மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் குறித்து இந்த வாரம் சவூதி அரசு ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தின் இரண்டாவது பெரிய இறையில்லமான மஸ்ஜிதுன் நபவீ சவூதி அரேபியாவில் இருந்தாலும் உலகம் முழுவதும் வாழும் எல்லா முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும்.
ஆண்டு தோறும் ஒரு கோடி, இருபது இலட்சம் மக்கள் வந்து செல்லும் புனித தலமாக விளங்கும் இப்பள்ளிவாசலில் தற்போது ஒரே சமயத்தில் ஏழு இலட்சம் மக்கள் தொழ இட வசதி உள்ளது.
வரும் 2015 ம் ஆண்டுக்குள் 18 இலட்சமாக உயர்த்த சவூதி அரசு திட்டமிட்டு விரிவாக்கப் பணிகளை துவக்கியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் மஸ்ஜிதுன் நபவியின் வரலாற்றையும், அதன் விரிவாக்கம் உலகிற்கு உணர்த்தும் உண்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
மஸ்ஜிதுன் நபவீ வரலாறு
நபியின் வருகைக்கு முன்பு அவ்விடத்தில் தொழுகை நடந்தது.
ان مصعب ابن عمير كان يصلي بطائفة من المهاجرين والانصار في موضع المسجد النبوي الشريف قبل مقدم رسول الله المدينة ولما خرج الي النبي ليهاجر معه صلي بهم اسعد ابن زرارة فلما قدم رسول الله المدينة صلي في ذلك الموضع وبناه فهو مسجده اليوم
(اسد الغابة . طبقات ابن سعد)
நபி (ஸல்) கட்டியது குறித்த தகவல்
3639 - حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ح و حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ سَمِعْتُ أَبِي يُحَدِّثُ حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ نَزَلَ فِي عُلْوِ الْمَدِينَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ قَالَ فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً ثُمَّ أَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ قَالَ فَجَاءُوا مُتَقَلِّدِي سُيُوفِهِمْ قَالَ وَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رِدْفَهُ وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ قَالَ فَكَانَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ وَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَالَ ثُمَّ إِنَّهُ أَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ فَجَاءُوا فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي حَائِطَكُمْ هَذَا فَقَالُوا لَا وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ قَالَ فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ كَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ وَكَانَتْ فِيهِ خِرَبٌ وَكَانَ فِيهِ نَخْلٌ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ وَبِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ قَالَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ قَالَ وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً قَالَ قَالَ جَعَلُوا يَنْقُلُونَ ذَاكَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ يَقُولُونَ اللَّهُمَّ إِنَّهُ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ  رواه البخاري
பெரிய பில்டிங் ஆக கட்டச் சொன்ன பொழுது மறுத்த நபி (ஸல்)
2107 - حدثنا محمد بن عبد الله الحضرمي ، ثنا كامل بن طلحة الجحدري ، ثنا حماد بن سلمة ح وحدثنا أحمد بن النضر العسكري ، ثنا أبو خيثمة مصعب بن سعيد ، ثنا عيسى بن يونس ، كلاهما عن أبي سنان ، عن يعلى بن شداد بن أوس ، عن عبادة بن الصامت ، قال : قالت الأنصار : إلى متى نصلي يا رسول الله إلى هذا الجريد (1) ؟ فجمعوا له دنانير ، فأتوا النبي صلى الله عليه وسلم ، فقالوا : تصلح هذا المسجد وتزينه ، فقال : « ليس بي رغبة عن أخي موسى ، عريش كعريش موسى » ( مسند الشاميين للطبراني)
பள்ளி வாசலின் தோற்றம்
ஹிஜ்ரி முதலாம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் கி.பி. 622 ம் ஆண்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலை கட்டினார்கள். நீளம் 70 முழம். அகலம் 60. உயரம் 5 முழம். மொத்தம் தற்கால கணக்குப்படி 1050 சதுர அடி.
1.நபி (ஸல்) செய்த விரிவாக்கம்
ஹி. 7 ம் ஆண்டு (கி.பி. 628) கைபர் போரில் இருந்து திரும்பி வந்த பிறகு நபி (ஸல்)  40 முழம் அகலத்திலும், 30 முழம் நீளத்திலும் அதிகப்படுத்தினார்கள். அச்சமயத்தில் தான் உஸ்மான் (ரழி) அவர்கள் பள்ளிவாசல் பக்கத்திலுள்ள நிலத்தை வாங்கி நபியிடம் தந்தார்கள்.
3636 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ وَغَيْرُ وَاحِدٍ الْمَعْنَى وَاحِدٌ قَالُوا حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ عَنْ يَحْيَى بْنِ أَبِي الْحَجَّاجِ الْمَنْقَرِيِّ عَنْ أَبِي مَسْعُودٍ الْجُرَيْرِيِّ عَنْ ثُمَامَةَ بْنِ حَزْنٍ الْقُشَيْرِيِّ قَالَ
شَهِدْتُ الدَّارَ حِينَ أَشْرَفَ عَلَيْهِمْ عُثْمَانُ فَقَالَ ائْتُونِي بِصَاحِبَيْكُمْ اللَّذَيْنِ أَلَّبَاكُمْ عَلَيَّ قَالَ فَجِيءَ بِهِمَا فَكَأَنَّهُمَا جَمَلَانِ أَوْ كَأَنَّهُمَا حِمَارَانِ قَالَ فَأَشْرَفَ عَلَيْهِمْ عُثْمَانُ فَقَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ وَلَيْسَ بِهَا مَاءٌ يُسْتَعْذَبُ غَيْرَ بِئْرِ رُومَةَ فَقَالَ مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ فَيَجْعَلَ دَلْوَهُ مَعَ دِلَاءِ الْمُسْلِمِينَ بِخَيْرٍ لَهُ مِنْهَا فِي الْجَنَّةِ فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَأَنْتُمْ الْيَوْمَ تَمْنَعُونِي أَنْ أَشْرَبَ حَتَّى أَشْرَبَ مِنْ مَاءِ الْبَحْرِ قَالُوا اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ الْمَسْجِدَ ضَاقَ بِأَهْلِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَشْتَرِي بُقْعَةَ آلِ فُلَانٍ فَيَزِيدَهَا فِي الْمَسْجِدِ بِخَيْرٍ مِنْهَا فِي الْجَنَّةِ فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَأَنْتُمْ الْيَوْمَ تَمْنَعُونِي أَنْ أُصَلِّيَ فِيهَا رَكْعَتَيْنِ قَالُوا اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنِّي جَهَّزْتُ جَيْشَ الْعُسْرَةِ مِنْ مَالِي قَالُوا اللَّهُمَّ نَعَمْ ثُمَّ قَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عَلَى ثَبِيرِ مَكَّةَ وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا فَتَحَرَّكَ الْجَبَلُ حَتَّى تَسَاقَطَتْ حِجَارَتُهُ بِالْحَضِيضِ قَالَ فَرَكَضَهُ بِرِجْلِهِ وَقَالَ اسْكُنْ ثَبِيرُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ قَالُوا اللَّهُمَّ نَعَمْ قَالَ اللَّهُ أَكْبَرُ شَهِدُوا لِي وَرَبِّ الْكَعْبَةِ أَنِّي شَهِيدٌ ثَلَاثًا
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ عُثْمَانَ رواه الترمذي
2.உமர் (ரழி) ஆட்சியில் விரிவாக்கம்
427 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ قَالَ حَدَّثَنَا نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ
أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا بِاللَّبِنِ وَسَقْفُهُ الْجَرِيدُ وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالْجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقَفَهُ بِالسَّاجِ رواه البخاري
3.உஸ்மான் (ரழி) ஆட்சிக் காலத்தில் விரிவாக்கம்
381 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ وَمُجَاهِدُ بْنُ مُوسَى وَهُوَ أَتَمُّ قَالَا حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ حَدَّثَنَا نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ
أَنَّ الْمَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا بِاللَّبِنِ وَالْجَرِيدِ قَالَ مُجَاهِدٌ وَعُمُدُهُ مِنْ خَشَبِ النَّخْلِ فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا وَزَادَ فِيهِ عُمَرُ وَبَنَاهُ عَلَى بِنَائِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالْجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ قَالَ مُجَاهِدٌ عُمُدَهُ خَشَبًا وَغَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً وَبَنَى جِدَارَهُ بِالْحِجَارَةِ الْمَنْقُوشَةِ وَالْقَصَّةِ وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقْفَهُ بِالسَّاجِ قَالَ مُجَاهِدٌ وَسَقَّفَهُ السَّاجَ
قَالَ أَبُو دَاوُد الْقَصَّةُ الْجِصُّ رواه ابوداود
4.வலீத் செய்த விரிவாக்கம்
வலீத் இப்னு அப்துல் மலிக் இப்னு மர்வான் ஆட்சிக் காலத்தில் அவரது கட்டளைப்படி மதீனா கவர்னராக இருந்த உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் நபியின் மனைவிமார்களின் வீடுகளை அவர்கள் மரணித்து விட்டபடியால் அவர்களின் வாரிசுதாரர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசலை விரிவுபடுத்தினார்கள்.
5.அப்பாஸிய மன்னர் மஹ்தி
அப்பாஸிய மன்னர் மஹ்தி ஹி. 161 -165 ல் இடது பக்கம் விரிவுபடுத்தினார். அப்பாஸிய மன்னர்கள் அப்பள்ளிவாசலுக்கு மிகுந்த முக்கியவத்துவம் தந்தனர். இவ்விரிவாக்கம் ஹி. 654 ல் மஸ்ஜிதுன் நபவீயில் தீ விபத்து நடக்கும் வரை நீடித்தது.
ஹி. 654 ல் விளக்கு விபத்தினால் மஸ்ஜிதுன் நபவீயில் தீ விபத்து ஏற்பட்டது.
ஹி. 655 ல் கட்டிட பணிகள் தொடங்கினாலும் மங்கோலியப் படையெடுப்பினால் பணிகள் தடைப்பட்டன.
6.எகிப்திய மன்னர் பைபரஸ்
அப்பாஸிய கலீபாக்களின் வீழ்ச்சிக்கு பின்பு எகிப்திய மன்னர் பைபரஸ் பள்ளிவாசல் வேலைகளை நிறைவு செய்தார்.
7.சுல்தான் காயிதாபி
ஹி.886 கி.பி.1481 ல் இடி தாக்கியதால் மஸ்ஜிதுன் நபவீ தீ பிடித்தது.
மீண்டும் 888 ஹி. ல் பள்ளிவாசல் சுல்தான் காயிதாபி அவர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.
8.உஸ்மானிய கிலாஃபத்
பின்பு உஸ்மானிய கிலாஃபத்தின் ஆட்சிக் காலத்தில் ஹி. 1265-1277 வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் பள்ளிவாசல் விரிவாக்கப் பணிகள் நடந்தன.
இப்போதைய குர்ஆன் வசனங்கள், அல்லாஹ்வுடைய திருநாமங்கள், நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் அனைத்தையும் சுவரில் பதித்தவர்கள் அவர்களே.
9.சவூதி மன்னர் அப்துல் அஜீஸ்
அதற்கு பின்பு இப்போதைய சவூதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கி.பி.1949 முதல் 1955 வரை மன்னர் அப்துல் அஜீஸின் ஆட்சிக் காலத்தில் விரிவாக்கப் பணிகள் நடந்தன.
10. மன்னர் ஃபைஸல்
சவூதி மன்னர் ஃபைஸல் இப்னு அப்துல் அஜீஸ் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 1973 ல் விரிவாக்கப் பணிகள் நடந்தன.
11.சவூதி மன்னர் ஃபஹ்து இப்னு அப்துல் அஜீஸ்
 ஃபஹ்து இப்னு அப்துல் அஜீஸ் ஆட்சிக் காலத்தில் 1994 ஆண்டு வரையில் விரிவாக்கப் பணிகள் நடந்தன.
மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கப் பணிகள் உணர்த்தும் உண்மைகள்
1.இஸ்லாம் வளர்ச்சியடையும் மார்க்கம்
உலகிலுள்ள கொள்கைகள் ஓரளவு உயர்வை அடைந்த பிறகு வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இது இயல்பு. ஆனால் இஸ்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும் மார்க்கம்.
3663 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْحَذَّاءُ حَدَّثَنَا شَبَابُ بْنُ خَيَّاطٍ حَدَّثَنَا حَشْرَجُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَشْرَجٍ حَدَّثَنِى أَبِى عَنْ جَدِّى عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو الْمُزَنِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « الإِسْلاَمُ يَعْلُو وَلاَ يُعْلَى ».رواه الدارقطني
ஏனெனில் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறியாகும். வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் அது வழிகாட்டும் வாழ்க்கை நெறி. வாழ்க்கையில் ஒரு பகுதிக்கு மட்டும் அல்லது வாரத்தில் ஒரு நாள் மட்டும் பின்பற்றப்படும் கொள்கையல்ல..
அமெரிக்க பத்திரிக்கையாளர் ஜான் கென்டர்( John Gunther  1901 – May 29, 1970) தமது  Inside Europe எனும் நூலில் கூறுவார்.
”ஆங்கிலேயர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் வங்கிகளை வணங்குகிறார்கள். வாரத்தில் ஒரு நாள் சர்ச்சுக்கு வருகிறார்கள்
2.சூழ்ச்சிகள், சதிகளை முறியடித்து வளரும் மார்க்கம்.
மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வருவதையே உணர்த்துகிறது. அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ 9:32
அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட பொழுது பழியை முஸ்லிம்களின் மீது போடுவதற்காக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விட்டுச் சென்றதாக திருக்குர்ஆன் ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதற்கு சாட்சியாக திருக்குர்ஆனை காட்டப்பட்டது. முற்றிலும் இது அமெரிக்க அரசின் போலி ஏற்பாடு. என்றாலும் அந்த சூழ்ச்சியிலும் அல்லாஹ் நன்மையை ஏற்படுத்தினான். திருக்குர்ஆன் அமெரிக்காவில் பிரபலபடைந்தது. அமெரிக்கர்கள் அதை படிக்க ஆரம்பித்தார்கள். இஸ்லாம் மென்மேலும் வளர்ந்தது.
அவ்வாறே ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ எனும் திரைப்படத்தை எடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்த முயன்றான் அமெரிக்க யூதன் ஒருவன்.
நிச்சயமாக அந்நிகழ்வுக்கு பின்பு முஸ்லிம் உலகில் ஏற்பட்ட கண்டனத்தினால்  அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நபி (ஸல்) அவர்களைப் பற்றிய தேடல் அதிகரித்துள்ளது.
மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் குறித்த செய்திக் குறிப்பில் மதீனா நகர மேயர் கூறியுள்ளார்.
”இனி வரும் காலத்தில் 1,60,00,000 ஒரு கோடி அறுபது இலட்சம் மக்கள் ஒரே சமயத்தில் தொழும் அளவுக்கு மஸ்ஜிதுன் நபவியை விரிபடுத்துவோம். எங்களின் நபி (ஸல்) அவர்கள் கட்டிய பள்ளிவாசலில் இவ்வளவு எண்ணிக்கை கொண்ட மக்களை தொழச் செய்வதே ‘இன்னோஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ திரைப்படம் எடுத்தவனுக்கு நாங்கள் தரும் பதிலாகும்.”
16344 - حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ قَالَ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ قَالَ حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ رواه احمد
மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கத்தில் நமது பங்களிப்பு
மஸ்ஜிதுன் நபவீ உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் சொந்தமானதாகும். ஆதலால் தான் வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல நாட்டவர்களை அதற்கு பொறுப்பாளர்களாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
அதனை விரிவுபடுத்துவதின் நோக்கத்தில் நாமும் நமது பங்களிப்பை தர வேண்டும்.
1.நாம் அங்கு போய் தொழ ஆசைப்படுவதோடு மக்களையும் ஆர்வப்படுத்த வேண்டும்.
2.இஸ்லாத்தை இன்னும் மிக வேகமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை அதிகம் பரப்ப வேண்டும்.
قال الله تعالي: ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ 16:125
3202 - حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي كَبْشَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً       رواه البخاري
3.நமது பள்ளிவாசல்களிலும் தொழுகையாளிகளை அதிப்படுத்த முயற்சித்தல்.
4.இஸ்லாத்திற்கெதிரான சதிகள் மற்றும் சூழ்ச்சிகளுக்கு முஸ்லிம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம் பதில் தருதல்



Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.