ தமிழன் - நான் மலையாளி, நீ தமிழன் – நான் சிங்களன் எனும் பிரிவினைக்கும் இழுத்துச் சென்றுள்ளது.

இதன் விளைவு தான் இலங்கையில் இனப்படுகொலைகள் அரங்கேறின.

இங்கே காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினை போன்றவற்றின் அரசியல் ஆட்டம்

இனம், மொழி, நிலம் இவற்றுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் சகோதரர்கள் என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

ஆதலால் தான் இனவெறியை முற்றிலும் ஒழித்துக் கட்டினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இனவெறியை பிடித்து திரிபவனை  கிணற்றில் விழுந்த ஒட்டகத்தின் வாலை பிடித்து தொங்குபவன் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا إِسْرَائِيلُ عَنْ سِمَاكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَعَانَ قَوْمَهُ عَلَى ظُلْمٍ فَهُوَ كَالْبَعِيرِ الْمُتَرَدِّي يَنْزِعُ بِذَنَبِهِ  احمد

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَوْفٌ عَنْ الْحَسَنِ عَنْ عُتَيٍّ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ
رَأَيْتُ رَجُلًا تَعَزَّى عِنْدَ أُبَيٍّ بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ افْتَخَرَ بِأَبِيهِ فَأَعَضَّهُ بِأَبِيهِ وَلَمْ يُكَنِّهِ ثُمَّ قَالَ لَهُمْ أَمَا إِنِّي قَدْ أَرَى الَّذِي فِي أَنْفُسِكُمْ إِنِّي لَا أَسْتَطِيعُ إِلَّا ذَلِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ تَعَزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ فَأَعِضُّوهُ وَلَا تَكْنُوا رواه احمد

இலங்கை பேரினவாதமும் பேரழிவும்

இரண்டு உலகப் போர்களுக்கு இனவெறியும், தேசியவாதமும் தான் காரணம். அவ்விரண்டு போர்களிலும் கோடிக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள்.

நமது பக்கத்து நாடான இலங்கையில் சிங்கள பேரினவாதத்தினாலும், தமிழ் பேரினவாதத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்.

அதற்கு உடன்பட்டவர்களும் அதற்கு பலியானார்கள். அதற்கு உடன்படாதவர்களும் அதனால் பலியானார்கள்.

சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், நோயாளிகள், இரு தரப்பிலும் உள்ள நடுநிலையாளர்கள், இரு தரப்பையும் சாராத மூன்றாம் தரப்பு மக்களான முஸ்லிம்கள் என இவ்விரண்டு பேரினவாதங்களுக்கும் பலியானவர்களின் எண்ணிக்கை இலட்சங்களை தாண்டி விட்டது.

இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி ஒன்று இலங்கையில் சில புத்த மத குருமார்களால் கிளப்பப்பட்டு வருகிறது. 

ஒரு மதத்தவர்களை வழிநடத்தும் மத குருமார்கள் பிற மதத்தவர்கள் மீதான வெறுப்பை பரப்பிக் கொண்டிருப்பது வேதனையிலும் கொடிய வேதனை.

இங்கே சிந்திக்கத்தக்க விஷயம் என்னவெனில், மனித குலத்தை அழிக்க வல்ல இனவாதமும், இனவெறியும் சாதாரண மக்களை மட்டுமல்ல.. ஆன்மீகம் கற்றிருந்த மத குருமார்களையும் ஆட்டிப் படைத்து வருகிறது என்பதாகும்.

இனவாதத்தை வேரறுப்போம் -  விரட்டியடிப்போம்

தூய்மையான சகோதரத்துவத்தை வளர்க்கும் இஸ்லாத்தை மக்கள் நெஞ்சங்களில் இடம் பெறச் செய்து இனவாதத்தை விரட்டிப்போம்.

இஸ்லாம் மனிதர்களை கருணையுடன், சகோதர வாஞ்சையுடன் பார்க்க வைக்கும். இனவாதம் மக்களை வெறுக்கத் தூண்டும்.

இஸ்லாம் மனிதர்களை ஒன்றிணைக்கும். மத , இன நல்லிணக்கத்தை கட்டி எழுப்பும். இனவாதமோ மக்களை துண்டாடும். சமூக நல்லிணக்கத்தை உடைத்தெறியும்.

தத்தளிக்கும் ஆத்மாக்களை காப்பாற்றுவதே இஸ்லாத்தின் இலட்சியம். இனவாதத்தின் நோக்கமோ தன்னை மட்டும் காப்பாற்றி மற்றவர்களை மூழ்கடிப்பதாகும்.

இஸ்லாத்தை கடைபிடிப்போம். அதனை எடுத்துச் சொல்வோம்.

இனவாதத்தை எதிர்ப்போம். அதனை வேரறுப்போம்.


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.