பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் காலம் இது. மத்திய அரசினைத் தொடர்ந்து மாநில அரசுகளும் பட்ஜெட் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஓர் அரசு வரப்போகிற ஆண்டு முழுவதும் என்ன செய்யப் போகிறேதோ அதற்கான திட்ட அறிவிப்புகள், திட்ட ஒதுக்கீடு மற்றும் நிதி ஆதாரங்கள், ஆண்டு முழுவதும் ஆகிடும் செலவுகள் குறித்த வரவு செலவு பட்டியலே பட்ஜெட் ஆகும்.

நவீன பொருளாதார உலகில் ‘பட்ஜெட்’ மிக முக்கியமானதாகும்.

ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல..ஒரு தொழில் நிறுவனம், ஒரு சமுதாயம், ஒரு குடும்பம் இன்னும் சொல்வதெனில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ‘பட்ஜெட்’ எனும் திட்டமிட்ட வரவு – செலவு மிக அவசியமானதே.

இஸ்லாமிய வரவு – செலவு பட்ஜெட்

பட்ஜெட்டின் மிக முக்கியமான நோக்கமே செலவுகளை கட்டுப்படுத்தி வருவாயை பெருக்குவது தான்.

இஸ்லாம் வழிகாட்டும் வரவு செலவு பட்ஜெட் பின்வரும் ஐந்து அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1.நிதி ஆதாரம்

பட்ஜெட்டின் மிக முக்கியமான அம்சமே நிதி ஆதாரம் தான். வருவாயும், நிதி ஆதாரமும் இன்றி பட்ஜெட் போட இயலாது.

இஸ்லாம் வருமானத்தை தேடுவதை இறைக் கட்டளையாகவே பார்க்கின்றது.

قال الله تعالي: هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ 67:15

தொழில் செய்வது, மரம் நடுவது, விவசாயம் செய்வது, வியாபாரம் செய்வது, கூலி வேலை செய்வது ஆகியவற்றை  அல்லாஹ் கட்டளையிட்ட அமல்களாகவும், மனிதன் மீது இறைவன் விதித்த கடமையான பணிகளில் ஒன்றாகவும் இஸ்லாம் கருதுகிறது.

عن علقمة عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي في السنن الكبري وشعب الايمان

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனிநபர் வருமானம் முக்கிய பங்கு வகிக்கும். ஆதலால் தான் தனி நபர் உழைப்பை இஸ்லாம் ஆர்வப்படுத்துகின்றது.

உழைப்பின்றி வாழ்வதை அது ஏற்கவில்லை. யாசகம் கேட்பதை அது அனுமதிக்கவும் இல்லை.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ ثَوْرٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ الْمِقْدَامِ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَكَلَ أَحَدٌ طَعَامًا قَطُّ خَيْرًا مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمَلِ يَدِهِ وَإِنَّ نَبِيَّ اللَّهِ دَاوُدَ عَلَيْهِ السَّلَام كَانَ يَأْكُلُ مِنْ عَمَلِ يَدِهِ رواه البخاري

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ عَنْ الْأَخْضَرِ بْنِ عَجْلَانَ عَنْ أَبِي بَكْرٍ الْحَنَفِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ إِنَّ الْمَسْأَلَةَ لَا تَصْلُحُ إِلَّا لِثَلَاثَةٍ لِذِي فَقْرٍ مُدْقِعٍ أَوْ لِذِي غُرْمٍ مُفْظِعٍ أَوْ لِذِي دَمٍ مُوجِعٍ      
رواه  ابو داود

ஏனெனில், உழைக்காமல் வாழ்வதும், யாசகம் கேட்பதும் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைப்பதுடன் பொருளாதார சுரண்டலுக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் தான் வழிவகுக்கும்.

இவ்விடம் ஒன்று சிந்திக்கத்தக்கது.  உழைப்பதில் கூட நேர்மையாக உழைப்பதையே இஸ்லாம் ஆதரிக்கின்றது.

ஏனெனில், நீதி – நேர்மையற்ற வருமானங்களான வட்டி, பதுக்கல், மோசடி . இலஞ்சம் ஆகியவை இன்னொரு சுரண்டலுக்கு வழி கோலும் என்பதே அதற்கு காரணம்.

இஸ்லாம் தடுக்கப்பட்டதை மட்டுமல்ல.. அது விஷயத்தில் சந்தேகமானதைக் கூட தவிர்ந்திருக்குமாறு கட்டளையிடுகிறது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا زَكَرِيَّاءُ عَنْ الشَّعْبِيِّ عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُهُ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ إِنَّ الْحَلَالَ بَيِّنٌ وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنْ النَّاسِ فَمَنْ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ رواه البخاري

2. செலவு செய்தல்

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று வருமானத்துக்கு தக்கவாறு   செலவு செய்வதாகும்.

வரம்பற்ற செலவும், வருமானத்தை மிஞ்சிய செலவும் தனி மனிதனையும், ஒரு சமூகத்தையும், ஒரு நாட்டையும் திவாலாக ஆக்கி விடும்.

ஆதலால், வருமானத்தை செலவிடுவதில் சில ஒழுங்கு முறைகள் கண்டிப்பாக தேவை.

இஸ்லாம் செலவீனத்தில் சில ஒழுங்குமுறைகளை கற்றுத் தருகிறது.

அ) நடுநிலையாக செலவழித்தல்
حَدَّثَنَا مُحَمَّدُ بن أَبِي زُرْعَةَ ، نَا هِشَامُ بن عَمَّارٍ ، نَا مُخَيِّسُ بن تَمِيمٍ ، حَدَّثَنِي حَفْصُ بن عُمَرَ ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بن عَبْدِ اللَّهِ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : الاقْتِصَادُ فِي النَّفَقَةِ نِصْفُ الْمَعِيشَةِ ، وَالتَّوَدُّدُ إِلَى النَّاسِ نِصْفُ الْعَقْلِ ، وَحُسْنُ السُّؤَالِ نِصْفُ الْعِلْمِ . رواه الطبراني في المعجم الكبير

ஆ) நடுநிலையாக அனுபவித்தல்

மக்களில் சிலர் ஏக போகமாக நுகர்வதும், பலர் குறைந்த பட்ச உணவு கூட இன்றி தவிப்பதும் இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

நுகர்வுக் கட்டுப்பாடின்மையே இத்தகைய அவலத்திற்கு காரணம்.

வரம்பற்ற நுகர்வை இஸ்லாம் தடுக்கிறது. நுகர்வு குறித்து பேசும் இடத்தில் ‘எல்லை மீறாதீர்கள்’ எனும் வாசகம் திருக்குர்ஆனில் இடம் பெறுவது இதற்கு ஆதாரம்.

قال الله تعالي:  يَا بَنِي آَدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ  7:31

கட்டுப்பாடின்றி செலவு செய்து செல்வத்தை முழுமையாக இழப்பதை இஸ்லாம் கண்டிக்கவே செய்கின்றது.

قال الله تعالي:   وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا  17:29

3. சேமிப்பு

பட்ஜெட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்று வருமானத்தை பெருக்கி, செலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகப்படுத்துவதாகும்.

வருமானத்தை அப்படியே செலவழித்து விட்டு போவதை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது.

மக்களில் சிலர் அவ்வாறு தான் தவறாக விளங்கி வைத்துள்ளனர். சேமிப்பு தவக்கலுக்கு முரணானது என்று அவர்கள் கருதுகின்றனர் போல.

ஆனால், இஸ்லாம் சேமிப்பை மனிதனுக்கு கற்றுத் தருகிறது. பணத்தை சேமிப்பதுடன் இறையச்சத்தையும் சேர்த்து சேமிக்க வேண்டும் என்கிறது.

قال الله تعالي:   وَتَزَوَّدُوا فَإِنَّ خَيْرَ الزَّادِ التَّقْوَى2:197

ஏனெனில், சேமிப்பு இருந்தால் மட்டுமே கடமையாகும் என்ற நிலையில் உள்ள அமல்கள் இஸ்லாத்தில் உண்டு.  இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஜகாத்தும், ஹஜ்ஜும் சேமிப்பாளர்களுக்கு மட்டுமே கடமையாகும்.

அவ்விரண்டையும் செய்ய வேண்டுமெனில், முஸ்லிம் ஒருவர் கட்டாயம் சேமித்தாக வேண்டும்.

சேமிப்பு தனி மனிதனுக்கு மட்டுமல்ல.. ஒரு சமூகத்திற்கும் – ஒரு நாட்டிற்கும் மிக அவசியமானது.

ஏனெனில், தனி மனிதனையும், ஒரு குடும்பத்தையும், ஒரு நிறுவனத்தையும், ஒரு நாட்டையும் நலிவடைய விடாமல், வீழ்ச்சியடைய விடாமல் காக்கும் வலிமை சேமிப்புக்கு உண்டு.

அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சியுற்றதின் முக்கிய காரணங்களில் ஒன்று சேமிக்கும் பழக்கம் அவர்களிடம் இல்லாமல் இருந்ததே.

இவ்வுலக வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற சேமிப்பு அவசியமாக இருப்பதைப் போன்று;  மறுவுலக வாழ்க்கையில் வெற்றி பெறவும் அதற்கான சேமிப்பு மிக அவசிமானது தான்.

பின்வரும் வசனம் மறுவுலக சேமிப்பு குறித்து நமக்கு விளக்கித் தரும்.

قال الله تعالي:   يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
59:18
உலக வாழ்க்கைக்காக மனிதன் சேமிப்பதை தவக்கலுக்கு முரணானதாக இஸ்லாம் கருதவில்லை.

ஏனெனில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தமது குடும்பத் தேவைக்காக ஒரு வருட உணவை சேமித்து வைத்திருந்ததாக நாம் அறிகின்றோம்.

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَامٍ أَخْبَرَنَا وَكِيعٌ عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ قَالَ لِي مَعْمَرٌ قَالَ لِي الثَّوْرِيُّ هَلْ سَمِعْتَ فِي الرَّجُلِ يَجْمَعُ لِأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ أَوْ بَعْضِ السَّنَةِ قَالَ مَعْمَرٌ فَلَمْ يَحْضُرْنِي ثُمَّ ذَكَرْتُ حَدِيثًا حَدَّثَنَاهُ ابْنُ شِهَابٍ الزُّهْرِيُّ عَنْ مَالِكِ بْنِ أَوْسٍ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبِيعُ نَخْلَ بَنِي النَّضِيرِ وَيَحْبِسُ لِأَهْلِهِ قُوتَ سَنَتِهِمْ رواه البخاري
தமிழ் புகாரி எண் 5357

சேமிப்பின் மூலம் நபி யூசுஃப் (அலை) அவர்கள் பஞ்சப் பேரழிவை சமாளித்ததாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

இயற்கை பேரிடர்கள் ஏற்படும் சமயத்தில் சேமிப்பு இருந்தால் மட்டுமே அதனை சமாளிக்க இயலும் என்பதை யூசுஃப் நபி (அலை)  வரலாறு நமக்கு உணர்த்தும்.

ஆதலால், ஒரு தனி மனிதன் அல்லது ஒரு நாடு தயாரிக்கும் வரவு – செலவு பட்ஜெட் சேமிப்பை தரக்கூடியதாக இருக்க வேண்டும். 

அதே நேரத்தில் ‘சேமிப்பு’ என்ற பெயரில் கஞ்சத்தனம் செய்வதற்கு இஸ்லாம் அங்கீகாரம் தராது.

قال الله تعالي:   وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ
17:29

4.தர்ம காரியங்களில் செலவு

நேர்மையான வழியில் வருவாய் தேட வலியுறுத்தும் இஸ்லாம் வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களில் செலவிட கட்டளையிடுகிறது.

செல்வந்தர்களின் சொத்தில் ஏழைகளுக்கு பங்கு இருப்பதாக இஸ்லாம் கருதுவதே அதற்கு காரணம்.

ஏழைகளுக்குரிய பங்கை தர மறுத்த செல்வந்தர்களுக்கெதிராக மறுமையில் ஏழைகள் இறைவனிடம் முறையிடுவார்கள் என்றார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.

حدثنا عبيد بن عبد الله بن جحش قال : نا جنادة بن مروان قال : نا الحارث بن النعمان قال : سمعت أنس بن مالك ، يقول : قال رسول الله صلى الله عليه وسلم : « ويل للأغنياء من الفقراء يوم القيامة ، يقولون : ربنا ، ظلمونا حقوقنا التي فرضت لنا عليهم ، فيقول الله عز وجل : وعزتي وجلالي ، لأدنينكم ولأباعدنهم » ، ثم تلا رسول الله صلى الله عليه وسلم : ( الذين في أموالهم حق معلوم للسائل والمحروم
رواه الطبراني في المعجم الاوسط

5. அல்லாஹ்விடம் கணக்கை சமர்ப்பித்தல்

தனி மனிதனும், ஒரு நிறுவனமும் அரசிடம் வரவு செலவு கணக்கை தணிக்கை செய்வதைப் போன்று ஒவ்வொரு மனிதனும் இவ்வுலக வாழ்க்கையின் வரவு – செலவு பட்டியலை மறுமையில் அல்லாஹ்விடம் காட்ட வேண்டும். மறுமையில் அது குறி்த்து இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்.

மறுமையில் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் யாரும் தப்பிக்க இயலாது என்பார்கள் அண்ணல் நபி (ஸல்)அவர்கள்.

அந்நான்கில் ஒரு கேள்வி மனிதனின் வரவு செலவு கணக்கு சம்மந்தமானது என்பது இவ்விடம் கவனிக்கத்தக்கது.

حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ أَبُو مِحْصَنٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ قَيْسٍ الرَّحَبِيُّ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ ابْنِ مَسْعُودٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ رواه الترمذي


முதலாளி்த்துவம் பொருளாதாரத்தை தனி மனிதன் சார்ந்ததாக பார்க்கின்றது.

கம்யூனிசம் பொருளாதாரத்தை சமூகம் சார்ந்ததாக பார்க்கின்றது.

ஆனால் இஸ்லாம் பொருளாதாரத்தை இறைவனைச் சார்ந்ததாக பார்க்கின்றது.

قال الله تعالي: وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ 2:3
قال الله تعالي: وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا  13:22

இஸ்லாத்தைப் பொருத்தவரை பொருளாதாரத்தின் அதிபதி படைத்த ஏக இறைவன் அல்லாஹ் தான். மனிதன் பொருளாதாரத்தில் இறைவனின் பிரதிநிதி மட்டுமே.

قال الله تعالي: وَأَنْفِقُوا مِمَّا جَعَلَكُمْ مُسْتَخْلَفِينَ فِيهِ  57:7

பொருளாதாரத்தின் ஏக அதிபதியாக அல்லாஹ் இருப்பதால் தான் முதலாளித்துவத்தைப் போன்று பணத்தின் மீதான ஏக போக உரிமையை மனிதனுக்கு இஸ்லாம் தரவில்லை.

அவ்வாறே கம்யூனிசத்தைப் போன்று அனைத்தும் ‘பொதுவுடமை’ என்று கூறி, தனிமனித உரிமைக்கு பங்கமும் அது விளைவிக்கவில்லை.

ஆம். பொருளாதாரத்தில் தனி மனித உரிமையை இஸ்லாம் நிலை நாட்டுகின்றது. அத்துடன் ஒரு தனி மனிதனின் பொருளாதாரத்தில் சமூகத்தின் பங்கு இருக்கின்றது என்பதை எடுத்துரைக்கிறது.

இதற்கெல்லாம் அப்பால், பொருளாதாரத்தின் ஏக அதிபதியும், மனிதன் வைத்திருக்கும் பணத்தின் உண்மையான எஜமானனும் படைத்த ஏக இறைவன் அல்லாஹ் தான் என்று மனிதனுக்கு உணர்த்துகின்றது..

















4 Comments

  1. மாஷா அல்லாஹ்!!! இந்த இஸ்லாமிய பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளின் பார்வைக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்தால் நல்லது...
    ஜசாகல்லாஹு கய்ரன்...

    ReplyDelete
  2. காலத்திற்கேற்ற கருத்தான கட்டுரை

    ReplyDelete
  3. காலத்திற்கேற்ற கருத்தான கட்டுரை

    ReplyDelete
  4. அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் உங்கள் சிந்தனையில் பரகத் செய்வானாக.இஸ்லாமுக்கு சாதகமானதாக ஆக்குவானாக.ஆமீன்.

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.