உலகம் முழுவதும் ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றிட புனித கஅபாவை நோக்கி இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பயணித்து வரும் நிலையில் இஸ்லாத்தின் இறுதிக் கடமையான  ‘ஹஜ்’ குறித்து சில விஷயங்ளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்கே சீனா முதல் மேற்கே அமெரிக்கா வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் மனித சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்.
ஹஜ் மற்ற  இஸ்லாமிய வணக்கங்களை காட்டிலும் பல்வேறு தனித்துவங்களை கொண்டதாகும்
ஹஜ்ஜின் தனித்துவங்கள்
1.ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி பக்குவத்தை தரும்
பாவங்களில் இருந்தும், மனோஇச்சைகளில் இருந்தும் ஆத்மாவை பரிசுத்தப்படுத்தி மனித உள்ளத்தில் உலகப் பற்றின்மையை ஏற்படுத்தும் வலிமை ஹஜ்ஜுக்கு உண்டு.
1690 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ سَمِعْتُ أَبَا حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ حَجَّ هَذَا الْبَيْتَ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَمَا وَلَدَتْهُ أُمُّهُ رواه البخاري
உலக ஆசைகளில், சுகபோகங்களில் மூழ்கி கிடக்கும் மனிதனை பக்குவப்படுத்திடும் பல்வேறு விஷயங்கள் ஹஜ்ஜில் உண்டு.
இஹ்ராம் ஆடை : இஹ்ராம் உடை இச்சைகளில் இருந்து மனிதனை தடுக்கக்கூடியது.அத்துடன் அது ஆத்மாவின் இச்சைகளை விட அல்லாஹ்வையே அதிகம் சிந்திக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும்.
தல்பிய்யா: ‘இறைவா! உனக்கு அடிபணிந்து விட்டேன்’ எனும் சொல் அதற்கு சாட்சியமாக அமையும்.
தவாஃப்: மனிதனின் உள்ளம் அல்லாஹ்வை சுற்றியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும்.
சயீ: மனிதன் அல்லாஹ்வின் மன்னிப்பையும், ரஹ்மத்தையும் நோக்கி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தும்.
அரஃபா மஹ்ஷரையும், கல்லெறிதல் மட்டமான குணங்களை தூக்கியெறிய வேண்டும் என்பதையும், அறுத்து பலியிடுதல் அல்லாஹ்வுக்காக உயிரையும் தருவோம் என்பதையும் மனிதர்களுக்கு ஏற்டுத்தும். ஆக ஹஜ் மனிதனை பக்குவப்படுத்தும்.
2.சமத்துவத்திற்கான பகிரங்கமான அறைகூவல்
சமத்துவத்திற்கான பகிரங்கமான அறைகூவலே ஹஜ் வழிபாடாகும்.
இஸ்லாத்தின் எல்லா வணக்க வழிபாடுகளும் சமத்துவத்தை மையமாக கொண்டவையே. தொழுகையும், நோன்பும் சமத்துவத்தின் அடையாளங்களே. அவ்வாறே ஜகாத்தும் மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளை களையக் கூடியது தான். என்றாலும் இறுதிக் கடமையான ஹஜ்ஜில் சமத்துவம் சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.
மனிதர்களுக்கு மத்தியில் சமத்துவத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் ஹஜ்ஜை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆட்சியாளர் – பாமரர், கருப்பர் – வெள்ளையா், சொந்த நாட்டுக்காரா் – வெளிநாட்டுக்காரர் என்ற பாகுபாடு ஹஜ்ஜில் இருப்பதில்லை.
வி.ஐ.பி முறையோ, சிறப்பு கட்டண சலுகை வழிபாடோ அங்கே கிடையாது.
ஜாஹிலிய்யா காலத்தில் குரைஷிகள் தங்களை உயர்வாக நினைத்து அரஃபாவுக்கு செல்லாமல் தவிர்த்து வந்தனர்.தங்களை ‘உறுதிமிக்கவர்கள்’ என்று நினைத்ததே அதற்கு காரணம்.
இஸ்லாம் வந்த பிறகு அவர்களின் இச்செயல் ஏற்கப்பட வில்லை. ‘ஹஜ்ஜில் எல்லோரும் சமமானவர்கள் தான். எல்லோரையும் போன்று நீங்களும் நடந்து கொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் வசனம் இறக்கி வைத்தான்.

4158 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَازِمٍ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
كَانَتْ قُرَيْشٌ وَمَنْ دَانَ دِينَهَا يَقِفُونَ بِالْمُزْدَلِفَةِ وَكَانُوا يُسَمَّوْنَ الْحُمْسَ وَكَانَ سَائِرُ الْعَرَبِ يَقِفُونَ بِعَرَفَاتٍ فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ أَمَرَ اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْتِيَ عَرَفَاتٍ ثُمَّ يَقِفَ بِهَا ثُمَّ يُفِيضَ مِنْهَا فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى
{ ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ } رواه البخاري
தமிழ் புகாரி 4520
ஏற்றத்தாழ்வு என்பது அன்றைய அரபுகளின் இரத்தத்தில் ஊறிய பழக்கமாக இருந்தது. இனப்பாகுபாடு, நிறப்பாகுபாடு மட்டுமல்ல.. மொழிப்பாகுபாடும் அவர்களிடம் அதிகமாக இருந்தது. அரபி பேசத் தெரியாவர்களை அவர்கள் அஜமிகள் (வாயில்லாத பிராணிகள்) என்றே அழைத்தனர்.
தங்களுக்கு சமமாக அரபி அல்லாத ஒருவரை நிறுத்துவதையோ, அரபி அல்லாத ஒருவருக்கு தங்களை சமமாக்கி பேசுவதையோ கனவிலும் கூட அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அந்தளவுக்கு மொழி வெறி அவர்களிடம் தலைவிரித்தாடியது.
இஸ்லாத்திற்கு வந்த பிறகும் கூட அவர்களில் சிலரிடம் இந்த எண்ணம் இருக்கவே செய்துள்ளது. பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.
5590 - حَدَّثَنِي عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمَعْرُورِ هُوَ ابْنُ سُوَيْدٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ
رَأَيْتُ عَلَيْهِ بُرْدًا وَعَلَى غُلَامِهِ بُرْدًا فَقُلْتُ لَوْ أَخَذْتَ هَذَا فَلَبِسْتَهُ كَانَتْ حُلَّةً وَأَعْطَيْتَهُ ثَوْبًا آخَرَ فَقَالَ كَانَ بَيْنِي وَبَيْنَ رَجُلٍ كَلَامٌ وَكَانَتْ أُمُّهُ أَعْجَمِيَّةً فَنِلْتُ مِنْهَا فَذَكَرَنِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي أَسَابَبْتَ فُلَانًا قُلْتُ نَعَمْ قَالَ أَفَنِلْتَ مِنْ أُمِّهِ قُلْتُ نَعَمْ قَالَ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ قُلْتُ عَلَى حِينِ سَاعَتِي هَذِهِ مِنْ كِبَرِ السِّنِّ قَالَ نَعَمْ هُمْ إِخْوَانُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ جَعَلَ اللَّهُ أَخَاهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا يُكَلِّفُهُ مِنْ الْعَمَلِ مَا يَغْلِبُهُ فَإِنْ كَلَّفَهُ مَا يَغْلِبُهُ فَلْيُعِنْهُ عَلَيْهِ رواه البخاري
அவர்களின் இரத்தத்துடன் ஊறிப்போயிருந்த இந்த எண்ணத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த களம் அவர்களின் இறுதி ஹஜ் என்றால் மிகையில்லை.
இறுதி ஹஜ்ஜில் அரஃபாவில் வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆற்றிய உரை நாகரிக உலகின் முதல் சமத்துவ பிரகடனமாகும்.
22391 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ عَنْ أَبِي نَضْرَةَ حَدَّثَنِي مَنْ
سَمِعَ خُطْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ أَيُّ يَوْمٍ هَذَا قَالُوا يَوْمٌ حَرَامٌ ثُمَّ قَالَ أَيُّ شَهْرٍ هَذَا قَالُوا شَهْرٌ حَرَامٌ قَالَ ثُمَّ قَالَ أَيُّ بَلَدٍ هَذَا قَالُوا بَلَدٌ حَرَامٌ قَالَ فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ بَيْنَكُمْ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ قَالَ وَلَا أَدْرِي قَالَ أَوْ أَعْرَاضَكُمْ أَمْ لَا كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَبَلَّغْتُ قَالُوا بَلَّغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ رواه احمد
பெருமானாரின் இச்சமத்துவ பிரகடனம் இன்று வரை அமலில் இருப்பதற்கு பகிரங்கமான சாட்சியமே ஹஜ்ஜாகும்.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதி வரை உலகம் முழுவதும் பெரும்பான்மையான  நாடுகளில் நிறவெறி தலைவிரித்தாடியது. கருப்பர் – வெள்ளையர் பாகுபாடு உச்சகட்டத்தை அடைந்திருந்தது.
அது வெள்ளை இனவாதத்தை எதிர்த்து மால்கம் X போன்ற கருப்பின தலைவர்கள் போராடிய காலம்.
நிறவெறி கொழுந்து விட்டெரிந்த அக்காலத்தில் கூட ஹஜ்ஜில் நிறவெறி இருக்கவில்லை.
மால்கம் X இஸ்லாத்தை ஏற்று, ஹஜ்ஜுக்கு வந்த பொழுது வெண்ணிறமான அரபுத் தலைவர்கள் அவரை கைகுலுக்கி வரவேற்றார்கள். (நூல் – மால்கம் X)
3. பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் பழக்கப்படுத்தும்
ஹஜ்ஜில் பொறுமை மிக மிக அவசியம். ஹஜ் நிச்சயம் பொறுமையை மனிதனுக்கு பழக்கப்படுத்தி விடும்.
قال الله تعالي: نِعْمَ أَجْرُ الْعَامِلِينَ (58) الَّذِينَ صَبَرُوا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ 29:58,59
1677 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ السَّفَرُ قِطْعَةٌ مِنْ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ رواه البخاري
4.கல்வியையும், கலாச்சாரத்தையும் கற்றுத் தரும்
ஹஜ் கல்வியையும், கலாச்சாரத்தையும் கற்றுத் தரும் அமலாகும்.
السفر نصف العلم
من يسافر يري اكثر
இவ்விரண்டும் அரபி பழமொழி
திருக்குர்ஆனில் கூட ஒரு வசனம் உண்டு.
قال الله تعالي :أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ   30:9
இஸ்லாமிய கலாச்சாரம் தோன்றிய பூமி அரபு நிலமே. இஸ்லாம் பிறந்த இடமான மக்கா நகரமும், இஸ்லாத்தின் முதல்  தலைநகரமான மதீனா நகரமும் இஸ்லாமிய கலாச்சாரத்தின் அடையாளச் சின்னங்கள்.
5.நபிகளார் காலத்திய உணர்வுகளை ஏற்படுத்தும்.
قال الله تعالي: وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ 22:32

இஸ்லாமிய வணக்கங்களில் ஹஜ்ஜுடைய அமல் இஸ்லாம் பிறந்த இடமான மக்காவில் தான் நிறைவேற்றப்படும்.
அச்சமயத்தில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் நபி (ஸல்) அவர்களும், இஸ்லாத்தின் முதல் தலைமுறையான சஹாபாக்களும் வாழ்ந்த பகுதிகளுக்கு செல்லவே செய்வார்கள்.
புனித கஅபா, ஸஃபா மர்வா மலைகள், முதல் வசனம் இறங்கிய ஹிரா குகை, பத்ரு –உஹது களங்கள், மஸ்ஜிதுன் நபவீ, பெருமானாரின் மிம்பர், மிஹ்ராபு, ரவ்ளா, உமர் (ரலி) ஷஹீதாக்கப்பட்ட இடம், ஜன்னத்துல் பகீ போன்றவை முஸ்லிம்களுக்கு பெருமானாரின் காலத்திய உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றைக் காணும் பொழுது அக்காலத்துடன் ஒன்றக்கூடிய உணர்வு நிச்சயம் ஏற்படவே செய்யும்.
ஆதலால் தான் மன்னர் ஃபைஸல் ஆட்சிக் காலத்தில் கஅபாவிலும், மஸ்ஜிதுன் நபவியிலும் புதிய கட்டமைப்பு பணிகள் நடந்த பொழுது பழைய அடையாளங்களை அழிக்கக்கூடாது என்று எச்சரித்தார்கள் இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அபுல் ஹஸன் அலீ நத்வீ (ரஹ்)
இது குறித்து அவர்களின் கருத்து பின்வருமாறு:
(فيجب) " وأن يكون علي شيئ من البساطة والطبيعية وعلي شيئ من التقشف فيستشعر فيه الوافدون من أنحاء العالم البعيدة, الجوالذي  كان المسلمون الأولون يقضون فيه مناسكهم , ويشعرون بشعورهم أو قريب من شعورهم"
Source:
الصراع بين الفكرة الاسلامية والفكرة الغربية في الاقطار الاسلامية by Abul hasan Ali Nadwi        
  


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.