(குறிப்பு: வாரந்தோறும் வியாழன் அஸருக்கு பின்பு மக்ஃரிபுக்குள் இத்தளத்தில் பயான் குறிப்பு வெளியாகும். இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வாழும் முஸ்லிம் சமுதாயம் 1400 ஆண்டு கால வரலாற்று பாரம்பரியம் கொண்ட சமுதாயம் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பின்பு பன்னெடுங்காலம் இந்த உலகின் அரசியல் தலைமை ஏற்ற இச்சமுதாயம் வரலாற்றில் சில மகத்தான வெற்றிகளையும், சில மோசமான தோல்விகளையும் சந்தித்துள்ளது.
இன்னும் ஆழமாக பார்த்தால் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கூட இச்சமுதாயம் சில தோல்விகளை சந்தித்துள்ளது. புகாரியில் இடம் பெறும் ஹிர்கல் – அபூசுப்யான் உரையாடல் ஹதீஸ் இதற்கு ஆதாரம்.
6 قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ قُلْتُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ رواه البخاري
“ஹிர்கல் மன்னர் அபூசுப்யானிடம் கேட்டார். அவருடன் நீங்கள் நடத்திய போர்களில் முடிவுகள் எவ்வாறிந்தன.? நான் சொன்னேன். எங்களுக்கும் அவருக்கும் இடையே வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்திருக்கின்றன.”
தமிழ் புகாரி – 7

ஆம். வெற்றிகளை மட்டுமே பெற்ற சமுதாயமாக இச்சமுதாயம் திகழவில்லை. மாறாக இனி ‘எழ முடியாது’ என்று சொல்லுமளவுக்கு மோசமான தோல்விகளையும் இச்சமுதாயம் சந்தித்துள்ளது.
எனினும் தோல்வி இச்சமுதாயத்திற்கு நிரந்தரமாக எப்போதும் இருந்ததில்லை.
ஏனெனில் இச்சமுதாயம் தூங்கும், மயக்கத்தில் கிடக்கும். ஆனால் செத்து விடாது.
தூக்கத்தில் இருந்து விழித்து. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தமது முழு வலிமையை திரட்டி இச்சமுதாயம் போராடினால் இறுதி வெற்றி இச்சமுதாயத்திற்கு கிடைக்கவே செய்யும்.
ஏனெனில் வெற்றி இச்சமுதாயத்திற்கு அல்லாஹ் தந்துள்ள வாக்குறுதியாகும்.
قال الله تعالي: وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ 30:47  
قال الله تعالي: ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آَمَنُوا كَذَلِكَ حَقًّا عَلَيْنَا نُنْجِ الْمُؤْمِنِينَ 10:103
திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் சுன்னாவும் முஸ்லிம்களின் வெற்றி குறித்து ஏராளமான நற்செய்திகளை அள்ளித் தருகின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வளவு பெரிய சூழ்ச்சிகளை எதிரிகள் மேற்கொண்டாலும் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தின் முன்பு அந்த சூழ்ச்சிகள் நிச்சயம் தோல்வியே அடையும்.

قال الله تعالي: إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا (15) وَأَكِيدُ كَيْدًا (16) فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا 86:15
قال الله تعالي: وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ 8:30
ஏனெனில் முஸ்லிம்கள் தான் இறை உதவிக்கு வாக்களிக்கப்பட்டவர்கள். எதிரிகள் எவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இருந்தாலும், எத்துணை மகத்தான ஆயுதங்கள், அதிகாரங்கள் வைத்திருந்தாலும் முஃமின்கள் இஸ்லாத்தின் வழியில் இறைவனுக்காக சத்தியப் போராட்டம் நடத்தினால் நிச்சயம் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள்.
யர்மூக் யுத்தத்திலும், காதிஸிய்யா யுத்தத்திலும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கலீஃபா உமர் (ரழி) அவர்களுக்கு தளபதிகள் கடிதம் எழுதினார்கள். அதற்கு உமர்(ரழி) எழுதிய பதில் பின்வருமாறு
كتب عمر : ان اجتمعوا وكونوا جندا واحدا والقوا جنود المشركين فانتم انصار الله
“ஒரே படையினராக திரண்டு நின்று எதிரிகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்கள்.”
நாம் சத்தியவாதிகள், நமக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற தைரியமும், நம்பிக்கையும் தான் கலீஃபா அபூபக்கர் (ரழி) அவர்களை முர்தத்துகளுக்கு எதிராக யுத்தம் செய்ய வைத்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பு அரபுகளில் சிலர் தம்மை நபி என அறிவித்தார்கள். மக்களில் பெரும்பான்மையினர் ஜகாத் தர முடியாது என்றனர். இவர்களை அடக்க வேண்டும்.ஆனால்   முஸ்லிம்களை விட அவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தது. அவர்களுக்கு எதிராக போர் செய்யும் முடிவை அபூபக்ர் (ரழி) எடுத்த பொழுது அவர்களிடம் இவ்வாறு கூறப்பட்டதாக வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.
 قال بعض الصحابة: يا خليفة رسول الله لا طاقة لك بحرب العرب جميعا  الزم بيتك واغلق بابك واعبد ربك حتي يأتيك اليقين
“நபித் தோழர்களில் சிலர் சொன்னார்கள், நபி (ஸல்) அவர்களின் கலீஃபா அவர்களே. உங்களால் அரபுகளுடன் யுத்தம் செய்ய இயலாது. ஆதலால் கதவுதை சாத்திக் கொண்டு வீட்டில் இருங்கள் .மரணம் வரை அமல் செய்யுங்கள்.”
உமர் (ரழி) அப்போருக்கு அபூபக்கர் (ரழி)  அவர்களிடம் மறுப்பு தெரிவித்ததாக நபிமொழிகளில் காணப்படுகின்றது.
6413 - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ
لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ قَالَ عُمَرُ يَا أَبَا بَكْرٍ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ قَالَ أَبُو بَكْرٍ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا
قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ
رواه البخاري
முர்தத்துகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியே பிற்காலத்தில் உலகம் முழுவதும் இஸ்லாம் பரவுவதற்கு காரணமாக அமைந்தது.
எதிரிகளின் அதிகார வலிமை, ஆள் வலிமை, ஆயுத வலிமையை கணக்கில் கொண்டு அபூபக்கர் (ரழி) அவர்கள் பயந்திருந்தால் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவியிருக்காது. பாரசீகப் பேரரசு மற்றும் ரோமப் பேரரசை வீழ்த்திய அற்புதங்கள் நடந்திருக்காது.
எண்ணிக்கை , பெரும்பான்மை, பண வலிமை, படை –அதிகார வலிமைகளை கண்டு முதல் தலைமுறை முஸ்லிம்களான நபித்தோழர்கள் ஒரு போதும் பயந்ததில்லை.
ولما أقبل خالد من العراق قال رجل من نصارى العرب لخالد بن الوليد: ما أكثر الروم وأقل المسلمين ! ! فقال خالد: ويلك، أتخوفني بالروم ؟ إنما
تكثر الجنود بالنصر، وتقل بالخذلان لا بعدد الرجال، والله لوددت أن الاشقر برأ من توجعه، وأنهم أضعفوا في العدد - وكان فرسه قد حفا واشتكى في مجيئه من العراق -.( البداية والنهاية)
“ஈராக்கில் இருந்து யர்மூக் களத்திற்கு காலித் (ரழி) வந்தார்கள். அப்போது முஸ்லிம் படையில் இருந்த அரபு கிறிஸ்தவர் ஒருவர் காலித் (ரழி) யிடம் சொன்னார். ரோமர்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகம்.! முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவு!!
காலித் (ரழி) சொன்னார்கள். அவர்களை கூறி என்னை பயமுறுத்துகிறாயா? வெற்றியும், தோல்வியும் எண்ணிக்கையால் அல்ல..அவர்களின் பலவீனமே எண்ணிக்கை தான்.” ( அல் பிதாயா வன் நிஹாயா)
பாபர் மசூதி : இனிவரும் காலத்தில் நம் கைகளில்
நமது இந்திய தேசத்தில் முஸ்லிம்களாகிய நாம் பாபர் மசூதி இடிக்கப்பட்டு சுமார் 20 ஆண்டுகளை முழுமையாக கடந்துள்ளோம்.
1857 க்கு புரட்சிக்கு பின்பு இந்தியாவின் அரசு நிர்வாகம்  முஸ்லிம்களின் கைகளில் இருந்து மற்றவர்களின் கைகளுக்கு முழுமையான அளவில் சென்று 135 ஆண்டுகள் கழித்து 1992 ம் ஆண்டு காலம் காலமாக தொழுகை நடந்து வந்த பள்ளிவாசல் ஒன்றை அநியாயமாக பொய் கதைகளால் இழந்து நிற்கிறோம்.
20 ஆண்டுகளாக வழக்கும் நடந்து வருகிறது. சென்ற 2010 ம் வருடம்   அவ்விடத்தை மூன்றாக பிரித்து பங்கு வைக்கும் தீர்ப்பு ஒன்றும் அலகாபாத் நீதிமன்றத்தால் தரப்பட்டது.
முஸ்லிம்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர்.
பாபர் மசூதியை பொருத்தவரை அவ்விடத்தில் கோவில்
 இருந்தது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத பொய்யாகும்.
1528 ம் ஆண்டு மீர்பக்கி என்பவரால் அப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. அன்று முதல் அப்பள்ளியில் தொழுகை நடந்து வருகிறது.
அப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குள் துளசிதாஸ் என்பவர் இராம சரித்திர மனாஸ் (Ramcharitmanas) எனும் சரித்திர கதையை இந்தி மொழியில் எழுதினார்.
இராமர் கோவில் என்று அங்கு இருந்து அதனை இடித்து பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தால் அதனை தமது நூலில் அவர் நிச்சயம் கூறியிருப்பார்.

கோவில்கள் கட்ட உதவி செய்த முஸ்லிம்கள்
கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்படவிடவில்லை என்பது மட்டுமல்ல..அயோத்தியில் இன்று காணப்படும் பல கோவில்கள் கட்ட பண உதவி செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்.
சுமார் 29 கோவில்களை கட்ட அயோத்தியில் முஸ்லிம்கள் உதவி செய்துள்ளார்கள். முஸ்லிம் ஆட்சியாளர்கள் கோவில்கள் கட்ட உதவி செய்தார்கள் என்பதற்கு போதுமான ஆவணங்கள் உள்ளன.
நவாப்கள், அவர்களின் கவர்னர்கள், தனிப்பட்ட முஸ்லிம்கள் தந்த நிலங்கள் மற்றும் பணத்தில் தான் இத்துணை கோவில்கள் அயோத்தியில் உள்ளன.
தேந்த் தாவன்த்குந்த் மந்திர்,ஹனுமன் கார்க்கி, ஆச்சாரி மந்திர், லஷ்மண் கியுலா , சுந்தர் பவன் கோவில் போன்றவை முஸ்லிம்களின் நிதியில், நிலத்தில் கட்டப்பட்டு முஸ்லிம்களால் பல்லாண்டுகள் பராமரிக்கப்பட்டவை.
இதனை அயோத்தியில் உள்ள பூசாரிகளும், பொது மக்களும் குறிப்பிட்டதாக தெஹல்கா ஆங்கில வார இதழ் 2004 பிப்ரவரி 7 ந்தேதி பதிப்பில் வெளியிட்டிருந்தது.
ஆதலால் பாபர் மசூதி விஷயத்தில் முஸ்லிம்களும், இஸ்லாமிய இயக்கங்களும் தளர்ந்து விடக்கூடாது, நீதிக்கான போராட்டத்தை விட்டு விடவும் கூடாது.
சத்தியம் வெற்றி பெறும்
சத்தியத்திற்கு சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் நிச்சயம் ஒரு நாள் வென்றே தீரும்.
قال الله تعالي: إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا 17:81
காலம் ஒரே நிலையில் இருந்து விடாது. காலம் மாறும். ஆட்சி –அதிகாரம் மாறும். அச்சமயத்தில் நீதி நிலைநாட்டப்படும். நிச்சயம் ஒருநாள் பாபா் பள்ளிவாசலில் தொழுகை நடக்கும்.
இப்படியெல்லாம் நடக்குமா? என்று முஸ்லிம்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம்.
இதை விட மிக மோசமாக எல்லாம் இறைத்தூதர்களும், அவர்களைப் பின்பற்றிய முஃமின்களும் வரலாற்றில் சோதிக்கப்பட்டார்கள். எனினும் இறுதியில்  முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைக்கவே செய்துள்ளது. இதனை திருக்குர்ஆன் கூறுகிறது.
قال الله تعالي :أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آَمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ2:214
قال الله تعالي :حَتَّى إِذَا اسْتَيْئَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا جَاءَهُمْ نَصْرُنَا فَنُجِّيَ مَنْ نَشَاءُ وَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ  12:110
முதல் சிலுவை போருக்கு பின்பு சுமார் 90 ஆண்டுகள் பைத்துல் முகத்தஸ் கிறிஸ்தவர்களிடம் சிக்கியிருந்தது. அதனை அல்லாஹ் அதற்கு பிறகு மீட்கவே செய்தான்.
அவ்வாறே வரலாற்றில் அப்பாஸிய கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பின்பு  சுமார் 200 ஆண்டுகள் சிரியா அன்னியர்களிடம் சிக்கியிருந்தது. அதனையும் அல்லாஹ் மீட்டான்.
மங்கோலியா்களை கொள்கையில் வென்ற முஸ்லிம்கள்
13 ம் நூற்றாண்டில் மங்கோலியர்களிடம் முஸ்லிம்கள் மிக மோசமான தோல்வியை சந்தித்தார்கள். கிழக்கே மங்கோலியாவில் உள்ள கரொகொரம் நகரில் நாடோடிகளாக வாழ்ந்து கொண்டிருந்த மங்கோலியர்கள் எழுச்சி பெற்று இஸ்லாமிய உலகில் புகுந்து ஒவ்வொரு நாடாக கைப்பற்றி, இறுதியில் அப்பாஸிய கிலாஃபத்தை வீழ்த்தினார்கள். பாக்தாத் நகரில் புகுந்த மங்கோலியர்கள் அந்நகரின் நாகரிகத்தையும், இலக்கியங்களையும் அழித்தார்கள். சிறப்பு மிக்க நூல்களை திஜ்லா (டைக்ரீஸ்) நதியில் கொட்டினார்கள். அதனால் நதியே கருப்பு கலரில் ஓடியதாம்.
பின்பு என்ன நடந்தது தெரியுமா?
போரில் வென்ற மங்கோலியர்களின் இதயத்தை முஸ்லிம்கள் வென்றார்கள்.
வரலாற்றாசிரியர் தாமஸ் அர்னால்டு அவர்கள் தமது The preaching of islam (ஃபிரிச்சிங் ஆஃப் இஸ்லாம்) எனும் நூலில் கூட ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
மங்கோலியர்களிடம் தங்களின் மதத்தை பரப்புவதில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே அக்காலகட்டத்தில் போட்டி நிலவியது.
மங்கோலியர்களின் தலைமைத் தளபதியான ஹுலாகுகானின் கிறிஸ்தவ மனைவி  லஃபர் காதூன் ظفر خاتون)) னின் செல்வாக்கைப் பயன்படுத்தி மங்கோலியர்களிடம் கிறிஸ்தவத்தை பரப்ப கிறிஸ்தவர்கள் முயன்றார்கள். (நூல்: الدرر الكامنة لابن الحجر العسقلان )
ஆனால் முஸ்லிம்கள் வென்றார்கள். மங்கோலியர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
இஸ்லாம் ஓர் அற்புத மார்க்கம்
எப்போதெல்லாம் முஸ்லிம்கள் பலவீனப்படுகிறார்களோ அப்போது இஸ்லாம் தமது அற்புதத்தை வெளிப்படுத்தும். இது இஸ்லாத்தின் அற்புதம் ஆகும்
வரலாற்றாசியர் இப்னு கலதூன் அவர்கள் கூறுவார்: “பொதுவாக வெற்றி பெற்றவர்களின் மதம் தான் தோல்வியுற்ற சமூகத்தில் பரவும். இதுவே வரலாறு இதுவரை அறிந்தது. மங்கோலியர்களின் விஷயத்தில் இதற்கு நேர்முரணான சம்பவம் நடந்தது.
அவர்கள் தோல்வியுற்ற சமுதாயத்தின் மார்க்கத்தை ஏற்றார்கள். இது வரலாற்றின் புதிய திருப்பம்.”
நிகழ்கால உலகில் இரண்டு உதாரணங்கள்
முதல் உதாரணம்: கம்யூனிசம்.
அசத்திய கொள்கைகளில் ஒன்றான கம்யூனிசம் அழிந்ததை நிகழ் கால உலகில் நாம் கண்டுள்ளோம்.
19 ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இஸ்லாமிய உலகை யும்,ஒட்டு மொத்த உலகையும் கம்யூனிசம் துவம்சம் செய்தது. எல்லா நாடுகளும் பகட்டான கம்யூனிசத்தின் வலையில் விழுந்தனர்.
இஸ்லாமிய கிலாஃபத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த துருக்கி கிலாஃபத்தை ஒழித்து விட்டு கம்யூனிசம், சோசலிச சாயலில் தன்னை மாற்றிக் கொண்டது. தமது கொடியைக் கூட சிவப்பு கொடியாக்கிக் கொண்டது.
ஆனால் என்ன நடந்தது? சுமார் 100 ஆண்டுகள் கூட  உலகில் அதனால்  தாக்கு பிடிக்க முடியவில்லை.ஆம். அதன் தாய் மண்ணான சோவியத் யூனியனில் இருந்தே  விரட்டியடிப்பட்டது.
இரண்டாவது உதாரணம்: அமெரிக்கா.
தற்போது அமெரிக்காவின் விஷயத்தில் இது தான் நடந்து வருகிறது. அமெரிக்கர்கள் மிக வேகமாக இஸ்லாத்தை ஏற்று வருகிறார்கள்.
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் தந்துள்ள வலிமைகள்
இச்சமுதாயத்திற்கு அல்லாஹ் சில வலிமைகளை தந்துள்ளான். அவற்றை வேறு உம்மத்திற்கு அல்லாஹ் வழங்கவில்லை. அவற்றின் மூலம் நிச்சயம் இச்சமுதாயம் வெற்றி பெறும்.
1.மனித வள வலிமை
இந்த உம்மத்தின் மனித வளத்தில் அல்லாஹ் பரக்கத்தை ஏற்படுத்தியுள்ளான். எல்லா நாடுகளிலும் காலம் செல்ல செல்ல முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகப்படவே செய்யும்.
قال الله تعالي : إِذْ كُنْتُمْ قَلِيلًا فَكَثَّرَكُمْ 7:86
2.ஆத்ம வலிமை
அல்லாஹ்வுக்காக எதையும் அற்பணிக்கும் ஆத்மா சார்ந்த மனோ பலத்தை இந்த உம்மத்திற்கு அல்லாஹ் தந்துள்ளான்.
قال الله تعالي : قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 6:162
3. கொள்கை வலிமை
இஸ்லாம் யாராலும் குறை சொல்ல முடியாத நடுநிலையான கொள்கையாகவே திகழ்கிறது. எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தந்திடும் கொள்கையாகவும்,. எல்லா காலத்திற்கும் பொருத்தமான கொள்கையாகவும் இஸ்லாம் திகழ்கிறது.
قال الله تعالي : وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ 16:89

இஸ்லாத்தை படிப்பவர்கள், இறைவேதமான திருக்குர்ஆனை படிப்பவர்கள் இஸ்லாத்தில் தங்களை தருவதற்கு இஸ்லாத்தின் கொள்கை வலிமையும் ஒரு காரணம்.
4.மனிதநேய வலிமை
முஸ்லிம்களின் நான்காவது பலம் அவர்கள் மனிதநேயம் கொண்டவர்களாக திகழ்வதாகும். அன்பு, பாசம், கருணை, உதவி செய்தல் போன்றவற்றை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு கற்றுத் தந்துள்ளது. நற்குணங்களை முழுமைப்படுத்திடவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்றார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.
8595 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ  رواه احمد
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.“ நற்குணங்களை முழுமைப்படுத்தவே நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.” (நூல்:முஸ்னத் அஹ்மத்)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை உலகின் அருளாக தான் அனுப்பியதாக அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவான்.
قال الله تعالي: وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ 21:107
இந்த மூன்றும் தான் மங்கோலியர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்தது.நமது தமிழத்தில் தா்மபுரியில் சாதி வெறியால் தங்களது மதத்தைச் சார்ந்த தலித்களை வேறொரு சாதியினர் தாக்கி கடுமையான முறையில் சேதப்படுத்திய பொழுது   
முஸ்லிம் அமைப்பினர்கள் உடனே அப்பகுதிக்கு
சென்றுஉதவிகள் செய்தார்கள்.பாதிக்கப்பட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்பவர்களாகவே முஸ்லிம்கள் இருந்துள் ளார்கள்.தர்மபுரி இதற்கு  நிகழ்கால உதாரணம்.
அவ்வாறே அயோத்தியில் இந்துக்கள் வழிபாட்டுத்தலங்கள் கட்ட கடந்த காலத்தில் முஸ்லிம்கள் செய்த உதவிகளையும், முஸ்லிம்களின் தாராளத்தையும், இந்து- முஸ்லிம் ஒற்றுமைக்கு முன்மாதிரி நகரமாக அயோத்தி விளங்கியதையும் நாம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பாபர் மசூதி நம் கைகளில் வரும். இன்ஷா அல்லாஹ்

2 Comments

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.