அல்லாஹ்வின் மகத்தான அருளால் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.
அந்த மாதத்தின் முதல் பத்து நாட்களும் நன்மைகளை அள்ளித் தரும் நாட்களாகும்.
முதல் பத்து நாட்களின் சிறப்பு
ரமலானுக்கு பிறகு நாட்களில் மிகச் சிறந்த நாட்களாக கருதப்படும் இந்த பத்து நாட்களில் செய்யப்படும் அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் பிரியத்திற்குரியவை.


 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُعَنْ أَبِي صَالِحٍ وَمُجَاهِدٍ وَمُسْلِمٍ الْبَطِين
                     عَنْ سَعِيدِ بْنِ جُبَيْر عَنْ ابْنِ عَبَّاس
قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ
 فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ يَعْنِي أَيَّامَ الْعَشْرِ
 قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ
 قَالَ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ     
مِنْ ذَلِكَ بِشَيْء  رواه ابوداود

தொழுகை,நோன்பு போன்ற நல்லமல்கள் புரிய வேண்டும்   

ரமலானுக்கு அடுத்து இந்த பத்து நாட்கள் சிறந்த நாட்களாகும். 
அந்நாட்களின் இரவில் நின்று வணங்குவது லைலதுல் கத்ரு இரவில் நின்று வணங்குவதின் நன்மையைத் தரும். 
அந்நாட்களில் ஒரு நாள்  நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்ற நன்மையைத் தரும்.


689 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ الْبَصْرِيُّ حَدَّثَنَا مَسْعُودُ بْنُ وَاصِلٍ عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ رواه الترمذي


திக்ரு போன்ற நல்லமல்கள் புரிய வேண்டும்   
                   (التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ)
5189 - حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي زِيَادٍ عَنْ مُجَاهِدٍ عَنِ ابْنِ عُمَر

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَعْظَمُ عِنْدَ اللَّهِ وَلَا أَحَبُّ إِلَيْهِ مِنْ الْعَمَلِ فِيهِنَّ مِنْ هَذِهِ الْأَيَّامِ الْعَشْرِ فَأَكْثِرُوا فِيهِنَّ مِنْ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ  رواه احمد 
இந்நாட்கள் அல்லாஹ்விடம் ஏன் சிறந்தவை?
 1. ஹரம் அல்லாத மற்ற பகுதிகளிலும் அமல்கள்      நடக்க வேண்டும்.

இந்த பத்து நாட்களும் உலகெங்கிலும் இருந்து ஹஜ்ஜை நிறைவேற்ற கோடிக்கணக்கான முஸ்லிம்கள் மக்காவில் திரண்டிருக்கும் காலம்.
அந்நாட்களில் அங்கே மட்டுமல்ல...
 உலகின் எல்லா பகுதிகளிலும் அமல்கள் நடக்க வேண்டும் என்பது படைத்த ஏக இறைவனின் விருப்பம்.
2.   பன்மடங்கு நன்மைகள் ஹாஜிகள் அல்லாதோர்க்கும் கிடைக்க வேண்டும்.
தவாஃப், சயீ , அரஃபா, ஹரமில் தொழுகை போன்றவற்றின் மூலம் ஹாஜிகளுக்கு பன்மடங்கு நன்மைகள் இந்நாட்களில் கிடைக்கும். அவ்வாறே ஹாஜிகள் அல்லாதோருக்கும் அதிகப்படியான நன்மைகள் கிடைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம்.

உளுஹிய்யாவும் - படிப்பினைகளும்

மிகப் பிரியமான அமல்
இப்பத்து நாட்களில் கடைசி நாளான பெருநாள் அன்று உளுஹிய்யா கொடுப்பது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல்


1413 - حَدَّثَنَا أَبُو عَمْرٍو مُسْلِمُ بْنُ عَمْرِو بْنِ مُسْلِمٍ الْحَذَّاءُ الْمَدَنِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ أَبُو مُحَمَّدٍ عَنْ أَبِي الْمُثَنَّى عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ إِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنْ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ 
يَقَعَ مِنْ الْأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا رواه الترمذي

குர்பானி பிராணியின் ஒரு உரோமத்திற்கும் நன்மை

3118 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَلَفٍ الْعَسْقَلَانِيُّ حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا سَلَّامُ بْنُ مِسْكِينٍ حَدَّثَنَا عَائِذُ اللَّهِ عَنْ أَبِي دَاوُدَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ
قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ  رواه ابن ماجه 
ஆதலால் நன்மையை அள்ளித் தரும் இந்த அமலுக்கு பிறை 1 லிருந்து தயாராக வேண்டும். குர்பானி கொடுப்பவர்கள் உடலில் இருந்து ரோமங்களையும், நகங்களையும் பிறை 1 –ல் இருந்து குர்பானி கொடுக்கும் வரை எடுக்க வேண்டாம் என்றார்கள் நபி (ஸல்) அவர்கள்.
3654 - و حَدَّثَنَاه إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا سُفْيَانُ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أُمِّ سَلَمَةَ تَرْفَعُهُ
قَالَ إِذَا دَخَلَ الْعَشْرُ وَعِنْدَهُ أُضْحِيَّةٌ يُرِيدُ أَنْ يُضَحِّيَ فَلَا يَأْخُذَنَّ شَعْرًا وَلَا يَقْلِمَنَّ ظُفُرًا  رواه مسلم 
உளுஹிய்யா உணர்த்தும் பாடம்
உளுஹிய்யாவின் படிப்பினைகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு ஆட்டையோ அல்லது Rs 1500 or 1400 க்கு ஒரு பங்கையோ கொடுப்பதற்கும் அப்பால் இந்த உளுஹிய்யா உணர்த்தும் பாடத்தை நாம் சிந்திக்க வேண்டும்.
அறுத்துப் பலியிடும் இந்த அமல் வெறும் சடங்காக ஆகி விடாமல் தியாகத்தையும் , அர்ப்பணிப்பு உணர்வையும் நமக்கு ஊட்ட வேண்டும். அப்பொழுது தான் அதன் உண்மை நோக்கம் நிறைவேறும்.
இறைத் தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய கட்டளைக்காக தமது மகனை அறுத்துப் பலியிட முன் வந்தார்கள்.
அதனை நினைவாகவே இஸ்லாத்தில் இந்த அமல் நடைமுறையில் உள்ளது.
ஆதலால் இது அவர்களின் தியாகத்தை நமக்கு தர வேண்டும். அதுவே அதன் உண்மை நோக்கம்.
உளுஹிய்யா அதனை தரவில்லையெனில்,அது வெறும் சடங்காக ஆகிவிடும்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் அறுத்துப் பலியிடும் சடங்கை நிறைவேற்றவே செய்கிறார்கள்.
எனினும் தியாக எண்ணத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் அவை தரவில்லை.
ஆதலால் தான் மூஸா நபியிடம் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.
قال الله عز وجل : قَالُوا يَا مُوسَى إِنَّا لَنْ نَدْخُلَهَا أَبَدًا مَا دَامُوا فِيهَا فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ 5:24

அர்ப்பணிப்பு உணர்வு அவர்களிடம் இல்லாததால் அறுத்துப் பலியிடும் சடங்கு அவர்களிடம் இன்றும் வரை இருந்தும் அல்லாஹ் அவர்களை இறை கோபத்தை பெற்றவர்கள்,வழிகேடர்கள் என்று கூறி விட்டான்
قال الله عز وجل : غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالين- 1:7
நபி இபுராஹீமை அவர்கள் சொந்தம் கொண்டாடியும் அவர் அவர்களைச் சார்ந்தவர் அல்ல..என்று கூறினான். 
قال الله عز وجل: مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ  - 3:67

மறுமை மற்றும் மார்க்கத்தின் விஷயத்தில் நாம் இலாப –நட்ட கணக்கு பார்க்கக் கூடாது. 
சஹாபிகளிடம் அல்லாஹ் எதிர்பார்த்த அர்ப்பணிப்பு உணர்வு அப்படியே இருந்தது.
தபூக் யுத்தத்தின் போது அறுவடை காலத்தில் அப்படியே போட்டு விட்டு அல்லாஹ்வுடைய பாதையில் புறப்பட்டுச் சென்றார்கள்.
அதை போன்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.