தொழில், வியாபாரம்,வேலை மற்றும் பணம் சார்ந்த உலகப் பணிகள் போன்றவற்றில் முஸ்லிம் சமுதாயம் அல்லது முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் மூழ்கி கிடக்கக் கூடிய காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
தொழில் செய்வதோ, வியாபாரம் செய்வதோ ஒரு பணி செய்வதோ மார்க்கத்தில் தவறு இல்லை தான். உலக வாழ்க்கைக்காக அவற்றில் ஈடுபட மார்க்கம் அனுமதிக்கவே செய்கின்றது.
என்றாலும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தொழில், வியாபாரம், விவசாயம், சொத்து வாங்குதல், ஆட்சியைப் பிடித்தல், அதிகாரங்களை பெறுதல்  ஆகியவற்றுக்காக இந்த உம்மத் அனுப்பப்பட வில்லை.அவை இந்த உம்மத்தின் இலட்சியமும் அல்ல.
சுமார் பதிமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரபு பாலைவனத்தில் வாழ்ந்த மக்களிடம் படைத்த இறைவன் தமது நபியை அனுப்பி வைத்தான். நபித்துவத்தின் நோக்கம் விவசாயமாக இருந்ததெனில் பாலைவன பூமிக்கு அவர் அனுப்பப்பட்டிருக்க தேவையில்லை. ஏனெனில் மக்காவை இப்படி அல் குர்ஆனில் கூறுவான்.
قال الله تعالي: بِوَادٍ غَيْرِ ذِي زَرْعٍ 14:37
விவசாயம் நோக்கமாக இருந்ததெனில்,அன்றைய காலத்தில் விவசாயத்திற்கு ஏற்ற பூமியாக இருந்த யூப்ரடிஸ் நதி பாய்ந்த ஈராக், நைல் நதியின் எகிப்து, சிந்து ,கங்கை நதிகள் பாய்ந்திடும் இந்தியாவுக்கு தான் இறைத்தூதர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
வியாபாரம் நோக்கமாக இருந்ததெனில், மதீனாவின் யூதர்கள், சிரியாவின் நப்திகளில், சிந்து மாகாணத்தில் வாழ்ந்தவர்களில் இறைத்தூதர் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆட்சியைப் பிடித்தல், அதிகாரத்தை பகிர்ந்தளித்தல், பதவிகளை கைப்பற்றுதல், தக்க வைத்தல் ஆகியவை இந்த உம்மத்தின் நோக்கமாக இருந்ததெனில், அக்காலகட்டத்தில் சிரியா நாட்டவர்களும், பாரசீக நாட்டவர்களும் இத்துறையில் சிறந்து விளங்கவே செய்தனர்.
சுகமான வாழ்க்கை, உயர்ந்த உணவு, மிக உயர்ந்த பானங்கள், மிக உயர்ந்த ஆடை – அணிகலன்கள், ஆடம்பர வசதிகள் கொண்ட வீடு இவை தான் இந்த உம்மத்தின் இலட்சியம் எனில், ஏற்கனவே வாழ்ந்தவர்கள் அதில் எந்த குறையும் வைக்கவில்லை தான். இவற்றுக்காக ஒரு புதிய உம்மத் தேவையில்லை.
ஏனெனில் இவை மனிதனின் இயல்புகள் சார்ந்தவை. இவற்றுக்காக ஒரு நபியை, ஒரு உம்மத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த உம்மத்தின் இலட்சியம்
அன்றைய உலகில் யாரிடமும் இல்லாத முற்றிலும் புதிய நோக்கத்திற்காகவே இந்த உம்மத் தேர்ந்தெடுக்கப்பட்டது; அனுப்பப்பட்டது. அல்லாஹ் கூறுகிறான்.
قال الله تعالي: كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ 3:110
இவ்வசனத்தில் அல்லாஹ் உணர்த்தி விட்டான். இந்த உம்மத் பூமியின் வனப்பில், செழிப்பில் வளர்ந்து வாழ்ந்து அனுபவிப்பதற்குரிய உம்மத் அல்ல.. மாறாக இந்த உம்மத் மற்றவர்களுக்காக , மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உம்மத்.
மக்காமா நகரில் இந்த உம்மத் வெளியான பொழுது அன்றைய மக்கா நகரின் அதிகார வர்க்கத்தினர், அறிவு ஜீவிகள் ஏனைய மனிதர்களைப் போன்றே இவர்களும் பணம், பதவி போன்ற இயல்பான மனித ஆசைகளை அடைந்திட இப்படி புதுக் கொள்கை கோஷம் போடுகின்றனர் என்று நினைத்தனர்.
(நமது காலத்தில் கூட மத ஆதரவு, மத எழுச்சி, மத எதிர்ப்பு ஆகியவை கட்சி தொடங்குவதற்கு அல்லது ஆட்சியை பிடிப்பதற்கு ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகின்றது.)
பணம், பதவி, அரசியல் ஆதாயம் இலட்சியமல்ல..
இஸ்லாத்தின் முதல் அழைப்பாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் குரைஷிகள் தூதுவரை அனுப்பி ஆசை காட்டினார்கள்.
தூதராக வந்த உத்பா நபி (ஸல்) அவர்களிடம் இப்படிக் கேட்டார்.
"انك اتيت قومك بامر عظيم , ففرقت به جماعتهم وسفّهتَ به احلامهم وعبت به آلهتهم ودينهم وكفرت به من مضي من آبائهم , فاسمع مني اعرض عليك امورا تنظر فيها لعلك تقبل فيها بعضها:
فقال له رسول الله صلي الله عليه وسلم :قل يا ابا الوليد اسمع
يا اخي ان كنت انما تريد بما  جئت به من هذا الامر مالا جمعنا لك من اموالنا حتي تكون اكثرنا مالا وان كنت انما تريد شرفا سودناك علينا حتي لا نقطع امرا دونك . وان كنت انما تريد ملكا ملكناك علينا ( البداية والنهاية لابن كثير)
குரைஷிகள் மற்றவர்களைப் மதிப்பிடுவது போன்று இவற்றில் ஒன்றை அடையவே இத்தகைய கொள்கைப் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள் என்றெண்ணினார்கள். அதனால் உத்பாவை அனுப்பி பேரம் பேசினர்.  
உத்பாவின் கோரிக்கைகளை நபி (ஸல்) ஏற்கவில்லை. தமது நோக்கம் இதுவல்ல என்றும் தெளிவுபடுத்தினார்கள். அவற்றில் ஒன்று தான் நபித்துவத்தின் இலக்கு என்றிருப்பின் கிடைத்த சந்தர்ப்பத்தை நபி (ஸல) அவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். ஆதலால் அவை இந்த உம்மத்தின் நோக்கம் அல்ல.
காலித் (ரழி) அவர்களிடம் நடந்த பேரம்
வரலாற்றில் யர்மூக் யுத்தத்தில் நடந்த இன்னொரு நிகழ்வும் இதற்கு உதாரணம்.
وذكر الوليد عن صفوان عن عبد الرحمن بن جبير أن الروم نزلوا فيما بين دير أيوب واليرموك، ونزل المسلمون من وراء النهر من الجانب الآخر، وأذرعات خلفهم ليصل إليهم المدد من المدينة.
ويقال إن خالدا إنما قدم عليهم بعد ما نزل الصحابة تجاه الروم بعد ما صابروهم وحاصروهم شهر ربيع الاول بكماله، فلما انسلخ وأمكن القتال (3) لقلة الماء بعثوا إلى الصديق يستمدونه فقال: خالد لها، فبعث إلى خالد فقدم عليهم في ربيع الآخر، فعند وصول خالد إليهم أقبل ماهان مددا للروم ومعه القساقسة، والشمامسة والرهبان يحثونهم، ويحرضونهم على القتال لنصر دين النصرانية، فتكامل جيش الروم أربعون ومائتا ألف. ( البداية والنهاية)
وذكر الوليد بن مسلم أن ماهان طلب خالدا ليبرز إليه فيما بين الصفين فيجتمعا في مصلحة لهم فقال ماهان: إنا قد علمنا أن ما أخرجكم من بلادكم الجهد والجوع، فهلموا إلى أن أعطي كل رجل منكم عشرة دنانير وكسوة وطعاما وترجعون إلى بلادكم، فإذا كان من العام المقبل بعثنا لكم بمثلها.
فقال خالد: إنه لم يخرجنا من بلادنا ما ذكرت،. ( البداية والنهاية)
பத்ருப் போரில் நபியின் துஆ
பத்ருப் போரில் நபி (ஸல்) அவர்கள் செய்த துஆவும் இவ்விடம் பொருத்தமானது.
எதிரிகள் தரப்பில் 1000க்கும் மேற்பட்டவர்கள். முஸ்லிம்களின் தரப்பில் வெறும் 313 நபர்கள் மட்டுமே. அழிவின் விளிம்பில் நின்ற சமயத்தில் இப்படி பிரார்த்திக்கிறார்கள்.
3309 - حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ حَدَّثَنِي سِمَاكٌ الْحَنَفِيُّ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ ح و حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ هُوَ سِمَاكٌ الْحَنَفِيُّ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ
لَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ نَظَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُشْرِكِينَ وَهُمْ أَلْفٌ وَأَصْحَابُهُ ثَلَاثُ مِائَةٍ وَتِسْعَةَ عَشَرَ رَجُلًا فَاسْتَقْبَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقِبْلَةَ ثُمَّ مَدَّ يَدَيْهِ فَجَعَلَ يَهْتِفُ بِرَبِّهِ اللَّهُمَّ أَنْجِزْ لِي مَا وَعَدْتَنِي اللَّهُمَّ آتِ مَا وَعَدْتَنِي اللَّهُمَّ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ لَا تُعْبَدْ فِي الْأَرْضِ فَمَا زَالَ يَهْتِفُ بِرَبِّهِ مَادًّا يَدَيْهِ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ حَتَّى سَقَطَ رِدَاؤُهُ عَنْ مَنْكِبَيْهِ فَأَتَاهُ أَبُو بَكْرٍ فَأَخَذَ رِدَاءَهُ فَأَلْقَاهُ عَلَى مَنْكِبَيْهِ ثُمَّ الْتَزَمَهُ مِنْ وَرَائِهِ وَقَالَ يَا نَبِيَّ اللَّهِ كَفَاكَ مُنَاشَدَتُكَ رَبَّكَ فَإِنَّهُ سَيُنْجِزُ لَكَ مَا وَعَدَكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ
{ إِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِنْ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ }
فَأَمَدَّهُ اللَّهُ بِالْمَلَائِكَةِ قَالَ أَبُو زُمَيْلٍ فَحَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ بَيْنَمَا رَجُلٌ مِنْ الْمُسْلِمِينَ يَوْمَئِذٍ يَشْتَدُّ فِي أَثَرِ رَجُلٍ مِنْ الْمُشْرِكِينَ أَمَامَهُ إِذْ سَمِعَ ضَرْبَةً بِالسَّوْطِ فَوْقَهُ وَصَوْتَ الْفَارِسِ يَقُولُ أَقْدِمْ حَيْزُومُ فَنَظَرَ إِلَى الْمُشْرِكِ أَمَامَهُ فَخَرَّ مُسْتَلْقِيًا فَنَظَرَ إِلَيْهِ فَإِذَا هُوَ قَدْ خُطِمَ أَنْفُهُ وَشُقَّ وَجْهُهُ كَضَرْبَةِ السَّوْطِ فَاخْضَرَّ ذَلِكَ أَجْمَعُ فَجَاءَ الْأَنْصَارِيُّ فَحَدَّثَ بِذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ صَدَقْتَ ذَلِكَ مِنْ مَدَدِ السَّمَاءِ الثَّالِثَةِ فَقَتَلُوا يَوْمَئِذٍ سَبْعِينَ وَأَسَرُوا سَبْعِينَ قَالَ أَبُو زُمَيْلٍ قَالَ ابْنُ عَبَّاسٍ فَلَمَّا أَسَرُوا الْأُسَارَى قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ وَعُمَرَ مَا تَرَوْنَ فِي هَؤُلَاءِ الْأُسَارَى فَقَالَ أَبُو بَكْرٍ يَا نَبِيَّ اللَّهِ هُمْ بَنُو الْعَمِّ وَالْعَشِيرَةِ أَرَى أَنْ تَأْخُذَ مِنْهُمْ فِدْيَةً فَتَكُونُ لَنَا قُوَّةً عَلَى الْكُفَّارِ فَعَسَى اللَّهُ أَنْ يَهْدِيَهُمْ لِلْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَرَى يَا ابْنَ الْخَطَّابِ قُلْتُ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ مَا أَرَى الَّذِي رَأَى أَبُو بَكْرٍ وَلَكِنِّي أَرَى أَنْ تُمَكِّنَّا فَنَضْرِبَ أَعْنَاقَهُمْ فَتُمَكِّنَ عَلِيًّا مِنْ عَقِيلٍ فَيَضْرِبَ عُنُقَهُ وَتُمَكِّنِّي مِنْ فُلَانٍ نَسِيبًا لِعُمَرَ فَأَضْرِبَ عُنُقَهُ فَإِنَّ هَؤُلَاءِ أَئِمَّةُ الْكُفْرِ وَصَنَادِيدُهَا فَهَوِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ أَبُو بَكْرٍ وَلَمْ يَهْوَ مَا قُلْتُ فَلَمَّا كَانَ مِنْ الْغَدِ جِئْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ قَاعِدَيْنِ يَبْكِيَانِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي مِنْ أَيِّ شَيْءٍ تَبْكِي أَنْتَ وَصَاحِبُكَ فَإِنْ وَجَدْتُ بُكَاءً بَكَيْتُ وَإِنْ لَمْ أَجِدْ بُكَاءً تَبَاكَيْتُ لِبُكَائِكُمَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْكِي لِلَّذِي عَرَضَ عَلَيَّ أَصْحَابُكَ مِنْ أَخْذِهِمْ الْفِدَاءَ لَقَدْ عُرِضَ عَلَيَّ عَذَابُهُمْ أَدْنَى مِنْ هَذِهِ الشَّجَرَةِ شَجَرَةٍ قَرِيبَةٍ مِنْ نَبِيِّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ
{ مَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَكُونَ لَهُ أَسْرَى حَتَّى يُثْخِنَ فِي الْأَرْضِ إِلَى قَوْلِهِ فَكُلُوا مِمَّا غَنِمْتُمْ حَلَالًا طَيِّبًا }
فَأَحَلَّ اللَّهُ الْغَنِيمَةَ لَهُمْ رواه مسلم

وعن احمد : اللَّهُمَّ إِنَّكَ إِنْ تُهْلِكْ هَذِهِ الْعِصَابَةَ مِنْ أَهْلِ الْإِسْلَامِ فَلَا تُعْبَدْ فِي الْأَرْضِ أَبَدً 203இந்தக் கூட்டம் அழிந்தால் மதீனாவின் விவசாயம் அழிந்து விடும். வியாபாரம் வீழ்ந்து விடும். நிர்வாகம் சீர்குலையும். அதிகாரம் பறிபோகும் என்றெல்லாம் கூறவில்லை.
மாறாக ‘இவர்கள் அழிந்தால் நீ வணங்கப்பட மாட்டாய்’ என்றே பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ் துஆவை ஏற்றான். முஸ்லிம்களின் மூலம் இறை மார்க்கம் இப்பூமியில் நிலை பெற  வேண்டும் என்பதற்காக. ஆம். இஸ்லாம் நிலைநாட்டபடவே இந்த உம்மத்தை அல்லாஹ் அன்று அழிவில் இருந்து காப்பாற்றினான்.
பத்ரில் நபி கேட்ட இந்த துஆவை சஹாபிகள் நன்கு அறிந்திருந்தனர். அப்போரில் முஸ்லிம்கள் பூண்டோடு அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டதன் காரணம் அவர்களுக்கு தெரிந்திருந்தது.
ஆதலால் தான் நபி (ஸல்) அவர்களின் மரணத்துக்கு பிறகும் மக்களிடம் இம்மார்க்கத்தை நிலைநாட்டிட  பாடுபட்டார்கள்.
சஹாபாக்கள் ஏன் போர் நடத்தினார்கள்?
காதிஸிய்யா யுத்தத்தின் போது போருக்கு முன்னதாக பாரசீகத் தளபதி ருஸ்துமின் அழைப்பின் பேரில் இரண்டாவது தூதராக ரிப்இ இப்னு ஆமிர் (ரழி) ருஸ்துமின் அரண்மனைக்கு சென்றார்கள்.
ثم بعث إليه سعد رسولا آخر بطلبه وهو ربعي بن عامر، فدخل عليه وقد زينوا مجلسه بالنمارق المذهبة والزرابي الحرير، وأظهر اليواقيت واللآلئ الثمينة، والزينة العظيمة، وعليه تاجه وغير ذلك من الامتعة الثمينة، وقد جلس على سرير من ذهب.
ودخل ربعي بثياب صفيقة وسيف وترس وفرس قصيرة، ولم يزل راكبها حتى داس بها على طرف البساط، ثم نزل وربطها ببعض تلك الوسائد، وأقبل وعليه سلاحه ودرعه وبيضته على رأسه.
فقالوا له: ضع سلاحك.
فقال: إني لم آتكم، وإنما جئتكم حين دعوتموني فإن تركتموني هكذا وإلا رجعت.
فقال رستم: إئذنوا له، فأقبل يتوكأ على رمحه فوق النمارق فخرق عامتها، فقالوا له: ما جاء بكم ؟ فقال الله ابتعثنا لنخرج من شاء من عبادة العباد إلى عبادة الله، ومن ضيق الدنيا إلىسعتها، ومن جور الاديان إلى عدل الاسلام، فأرسلنا بدينه إلى خلقه لندعوهم إليه، فمن قبل ذلك قبلنا منه ورجعنا عنه، ومن أبى قاتلناه أبدا حتى نفضي إلى موعود الله.
قالوا: وما موعود الله ؟ قال: الجنة لمن مات على قتال من أبى، والظفر لمن بقي.
فقال رستم: قد سمعت مقالتكم فهل لكم أن تؤخروا هذا الامر حتى ننظر فيه وتنظروا ؟ قال نعم ! كم أحب إليكم ؟ يوما أو يومين ؟ قال: لا، بل حتى نكاتب أهل رأينا ورؤساء قومنا.
فقال: ما سن لنا رسول الله صلى الله عليه وسلم أن نؤخر الاعداء عند اللقاء أكثر من ثلاث، فانظر في أمرك وأمرهم واختر واحدة من ثلاث بعد الاجل، فقال: أسيدهم أنت ؟ قال ! لا: ولكن المسلمون كالجسد الواحد يجير أدناهم على أعلاهم.( البداية والنهاية)
முஸ்லிம்கள் மறுமைக்காக படைக்கப்பட்டவர்கள்
ஹலாலான சம்பாத்தியத்தை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் அனுமதித்துள்ளான். அதில் அவன் நெருக்கடி தரவில்லை.
قال الله تعالي: قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ  قُلْ هِيَ لِلَّذِينَ آَمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ 7:32
وقال ايضا عز وجل: فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ 52:10
என்றாலும் அல்லாஹ் வியாபாரம், தொழில் செய்தல் ஆகியவற்றுக்காக இந்த உம்மத்தை அனுப்பவில்லை. இந்த உம்மத்தின் இலட்சியமாகவும் அதனை அல்லாஹ் ஆக்கவில்லை.
قال رسول الله صلي الله عليه وسلم: ، فإنكم خلقتم للآخرة والدنيا خلقت لكم ،رواه البيهقي في شعب الايمان
மார்க்கத்தை விட்டு பணத்தை தடுத்து வைப்பது
மதீனாவாசிகளில் சிலர் பேசிக் கொண்டனர். இஸ்லாம் வெற்றி பெற்று விட்டது. இனி நாம் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைக் கண்டித்தே பின்வரும் வசனம் இறக்கியருளப்பட்டது.
2151 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ وَابْنِ لَهِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ قَالَ
غَزَوْنَا مِنْ الْمَدِينَةِ نُرِيدُ الْقُسْطَنْطِينِيَّةَ وَعَلَى الْجَمَاعَةِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ الْوَلِيدِ وَالرُّومُ مُلْصِقُو ظُهُورِهِمْ بِحَائِطِ الْمَدِينَةِ فَحَمَلَ رَجُلٌ عَلَى الْعَدُوِّ فَقَالَ النَّاسُ مَهْ مَهْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يُلْقِي بِيَدَيْهِ إِلَى التَّهْلُكَةِ فَقَالَ أَبُو أَيُّوبَ إِنَّمَا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا مَعْشَرَ الْأَنْصَارِ لَمَّا نَصَرَ اللَّهُ نَبِيَّهُ وَأَظْهَرَ الْإِسْلَامَ قُلْنَا هَلُمَّ نُقِيمُ فِي أَمْوَالِنَا وَنُصْلِحُهَا فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى
{ وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ }
فَالْإِلْقَاءُ بِالْأَيْدِي إِلَى التَّهْلُكَةِ أَنْ نُقِيمَ فِي أَمْوَالِنَا وَنُصْلِحَهَا وَنَدَعَ الْجِهَادَ
قَالَ أَبُو عِمْرَانَ فَلَمْ يَزَلْ أَبُو أَيُّوبَ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى دُفِنَ بِالْقُسْطَنْطِينِيَّةِ رواه ابو داود
இஸ்லாமே இந்த உம்மத்தின் ஆத்மா. அதுவே இந்த உம்மத்தின் இலட்சியம்.

Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.