.

நாம் பின்பற்றி வாழும் இஸ்லாமிய மார்க்கம் உலகில் தற்போது வேகமாக பரவி வரும் மார்க்கம்.
கதைகளையும், கற்பனைகளையும் கூறி மக்களை ஏமாற்றி வந்த மதங்கள் அனைத்தும் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளால் சொந்த மக்களாலேயே வணக்க வழிபாடுகளுக்கு மட்டுமே மதம்என்று முடக்கப்பட்டு விட்ட நிலையில், இஸ்லாம் காலத்தை வென்ற மதமாக உலகில் கோலோச்சி வருகிறது.
இத்தனைக்கும் இந்த மார்க்கத்திற்கு பகைவர்களும் அதிகம். அவ்வாறே இதனை பழிப்பவர்களும் அதிகம்.
உலகில் அதிகமானவர்களால் விமர்சனம் செய்யப்படும் மதமும் இஸ்லாம் தான்.
அவ்வாறே அதிகமான அளவில் ஆராய்ச்சி செய்யப்படும் மதமும் இஸ்லாம் தான்.
காலத்தை வென்று வரும் இஸ்லாம்
அறிவியல் ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் இஸ்லாம் ஆய்வு செய்யப்படுகின்றது.
எந்த கோணத்தில் இஸ்லாம் ஆய்வு செய்யப்படுகின்றதோ அந்த கோணத்தில் இஸ்லாம் ஆய்வில், ஆராய்ச்சியில்  மிகைக்கின்றது. ஆய்வு செய்பவரை தன்னுள் இணைக்கிறது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْحَذَّاءُ حَدَّثَنَا شَبَابُ بْنُ خَيَّاطٍ حَدَّثَنَا حَشْرَجُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَشْرَجٍ حَدَّثَنِى أَبِى عَنْ جَدِّى عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو الْمُزَنِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « الإِسْلاَمُ يَعْلُو وَلاَ يُعْلَى »رواه الدارقطني - 3663
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இஸ்லாம் உயர்வடையவே செய்யும். அதனை யாரும் விஞ்ச முடியாது.” (நூல் : தாரகுத்னீ )
இஸ்லாம் பெண்ணியத்திற்கு எதிரானது, ஆணாதிக்கத்தை வளர்க்கிறது. பெண் சுதந்திரத்தை வழிமறிக்கிறது, என்று மேற்குலகினரால் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் தான் மேற்குலகில் நடிகைகளும், பாப் பாடகிகளும்,பத்திரிக்கையாளர்களும் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அமெரிக்க நடிகை சாரா புக்கர் (Sora Booker)


பிரிட்டீஷ் பத்திரிக்கையாளர் மரியம் 

பிரான்ஸியஸ் (Myriam Francois)
மறைந்த மீக்காயில் ஜாக்ஸனின் சகோதரியும் 
பாப் பாடகியுமான  ஜானட் ஜாக்ஸன் (Janet 
Jackson )

நேபாள நடிகை பூஜா லாமா (Pooja Lama)

பிலிப்பைன்ஸ் நடிகை குயினி பாடில்லா ( Queenie Padilla )

போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்றவர்களில் பிரபலமானவர்கள். இவர்கள் அனைவருமே இஸ்லாத்தின் சமூக ஒழுக்கத்தினால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றவர்கள்
இஸ்லாம் பெண் சுதந்திரத்திற்கு   எதிரானது என்று வலுவான முறையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் தான் விரும்பியபடிமுழு சுதந்திரத்தை அனுபவித்து வாழ்ந்த நடிகைகள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது
.அதுமட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற பின்பு அந்நடிகைகள் தங்களின் பழைய காலங்களை நினைத்து இப்படியெல்லாம் அனிமல்ஸ் வாழ்க்கை வாழ்ந்து விட்டோமே என்று கண்ணீர் விட்டு கதறி அழுவதை இணையதளங்களில் காணலாம்.
இஸ்லாத்தின் எல்லா சட்டங்களும், அறநெறிகளும். திருக்குர்ஆனின் வேத வரிகளும் இஸ்லாம் சத்திய மார்க்கம்என்பதற்கு சாட்சியங்களாக திகழ்கின்றன.
قال الله تعالي: سَنُرِيهِمْ آَيَاتِنَا فِي الْآَفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ   41:53
இஸ்லாத்தின் அறநெறியும் நவீன ஆராய்ச்சியும்
தாய்மார்கள் இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு பால் தருவதை திருக்குர்ஆன் ஆர்வப்படுத்துகிறது.
قال الله تعالي: وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ  2:233
குழந்தை பருவத்திற்கு பின் சிறுவர் . சிறுமியர் மற்றும் பெரியவர்கள்  பால் சாப்பிடுவதையும் இஸ்லாம் வரவேற்கிறது
قال الله تعالي: وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ  16:66
இவ்வசனத்தில் இடம் பெறும் سائغين  எனும் சொல்லுக்கு இலகுவானது, எளியது.விரைவில் செறிமானம் ஆகவல்லது, உடம்புக்கு நல்லது என்பன பொருளாகும்.
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِي رَأَيْتُ مُوسَى وَإِذَا هُوَ رَجُلٌ ضَرْبٌ رَجِلٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ وَرَأَيْتُ عِيسَى فَإِذَا هُوَ رَجُلٌ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ وَأَنَا أَشْبَهُ وَلَدِ إِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهِ ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ فِي أَحَدِهِمَا لَبَنٌ وَفِي الْآخَرِ خَمْرٌ فَقَالَ اشْرَبْ أَيَّهُمَا شِئْتَ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ أَخَذْتَ الْفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ رواه البخاري -  3143
மிஃராஜின் போது நபி(ஸல்) அவர்களிடம் இரண்டு கோப்பைகள் தரப்பட்டன. ஒன்றில் மது. மற்றொன்றில் பால். நபி(ஸல்) பாலை தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் இயற்கை நெறியை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மதுவை மட்டும் எடுத்திருந்தால் உமது உம்மத் வழிகெட்டிருக்கும் என்று நபியிடம் சொல்லப்பட்டது. (நூல்:புகாரி)
அதுமட்டுமல்ல.. பால் அருந்திய பின்பு தனித் துஆவையும் கற்றுத் தந்தார்கள் நபி (ஸல்)
حَدَّثَنَ سَدَّدٌ حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ح و حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ يَعْنِي ابْنَ سَلَمَةَ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ عُمَرَ بْنِ حَرْمَلَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
كُنْتُ فِي بَيْتِ مَيْمُونَةَ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ فَجَاءُوا بِضَبَّيْنِ مَشْوِيَّيْنِ عَلَى ثُمَامَتَيْنِ فَتَبَزَّقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ خَالِدٌ إِخَالُكَ تَقْذُرُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَجَلْ ثُمَّ أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَبَنٍ فَشَرِبَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَأَطْعِمْنَا خَيْرًا مِنْهُ وَإِذَا سُقِيَ لَبَنًا فَلْيَقُلْ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيهِ وَزِدْنَا مِنْهُ فَإِنَّهُ لَيْسَ شَيْءٌ يُجْزِئُ مِنْ الطَّعَامِ وَالشَّرَابِ إِلَّا اللَّبَنُ رواه ابوداود 3242
வேண்டாம் என மறுக்கக் கூடாத பொருள் பால்

حَدَّثَنَا مُصْعَبُ بن إِبْرَاهِيمَ بن حَمْزَةَ الزُّبَيْرِيُّ , حَدَّثَنَا إِبْرَاهِيمُ بن الْمُنْذِرِ الْخُزَامِيُّ. ح وَحَدَّثَنَا مُوسَى بن هَارُونَ , حَدَّثَنَا أَبِي , قَالا: حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ , حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بن مُسْلِمِ بن جُنْدُبٍ , عَنْ أَبِيهِ أَنَّهُ: دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بن عُمَرَ عَلَى ابْنِ مُطِيعٍ , فَقَالَ: السَّلامُ عَلَيْكَ , فَقَالَ: وَعَلَيْكَ السَّلامُ وَرَحْمَةُ اللَّهِ , وَمَرْحَبًا وَأَهْلا بِأَبِي عَبْدِ الرَّحْمَنِ ضَعُوا لَهُ وِسَادَةً , فَقَالَ ابْنُ عُمَرَ: لَوْلا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ  عَلَيْهِ وَسَلَّمَ , يَقُولُ:ثَلاثٌ لا تُرَدُّ: اللَّبَنُ , وَلا الْوِسَادَةُ , وَلا الدُّهْنُ. مَا جَلَسْتُ عَلَيْهَا. 13100 رواه الطبراني في المعجم الكبير

சமீபத்தில் ஜெர்மனி மற்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள்  வடக்கு ஐரோப்பாவில் நடத்திய ஆய்வில் பால் சாப்பிடும் பழக்கமுள்ளவர்களில் 90 சதவீத பேர்களிடம் உணவு செறிமான பிரச்சினை இல்லை என்று கண்டறிந்தார்கள்.
அத்துடன் பால் உடல் ரீதியாக மனிதனுக்கு இலகுவான உணவாக இருப்பதைப் போன்றே உளவியல் ரீதியாக பால் சாப்பிடுபவர்களிடம் மென்மை, பணிவு, அமைதி இருப்பதையும் கண்டுபிடித்த அவர்கள் நவீன வன்முறை பரவலுக்கு பால் சாப்பிடும் பழக்கமின்மையும் ஒரு காரணம் என்பதை கண்டறிந்தார்கள்.
இன்றைய குழந்தைகளுக்கு குழந்தை பருவத்திலும் பால் தரப்படுவதில்லை.

அவ்வாறே பெரியவனாக ஆன பின்பும் அங்கே  பால் சாப்பிட ஊக்கப்படுத்தப்படுவதில்லை.
விளைவு இளைஞர்கள்  மதுவை நோக்கி சென்று விடுகின்றனர். வன்முறைகளும், பாலியல் குற்றங்களும் பெருகி வருகின்றன.
இஸ்லாம் சத்திய மார்க்கம்
இஸ்லாத்தின் ஒவ்வொரு அறநெறிகளும், சட்டங்களும், கொள்கைகளும், திருக்குர்ஆன் மற்றும் சுன்னாவின் வாசகங்களும் நவீன உலகில் இஸ்லாம் உண்மையான இறை மார்க்கம்என்பதற்கான அத்தாட்சிகளாக இருந்து வருகின்றன.

இஸ்லாத்தை ஓர் ஒழுக்க நெறியாக பார்ப்பவர்கள் அதற்காக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளுக்கு திருக்குர்ஆன் உடன்படுவதைப் பார்த்து இஸ்லாத்தில் தங்களை தருகின்றனர்.

பொருளாதார மேதைகள் இஸ்லாத்தின் வெற்றிகரமான பொருளியல் திட்டங்களை ஆராய்ச்சி செய்து, ஆச்சரியப்பட்டவர்களாக இஸ்லாத்தில் இணைகின்றனர்.

உளவியல் ஆய்வாளர்கள் மனோ தத்துவ ரீதியாக இஸ்லாம் மனித இனத்தை பக்குவப்படுத்துவதை புரிந்து இஸ்லாத்தில் சேர்கின்றனர்.

வரலாற்றாய்வாளர்கள் ஆச்சரியங்களும், அதிசயங்களும் அடங்கிய இஸ்லாமிய வரலாற்றையும், நபி(ஸல்) அவர்களின் வரலாற்றையும் படித்து இஸ்லாத்தை ஏற்கின்றனர்.
இன இழிவுக்கு இஸ்லாமே தீர்வு
நமது இந்திய தேசத்தில் கூட சாதிகளின் பெயரில் நடக்கும் தீண்டாமை கொடுமைக்கு மிகச் சிறந்த தீர்வாக இஸ்லாமே திகழ்கிறது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அரசினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தரப்படும் இட ஒதுக்கீடு பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை தருமே தவிர பிறப்பினால் அவர்களுக்கு அவர்கள் சார்ந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ள தீண்டாமைக்கு உண்மையான விடுதலையை தருவதில்லை.

மனதில் விருப்பம் இருந்தும் குடும்பச் சூழல்களால் இஸ்லாத்திற்கு மாற முடியாமல் தவிக்கும்  சில தலித் சகோதரர்கள் நாங்கள் அந்த சமூகத்தில் பிறந்திருக்கக் கூடாது என்று கூறுவது பரவலாக ஒலிக்கக் கூடியதே

அறிவுப் புரட்சியால் காலம்எனும் காட்டாற்று வெள்ளத்தில் இஸ்லாம் அடித்துச் செல்லப்படவில்லை.
சுமார் பதிமூன்று நூற்றாண்டுகள் ஆகியும் அது பின்பற்றப்படும் மார்க்கமாகவும், மக்கள் மனமுவந்து தழுவும் மார்க்கமாகவும் இருக்கின்றது.
நிச்சயமாக இது காலத்தை வென்ற மார்க்கம் தான்.
19 ம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் நூற்றாண்டாக இருந்தது போன்று,
20 ம் நூற்றாண்டு கம்யூனிசத்தின் நூற்றாண்டாக இருந்தது போன்று,
இந்த 21 ம் நூற்றாண்டு இஸ்லாத்தின் நூற்றாண்டாகும்.

   




 


8 Comments

  1. Excellent article inshaalla this is our decade

    ReplyDelete
    Replies
    1. Yes..we must try for it. It is in our hand. Allah help us..Aameen. Vassalam..

      Delete
  2. This century will be ours
    History will be ours
    The holy land between nile and furat will be ours
    Global victory will be ours insha allah ameen

    ReplyDelete
    Replies
    1. THIS IS FOR ALLAH. YOU CAN SPREAD TO MUSLIMS AND NON MUSLIMS. ALLAH HELP US...AAMEEN

      Delete
  3. இஸ்லாம் அறிவியல் மார்க்கம் என்பதை
    அழுத்தமாக அதிவு செய்துள்ள
    அற்புதமான கட்டுரை
    மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
    Replies
    1. அல் ஹம்து லில்லாஹ். நன்றி

      Delete
  4. மரியாதைக்குரிய அபுல் ஹஸன் ஃபாஸி அவர்களுக்கு..
    ஸஃபர் பீடை மாதம் அல்ல..என்பதை உணர்த்தும் விதமாக இஸ்லாம் காலத்தையே வென்ற மார்க்கம் என்று கட்டுரை தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்..
    யூத மதத்தைச் சார்ந்த கருவியல் நிபுணர் டாக்டா் ராபர்ட் கில்ஹாம் தமது ஆராய்ச்சியின் முடிவு திருக்குர்ஆன் வசனத்திற்கு பொருந்துவதை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றதாக முகநூலில் எனக்கு உலமாக்கள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் அனுப்பியிருந்தார்கள். அதையும் இதனுடன் இணைத்திருக்கலாமே!
    நன்றி.வஸ்ஸலாம்

    ReplyDelete
  5. கண்ணியத்திற்குரிய உஸ்மான் யூசுஃபி அவர்களுக்கு,
    இவ்வார தலைப்பை நீங்கள் அந்தக் கோணத்தில் அணுகியுள்ளீர்கள். I Fear Allah (நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்) எனும் வாசகத்தின் மூலம் ‘இறையச்சம்’ எனும் தலைப்பில் பேசியதாக வேறோரு மவ்லவி போனில் என்னிடம் சொன்னார். இது ஒவ்வொருவரின் ஆராய்ச்சியையும், அணுகும் விதத்தையும் பொருத்ததாகும்.
    நீங்கள் குறி்ப்பிட்ட ‘டாக்டர் ராபர்ட் கில்ஹிம் தமது ஆராய்ச்சி முடிவு திருக்குர்ஆனுடன் பொருந்தி போவதை கண்டு இஸ்லாத்தை ஏற்றார்’ எனும் தகவலை முகநூலில் நானும் கண்டேன்.
    இது கடந்த ஆகஸ்டு மாதம் அரபு பத்திரிக்கைகளில் வந்த செய்தியாகும்.
    எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாஸித் முஹம்மது செய்யித் அவர்களின் வழியாக இச்செய்தியை பத்திரிக்கைகள் வெளியிட்டன.
    இச்செய்தி வந்த சமயத்திலேயே சர்வதேச யூத அமைப்பான ஜுதாயிசம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
    அமெரிக்கா மற்றும் கனடாவில் இராபர்ட் கில்ஹிம் என்ற பெயரில் 23 நபர்கள் இருப்பதாகவும், அவர்களில் யாரும் ஐன்ஸ்டீன் கல்வி நிலையத்தில் பணிபுரியவில்லை என்றும் பதில் தந்தது.
    நம்மை பொருத்தவரை பிரபலமானவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் பொழுது அவர்கள் பற்றிய தகவலும், அவர்களின் பேட்டியும் இணையதளத்தில் வெளியாகும். கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள அனைவரின் பேட்டியும் ‘யூ டியூப்’ தளத்தில் உள்ளது. ஆனால் இந்த ராபர் கில்ஹிம் பற்றிய எந்த தகவலும் இல்லை. பேட்டியும் இல்லை.
    முன்னொரு முறை நிலாவுக்கு சென்று வந்த ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ அங்கே கால் தடங்களை கண்டதாகவும், பாங்கு சப்தத்தை கேட்டதாகவும், பின்பு இஸ்லாத்தை ஏற்றதாகவும் ஒரு செய்தி உலா வந்தது. அப்போதைய சில முஸ்லிம் தமிழ் பத்திரிக்கைகள் இதனை வெளியிட்டன. நானும் சிறு வயதில் பலரின் பயானில் கேட்டுள்ளேன். ஆனால் உண்மை என்னவெனில் அது வதந்தி என்பதே.
    ஏனெனில் இவ்வருடம் (2012) ஆகஸ்டு மாதம் 25 ந் தேதி மரணித்த நீல் ஆம்ஸ்ட்ராங் முஸ்லிமாக மரணிக்கவில்லை. இஸ்லாத்தை ஏற்கவுமில்லை.
    ஆதலால், இஸ்லாத்தை நிலை நாட்டிட உண்மைச் செய்திகள் எவ்வளவோ இருக்க வதந்திகளின் பின்னால் நாம் ஓட வேண்டியதில்லை. செய்தி 100 சதவீதம் உண்மையானால் மட்டுமே நாம் மக்களிடம் பரப்ப வேண்டும்.
    ஏனெனில், ‘வதந்தியை முஸ்லிம்களிடம் பரவ விட்டு விட்டு பின்பு அதனை மறுப்பது’ எனும் இச்செயலும் கூட யூதர்களின் தந்திரமாக இருக்கலாம். திருக்குர்ஆனின் 3:72 வசனம் இதனை நமக்கு உணர்த்தும். அல்லாஹ் நன்கறிந்தவன்.

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.