நாளை மறுநாள் இன்ஷா அல்லாஹ் ஆஷுரா நாள் நம்மை வந்தடைய இருக்கிறது. ஆஷுரா என்றால் பத்தாவது நாள் என்பது பொருளாகும்.
பத்தாவது நாள் என்பது ஒவ்வொரு மாதத்திலும் இடம் பெறும் நாளாக இருந்தாலும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளுக்கு மட்டுமே ஆஷுரா நாள் என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் இந்நாள் அல்லாஹ்வின் வல்லமையை நினைவுபடுத்தி, முஃமின்களுக்கு நம்பிக்கையை தரும் நாளாகும்.
قال الله تعالي : وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ14:5
அல்லாஹ்வின் நாட்களை அவர்களுக்கு நினைவுபடுத்துங்கள். நிச்சயமாக (சோதனைகளில்) பொறுமையை மேற்கொள்வோர்களுக்கும், (மகிழ்ச்சியில்) நன்றி செலுத்துவோர்களுக்கும்  அதில் பல படிப்பினைகள் உள்ளன.”     (அல் குர்ஆன் 14:5 )
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ عَاشُورَاءَ يَوْمٌ مِنْ أَيَّامِ اللَّهِ رواه مسلم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக ஆஷுரா நாள் அல்லாஹ்வின் (வல்லமையை நினைவுபடுத்திடும்) நாட்களில் ஒன்று." (முஸ்லிம்)
ஜாஹிலிய்யாவுடைய காலத்திலேயே இந்நாள் மதிப்புக்குரிய நாளாகவே பார்க்கப்பட்டது.மக்கள் அதனை சங்கைக்குரிய நாள் என்றே விளங்கி வைத்திருந்தனர். ஆனால் அதற்குரிய காரணம் என்ன? என்று தான் அவர்களுக்கு தெரியாமல் இருந்தது.. ஜாஹிலிய்யா காலத்தில் குரைஷிகள் அந்நாளில் நோன்பு நோற்றதாக ஹதீஸ்களில் காணப்படுகின்றது.
4144 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا هِشَامٌ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ وَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُهُ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ الْفَرِيضَةَ وَتُرِكَ عَاشُورَاءُ فَكَانَ مَنْ شَاءَ صَامَهُ وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ      رواه البخاري
அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“ஜாஹிலிய்யா காலத்தில் ஆஷுரா நாள் குரைஷிகள் நோன்பு நோற்கும் நாளாகவே இருந்தது.மக்காவில் நபி(ஸல்) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். மதீனாவுக்கு வந்த பின்பும் அந்நாளில் நோன்பு பிடித்தார்கள். நோன்பு பிடிக்குமாறு மக்களை கட்டளையிட்டார்கள்.ரமலான் நோன்பு (கடமை என்று வசனம்) இறங்கிய பின்பு ஆஷுரா நோன்பு (கட்டாயக் கடமை என்பதிலிருந்து) விடப்பட்டு, விருப்ப நோன்பாக (சுன்னத் எனும் நிலைக்கு) மாறியது. விரும்பியவர் பிடிக்கலாம். விரும்பினால் விடலாம்.”  (புகாரி)

மதீனாவுக்கு வந்த பின்பும் நபி(ஸல்) அவர்கள் தமது இறுதிக் காலம் வரையிலும் ஆஷுரா நோன்பை நோற்று வந்தார்கள். யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்பதாக கேள்விப்பட்ட நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.
1917 - و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ابْنِ أَبِي ذِئْبٍ عَنْ الْقَاسِمِ بْنِ عَبَّاسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَيْرٍ لَعَلَّهُ قَالَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ  رواه مسلم
“வரும் வருடம் நான் உயிருடன் இருப்பின் ஒன்பதாவது நாள் நோன்பு வைப்பேன்.” (முஸ்லிம்)
இன்னொரு ஹதீஸில் நபி(ஸல்) இப்படிச் சொன்னதாக வருகிறது.
4312 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَالْيَهُودُ تَصُومُ عَاشُورَاءَ فَقَالُوا هَذَا يَوْمٌ ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَصْحَابِهِ أَنْتُمْ أَحَقُّ بِمُوسَى مِنْهُمْ فَصُومُوا    رواه البخاري
“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களே! நீங்கள் நோன்பு வையுங்கள். நபி மூஸா (அலை) அவர்களின் மீது யூதர்களை விட நீங்கள் தாம் உரிமையுள்ளவர்கள்.” (புகாரி)
இங்கே நபி(ஸல்) அவர்கள் யூதர்களை இரண்டு வகையில் நிராகரித்தார்கள்.
1.அவர்கள் ஒரு நாள் நோன்பு பிடிப்பதை நிராகரித்து, நாம் இரண்டு நாள் நோன்பு பிடிப்போம் என்றார்கள். இவ்வாறு செய்து அவர்களின் நோன்பு ‘மதிப்பற்றது’ என்று உணர்த்தினார்கள்.
2. நபி மூஸா (அலை) அவர்களின் மீது நீங்களே அதிகம் உரிமையுள்ளவர்கள் என்று கூறி, நபி மூஸா (அலை) அவர்கள் பற்றி பேசவே அவர்களுக்கு தகுதியில்லை என்பதை விளக்கினார்கள்.
இவ்வாறு அவர்களின் நோன்பை அர்த்தமற்றதாகவும், நபி மூஸா (அலை) அவர்களை சொந்தம் கொண்டாட அவர்களுக்கு தகுதி கிடையாது என்று சொன்னதற்கும் நிச்சயம் காரணம் இருக்கின்றது.
நோன்பு பிடிப்பதற்காக ஃபிர்அவ்ன் கொல்லப்படவில்லை
ஃபிர்அவ்ன் அன்றைய அறியப்பட்ட உலகில் ஆயுத வலிமையிலும், பொருளாதார வலிமையிலும்  பெரிய வல்லரசாக இருந்த எகிப்தை ஆட்சி செய்தவன்.  நினைத்ததை எல்லாம் அடைபவன்.எதிரிகளை அவர்கள் பிறப்பதற்கு முன்பே அழிக்க நினைப்பவன்.
தனது மனோ இச்சைப்படி சட்டங்களை இயற்றி மக்களை கொடுமைப்படுத்தி வந்த அவன் தன்னையே இறைவனாக அறிவித்து, அவனை வணங்கும்படி நாட்டு மக்களை  கட்டாயப்படுத்தினான். அவனது ஆட்சியில் வாழ்ந்த யூதர்களை அடிமைகளாகவும், இரண்டாந்தர குடிமக்களாகவும் அவன் நடத்தினான்.
அச்சமயத்தில் மூன்று விஷயங்கள் அவசியமாக இருந்தது.
1.ஃபிர்அவ்ன் கொல்லப்படுதல்.
2.அல்லாஹ்வை மட்டும் வணங்குதல்
3.ஃபிர்அவ்ன் இருந்த இடத்தில் இறையாட்சி ஏற்படுதல்
இம்மூன்றும் இறைவனின் நாட்டமாக இருந்தது. ஆனால் ஃபிர்அவ்ன் கொல்லப்படுதல் மட்டும் தான் நடந்தது. அதில் யூதர்களுக்கு எந்த உழைப்பும் இருக்கவில்லை. (முழுக்க முழுக்க அல்லாஹ்வின் வல்லமையால் அது நடந்தது).
பிந்தைய இரண்டு நடக்கவே இல்லை.
ஃபிர்அவ்ன் கொல்லப்படுவதை அல்லாஹ்வே தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டதின் உண்மையான நோக்கம் அல்லாஹ்வை மட்டும் வணங்குதல், இறையாட்சியை ஏற்படுத்துதல் என்ற இரண்டு காரணங்களுக்காக தான்.
அவ்விரண்டையும் நிலை நாட்டினால் தான் ஃபிர்அவ்ன் கொல்லப்பட்டதின் உண்மையான நோக்கத்தையும் நிறைவேற்றியவர்களாகவும், அதற்கு நன்றி செலுத்தியவர்களாகவும் ஆக முடியும்.
நோன்பு பிடிப்பது அதன் உண்மையான நோக்கம் அல்ல.. நோன்பு பிடிப்பதற்காக அதனை அல்லாஹ் செய்யவில்லை. அது ஓர் அமலாகத் தான் இருக்க முடியுமே தவிர அவன் கொல்லப்பட்டதின் நோக்கம் அதுவல்ல..
ஆனால் மதிகெட்ட யூதர்கள் அதைத் தான் நிறைவேற்றினார்களே தவிர அல்லாஹ்வின் நோக்கத்தை புரிந்து கொள்ளவே இல்லை.
ஃபிர்அவ்னிடமிருந்து ஈடேற்றமடைந்த பிறகு நபி மூஸா (அலை) அவர்களிடம் இப்படிக் கேட்டார்கள்.
قال الله تعالي: وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتَوْا عَلَى قَوْمٍ يَعْكُفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ قَالُوا يَا مُوسَى اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آَلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ 7:138
அமாலிகா கூட்டத்தினருக்கெதிராக போர் புரிய வரும்படி யூதர்களை நபி மூஸா (அலை ) அவர்கள் அழைத்தபொழுது தாங்களால் வர இயலாது ; வேண்டுமென்றால் நீரும், உமது இறைவனும் சென்று அவர்களுடன் போர் புரியுங்கள் என்றனர்.
قال الله تعالي: قَالُوا يَا مُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ 5:24
 ஃபிர்அவ்னுடன் ஜிஹாத் செய்து அவனை வீழ்த்தும்படி யூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை. பல ஆண்டுகள் அவனிடம் அடிமைப்பட்டு கிடந்ததால், மனதளவில் கோழைகளாக இருந்த அவர்களால் அது இயலாது என்பதால் தான் அல்லாஹ்வே அவனை வீழ்த்தினான்.
அவனை அல்லாஹ் கொன்று விட்டதாக கூறியிருந்தால் கூட அவர்கள் நம்பி இருக்க மாட்டார்கள். ஃபிர்அவ்னாவது ? இறப்பதாவது? என்று கூறி நம்பாமல் இருந்திருப்பார்கள். அத்தனை பயம் அவன் மீது அவர்களுக்கு.
ஆதலால் தான் அவர்களின் கண் முன்னாலேயே அவனை அல்லாஹ் மூழ்கடித்தான்.
قال الله تعالي: وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آَلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ 2:50
 ஆக ஃபிர்அவ்னை அல்லாஹ் வீழ்த்தியதின் உண்மையான நோக்கத்தை மூஸா நபி (அலை) வாழ்ந்த காலத்திலும் அவர்கள் புரிந்திடவில்லை. அன்னாருக்கும் பின்பும் அவர்கள் புரிந்திடவில்லை.
ஆதலால் தான் மூஸா நபிக்கு பின்பு சுமார் 1500 ஆண்டுகள் அவர்கள் நோன்பு நோற்று வந்த போதிலும் அதனை நபி (ஸல்) அவர்கள் பெருமைப்படுத்தாமல் மூஸா நபியை சொந்தம் கொண்டாட அவர்கள் தகுதியற்றவர்கள் என்றார்கள்.
ஆஷுரா நாளின் நோக்கம் என்ன?
அல்லாஹ்வை மட்டும் வணங்குதல், அல்லாஹ்வின் தூதருக்கு முழுமையாக கட்டுப்படுதல்  அல்லாஹ்வின் அரசை நிலை நாட்ட பாடுபடுதல், அநீதம் எங்கே நடந்தாலும் அதனை தட்டிக் கேட்டல் போன்றவை தான் ஆஷுரா நாள் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது.
அல்லாஹ்வின் எதிர்பார்ப்பை யூதர்கள் நிறைவேற்றாமல் வெறுமனே நோன்பு மட்டும் பிடித்து வந்தார்கள். ஆதலால் தான் சுமார் 1500 ஆண்டுகளாக அல்லாஹ்வுக்கு பிரியமான அமலான நோன்பை அவர்கள் கடைபிடித்து வந்தும் அவர்களை அல்லாஹ் குர்ஆனில் இப்படி கூறிவிட்டான்.

قال الله تعالي: غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 1:7
இந்நாளை நபி(ஸல்) நம்மிடம் தந்துவிட்டார்கள். நாம் இந்த நாளின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியாக வேண்டும்.
நாம் நம் மீதான உலகளாவிய சமுதாயக் கடமைகளை உணர்ந்தாக வேண்டும்.
நவீன அம்லேக்குகளிடம்  பாலஸ்தீனம்
கடந்த 90 ஆண்டுகளாக இஸ்லாமிய உலகின் தீராத பிரச்சினையாக இருந்து வரும் பாலஸ்தீனப் பிரச்சினையில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் நம்முடைய பொறுப்பை உணர வேண்டும்.
பாலஸ்தீனமும், அல் –அக்ஸா பள்ளிவாசலும் உலகம் முழுவதும் எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தமானது. இன்னும் ஆழமாக பார்த்தால் மற்றவர்களை காட்டிலும் நமக்கு அதிகம் உரிமை உண்டு. ஏனெனில்  நமது இந்திய தேசத்தின் சொத்து யூதர்களால் அங்கே அபகரிக்கப்பட்டுள்ளது.
இப்போது மக்காவில் ஆற்காடு நவாப் மற்றும் ஐதரபாத் நிஜாமுக்கான சொந்தமான கட்டடங்கள் இருப்பது போன்றே பாலஸ்தீனத்தில் அல் –அக்ஸா மஸ்ஜித் அருகில் இந்திய முஸ்லிம்களுக்கென ஜாவியா (விருந்தினர் மாளிகை) ஒன்று இருந்தது. இது கி.பி. 13 ம் நூற்றாண்டில் (ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டு) நிர்மாணிக்கப்பட்டது. இதனை ஷேக் பாபா ஃபரீத் அவர்கள் தான் கட்டினார்கள். இந்த மாளிகை பல நூற்றாண்டுகளாக  இந்தியர்களின் செலவில் முறையான பராமரிப்பில் இருந்தது.இந்தியாவிலிருந்து பைத்துல் முகத்தஸ் செல்வோர் அதில் தங்குவார்கள். 1967 வரை இது பராமரிக்கப்பட்டது, 1967 –ல் இஸ்ரேல் இதனை அபகரித்துக் கொண்டது.
கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பிறகு கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத ஓர் இஸ்லாமிய எழுச்சி இஸ்லாமிய உலகில்  ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை மீட்டு யூதர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வரலாறு உருவாக வேண்டும்.
நபி மூஸா (அலை) அவர்களிடம் பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அமாலிகா கூட்டத்தினரோடு தான் யுத்தம் செய்யும்படி அல்லாஹ் கூறினான்.
இப்போது நவீன அம்லேக்குகள் பாலஸ்தீனத்தில் குடியேறியுள்ளனர். அவர்களை அப்புனித பூமியில் இருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும். அதற்காகத் தான் ஆஷுராவை நம்மிடம் நபி(ஸல்) அவர்கள் தந்துள்ளார்கள்.
இங்கே நமக்கு அரசியல் பிரச்சினை, சிறைவாசிகள் பிரச்சினை என்று போராட வேண்டிய பல பிரச்சினைகள் இருந்தாலும் பாலஸ்தீனப் பிரச்சினையிலும் நமது பங்களிப்பை நாம் தந்தாக வேண்டும்.
நமது முன்னோர்களான மௌலானா முஹம்மது அலி, மௌலானா சௌகத் அலி போன்றோர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியிருந்த அதே வேளையில் பாலஸ்தீன விஷயத்திலும் நிறைவான கவனம் செலுத்தினார்கள்.
பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியர்களின் பங்களிப்பு
1923 –ம் ஆண்டு அக்டோபர் 18 –ம் நாள் ஜமால் அல் ஹுசைனி அவர்களின் தலைமையில் பாலஸ்தீன முஸ்லிம்களின் குழு இந்தியா வந்தது. பம்பாய் துறைமுகத்தில் இந்திய முஸ்லிம்களின் சார்பில் சிறப்பான வரவேற்பு அவர்களுக்கு தரப்பட்டது.
பின்பு டெல்லிக்கும் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே நிதி திரட்டுவதற்கான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பம்பாய், ஹைதராபாத், சூரத், போன்ற நகரங்களுக்கு சென்று நிதி திரட்டியது. ஹைதராபாத் நிஜாம் மட்டும் அன்றைய பண மதிப்பில் 1 இலட்சம் ரூபாய் கொடுத்தார்
இந்திய நன்கொடைகள்
ஹைதராபாத் கமிட்டி    - 500 எகிப்திய பவுண்ட்
போபால் இளவரசி       - 30,000 ரூபாய்
நவாப் ஜவாரா           - 5,000  ரூபாய்
நவாப் ஜுனாகார்க்       - 5,000 ரூபாய்
மௌலானா முல்லா தாஹிர் செய்ஃபுதீன் -15,000 ரூபாய்
பம்பாய், டெல்லி பொதுமக்கள் – 31,000 ரூபாய்
மீண்டும் மௌலானா முல்லா தாஹிர் செஃபுதீன் – 85,000 ரூபாய்
இளவரசர் ஆகாகான்     - 40,000 ரூபாய்
நவாப் ஷஹின்          - 10,000 ரூபாய்
குலாம் முஹம்மத் (ஆதம்)- 15,000 ரூபாய்
தேவைப்பட்டால் இதே போன்று இன்னொரு தொகையை தருவதாகவும் வாக்குறுதி தந்தார்கள் இந்திய முஸ்லிம்கள்.
       (source: The Supreme Muslim Council Issu No. 32, 1924 Page 8 )
இது அன்றைய சூழ்நிலையில் மிக அதிகமான தொகையாகும்.
கிலாஃபத் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு மௌலானா சௌகத் அலீ அவர்கள் பாலஸ்தீனக் குழுவை மீண்டும் இந்தியா வர வேண்டும் என்று அழைத்தார்கள்.
அத்துடன் பைத்துல் முகத்தஸை நிர்மாணித்திட தேவையான முழுச் செலவையும் இந்திய முஸ்லிம்கள் ஏற்பார்கள் என்றும் அறிவித்தார்கள்.
இம்முறை பாலஸ்தீன கவர்னர் முஃப்தி ஹாஜி அமீன் ஹுசைன் அவர்களே இந்தியாவுக்கு வந்தார்கள்.
பாலஸ்தீனத்தோடும், அல் –அக்ஸா பள்ளிவாசலோடும் இந்திய முஸ்லிம்களுக்கு உறவும், உரிமையும் உண்டு என்பதை வரலாறு அறிய வேண்டும் என்பதற்காகத் தான் 1931 – ம் ஆண்டு இலண்டனில் வட்ட மேஜை மாநாட்டுக்கு பிறகு மரணித்த மௌலானா முஹம்மது அலி அவர்களை பாலஸ்தீனத்தில் அல் –அக்ஸா வளாகத்தில் அடக்கம் செய்யும்படி வேண்டிக் கொண்டார்கள் பாலஸ்தீன முஃப்தி ஹாஜி அமீன் ஹுசைன் அவர்கள்.
அன்னாரின் சகோதரர் மௌலானா சௌகத் அலீ இந்தியா கொண்டு வர விரும்பினாலும் பாலஸ்தீன முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே தமது சகோதரரை நல்லடக்கம் செய்திட சம்மதித்தார்கள். 24-01-1931 ஆண்டு ஹிஜ்ரி 1349 ரமழான் 5 –ல் அல் –அக்ஸா வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
(நூல் –பாலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு ,(புதிய பதிப்பு - 2012) -மு. குலாம் முஹம்மது )
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சூழல் இப்போது நமது தமிழகத்தில் .ஏற்பட்டுள்ளது. பொதுப் பிரச்சினையில் 24 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து செயல்படும் நிலை உருவாகியுள்ள நிலையில் உலகளாவிய முஸ்லிம் பிரச்சினையில் சிறப்பான பங்களிப்பை நாம் தந்திட 24 அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக்
குழு
ஒன்றை  ஏற்படுத்த வேண்டும்.


நமக்குள் கொள்கை பிளவுகள் வரக்கூடாது
பாலஸ்தீன விவகாரத்தில் நமது 24 இஸ்லாமிய அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும் வேளையில் எக்காரணம் கொண்டும் கொள்கை அடிப்படையில் பிளவு ஏற்பட இடம் தரக்கூடாது. கொள்கை பிளவுகளால் முஸ்லிம்கள் பிரிந்த நிற்க வேண்டும் என்றே நமது எதிரிகள் விரும்புகின்றனர். பாலஸ்தீன போராட்ட வரலாற்றில் இதற்கோர் உதாரணம் உண்டு.
“ஆங்கிலேயர்களின்  பாலஸ்தீன கொள்கையை மறுக்கும் முகமாக 1936 ம் ஆண்டு ஏப்ரல் 19 ம் நாள் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு  அழைப்பு விடுத்தார்கள் பாலஸ்தீன முஸ்லிம்கள்.
இந்த அழைப்பு வந்தவுடன் இந்தியாவிலுள்ள ஆங்கிலேய அதிகாரி M.G. ஹாலத் தமது இலண்டன் எஜமானர்களுக்கு செய்திகளை அனுப்பினான். அதில் , நிச்சயமாக மௌலானா ஷவ்கத் அலீ இப்பிரச்சினையை இங்கே எழுப்புவார்கள். நான் அவருடைய நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றேன். நீங்கள் நிலைமை கையை விட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (என்று குறிப்பிட்டிருந்தான்)
இந்நிலையில் யூதர்களும், ஆங்கிலேயர்களும் ஒரு சூழ்ச்சியைச் செய்தார்கள். இந்திய முஸ்லிம்களிடையே ஷியா – அஹ்லுஸ் சுன்னா பிரச்சினையையும் ,எது ஏகத்துவம் ?என்ற ஒரு விவாதத்தையும் கிளப்பி விட்டார்கள்.
இந்த சூழ்ச்சியில் பல முஸ்லிம்கள் வீழ்ந்து விட்டார்கள்.பம்பாய் இந்த விவாதத்தில் விழுந்தது. முஸ்லிம்களின்  கவனமும் பாலஸ்தீன விவகாரத்திலிருந்து சற்று திரும்பியது.
நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்திட ஷவ்கத் அலீ கிலாஃபத் இயக்கத்தின் சார்பில் நடத்தி வந்த ‘ரோஸ்மா – இ –கிலாஃபத்’ இதழில் பின்வருமாறு எழுதினார்கள்:
“பாலஸ்தீனில் வாழும் முஸ்லிம்கள் தாய் நாட்டிற்காகவும், உலக முஸ்லிம்களின் புனித இடங்களுக்காகவும், கால காலமாக போராடி வருகின்றனர். இதில் அவர்கள் காட்டி வரும் வீரம் அலாதியானது. நான் பம்பாய் முஸ்லிம்கள் தங்கள் நேரங்களை தேவையற்ற (உள்மார்க்க) விவகாரங்களில் செலவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” (Al Jameal al Arabia News 31.06.1936)

பாலஸ்தீன அமைப்புகளுடன் இங்கே யாரும் தொடர்பு வைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் பாலஸ்தீன போராளிகளை இங்கேயுள்ள சில பத்திரிக்கைகள் ‘தீவிரவாதிகள்’ என்று எழுதி வருகின்றன.
தங்களது உரிமைக்காக ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போராடுபவர்களை ‘தீவிரவாதிகள்’ என்று அழைக்க வேண்டுமெனில், இந்திய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களை எல்லாம் தீவிரவாதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.
நமது முன்னோர்களான மௌலானா முஹம்மது அலீ, மௌலானா சௌகத் அலீ போன்ற இந்திய தலைவர்களின் வழியில் பாலஸ்தீன மக்களுடன் நாம் தொடர்பை ஏற்படுத்தி,  அங்கே இருக்கும் நவீன அமாலிகா கூட்டமான யூதர்களை வெளியேற்றி, பைத்துல் முகத்தஸின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும்.
அமாலிகா கூட்டத்திடம் இருந்து பாலஸ்தீனத்தை கைப்பற்ற வேண்டும். இது மூஸா நபிக்கு அல்லாஹ் இட்ட கட்டளை. அது விஷயத்தில் யூதர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பது மட்டுமல்ல.. நவீன உலகில் அமாலிகாவாக அவர்கள் புதிய வடிவம் பெற்றுள்ளனர்.
ஆதலால் அமாலிகாவிடம் இருந்து பாலஸ்தீனத்தை கைப்பற்றும் போராட்டத்தில் நாம் நமது பங்களிப்பை தர வேண்டும். இதுவே இப்போதைய நமது கடமை. இக்கடமையைத் தான் ஆஷுரா நாள் நமக்கு உணர்த்த வேண்டும்.                          Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.