நமது தமிழகத்தில் இம்மாதம் தொடக்கம் முதல் பள்ளி இறுதித் தேர்வுகள் தொடங்கியிருக்கின்றன.

பிளஸ் 2 தேர்வுகள் இப்போது நடந்து வரும் நிலையில், இடைநிலைத் தேர்வுகள் மற்றும் அதற்கடுத்துள்ள வகுப்புகளின் தேர்வுகள் இம்மாதமும், இதற்கடுத்த மாதமும் நடைபெற உள்ளன.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ – மாணவியர்களுக்குரிய தேர்வு அவர்களின் வாழ்க்கையில் முக்கியமானதாக இருப்பதால், இறுதித் தேர்வில் அவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறே பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் தங்களின் பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

எந்தப் பாடங்களை மனனம் செய்திட வேண்டுமோ அவற்றை மனனம் செய்யவும், எவற்றை அறிவுப்பூர்வமாக சிந்தித்து செய்ய வேண்டுமோ அவற்றை அறிவுப்பூர்வமாக சிந்தித்து செய்வதற்கும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

மாணவர்களே! வெற்றிக்கு கடின உழைப்பு தேவை

கேள்வி கேட்டு வாய் வழியாக பதில் தேடும் (Oral) பரீட்சைகளும், எழுத்து மூலமாக பதில் தேடும் பரீட்சைகளும் கல்வித் திறமையையும், அறிவுத்திறனையும் சோதிப்பதற்காக இன்றைய நவீன உலகில் நடத்தப்படுகின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தால், அறிவுத்திறன் மற்றும் கல்வித் திறமையை சோதித்தறிய சஹாபாக்களிடம் அவர்கள் தேர்வு நடத்தியிருப்பதை காண இயலும்.

நபி (ஸல்) நடத்திய தேர்வு

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ الشَّجَرِ شَجَرَةً لَا يَسْقُطُ وَرَقُهَا وَهِيَ مَثَلُ الْمُسْلِمِ حَدِّثُونِي مَا هِيَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَادِيَةِ وَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَاسْتَحْيَيْتُ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هِيَ النَّخْلَةُ قَالَ عَبْدُ اللَّهِ فَحَدَّثْتُ أَبِي بِمَا وَقَعَ فِي نَفْسِي فَقَالَ لَأَنْ تَكُونَ قُلْتَهَا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ يَكُونَ لِي كَذَا وَكَذَا رواه البخاري

கல்வியின் வழியை - வாசலை திறந்து விடுதல்

பெற்றோர்களும், சமூகமும், அரசும் கல்வியின் வாயிலை இளம் தலைமுறையினருக்கு திறந்து வைத்திருக்க வேண்டும்.

பயனுள்ள படிப்புகள் எல்லாவற்றையும் சிரமமின்றி தோ்ந்தெடுத்து படிக்கும் சூழலை மாணவ – மாணவியர்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

அப்போது தான் மிகச் சிறந்த சாதனையாளர்கள் மனித இனத்திற்கு கிடைப்பார்கள்.

இது விஷயத்தில் பெற்றோர்களும், சமூகமும், அரசும் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமது தோழர்களுக்கு கல்வித் திறமை மற்றும் அறிவாற்றலை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்திய அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அது விஷயத்தில் கிடைத்த வாய்ப்புகளில் எதனையும் தவற விட்டதில்லை.

வரலாற்றில் பத்ரு யுத்தம் முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்த யுத்தம்.

அதில் கைதியாக பிடிபட்டிருந்த இணை வைப்பாளர்களில் சிலர் பிணைத்தொகை செலுத்தி தம்மை விடுவித்திட வசதியற்று இருந்தனர்.

எனினும், அவர்கள் எழுதப் படிக்க தெரிந்தவர்களாக இருந்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்படி அறிவித்தார்கள்.
“கைதிகளில் ஒருவர் முஸ்லிம் சிறுவர்களில் பத்து நபர்களுக்கு அவர்கள் நன்கு தேர்ச்சி பெறுமளவு எழுதப் படிக்க கற்றுத் தந்தாரெனில், அவர் விடுதலை செய்யப்படுவார்.”

அச்சமயத்தில் பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமிய சிறுவர்கள் இணை வைப்பாளர்களிடம் கல்வி கற்றனர்.

பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்ற திருக்குர்ஆன் வசனங்களை எழுதி வைத்திடும் வஹீ எழுத்தாளராகவும், சஹாபாக்களில் வாரிசுரிமை சட்ட நிபுணராகவும் திகழ்ந்த ஸைத் இப்னு சாபித் (ரழி) அவர்கள் அச்சமயத்தில் கல்வி கற்றவர்களில் ஒருவரே. (நூல்: தபகாத் இப்னு சஅது)

கல்வியை தேடிப் படி

கல்வி எங்கே – யாரிடம் இருந்தாலும் அது முஃமின்களுக்கு கிடைக்க வேண்டிய ஒன்றே. ஒருவரிடம் அல்லது ஓரிடத்தில் அது இருப்பதை முஃமின் அறிந்தால் அதனை தேடி அடைய வேண்டும் என்பார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ الْوَلِيدِ الْكِنْدِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَ  رواه الترمذي


இது விஷயத்தில் உலக கல்வி – மார்க்க கல்வி என்றெல்லாம் அவர்கள் பிரித்துப் பார்க்கவில்லை.

ஏனெனில், முஸ்லிம்களை அழிப்பதற்காக பத்ரு போரில் கலந்து கொண்ட மக்கா முஷ்ரிக்குகள் இஸ்லாம் குறித்து சிறிதளவு அறிவு கூட இல்லாதவர்களே.

அவர்கள் ஒன்றும் இஸ்லாமிய அறிஞர்கள் அல்ல..அவர்களிடம் மார்க்க கல்வியை முஸ்லிம் சிறுவர்கள் கற்பதற்கு!

அவர்களிடம் தான் முஸ்லிம் சிறுவர்களை கல்வி கற்க வைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை

தேர்வுகள் நடந்து வரக்கூடிய இச்சமயத்தில், மாணவர்கள் ஒன்றை மனதில் வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு சென்றவர்கள், உயர் பதவியை பிடித்தவர்கள், சிறு வயதிலேயே கண்ணியமான நிலைக்கு உயர்ந்தவர்கள் ஆகியோரின் கடந்த கால வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்த்தால், வாழ்க்கையில் இப்போதைய இந்த உயர் நிலையை அடைந்திட அவர்கள் கடுமையாக போராடியிருப்பதை நாம் காணலாம்.

இது விஷயத்தில் இளம் நபித்தோழர்களில் ஒருவரான இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

கலீஃபா உமர் (ரழி) அவர்கள் தங்களின் ஆட்சிக் காலத்தில் முக்கிய விஷயங்களை பற்றி ஆலோசனை செய்ய ஷுரா கமிட்டியை கூட்டுவார்கள். அவ்வாறான சமயங்களில் இளம் வயதினராக இருந்த இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை அக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்வார்கள்.

இது அவர்களில் வயதான சிலருக்கு பிடிக்காமல் இருந்தது.

இவரைப் போன்ற வயதில் நமக்கு பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் இருக்கும் நிலையில் இவரை நமக்கு சமமாக கலீஃபா கலந்து கொள்ள வைக்கிறாரே என்பதே அவர்களின் ஆதங்கம்.

இது உமர் (ரழி) அவர்களுக்கு தெரிய வந்தது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கல்வித் திறமையை அவர்களுக்கு புரிய வைத்திட நினைத்தார்கள்.

புகாரியில் இடம் பெறும் நிகழ்வு இதற்கு ஆதாரம்

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ وَدَعَانِي مَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ فِي
{ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا} حَتَّى خَتَمَ السُّورَةَ فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا وَقَالَ بَعْضُهُمْ لَا نَدْرِي أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ لَا قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ اللَّهُ لَهُ
{ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ }
فَتْحُ مَكَّةَ فَذَاكَ عَلَامَةُ أَجَلِكَ
{ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا }
قَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ
رواه البخاري


பெரும் பெரும் சஹாபாக்களுக்கு தெரியாதது  இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தெரிந்திருந்தது என்றால் அதற்கு அவர்களின் கடின உழைப்பைத் தவிர வேறெதுவும் காரணம் இல்லை..

நபி (ஸல்) அவர்கள் மரணமடையும் பொழுது அவர்களுக்கு வயது 13 தான்.

ஆதலால், நபியின் மரணத்திற்கு பின்பும் மார்க்க விஷயங்களை தெரிந்திட கடுமையாக உழைத்தார்கள் இப்னு அப்பாஸ் (ரழி)

ஒரே ஒரு விஷயத்தை தெரிந்திட வருடக் கணக்கில், மாதக் கணக்கில் அவர்கள் உழைத்த நிகழ்வுகளும் அவர்களின் வாழ்க்கையில் உண்டு.

இதற்கு அவர்களின் வாழ்க்கையில் ஓர் உதாரணம்.

திருக்குர்ஆனில் 66 வது அத்தியாத்தில் 4 வது வசனத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவியரை அல்லாஹ் “உங்கள் இருவரின் உள்ளங்கள் சாய்ந்து விட்டன” என்று கூறுகிறான்.

அந்த இருவர் யார்? என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு தெரியாமல் இருந்தது.

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
لَمْ أَزَلْ حَرِيصًا عَلَى أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنْ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى
{ إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا }
حَتَّى حَجَّ وَحَجَجْتُ مَعَهُ وَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِإِدَاوَةٍ فَتَبَرَّزَ ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنْهَا فَتَوَضَّأَ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنْ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّتَانِ قَالَ اللَّهُ تَعَالَى
{ إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا }
قَالَ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ هُمَا عَائِشَةُ وَحَفْصَةُ رواه البخاري

இந்த ஒரு விஷயத்தை அறிந்திட பல நாட்கள் உமர் (ரழி) அவர்களை சுற்றி வந்தார்கள் இப்னு அப்பாஸ் (ரழி) என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது.

கடின உழைப்புடன் நல்லோர்களின் துஆவையும் மாணவர்கள் பெற வேண்டும்

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ قَالَ حَدَّثَنَا وَرْقَاءُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ عَنْ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْخَلَاءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ مَنْ وَضَعَ هَذَا فَأُخْبِرَ فَقَالَ اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ
رواه البخاري

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
ضَمَّنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى صَدْرِهِ وَقَالَ اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ وَقَالَ عَلِّمْهُ الْكِتَابَ حَدَّثَنَا مُوسَى حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ خَالِدٍ مِثْلَهُ وَالْحِكْمَةُ الْإِصَابَةُ فِي غَيْرِ النُّبُوَّةِ  رواه البخاري

கல்வியில் மிக உச்சத்தை எட்டிய இப்னு அப்பாஸ் (ரழி)

قال عبيد الله بن عبد الله بن عتبة: كان ابن عباس قد فات الناس بخصال: بعلم ما سبقه، وفقه فيما احتيج إليه من رأيه، وحلم، ونسب، ونائل، وما رأيت أحداً كان أعلم بما سبقه من حديث رسول الله صلى الله عليه وسلم منه، ولا بقضاء أبي بكر وعمر وعثمان منه، ولا أفقه في رأي منه، ولا أعلم بشعر ولا عربية ولا بتفسير القرآن، ولا بحساب ولا بفريضة منه، ولا أثقب رأياً فيما احتيج إليه منه، ولقد كان يجلس يوماً ولا يذكر فيه إلا الفقه، ويوماً التأويل، ويوماً المغازي، ويوماً الشعر، ويوماً أيام العرب، ولا رأيت عالماً قط جلس إليه إلا خضع له، وما رأيت سائلاً " قط " سأله غلا وجد عنده علماً.

وقال ليث بن أبي سليم: قلت لطاوس: لزمت هذا الغلام - يعني ابن عباس - وتركت الأكابر من أصحاب رسول الله صلى الله عليه وسلم؟! قال: إني رأيت سبعين رجلاً من أصحاب رسول الله صلى الله عليه وسلم إذا تدارؤوا في أمر صاروا إلى قول ابن عباس.
(اسد الغابة)
One Comment

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.