அல்லாஹ்வின் மகத்தான அருளால் புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதத்தில் நாம் இருந்து வருகிறோம். இம்மாதத்தின் முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரியவை. அவற்றில் ஒன்பதாவது நாளான அரஃபா நாள் இன்னும் கூடுதல் சிறப்புடையது. ஒரு வாரத்தின் ஏழு நாட்களில் சிறந்த நாளாக ஜும்ஆவுடைய நாள் இருப்பதைப் போன்று ஒரு வருடத்தின்  நாட்களில் சிறந்த நாள் அரஃபா நாளாகும்.

இந்த வாரம் வரும் வியாழக்கிழமையன்று அரபுலகிலும்,  வெள்ளிக்கிழமையன்று நமது தமிழகத்திலும் அரஃபா நாள் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் அந்நாளின்  தனித்துவங் களையும், தனிச் சிறப்புகளையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அரஃபா நாளின் தனிச்சிறப்புகள்
1.திருக்குர்ஆனில் அல்லாஹ் சத்தியமிட்ட நாள்
படைத்த ஏக இறைவனான அல்லாஹ் திருக்குர்ஆனில் மனிதர்களுக்கு அத்தியாவசியமான தமது படைப்புகளில் பிரமாண்டமானவற்றின் மீது சத்தியமிடுவான்.
قال الله تعالي: وَشَاهِدٍ وَمَشْهُودٍ 85:3
وقال ايضا : وَالشَّفْعِ وَالْوَتْرِ   89:3
13987 - حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ حَدَّثَنَا عَيَّاشُ بْنُ عُقْبَةَ حَدَّثَنِي خَيْرُ بْنُ نُعَيْمٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْعَشْرَ عَشْرُ الْأَضْحَى وَالْوَتْرَ يَوْمُ عَرَفَةَ وَالشَّفْعَ يَوْمُ النَّحْرِ  رواه احمد
7631 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ زَيْدٍ وَيُونُسَ بْنَ عُبَيْدٍ يُحَدِّثَانَ عَنْ عَمَّارٍ مَوْلَى بَنِي هَاشِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَمَّا عَلِيٌّ فَرَفَعَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَّا يُونُسُ فَلَمْ يَعْدُ أَبَا هُرَيْرَةَ أَنَّهُ قَالَ فِي هَذِهِ الْآيَةِ
{ وَشَاهِدٍ وَمَشْهُودٍ }
قَالَ يَعْنِي الشَّاهِدَ يَوْمَ عَرَفَةَ وَالْمَوْعُودَ يَوْمَ الْقِيَامَةَ     رواه احمد
2.நோன்பு மற்றும் துஆவின் மூலம் அல்லாஹ்வின் மன்னிப்பையும், அருளையும் பெற வேண்டிய நாள்
அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்தைய,பிந்தைய வருடங்களின் பாவங்களை அழித்து விடும்.
ஹாஜிகள் அல்லாதோர்க்கு நோன்பு சுன்னத்
قال رسول الله صلي الله عليه وسلم : صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ رواه مسلم 1976
وَسُئِلَ رسول الله صلي الله عليه وسلم : وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ رواه مسلم 1977
ஹாஜிகள் அதிகமதிகம் துஆ செய்வது சுன்னத்
3509 - حَدَّثَنَا أَبُو عَمْرٍو مُسْلِمُ بْنُ عَمْرٍو الْحَذَّاءُ الْمَدِينِيُّ قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ عَنْ حَمَّادِ بْنِ أَبِي حُمَيْدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رواه الترمذي
அரஃபா நாளில் துஆ செய்வது முக்கிய அமலாக இருப்பதால் தான் ஹாஜிகளுக்கு அரஃபா நாளில் நோன்பு சுன்னத்தாக இல்லை. இறுதி ஹஜ்ஜில் அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கவில்லை.
681 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْطَرَ بِعَرَفَةَ وَأَرْسَلَتْ إِلَيْهِ أُمُّ الْفَضْلِ بِلَبَنٍ فَشَرِبَ
وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَابْنِ عُمَرَ وَأُمِّ الْفَضْلِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ حَجَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَصُمْهُ يَعْنِي يَوْمَ عَرَفَةَ وَمَعَ أَبِي بَكْرٍ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُمَرَ فَلَمْ يَصُمْهُ وَمَعَ عُثْمَانَ فَلَمْ يَصُمْهُ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ الْإِفْطَارَ بِعَرَفَةَ لِيَتَقَوَّى بِهِ الرَّجُلُ عَلَى الدُّعَاءِ وَقَدْ صَامَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ يَوْمَ عَرَفَةَ بِعَرَفَةَ رواه الترمذي
அரஃபாவில் நபி(ஸல்)அதிகம் கேட்ட துஆ
3442 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ الْمُؤَدِّبُ حَدَّثَنَا عَلِيُّ بْنُ ثَابِتٍ حَدَّثَنِي قَيْسُ بْنُ الرَّبِيعِ وَكَانَ مِنْ بَنِي أَسَدٍ عَنْ الْأَغَرِّ بْنِ الصَّبَّاحِ عَنْ خَلِيفَةَ بْنِ حُصَيْنٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ
أَكْثَرُ مَا دَعَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشِيَّةَ عَرَفَةَ فِي الْمَوْقِفِ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَالَّذِي نَقُولُ وَخَيْرًا مِمَّا نَقُولُ اللَّهُمَّ لَكَ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي وَإِلَيْكَ مَآبِي وَلَكَ رَبِّ تُرَاثِي اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَوَسْوَسَةِ الصَّدْرِ وَشَتَاتِ الْأَمْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَجِيءُ بِهِ الرِّيحُ رواه الترمذي
3.இஸ்லாம் முழுமையடைந்த நாள்
உங்களின் மார்க்கத்தை நான் முழுமைபடுத்தி விட்டேன் எனும் வசனம் அரஃபாவில் வைத்தே அருளப்பட்டது.
43 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ سَمِعَ جَعْفَرَ بْنَ عَوْنٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ أَخْبَرَنَا قَيْسُ بْنُ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ
أَنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ قَالَ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لَاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا قَالَ أَيُّ آيَةٍ قَالَ
{ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا }
قَالَ عُمَرُ قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ رواه البخاري
4.அல்லாஹ் பெருமை பாராட்டும் நாள்
மனிதர்கள் குழப்பம் செய்வார்கள்;ஆதலால் அவர்களை படைக்க வேண்டாம் என்று அல்லாஹ்விடம் பணிவுடன் கூறிய வானவர்களிடம் தனது அடியார்களின் வணக்கங்களை சிலோகித்து அல்லாஹ் பெருமைப்படும் நாள்
2402 - حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ يُوسُفَ يَقُولُ عَنْ ابْنِ الْمُسَيَّبِ قَالَ قَالَتْ عَائِشَةُ
إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ مِنْ أَنْ يُعْتِقَ اللَّهُ فِيهِ عَبْدًا مِنْ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو ثُمَّ يُبَاهِي بِهِمْ الْمَلَائِكَةَ فَيَقُولُ مَا أَرَادَ هَؤُلَاءِ      رواه مسلم
3926 - أخبرنا الحسن بن سفيان ، حدثنا محمد بن عمرو بن جبلة ، حدثنا محمد بن مروان العقيلي ، حدثنا هشام هو الدستوائي ، عن أبي الزبير ، عن جابر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « ما من أيام أفضل عند الله من أيام عشر ذي الحجة » ، قال : فقال رجل : يا رسول الله ، هن أفضل أم عدتهن جهادا في سبيل الله ، قال : « هن أفضل من عدتهن جهادا في سبيل الله ، وما من يوم أفضل عند الله من يوم عرفة ينزل الله إلى السماء الدنيا فيباهي بأهل الأرض أهل السماء ، فيقول : انظروا إلى عبادي شعثا (1) غبرا ضاحين جاءوا من كل فج (2) عميق يرجون رحمتي ، ولم يروا عذابي ، فلم ير يوم أكثر عتقا من النار من يوم عرفة » رواه ابن حبان في صحيحه
5.ஷைத்தான் சிறுமைப்படும் நாள்
840 - و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي عَبْلَةَ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ كَرِيزٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا رُئِيَ الشَّيْطَانُ يَوْمًا هُوَ فِيهِ أَصْغَرُ وَلَا أَدْحَرُ وَلَا أَحْقَرُ وَلَا أَغْيَظُ مِنْهُ فِي يَوْمِ عَرَفَةَ وَمَا ذَاكَ إِلَّا لِمَا رَأَى مِنْ تَنَزُّلِ الرَّحْمَةِ وَتَجَاوُزِ اللَّهِ عَنْ الذُّنُوبِ الْعِظَامِ إِلَّا مَا أُرِيَ يَوْمَ بَدْرٍ قِيلَ وَمَا رَأَى يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُ قَدْ رَأَى جِبْرِيلَ يَزَعُ الْمَلَائِكَةَ رواه الامام مالك في المؤطا
இறையருள், மன்னிப்பு, நரக விடுதலை,அதிகப்படியான நல்லமல்கள் போன்றவற்றின் மூலம் இந்த அரஃபா நாள் அசல் ஷைத்தான்களை சிறுமையடையச் செய்வது போன்று ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’எனும் அவதூறு திரைப்படத்தின் மூலம் இஸ்லாமிய உலகை கொதிப்படையச் செய்த மனித ஷைத்தான்களையும் நிச்சயம் இவ்வருட அரஃபா நாள் சிறுமையடையச் செய்யும்.
6.ஜாஹிலிய்யா கால இனவெறி பேதமைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்ட நாள்
இனம், நிறம், குலம், மொழி, நிலம் என பல அடையாளங்களை உருவாக்கி மனிதர்களை பல கூறுகளாக பிளந்து போட்டிருந்த ஜாஹிலிய்யா கால பேதமைகளுக்கு அரஃபா நாள் அன்று தான் சாவு மணி அடிக்கப்பட்டது.
22391 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ
سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ ثُمَّ قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ ثُمَّ قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ وَلَا أَدْرِي قَالَ أَوْ أَعْرَاضَكُمْ أَمْ لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ رواه احمد
இன்று தமிழகத்தில் எந்த தலைவராவது தமிழனுக்கு என்று தனிச்சிறப்பு கிடையாது என்று நெஞ்சை நிமிர்த்தி துணிந்து கூற முடியுமா?
இனம், குலம், மொழி , நிறம் போன்றவற்றால் மனிதர்களை துண்டாடிய பழைய ஜாஹிலிய்யாவும் சரி; அவ்வாறே பொருள்வாதம்(materialism),தேசியவாதம்,இனவாதம், மொழிவாதம் ஆகியவற்றைக் கூறி மக்களை துண்டாடும் நவீன ஜாஹிலிய்யாவும் சரி; அவற்றுக்கு இந்நாள் சாவு மணி அடிக்கும் நாளே.
7.முஸ்லிம்கள் ஒன்றுபட முடியும் என்று உணர்த்தும் நாள்
முஸ்லிம்கள் ஒன்றுபட இயலாது; அது சாத்தியமல்ல என்று தற்கால உலகில் சிலரால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அஹ்லுஸ் சுன்னா , ஷீயா , அவ்வாறே அஹ்லுஸ் சுன்னாவின் மாறுபட்ட பிரிவுகளான சூஃபிஸம், ஸலஃபிஸம், வஹ்ஹாபிஸம் பிரிவுகளைச் சார்ந்த முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்று திரள்வது சாத்தியமானதே என்பதற்கு அரஃபா யதார்த்தமான சான்று.
ஒரே நாளில், ஒரே இடத்தில் பிரிவுகளுக்கு அப்பால் எல்லோரும் ஒன்று கூடும் நிகழ்வு வருடந்தோறும் அரஃபா பெருவெளியில் நடக்கின்றது. இது சூரியனைப் போல தெளிவான உண்மையாகும்.
இவ்வருடம் நமக்கு அரஃபா நாள் வெள்ளிக்கிழமையே
இஸ்லாமிய வணக்கங்கள் சூரியன் மற்றும் சந்திரனின் நகர்வை மையமாக வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.
நாட்டுக்கு நாடு சூரிய உதயம், சூரியன் மறைவு நேரம் மாறுபடுவது போன்றே சந்திர உதயமும், சந்திரன் மறைவும், சந்திர நகர்வும் மாறுபடுகிறது.
தொழுகையில் உள்ளுர் நேரத்தை பின்பற்றுவது போன்றே நோன்பிலும் உள்ளுர் பிறை நாளையே பின்பற்ற வேண்டும். இது எந்த விதத்திலும் ஒற்றுமைக்கு முரணாக ஆகாது. படைத்த இறைவன் அல்லாஹ் இவ்வாறு செயல்படுவதையே நாடியுள்ளான். பூமியை உருண்டையாகவும், தன்னைத் தானே சுற்றக் கூடியதாகவும் அவன் ஆக்கியுள்ளதால் தான் இவ்வித்தியாசம் ஏற்படுகிறது.
ஆதலால் ஒரே நாளில், ஒரே சமயத்தில் பூமியில் எல்லோரும் ஒன்றாக சஹர் செய்வதும்,ஒன்றாக நோன்பு திறப்பதும் சாத்திமற்றது. தலைகீழாக நின்றாலும் அது முடியாது தான்.
ஏனெனில் நமக்கும் அமெரிக்காவுக்கும் 12 மணி முதல் 18 மணி வரை பின்னோக்கிய வித்தியாசம்..
அமெரிக்காவின் ஹவாய் தீவில் சஹர் நேரம் முடிவுறும் பொழுது மக்காவில் இஃப்தார் நேரம் வந்து விடும்.
ஹவாய் தீவில் இருப்பவருக்கு 19 ந்தேதி காலை 4 மணி எனில் அச்சமயம் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் இருப்பவருக்கு 20 ந்தேதி அதிகாலை 2.30 மணியாக இருக்கும். எப்படி ஒரே நாளில் நோன்பு சாத்தியம்?
பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா (Samoa) தீவுகளில் 19 ந்தேதி அதிகாலை 3.30 மணியாக இருக்கும் பொழுது அதே சமயம் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில் 20 ந் தேதி 2.30 மணியாக இருக்கும்.இரண்டு நாட்டில் இருப்பவரும் ஒரே சமயத்தில் சஹர் வைத்தாலும் அங்கே ஒரு நாள் வித்தியாசம் இருக்கவே செய்யும்.
ஆதலால் உள்ளுர் கணக்கு என்பது எந்த விதத்திலும் தவறு அல்ல.
ஆகையால் அல்லாஹ் இந்த பூமியையும், அதில் நேர, காலங்களையும் எப்படி படைத்துள்ளானோ அப்படியே விட்டு விட வேண்டும். அதில் சர்ச்சைகள் செய்வது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு உதவாது..
قال الله تعالي: فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 30:30
வேதனைக்குரிய விஷயம் இந்த யதார்த்த உண்மையை விளங்காமல் சுமார் மூன்று நாட்கள் அல்லது நான்கு நாட்கள் வரை பெருநாள் கொண்டாடும் போக்கு தமிழகத்தில் இப்பொழுது தோன்றியுள்ளது. இது இதற்கு முன்பு இல்லாத ஒன்றாகும்.
இதில் ஒவ்வொருவரும் தாங்கள் கொண்டாடும் நாளுக்கு நபிவழி பெருநாள் என்று பெயரிட்டுக் கொள்வது வேதனைக்குரிய வேடிக்கை.
இதில் தாங்கள் தனியாக பெருநாள் கொண்டாடுவது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் அழைத்து அல்லது தாங்களே போட்டோ எடுத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கு கொண்டு கொடுத்து போடச் செய்வதை என்னவென்று சொல்வது?
இப்படியெல்லாம் நடந்தால் எந்த நாளில் ஷைத்தான் சிறுமைப்பட வேண்டுமோ அந்த நாளில் அவன் சந்தோஷப்பட்டு விடுவான்.


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.