ஊடகங்களுக்கு இடையிலான கடும் போட்டியும், சவால்களும் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

‘ஒரு பக்கம் செய்தி பஞ்சம் இன்னொரு பக்கம் பரபரப்பு மோகம்’ இரண்டுக்கும் மத்தியில் TRP(Target Rating Point)ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காகவும், அவ்வாறு முதலிடத்தை பிடித்து விட்டால் விளம்பரம் மூலமாக பணத்தை  அள்ளி விடலாம் என்பதற்காகவும் ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை தேடி அலைகின்றன.

மக்களின் பரபரப்பை காசாக்க முற்படும் அந்த ஊடகங்கள் இது விஷயத்தில் தனி மனித உரிமைகளையோ, மனிதர்களின் மன உளைச்சல்களையோ கவனத்தில் கொள்வதில்லை.

அவர்களுக்கு தேவை ஒரு பரபரப்பு செய்தி. அதனை முத லில்  வெளியிட வேண்டும். அவ்வளவு தான்!

அதில் யாருக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் என்ன? யாருடைய அந்தரங்கம் பரிமாறப்பட்டால் என்ன? அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலை கொள்வதில்லை.

சமீபத்தில் பிரிட்டிஷ் இளவரசி ‘கேட் மிடில்டன்’ விவகாரத்தில் இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ் தற்கொலை செய்து கொண்டது இந்த அடிப்படையில் நிகழ்ந்ததே.

கேட் மிடில்டன்’ சிகிச்சை எடுத்துக் கொண்ட ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஆக பணிபுரிந்தவர் ஜெஸிந்தா. இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். கேட் சிகிச்சை தொடர்பான விஷயத்தை அறிந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எப்.எம் ரேடியோ வர்ணனையாளர்கள் சார்லஸ் மற்றும் எலிசெபத் ராணியின் குரலில் பேசி ஜெஸிந்தாவிடம் இளவரசியின் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். பின்பு இளவரசியின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக செய்தி ஒலிபரப்பினர்.

விஷயம் பரபரப்பாகி மருத்துவமனையின் முன்பு நிருபர்கள் குவிய, மன உளைச்சலில் ஜெஸிந்தா தற்கொலை செய்து கொண்டார்.

இங்கே தகவலை பெறுவதற்கு நிருபர்கள் கையாண்ட வழிமுறையாலும், பின்பு ஒன்றை பலதாக்கி வெளியிட்டதாலும் அநியாயமான முறையில் ஓர் உயிர் இழப்பு ஏற்பட்டது.

இது தான் இன்றைய ஊடகங்களின் நேர்மையற்ற நிலையாகும்.

உலக அழிவும் ஊடகங்களின் நாலாந்தர வியாபாரமும்

‘உலக அழிவு’ குறித்து தற்போது  நாலாந்தர ஊடகங்கள் வெளியிட்டு வரும் பரபரப்பு செய்திகளும் இந்த வகையில் உள்ளதே.

Main Line ஊடகங்கள் எதுவும் இதற்கு முக்கியத்துவம் தராத நிலையில் உலக அழிவு குறித்து  மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி காசாக்கும் முயற்சி இங்கே நடந்து வருகின்றது.

ஒரு ஆங்கில திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தொடங்கிய இச்செயல் தொலைக்காட்சி விவாதம், பத்திரிக் கைகளில் ‘தலைப்பு செய்தி’ என்று மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித் தரும் தொழிலாகியுள்ளது.

இதன் விளைவு உலகம் அழிவது போன்ற அத்திரைப்படத்தி ன் ‘ஸ்டில்’ இணையதளத்தில் இருந்து கணக்கற்ற முறையி ல் பதிவிறக்கம் (Download) செய்யப்பட்டுள்ளதாம். அதனை முகப்பு படமாக (Rapper) ஆக்கி ஏராளமானோர் புத்தகம் வெளியிட்டு சம்பாதித்து இருக்கிறார்களாம். எத்துணை மோசமான செயல் இது.
முக்கிய ஊடகங்களில் இச்செய்தி இல்லை
அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், மத்திய ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த பத்திரிக்கையான ஹுர்ரியத் நாளிதழ், மத்திய கிழக்கின் சக்தி வாய்ந்த பத்திரிக்கையான அல் அஹ்ராம் நாளிதழ், இந்தியாவின் முன்னணி ஆங்கில இதழ் ஹிந்து பத்திரிக்கை போன்றவை இதற்கு எந்த முக்கியத்துவமும் தராத நிலையில் நாலாந்தர ஊடகங்கள் தான் இதனை மிகைப்படுத்தி வருகின்றன.
ஏன் மாயன் காலண்டருக்கு இவர்கள் தரும் முக்கியத்துவத்தை பிரான்ஸ் மருந்து உற்பத்தியாளர் ( French apothecary) நாஸ்ட்ராடமஸ் (Nostradamus : 1503 – 1566 ) இன் The Prophecies ( தீர்க்கதரிசனங்கள்) நூலுக்கு தருவதில்லை?.அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்:

 “இனி வரும் காலத்தில் சுமார் 250 ஆண்டுகள் அறிவியலில் மேற்குலகம் ஆதிக்கம் செலுத்தும். அப்பால் இஸ்லாமிய உலகுக்கும் மேற்குலகத்திற்கும் யுத்தம் நடக்கும். அது தரையில் நடக்காது. விண்வெளியில் நடக்கும். அதில் இஸ்லாமிய உலகம் வெற்றி பெறும்.அதற்கு பின்பு சுமார் 1000 ஆண்டுகள் உலகம் கீழை நாடுகளின் கைவசம் இருக்கும்.”

அமெரிக்காவின் உளவு விமானங்களை ஈரான் தரையிறக்கி வரும் செய்திகளை வைத்து பார்த்தால் இந்த யுத்தத்தில் இஸ்லாமிய உலகின் வெற்றி தொடங்கி விட்டதாக கருதலாம்.

நாஸ்ட்ராடமஸ் இன் தீர்க்கதரிசனத்திற்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை என்றாலும் இந்த நாலாந்தர ஊடகங்களுக்கு இதுவெல்லாம் கண்களுக்கு தெரிவதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலக அழிவும் ஊடகங்களின் ஏமாற்றலும்
இது நடக்காது , பொய் தான், கற்பனை தான் என்று தெரிந்தே இங்கே இங்கே உலக அழிவு குறித்து கற்பனை செய்தி பரப்பப்பட்டுள்ளது.

حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحَضْرَمِيُّ إِمَامُ مَسْجِدِ حِمْصَ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ ضُبَارَةَ بْنِ مَالِكٍ الْحَضْرَمِيِّ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ سُفْيَانَ بْنِ أَسِيدٍ الْحَضْرَمِيِّ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَبُرَتْ خِيَانَةً أَنْ تُحَدِّثَ أَخَاكَ حَدِيثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَأَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ  رواه ابوداود

கியாமத் என்ன  பூச்சாண்டியா?

ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமும் ‘உலகம் ஒரு நாள் அழியும்’ என்று கூறுகிறது. ஆனால் மனிதர்களை பயமுறுத்தும் பூச்சாண்டியாக அதனை இஸ்லாம் ஆக்கவில்லை. அதனைக் கூறி (தற்போதைய ஊடகங்கள் செய்வது போன்று) மன உளைச்சலில் மனித இனத்தை தள்ளவுமில்லை.
அவ்வாறே கியாமத்தை காரணம் காட்டி வாளாவிருப்பதை யும் இஸ்லாம் ஏற்கவில்லை.

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ أَبُو حَازِمٍ سَمِعْتُهُ مِنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ صَاحِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَذِهِ مِنْ هَذِهِ أَوْ كَهَاتَيْنِ وَقَرَنَ بَيْنَ السَّبَّابَةِ وَالْوُسْطَى  رواه البخاري ومسلم
நானும் கியாமத்தும் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளோம் என்று அருகருகே நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் காட்டிய நிலையில் சொன்னார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.” (நூல்: புகாரி, முஸ்லிம்)

தமது வருகையே கியாமத்தின் அடையாளம் தான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிந்திருந்த நிலையில் தான் வலிமையான இஸ்லாமிய பிரச்சாரத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.இஸ்லாத்தை நிலைநாட்டிட ஏராள மான போர்கள் எதிர்கொண்டார்கள்.

இன்னும் குடும்ப தேவைக்காக ஒரு வருடத்திற்கான உணவை சேமித்து வைக்கும் பழக்கமும் அவர்களிடம் இருந்துள்ளது.(புகாரி)

மேற்கே சூரியன் உதிக்கும் வரை கியாமத் வராது
முஸ்லிம்களைப் பொருத்தவரை சூரியன் மேற்கில் இருந்து உதயமாகும் வரை நற்காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மேற்கில் சூரியன் உதிக்கும் வரை நிச்சயமாக கியாமத் வராது.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا عُمَارَةُ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا فَذَاكَ حِينَ
{ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ } رواه البخاري
கியாமத் வந்தாலும் பதறாதே.

உலகின் ஒட்டு மொத்த அழிவே கியாமத் என்று இஸ்லாத்தில் கூறப்படுகின்றது. நிச்சயம் அது மிகப்பெரிய அழிவாகவே இருக்க முடியும்.

அவ்வாறான பேரழிவு கண்முன் ஏற்பட்டால் பதட்டப்படாமல் தன்னம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் இருக்க வேண்டும் என்கிறது இஸ்லாம். பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.
حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا حَمَّادٌ حَدَّثَنَا هِشَامُ بْنُ زَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ  قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ قَامَتْ السَّاعَةُ وَبِيَدِ أَحَدِكُمْ فَسِيلَةٌ فَإِنْ اسْتَطَاعَ أَنْ لَا يَقُومَ حَتَّى يَغْرِسَهَا فَلْيَفْعَلْ
رواه احمد والبخاري في الادب المفرد

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவரின் கையில் ஈச்ச மர செடியொன்று இருக்கும் நிலையில் (அதனை நட்ட அமர்ந்தார். அச்சமயத்தில்) கியாமத் வந்து விட்டதெனில், அதை பூமியில் நட்டி விட்டு எழ முடியுமென்றால் நட்டி விட்டு அவர் எழட்டும்.”
  (நூல் :முஸ்னத் அஹ்மத், அதபுல் முஃப்ரத் – இமாம் புகாரி)

கண்முன் கியாமத் வந்தாலும் பதறியடித்துக் கொண்டு ஓடாதீர்கள். அல்லது திகைத்து நின்று விடாதீர்கள். மாறாக தன்னம்பிக்கையை கைவிடாமல் செய்த காரியத்தை தொடர்ந்து செய்து முழுமைபடுத்துங்கள் என்கிறார்கள் அண்ணல் நபி (ஸல்).
ஏனெனில் மனித உழைப்புக்கு நிச்சயம் அல்லாஹ்விடம் கூலி உண்டு. கியாமத்துக்காக மனிதன் முடங்கி விடக்கூடாது என்பதே அதற்கு காரணம்.
 قال الله تعالي: وَأَنْ لَيْسَ لِلْإِنْسَانِ إِلَّا مَا سَعَى 53:39
وقال ايضا عز وجل: فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا 17:19
ஆதாரமில்லாதவற்றை நம்பக்கூடாது
கற்பனைகளை நம்புவதும், அதன் பின்னால் ஓடுவதும் ஜாஹிலிய்யா கால பழக்கமாகும். கற்பனைகளை நம்ப வைக்கும் இச்செயலை நாம் ஜாஹிலிய்யாவாகவே காண வேண்டும்.
நிச்சயமாக ஒரு முஃமின் ஆதாரமில்லாதவற்றை நம்பக் கூடாது.
قال الله تعالي: نَبِّئُونِي بِعِلْمٍ إِنْ كُنْتُمْ صَادِقِينَ      6:143
وقال ايضا عز وجل: هَلْ عِنْدَكُمْ مِنْ عِلْمٍ فَتُخْرِجُوهُ لَنَا إِنْ تَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ أَنْتُمْ إِلَّا تَخْرُصُونَ  6:148
وقال ايضا عز وجل: هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ  2:111
இது ஷைத்தானின் ஏமாற்று வித்தையே
قال الله تعالي: يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا  4:120




Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.