தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்
இன்றைய நாளில் பெருநாள் தொழுகைக்கு பிறகு குர்பானி அமலை நாம் இப்போது நிறைவேற்ற இருக்கிறோம்..
அறுத்துப் பலியிடும் வழக்கம் உலகில் முஸ்லிமல்லாத ஏனைய சமுதாயத்தவர்களிடமும் இருக்கவே செய்கின்றது. என்றாலும் இஸ்லாத்தின் குர்பானிக்கும் மற்ற மதத்தவர்களின் பலியிடும் சடங்குகளுக்கும் வித்தியாசங்கள் நிறையவே உண்டு.
இஸ்லாமிய குர்பானியின் தனித்துவங்கள்
1.இறைச்சியோ இரத்தமோ இறைவனுக்கு சாத்தப்படாது.
சில மதங்களில் அறுத்தப் பலியிடும் பிராணியின் இரத்தத்தை கடவுளின் பெயரால் பூசாரிகள் குடிப்பதுண்டு. இஸ்லாத்தை பொருத்தவரை குர்பானி அல்லாஹ்வின் கட்டளையின் படி அவனது பெயரைக் கூறி அறுக்கப்பட்டாலும் அதன் இறைச்சி, இரத்தம் நேரடியாக அல்லாஹ்வை அடையாது. மாறாக அதன் இரத்தம் கழிவுப் பொருள்; இறைச்சி ஏழைகளுக்குரியது.இறைவனுக்கு என்று எந்த பங்கும் யாராலும் எடுத்து வைக்கப்படுவதில்லை.
قال الله تعالي: لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا 22:37
2.புகழுக்குரியது
சகோதர மதத்தைச் சேர்ந்த நண்பா் ஒருவர் கேட்டார்: மக்காவுக்கு நீங்கள் மேற்கொள்ளும் ஹஜ் பயணம் மனித வாழ்வில் பாவங்களை போக்கும் ஒரு முக்கிய வழிபாட்டு பயணம். மக்கா நகரமும் ஒரு வழிபாட்டு இடம். அங்கே வைத்து குர்பானி கொடுப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ஏனெனில் புனித இடத்தில், ஒரு வணக்க வழிபாட்டில் ஒரு பிராணியை கொல்வது எப்படி நியாயம்? என்றார்.
நான் சொன்னேன். முதலில் இஸ்லாமிய குர்பானி பாவமல்ல.. அத்துடன் மனதை கொடூரமாக்கிடும் செயலும் அல்ல.. மாறாக அதுவும் மனதில் இறைவனின் அச்சத்தை தரக்கூடியது தான்.
ஹஜ் எவ்வாறு இறையச்சத்தை தரவல்லதோ அதே போன்று குர்பானியும் இறையச்சத்தை தரும் ஓர் அமலாகவே இஸ்லாத்தில் பார்க்கப்படுகின்றது. ஆதலால் தான் அறுக்கும் பிராணியின் முன்பு கத்தியை தீட்டக்கூடாது, தலையை அறுக்கத் தான் வேண்டும். இரண்டு துண்டாக தலையை வெட்டி விடக் கூடாது. அறுத்த பின்பு துடிக்க விட வேண்டும். துடித்து ஓய்ந்த பிறகே தோலை உரிக்க வேண்டும் என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனையிடுகிறது.ஆதலால் தான் குர்பானி கொடுப்பதால் மனது கடினமடைவதில்லை. மாறாக இறையச்சமும், இளகிய தன்மையும் அதில் அதிகரிக்கவே செய்யும், அதையே குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

قال الله تعالي: لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ 22:37
ஆக இஸ்லாமிய குர்பானியை பொருத்தவரை அறுப்பதற்கு முன்பு அல்லாஹ்வை புகழ்வது, அறுக்கும் பொழுது கனிவுடன் அறுப்பது, அறுத்த பின்பு ஏழைகளுக்கு பங்கிடுவது என எல்லா வகையிலும் அது புகழுக்குரியதே என்றேன்.
அறுக்கும் பிராணியை நிற்க வைத்து கொடூர முகத்துடன் ஏதோ எதிரியை கொல்வது போன்று ஒரே வெட்டாக பாய்ந்து வெட்டுவது போன்ற பழக்கம் இஸ்லாத்தில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
3. தயாளத்தை மையமாக கொண்டது.
இஸ்லாமிய குர்பானி தயாளத்தை மையமாக கொண்டதாகும்.
7675 - أخبرنا أبو العباس محمد بن أحمد المحبوبي ، ثنا سعيد بن مسعود ، ثنا يزيد بن هارون ، أنبأ سعيد بن إياس الجريري ، عن أبي نضرة ، عن أبي سعيد الخدري ، رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « يا أهل المدينة ، لا تأكلوا لحم الأضاحي فوق ثلاثة أيام » فشكوا ذلك إلى النبي صلى الله عليه وسلم أن لهم عيالا وحشما وخدما ، فقال : « كلوا وأطعموا واحبسوا » « هذا حديث صحيح الإسناد ولم يخرجاه » رواه الحاكم
4739 - قُرِئَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ وَأَنَا أَسْمَعُ حَدَّثَكُمْ أَبُو كَامِلٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا فَرْقَدٌ السَّبَخِىُّ حَدَّثَنِى جَابِرُ بْنُ يَزِيدَ عَنْ مَسْرُوقِ بْنِ الأَجْدَعِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ بَيْنَمَا نَحْنُ نُزُولٌ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِالأَبْطَحِ فَذَكَرَ الْحَدِيثَ . وَقَالَ فِيهِ « أَلاَ إِنِّى كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا تُذَكِّرْكُمْ آخِرَتَكُمْ وَنَهَيْتُكُمْ عَنْ لَحْمِ الأَضَاحِىِّ أَنْ تَأْكُلُوهَا فَوْقَ ثَلاَثٍ فَكُلُوا وَادَّخِرُوا وَنَهَيْتُكُمْ عَنِ الأَوْعِيَةِ وَإِنَّ الأَوْعِيَةَ لاَ تُحَرِّمُ شَيْئًا فَاشْرَبُوا وَلاَ تَسْكَرُوا ».رواه الدارقطني
ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) அவர்கள் உள்ஹிய்யா இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்க வேண்டாம் என்றார்கள், பின்பு மூன்று நாட்களுக்கு மேல் சேமிக்க அனுமதி தந்தார்கள்.
தற்போது மழைக் காலமாகவும், மின்சாரம் இல்லாமலும் இருப்பதால் அனைத்தையும் அப்பொழுதே தர்மம் செய்வது சிறந்தது.


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.