படைத்த ஏக இறைவனான அல்லாஹ் நாம் வாழும் இப்பூமியை பல்வேறு இயற்கை வளங்கள் கொண்டதாகவே படைத்துள்ளான்.
மலைகள், ஆறுகள், பச்சை பசுமையான காடுகள், அக்காடுகளில் பல வகையான மரங்கள், தாவரங்கள், செடி-கொடிகள், பூந்தோட்டங்கள், விலங்குகள், எண்ணற்ற பறவையினங்கள், வற்றாத பரந்த நீர் பரப்பாக கடல்கள், அக்கடல்களில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள்,பல்வேறு மணற்பாங்கான இடங்கள், சுரங்கங்கள் என எண்ணற்ற இயற்கை வளங்கள் கொண்டதாகவே படைத்துள்ளான்.
இவ்வளங்கள் இன்று –நேற்று படைக்கப்பட்டதல்ல.. இப்பூமியை அல்லாஹ் படைத்த ஆரம்ப காலத்திலேயே இதனை அல்லாஹ் இத்துணை பரக்கத்தானதாகவே படைத்துள்ளான்.
வேறு எந்த கோள்களையும் இவ்வளவு வளமானதாக படைத்திராத அல்லாஹ் பூமியை வளமானதாக படைத்ததற்கு காரணம் பூமியில் அவனது பிரதிநிதியான மனிதன் வாழ்கிறான் என்பதே.
சுவர்க்கத்தில் மனிதன் வாழ்ந்த காலத்தில் பசியும், தாகமும் வராத சூழ்நிலையை மனிதனுக்கு அல்லாஹ் தந்திருந்தான்.
قال الله تعالي: فَقُلْنَا يَا آَدَمُ إِنَّ هَذَا عَدُوٌّ لَكَ وَلِزَوْجِكَ فَلَا يُخْرِجَنَّكُمَا مِنَ الْجَنَّةِ فَتَشْقَى .إِنَّ لَكَ أَلَّا تَجُوعَ فِيهَا وَلَا تَعْرَى وَأَنَّكَ لَا تَظْمَأُ فِيهَا وَلَا تَضْحَى 20:117,118,119
சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்த பிறகு மனிதனுக்கு பசி, தாகம், களைப்பு ஏற்பட தொடங்கியது. உணவுக்காக அவன் உழைக்க வேண்டியிருந்தது. அல்லாஹ்வின் பிரதிநிதியாக வாழும் மனிதனுக்கு வாழ்தாரத்தில் பஞ்சம் ஏற்படாமல் இருப்பதற்காகவே பூமியில் மேற்கண்ட எல்லாவற்றையும் அல்லாஹ் படைத்து, அதில் பரக்கத்தை ஏற்படுத்தி இருந்தான்.
قال الله تعالي: وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ مِنْ فَوْقِهَا وَبَارَكَ فِيهَا وَقَدَّرَ فِيهَا أَقْوَاتَهَا فِي أَرْبَعَةِ أَيَّامٍ سَوَاءً لِلسَّائِلِينَ  41:10
قال الله تعالي: وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ  7:10
இயற்கை வளங்கள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு
1.எல்லா வளங்களிலும் நன்மை உண்டு
விலங்குகள் மற்றும் பறவைகளில் எல்லாவற்றையும் மனிதன் சாப்பிடுவதில்லை. அவ்வாறே மனிதன் சாப்பிட இயலாத எண்ணற்ற உயிரினங்கள் பூமியில் உள்ளன. எனினும்  உயிருள்ள – உயிரற்ற எல்லா படைப்புகளிலும் நிச்சயம் மனிதனுக்கு நன்மை உண்டு. ஒரு காரணத்திற்காகவே அவற்றை அல்லாஹ் படைத்துள்ளான். இதுவே இஸ்லாத்தின் கொள்கை.
قال الله تعالي: الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ  3:191
2. எல்லோருக்கும் உரியது.
பூமியில் உள்ள வளங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவர்களுக்கு மட்டும் உரியதல்ல. எல்லா காலத்தில் வாழும் மனிதர்களுக்கும் உரியது என்றும் இஸ்லாம் அறிவுத்துகிறது.
قال الله تعالي: رِزْقًا لِلْعِبَادِ  50:11
ஆதலால் குறிப்பிட்ட காலத்தில் வாழ்பவர்களே அவற்றை அழித்து விடக்கூடாது.
யர்மூக் மற்றும் காதிஸிய்யா யுத்தங்களுக்கு பிறகு கிடைத்த பெரும் நிலப்பரப்பை முஸ்லிம் வீரர்களுக்கு மட்டுமே பங்கிட்டு கொடுக்காமல் பைத்துல் மாலில் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் சேர்த்ததற்கு இதுவே காரணம்.
3.மற்ற பிராணிகளுக்கு அதில் பங்குண்டு
பூமியில் உள்ள வளங்கள் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல.. பிராணிகளுக்கு அதில் பங்கு இருக்கின்றது. அவற்றுக்கும் சேர்த்தே அவ்வளங்கள் பூமியில் படைக்கப்பட்டுள்ளன.
قال الله تعالي: مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ 79:33, 80:32
4.இயற்கை வளங்களை மனிதன் பேண வேண்டும்.
வாழ்வாதாரத்துக்காக அல்லாஹ்வால்  தரப்பட் டிருக்கும் இயற்கை வளங்களை மனிதன் பேணி வாழ வேண்டும். அவற்றுக்கு அழிவு ஏற்படாத வகையில் அவற்றை மனிதன் பராமரிக்க வேண்டும். இது மனிதனுக்கு அல்லாஹ் தந்துள்ள பொறுப்பாகும்.
قال الله تعالي: هُوَ أَنْشَأَكُمْ مِنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا 11:61
இது மனிதனுக்கு அல்லாஹ் தந்துள்ள பொறுப்பாக இருப்பதால் தான் ‘உழுதவருக்கு விளை நிலம்’ எனும் திட்டத்தை அறிவித்தார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.
2671 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحْيَا أَرْضًا مَيْتَةً فَهِيَ لَهُ رواه ابو داود
எவர் (யாருக்கும் சொந்தமில்லாத பொட்டல்) நிலத்தை விளை நிலமாக மாற்றுகிறாரோ அது அவருக்குரியதே.” (அபூதாவூது)
பராமரிக்க இயலாத அளவு பெரிய அளவிலான அரசு நிலத்தை வைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து உபரியான நிலத்தை உமர் (ரழி) கையகப்படுத்தியதின் நோக்கமும் இது தான்.
(أخبرنا) أبو سعيد بن أبى عمرو ثنا أبو العباس الاصم ثنا الحسن بن على ثنا يحيى بن آدم ثنا يونس عن محمد بن اسحاق عن عبد الله بن أبى بكر قال جاء بلال بن الحارث المزني إلى رسول الله صلى الله عليه وسلم فاستقطعه ارضا فقطعها له طويلة عريضة فلما ولى عمر قال له يا بلال انك استقطعت رسول الله صلى الله عليه وسلم ارضا طويلة عريضة قطعها لك وان رسول الله صلى الله عليه وسلم لم يكن ليمنع (2) شيئا يسأله وانك لا تطيق ما في يديك فقال اجل قال فانظر ما قويت عليه منها فأمسكه وما لم تطق فادفعه الينا نقسمه بين المسلمين فقال لا افعل والله شئ أقطعنيه رسول الله صلى الله عليه وسلم فقال عمرو الله لتفعلن فأخذ منه ما عجز عن عمرته فقسمه بين المسلمين
البيهقي في السنن الكبري
நபித்தோழர் பிலால் இப்னுல் ஹாரிஸ் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெரியதொரு நிலத்தை பெற்றிருந்தார்கள். ஹள்ரத் உமர்(ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அவரை அழைத்து இவ்வாறு சொன்னார்கள்.
உங்களால் பராமரிக்க முடிந்தளவு நிலத்தை வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அரசிடம் ஒப்படைத்து விடுங்கள்.
அதற்கு அத்தோழர் அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) எனக்கு தந்ததை நான் தர மாட்டேன் என்றார்.
உமர் (ரழி) சொன்னார்கள். நீர் தந்தே ஆக வேண்டும்.! என்று கூறி விட்டு அவரால் பராமரிக்க  இயலாமல் இருந்த நிலங்களை அவரிடமிருந்து கைப்பற்றி, பராமரிக்கும் தகுதியுடைய முஸ்லிம்களிடம் ஒப்படைத்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.” ( நூல்: சுனனுல் குப்ரா- பைஹகீ)
பறவைகளும் விலங்குகளும் இயற்கை வளங்களே
பறவைகள், விலங்குகள் பூமியை வளப்படுத்த மனிதனுக்காக படைக்கப்பட்ட படைப்பினங்கள்.  மனித நாகரிகத்தின் அடையாளங்கள்.
 قال الله تعالي: مَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ 6:38
ஆதலால் தான் அவற்றுக்கு உணவு தருவதை தர்மம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்
2900 - حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَمَا أَكَلَتْ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டினார். அதிலிருந்து சாப்பிடப்படுபவை அவருக்கு தர்மம் செய்த நன்மையை தரும்.அதிலிருந்து திருடப்படுபவையும் தர்மம் தான். அதிலிருந்து விலங்குகள் சாப்பிடுவதும், பறவைகள் சாப்பிடுவதும் தர்மம் தான். எவரேனும் அதிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டாலும் (நட்டிய மனிதருக்கு) அது தர்மம் தான்.” (முஸ்லிம்)
மொராக்கோ நாட்டு முஸ்லிம்கள் பறவைகளுக்கு உணவு வழங்குவதில் தாராள மாக இருந்துள்ளதை வரலாற்றில் நாம் காணலாம்
அந்நாட்டின் வக்ஃப் சொத்துக்களை ஆய்வு செய்தால் பறவைகளுக்கு உணவு வழங்குவதற்காக வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏராளம்.
அந்நாட்டின் தலைசிறந்த மார்க்க அறிஞரான அபூ அலி இப்னு ரஹ்ஹால் (( ابو علي ابن رحال (மரணம் ஹி:1140) அவர்கள் ஃபத்ஹுல் ஃபத்தாஹ் ( (فتح الفتاحஎனும் தமது நூலில் ‘பறவைகளுக்கு உதவுவதல்’ எனும் தலைப்பை இடம் பெறச் செய்துள்ளார்கள்.
பறவைகளாலும் மனிதனுக்கு நன்மை உண்டு என்பதற்கு சுலைமான் (அலை) அவர்களின் ஹுத்ஹுத் பறவையும், கஅபாவை காப்பாற்றிய அபாபீல் பறவையும் திருக்குர்ஆன் கூறும் உதாரணங்கள்.
இயற்கை வளங்களில் எல்லை மீறாதீர்
இயற்கை வளங்களை பேண வேண்டும் என்பதால் தான்  போர்களில் எதிரி நாட்டிலுள்ள மரங்கள் மற்றும் விளை நிலங்களையும் கூட சேதப்படுத்த வேண்டாம் என்று படையினருக்கு கண்டிப்புடன் கட்டளையிட்டார்கள் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களான கலீஃபாக்கள்.
இஸ்லாமிய சட்ட நூல்களில் ‘ஜிஹாத்’ எனும் தலைப்பில் அவற்றை விரிவான காணலாம்.
ஏனெனில் பூமியை சேதப்படுத்துவதை அல்லாஹ் விரும்புவதில்லை.
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
قال الله تعالي: وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا 7:56
முன் வாழ்ந்த எல்லா இறைத் தூதர்களும் ஏகத்துவ பிரச்சாரத்திற்கு அடுத்தபடியாக பூமியை பாழாக்கக் கூடாது என்று பிரச்சாரம் செய்துள்ளார்கள்.
இறைத்தூதர் ஷுஅய்பு (அலை) அவர்களின் பிரச்சாரம்


قال الله تعالي: وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ  0 بَقِيَّةُ اللَّهِ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمَا أَنَا عَلَيْكُمْ بِحَفِيظٍ  11:85,86
இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் பிரச்சாரம்
قال الله تعالي: وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ عَادٍ وَبَوَّأَكُمْ فِي الْأَرْضِ تَتَّخِذُونَ مِنْ سُهُولِهَا قُصُورًا وَتَنْحِتُونَ الْجِبَالَ بُيُوتًا فَاذْكُرُوا آَلَاءَ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ 7:74
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் பிரச்சாரம்
قال الله تعالي: وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِنْ رِزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ 2:60
கால்நடைகளையும், விவசாயத்தையும் அழிப்பது விஷமிகளின் செயல் என்கிறது திருக்குர்ஆன்
قال الله تعالي: وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ . وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ 2:204,205
இயற்கை வளங்களுக்கெதிரான போரில் நாகரிக சமுதாயம்
அல்லாஹ் தந்துள்ள வாழ்வாதாரத்தில் இருந்து உண்ணுங்கள்,பருகுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள் என்கிறான் படைத்த இறைவன்.
قال الله تعالي: كُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ 7:31
இயற்கை வளங்களை அனுபவிக்கலாம். ஆனால் அவற்றை அழிக்கக் கூடாது என்பதே அதன் விளக்கம்.
ஆனால் நவீன உலகில் ‘அதிக உற்பத்தி’ எனும் முதலாளித்துவ கொள்கையால் இயற்கை வளங்கள் தாறுமாறாக அழிக்கப்படுகின்றன.
ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளின் முறையற்ற பயன்பாட்டினால் விவசாய நிலங்கள் பாழ்படுத்தப்படுகின்றன.
பணத்துக்காக வன விலங்குகள் கொல்லப்படுகின்றன. தற்போதைய உலகில் போதை மருந்து கடத்தலுக்கு அடுத்தபடியாக வன விலங்குகள் கடத்தலில் தான் அதிகளவு பணம் புரளுகிறது. காண்டா மிருகம், மண்விளியன் பாம்பு, மண் புழு இல்லாமல் போனதற்கு இதுவே காரணம்.
செல்போன் டவர்களின் காந்த அலைகள், மரங்களின்மை,வாகனங்களின் பேரிரைச்சல், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுப் புகைகள் போன்றவற்றால் பறவைகள் அரிதாகி வருகின்றன.
முதுமை மலைக் காடுகளில் முன்பு ‘இருவாய்ச்சி’ என்றொரு பறவை இருந்ததாம், இப்போது அவ்வினம் இல்லையாம்.
அதனால் நான்கைந்து வகை மரங்கள் இல்லாமல் போய் விட்டதாம்.ஏனெனில் அம்மரங்களின் பழங்களை அப்பறவைகள் சாப்பிட்டு அதன் கொட்டைகளை மலத்துடன் வெளியேற்றுமாம். அவ்வாறு வெளியேறும் கொட்டைகள் தான் மரமாக வளருமாம். நேரடியாக கொட்டைகளை விதைத்தால் மரம் வளராதாம்.
டெங்கு காய்ச்சலின் மர்மம்
இன்று தமிழ்நாட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு கொசு தான் காரணம் என்று கூறப்படுகின்றது. கொசுக்கள் பெருக்கத்திற்கும் மனிதன் தான் காரணம்.
ஏனெனில் இன்று தவளைகள் அரிதான இனமாகி விட்டன. தவளைகள் இல்லாமல் போனதற்கு நீர் நிலைகள் எல்லாம் ரியல் எஸ்டேட் நிலங்களாகி  விட்டதே காரணம். தவளைகள் கொசுக்களை தான் சாப்பிடுமாம். கொசுக்கள் நீர் நிலைகளில்உற்பத்தியாகுபவை. அந்நீர் நிலைகளில் இருக்கும் தவளைகள் கொசுக்களை சாப்பிடும்.இது கடந்த கால நியதி.
ஆனால் இப்போது நல்ல நீர் நிலைகள் ரியல் எஸ்டேட் நிலங்களாகி, கழிவு ஓடைகள் சாக்கடைகள் அதிகமாகியுள்ளன.
அவற்றில் கொசுக்கள் உள்ளன. ஆனால் அவற்றை சாப்பிடும் தவளைகள் இல்லை. விளைவு கொசுக்கள் மனிதா்களை வேட்டையாடி வருகின்றன. 
தவளைகளை கொல்வதை தடுத்த நபி(ஸல்)


15489 - قَالَ حَدَّثَنَا هَاشِمٌ عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ وَيَزِيدُ قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ خَالَدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُثْمَانَ قَالَ

ذَكَرَ طَبِيبٌ الدَّوَاءَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَكَرَ الضُّفْدَعَ تَكُونُ فِي الدَّوَاءِ فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَتْلِهَ رواه احمد 

حدثنا أبو بكر قال حدثنا يزيد بن هارون قال أخبرنا ابن أبي ذئب عن سعيد ابن خالد عن سعيد بن المسيب عن عبد الرحمن بن عثمان قال : ذكر طبيب عند النبي صلى الله عليه وسلم دواء يجعل فيه الضفدع ، فنهى رسول الله صلى الله عليه وسلم عن قتل الضفدع.
(2) حدثنا أبو بكر قال حدثنا يزيد بن هارون قال حدثنا شعبة عن زرارة بن أوفى عن أبي الحكم البجلي عن عبد الله بن عمرو قال : لا تقتلوا الضفادع ، فإن نقيقها الذي تسمعون تسبيح.رواه بن ابي شيبة في مصنفه

“மருத்துவர் ஒருவர் தவளை (கறி)யில் மருந்து இருப்பதாக சொன்ன பொழுது, அதனை கொல்லக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் தடுத்து விட்டார்கள்.” (நூல் அஹ்மது)
“முஸன்னஃப் இப்னு அபீ ஷைபாவின் அறிவிப்பில், அதனை கொல்லாதீர்கள். அதன் சப்தம் தஸ்பீஹ் என்று நபி (ஸல்) கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.”
ஆக மனிதன் பேராசையால் தனக்கு தானே அழிவை சம்பாதித்து வருகின்றான்.
இயற்கை வளங்களில் எல்லை மீறிய நுகர்வால் மனித சமுதாயம் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகிறது.
 قال الله تعالي: ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ 30:41
ஆதலால் அல்லாஹ் தந்துள்ள இயற்கை வளங்களை மனித இனம் பேண வேண்டும்..அதிக முட்டைக்கு ஆசைப்பட்டு வாத்தையே அறுத்த கதையாகி விடக்கூடாது.



Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.