காசா ஆக்கிரமிப்பு  அடி வாங்கியது இஸ்ரேல்

மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,

 (வைகறை வெளிச்சம் ஆகஸ்ட் மாத இதழுக்காக எழுதப்பட்டது)

பாலஸ்தீனம் வாக்களிக்கப்பட்ட பூமி

பாலஸ்தீன பூமியும்அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகும்ஹிஜ்ரத்துக்கு முன்பு மக்காவில் வாழ்ந்த காலத்திலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் மிஃராஜ் நடந்த இரவில் பாலஸ்தீன புனித பூமிக்கு வந்துள்ளார்கள்அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலில் நபிமார்களுக்கு தலைமை தாங்கி தொழுகை நடத்தினார்கள்.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இருந்து தான் படைத்த ஏக இறைவனான அல்லாஹ்வை சந்திக்க புறப்பட்டும் சென்றார்கள்.

பாலஸ்தீனமும்அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் ஈமான் எனும் மத நம்பிக்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று.

ஆதலால்பாலஸ்தீனமும் – அல்அக்ஸா பள்ளிவாசலும் இன்றி முஸ்லிம் உம்மத்தை நினைத்துப் பார்க்கவும் இயலாது.

முஸ்லிம்களின் கைகளில் பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் முஸ்லிம்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகவும், அல்அக்ஸா பள்ளிவாசல் முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகவும் இருந்ததால் அண்ணல் நபி (ஸல்அவர்களின் தோழர்களால் கி.பி. 634 ஆம் ஆண்டு நடந்த அஜ்னாதைன் யுத்தத்தில் பாலஸ்தீனம் கைப்பற்றப்பட்டது.

புகழ்பெற்ற ஜெருசேலம் ஒப்பந்தத்தின்படி கி.பி. அல்அக்ஸா பள்ளிவாசலும்ஜெருசேலம் நகரும் பாலஸ்தீனம் சென்ற கலீஃபா உமர் (ரழிஅவர்களிடம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி.636) ஒப்படைக்கப்பட்டது.

அன்று முதல் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்றொரு பயங்கரவாத நாடு உருவாக்கப்படும் வரை பாலஸ்தீனமும்ஜெருசேலம் நகரும்அல்அக்ஸா பள்ளிவாசலும் முஸ்லிம்களின் கரத்தில் தான் இருந்தன.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் இருந்தார்களா?

வரலாற்றில் ‘ அல் அஹ்ததுல் உமரிய்யா’ (Umar's Assurance –உமர் வாக்குறுதி உத்தரவாத ஒப்பந்தம்என்றழைக்கப்படும் ஒப்பந்தம் ஹிஜ்ரி 15 ஆம் ஆண்டு (கி.பி. 636) கலீஃபா உமர் (ரழிஅவர்களுக்கும் ஜெருசேலம் நகர கிறிஸ்தவ மதத் தலைவராக கி.பி.634 முதல் 638 வரை பதவி வகித்த சாஃப்ரானியூஸ் (sophronius) க்கும் இடையே புகழ் பெற்ற கியாமா தேவாலயத்தில் (ஆங்கிலத்தில் Church of the Holy Sepulchre  தமிழில் திருக்கல்லறைத் தேவாலயம்வைத்து நடந்ததாகும்.

அதில் கிறிஸ்தவர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று யூதர்களை ஜெருசேலம் நகரில் தங்கிட இஸ்லாமிய அரசு அனுமதிக்கக்கூடாது என்பதாகும். உமர் (ரழிஅதனை ஏற்றார்கள்.

சங்கைக்குரிய சஹாபிகளில் வீரத்தளபதிகளான காலித் இப்னு வலீத் (ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), அம்ரு இப்னு ஆஸ் (ரழி), முஆவியா (ரழிஆகியோர் ஒப்பந்தத்தின் சாட்சிகளாக இருந்தனர்.

(மேற்கண்ட அத்தேவாலயத்தில் வைத்து ஒப்பந்தம் நடந்த பொழுது தொழுகை நேரம் வந்தது. உமர் (ரழி) தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு செல்ல முற்பட்டார்கள். பாதிரியார் சாஃப்ரானியூஸ் இங்கேயே தொழுங்கள் என்று வேண்டினார். அதனை ஏற்க மறுத்த உமர் (ரழி) இவ்வாறு காரணம் சொன்னார்கள்.

நான் இங்கு தொழுதால் வரும் காலத்தில் இது எங்களின் கலீஃபா தொழுத இடம் என்று சொந்தம் கொண்டாடுவார்கள். ஆதலால், வேண்டாம் என்றார்கள். இன்று வரை இது கிறிஸ்தவ தேவாலயமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது)

நாடற்ற அனாதைகள்

இறைவனுக்கும்இறைத்தூதர்களுக்கும் செய்த துரோகத்தினால் வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக நாடற்ற அனாதைகளாக அலைந்தவர்கள் யூதர்கள்.

கி.பிஇரண்டாம் நூற்றாண்டு முதல் 1948 வரை யூதர்களுக்கென்று தனிநாடு உலகில் இருந்ததில்லை.

யூதர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்நாட்டின் மீது எதிரி நாடு போர் தொடுத்தால் அவர்கள் எதிரி நாட்டுடன் சேர்ந்து கொள்வார்கள்இது அவர்களின் பிறவி இயல்புஇதனால் பன்னெடுங்காலமாக ஐரோப்பிய நாடுகள் யூதர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தின.

மேலும் யூதர்கள் தங்களின் நாடுகளில் வாழ்வதை ஐரோப்பாவில் எந்த நாடும் எப்போதும் விரும்பியதில்லைஅவர்களை ஆட்சிக்கு ஆபத்தாகவே ஐரோப்பிய அரசுகள் கருதின.

ஆதலால் தான் யூதர்கள் ஐரோப்பாவில் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள்அடக்கப்பட்டார்கள்விரட்டப்பட்டார்கள்.

யூதர்களுக்கு புகலிடம் தந்த முஸ்லிம்கள்

ஐரோப்பாவில் யூதர்கள் விரட்டப்பட்ட காலங்களில் அவர்களுக்கு இஸ்லாமிய நாடுகள் தாம் அடைக்கலம் தரும் தேசங்களாக விளங்கின.

இஸ்லாமிய நாடுகளில் அடைக்கலம் புகுந்த யூதர்கள் அங்கே எந்த பாகுபாடும் காட்டப்படாமல் மனிதநேயத்துடன் கௌரவமாக நடத்தப்பட்டார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இஸ்லாமிய அரசு வீழ்ந்து கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் ஆட்சியை பிடித்த சமயத்தில் யூதர்கள் அந்நாட்டில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள்.

அச்சமயத்தில் துருக்கி இஸ்லாமிய கிலாஃபா அரசு தான் அவர்களுக்கு புகலிடமாக திகழ்ந்தது.

யூதர்களின் தனிநாடு திட்டம்

19 ஆம் நூற்றாண்டில் தான் யூதர்களுக்கு தங்களுக்கென்று தனிநாடு ஒன்று இருக்க வேண்டும் என்ற எண்ணமே வந்ததுஅதற்கு முன்பு அதனைப் பற்றி அவர்கள் சிந்திக்கக்கூட முடியாமல் இருந்தார்கள்.

யூத தலைவர் தியோடர் ஹெசில் தலைமையிலான யூதர்கள் அக்கோரிக்கையை ஐரோப்பியர்களிடம் வைத்த போது பாலஸ்தீனத்தின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்பி ஐரோப்பா பயங்கரவாத நாடு உருவாகாமல் பார்த்துக் கொண்டார்கள்.

பாலஸ்தீனத்தில் யூத நாடு

பாலஸ்தீனம் யூதர்களின் புண்ணிய பூமி என்றொரு கொள்கை உருவாக்கப்பட்டு அதற்கான நிதி வட்டிவசூல் ஆகியவற்றின் வழியில் திரட்டப்பட்டதுநியாயமான அளவு பணம் சேர்ந்தவுடன் உதுமானிய கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீது அவர்களிடம் பாலஸ்தீனத்தில் நிலம் தருமாறு கோரிக்கை வைத்தார் தியோடர் ஹெசில்.

ஹெசிலின் பிரதிநிதி கலீஃபாவை வந்து இது தொடர்பாக சந்தித்த போதுகலீஃபா அப்துல் ஹமீது அவரிடம் இவ்வாறு கூறினார்.

எனது உடலின் ஒரு பகுதியை துண்டித்து உங்களிடம் நான் தருவேன்அது கடினமல்ல.. ஆனால் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு என்னால் தர இயலாதுஅது என்னால் இயலாது.

பாலஸ்தீனம் உலக முஸ்லிம் உம்மத்தின் உடல்அதனை வெட்டி துண்டு போட்டு தருவது நான் உயிருள்ள வரை நடக்காது.

பாலஸ்தீனத்தில் யூத நாட்டை அங்கீகரிக்காததால் இளம் துருக்கியர் எனும் அமைப்பை ஏற்படுத்தி கிலாஃபத்தையே வீழ்த்தினார்கள் யூதர்கள்.

கலீஃபா அப்துல் ஹமீதின் மரணத்திற்கு பின் கிலாஃபத் வீழ்ந்தது. 1948 ஆம் இஸ்ரேல் என்றாரு பயங்கரவாத நாடு உருவானது.

(கலீஃபா இரண்டாம் அப்துல் ஹமீதின் கொள்ளுப் பேரன் தான் தற்போதைய துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் என்பது குறிப்பிடத்தக்கது.)

இனப்படுகொலைகளில் இஸ்ரேல்

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் கல்விவளர்ச்சிமனிதநேயம் ஆகியவற்றை இலட்சியமாக கொண்டே செயல்படும்.

இனப்படுகொலைஆக்கிரமிப்புவன்முறைசூறையாடுதல் ஆகியவற்றை இலட்சியமாக கொண்டு ஒரு நாடு செயல்படுகிறது எனில்நிச்சயமாக இஸ்ரேலைத் தவிர வேறு எந்த நாடும் இருக்க அவ்வாறிருக்க வாய்ப்பில்லை.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவான காலத்தில் இருந்து இப்போது வரை இலட்சக்கான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவமும்யூத இனவெறிக் குழுக்களும் கொன்று குவித்துள்ளன.

முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் ஆயுதந்தாங்கிய குழுக்கள் இரவில் வந்து தாக்குதல் நடத்துவதுபின்பு பயந்து அங்கிருந்து வீடுகளை அப்படியே போட்டு விட்டு வெளியேறும் முஸ்லிம்களின் நிலங்களை அபகரித்து அடுக்குமாடி வீடுகளை கட்டி அரசாங்கமே வெளிநாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட யூதர்களுக்கு விற்பனை செய்வது ஆகியவை 66 ஆண்டுகளாக இஸ்ரேல் அரசு செய்து வரும் மனசாட்சியற்ற செயல்கள்.

2014 காசா – இஸ்ரேல் போர்

இரு துருவங்களாக செயல்பட்டு வந்த ஹமாசும் – பதஹ் இயக்கமும் கடந்த ஜுன் மாதம் இரண்டாம் தேதி ஏழு ஆண்டு கால முயற்சிக்கு பின்பு ஒரே நிர்வாகத்தில் பாலஸ்தீனத்தை கொண்டு வர ஒப்புக் கொண்டன.

பாலஸ்தீன நிர்வாகம் இரண்டாக செயல்பட்டதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீன மக்களேகாசா – மேற்குகரை என இரு பகுதிகளில் வாழ்ந்த பொதுமக்களும் பிரிவை விரும்பாத நிலையில்கத்தார் மற்றும் துருக்கியின் விடாமுயற்சியின் காரணமாக இரண்டு நிர்வாகங்களும் ஒன்றாக இணைந்து ஒன்றாக செயல்படத் தொடங்கின.

இது இஸ்லாத்தின் மீது பற்றும் – பாசமும் வைத்திருந்த உலகெங்கும் வாழும் முஸ்லிம்களுக்குத் தான் பிடித்திருந்ததே தவிர இஸ்ரேலுக்கும் – அதன் சொல்பேச்சைக் கேட்டு இஸ்லாமியவாதிகளை கொன்று குவிக்கும் ராணுவ எகிப்துக்கும்இஸ்லாமியவாதிகளை கொன்று குவிப்பதற்கு எகிப்தின் ராணுவக் கொடுங்கோலன் சிஸிக்கு பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிய சவூதிக்கும்ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பிடிக்கவில்லை. விளைவு காசாவை தண்டிக்க திட்டங்கள் தீட்டப்பட்டன.

காசா மீதான தாக்குதல்திட்டமிட்ட சதி

கடந்த ஜுன் 18 ஆம் தேதி மேற்குகரையில் உள்ள கலீல் நகரில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் காணாமல் போனதாக இஸ்ரேல் அறிவித்தது.

பின்பு மறுநாள் காணாமல் போனவர்கள் வீரர்கள் அல்ல..பதின்பருவ இளம் வாலிபர்கள் என்றதுஹமாஸ் தான் அவர்களை கடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியது. அதற்கு பழிவாங்கப் போவதாக மிரட்டியது.

முஸ்லிம் சிறுவனை உயிருடன் எரித்த காட்டுமிராண்டித்தனம்

ஜுன் இரண்டாம் தேதிஅன்று தான் ஒருங்கிணைந்த பாலஸ்தீனத்தின் புதிய அரசு பதவியேற்க இருந்ததுஅன்று காலை சுமார் 3.45 மணிக்கு ஃபஜ்ரு தொழுகைக்கு வீட்டில் இருந்து புறப்பட்டான் கிழக்கு  ஜெருசேலத்தில் உள்ள ஷுஅஃபாத் பகுதியைச் சேர்ந்த சிறுவன் முஹம்மது அபூ களீர்.

பள்ளிவாசலில் அவனின் நண்பர்கள் அவனுக்காக காத்திருந்தனர்காரில் வந்த சில யூதர்கள் மஸ்ஜிதின் வாசலில் வைத்து சிறுவனை காருக்குள் இழுத்துப் போட்டனர்சிறுவன் கடத்தப்பட்டான்.

சிறுவன் கடத்தப்பட்டதை அவனின் நண்பர்களில் சிலர் நேரில் கண்டனர்பதறித் துடித்த முஹம்மதின் பெற்றோர் இஸ்ரேல் காவல்துறையிடம் புகார் தந்தனர்.

மறுநாள் மேற்கு ஜெருசேலத்தில் உள்ள கிவட் சாவொல் நகரின் காட்டுப்பகுதியில் எரிக்கப்பட்ட நிலையில் சிறுவன் கண்டெடுக்கப்பட்டான்.

பாலஸ்தீனத்திலும்இஸ்லாமிய உலகிலும் இதற்கு கடும் கண்டனம் எழும்பியதுஇக்கொலைக்கும் அரசுக்கும் சம்மந்தம் இல்லை என்று நெதன்யாகு பேட்டியளித்தார்.

இஸ்ரேல் அரசே பயங்கரவாத அரசாக இருக்கும் நிலையில்இஸ்லாமிய உலகம் இதனை ஏற்கவில்லை.

இஸ்ரேலின் மிருகத்தனமான விமானத் தாக்குதல்

இஸ்ரேலியா்கள் காணாமல் போனதற்கும் ஹமாசுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அதனை சாக்காக பயன்படுத்தி மேற்குகரையில் உள்ள பாலஸ்தீன நாடாளுமன்ற உறுப்பினர்களையும்பாலஸ்தீன கல்வி அமைச்சரையும்மேற்குகரையில் பணியாற்றிய ஹமாஸ் அரசு அதிகாரிகள் சிலரையும் இஸ்ரேல் கைது செய்ததுஇது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும்.

ஏற்கனவே எதிர்பார்த்தபடி இதனைக் காரணம் காட்டி 1.8 மில்லியன் பொதுமக்கள் வாழும் காசாவின் மீது கடந்த ஜுன் ஆம் தேதி இஸ்ரேல் விமானத் தாக்குதலை ஆரம்பித்தது.

நாங்கள் குற்றமற்றவர்கள்ஹமாஸ்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்பு ஹமாசும் தனது பதிலடிகளை தந்ததுஇஸ்ரேலிய நகரங்கள் மீது அது ராக்கெட்களை எறிந்ததுடெல்அவில் உட்பட இஸ்ரேலின் எல்லா நகரங்களின் மீதும் ராக்கெட்கள் எறியப்பட்டன.

கடந்த 10.07.14 ஆம் தேதி கத்தார் தலைநகர் தோஹாவில் தொலைக்காட்சிப் பேட்டியில் ஹமாஸ் அரசியல் தலைவர் இவ்வாறு பேட்டியளித்தார்.

இஸ்ரேலியர்கள் காணாமல் போனதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லைஒன்றை செய்து விட்டு அதனை மறுக்கும் அவசியம் எங்களுக்கில்லை.

இஸ்ரேல் தேவையற்ற முறையில் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வருகிறதுமூன்று நாட்களில் 22 குழந்தைகள் உட்பட 76 பேரை இஸ்ரேல் கொன்று விட்டது.

ஆனால் சர்வதேச சமூகம் எங்களிடம் போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்கிறதுஎன்னமோ நாங்கள் போரை தொடங்கியது போல.

நெதன்யாகுவிடமும்அவரின் கொலைகார கும்பலிடம் போரை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் கேட்டுக் கொள்ளட்டும்.

தொடர்ந்து பேசிய காலித் மிஷ்அல் இப்படிச் சொன்னார்இங்கே அமைதி ஏற்பட வேண்டுமானால்நெதன்யாகு கும்பலிடம் இரண்டினை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

ஒன்றுகாசாமேற்குகரை பகுதிகள் மற்றும் 1948 ஆம் ஆண்டு எதுவெல்லாம் பாலஸ்தீனமாக இருந்ததோ அப்பகுதிகளில் இருந்து ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும்.

மற்றொன்றுநெதன்யாகு தமது அரசியல் நிலைப்பாட்டினை மாற்ற வேண்டும். அதற்கு சர்வதேச சமூகம் அவருக்கு அழுத்தம் தரவேண்டும்.

தொடர்ந்து எங்கள் மக்களை பட்டினியில் போட்டுக் கொண்டிருக்க முடியாதுஎட்டு ஆண்டுகளாக நீடிக்கும் இஸ்ரேலின் முற்றுகையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

முற்றுகையையும்ஆக்கிரமிப்பையும் முடிவுக்கு கொண்டு வரும் வரை ஓயமாட்டோம் என்றார் மிஷ்அல்.

எரிமலையாக வெடித்தார் எர்துகான்

காசா மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்ததில் இருந்து அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தார் துருக்கி பிரதமர் டாக்டர் ரஜப் தய்யிப் எர்துகான்.

ஜுன் எட்டாம் தேதி காசா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்திய பொழுது எர்துகான் விமானத் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தினார்.

ஆனால் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தவில்லைபாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் – ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷ்அல் இருவரையும் 09.07.14 தொடர்பு கொண்ட எர்துகான் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருவரும் ஓரணியில் நிற்குமாறு வலியுறுத்தினார்.

மேலும் பிரான்ஸ் அதிபர் ஹாலந்து மற்றும் ஐரோப்பிய யூனியனையும் இஸ்ரேலை போரை நிறுத்தச் செய்யுமாறு வலியுறுத்தினார்.

இனி இஸ்ரேலுடன் உறவு இல்லை – எர்துகான்

முஸ்லிம் நாடுகளில் இஸ்ரேலுடன் முதலில் உறவை ஏற்படுத்திய நாடு துருக்கிஇஸ்லாமியவாதிகளின் ஆட்சி துருக்கியில் ஏற்படுவதற்கு முன்பு மதச்சார்பற்றவர்கள் எனும் முஸ்லிம் பெயர்களில் வாழ்ந்த  நாத்திகர்களின் ஆட்சியில் இது ஏற்பட்டிருந்தது.

இஸ்லாமியவாதியான ரஜப் தய்யிப் எர்துகானின் ஆட்சி ஏற்பட்ட பின்பு இஸ்ரேலுடன் உறவை உடனே அவர் முறிக்கவில்லை.

கடந்த 2010 ம் ஆண்டு காசா போரின் போது துருக்கி அனுப்பி வைத்த கப்பலை தாக்கி அதில் இருந்த சமூக ஆர்வலர்கள் ஒன்பது பேரை இஸ்ரேல் முன்பு கொன்றது.

அதன் பின்பு துருக்கி – இஸ்ரேல் இடையே ஏற்கனவே நடைமுறையில் இருந்த ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்தார் எர்துகான்.

தொடர்ந்த இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க பல வழிகளில் முயற்சித்து வந்ததுஇறந்த துருக்கியர்களுக்கு தலா 20 இலட்சம் டாலர்கள் தரவும் முன்வந்தது.

இதற்காக அமெரிக்காவின் அறிவுறுத்தலின்படி இரண்டு முறை எர்துகானிடம் மன்னிப்பும் கேட்டார் நெதன்யாகு.


கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்கு எந்தப் பதிலையும் முறையாக எர்துகான் தரவில்லைஇதற்கிடையே எர்துகானின் மீது பலமுறை (கிட்டதட்ட 100 தடவைகொலை முயற்சியும் நடத்தப்பட்டதுஅல்லாஹ் அவரை காப்பாற்றி வருகிறான்.

இந்நிலையில்இஸ்ரேலுடனான ஒரேயடியான தூதரக உறவை முறிப்பதற்கான அடையாளமாக இனி வழக்கமான உறவு இல்லை என்று அறிவித்தார் எர்துகான்.

கடந்த சனிக்கிழமை 12.07.14 அனடோலியா நகராட்சியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எர்துகான் பேசியதாவது,

நான்கு நாட்கள் தாக்குதலில் இஸ்ரேல் 170 பேரை கொன்றுள்ளதுநூற்றுக்கணக்கானோரை படுகாயப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுடனான உறவின் எல்லா கதவுகளும் அதன் செய்கைகளால் சாத்தப்பட்டு விட்டதுஎவ்வளவோ எடுத்துச் சொல்லியும் இஸ்ரேல் தனது கொடூரத்தை பாலஸ்தீன மக்களின் காட்டி வருகிறது. 400 டன் எடையுள்ள குண்டுகளை பொதுமக்கள் வாழும் பகுதியில் வீசுகிறது.

ஒவ்வொரு முறை குண்டு வீசப்படும் போதும் டஜன் கணக்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்.

இஸ்ரேல் – பாலஸ்தீனர்களின் சண்டையில் துருக்கி பார்வையாளராக இருக்கும் யாரும் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம்.

இதில் தலையிடாமல் இருக்க முடியாதுபாலஸ்தீனர்களை நாங்கள் தனித்து தவிக்க விட்டு விட மாட்டோம்.

காசா பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளங்களை குறிவைப்பதாக சொல்லி 1.8 மில்லியன் மக்கள் வாழும் பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசுகின்றது.

நிச்சயமாக பாலஸ்தீன மக்களுக்கு நாம் உதவி செய்வோம்ஏனெனில் பாலஸ்தீன மக்களுக்கு நாம் உதவுவது வரலாற்று அடிப்படையிலானதுஇன்னும் அது மத அடிப்படையிலானதும் மனிதநேய அடிப்படையிலானதும் கூட.

பாலஸ்தீனர்கள் எப்போதும் நம்முடன் தான் இருந்துள்ளனர்குறிப்பாக நாம் விடுதலைக்காக போராடிய சமயத்தில் நமக்கு பக்கபலமாக அவர்கள் இருந்துள்ளனர். ஆதலால் அவர்களுக்கு பக்கபலமாக நாம் இருப்போம்.

போஸ்னியாஎகிப்துலிபியாசிரியாபாலஸ்தீனம்மியான்மர்ஈராக் மற்றும் உலகின் எங்கே இஸ்லாமியர்கள் வாழ்ந்தாலும் அவர்களுடன் நாம் நிற்போம்.

ஈராக்சிரியாவில் இருந்து புகலிடம் தேடி யார் துருக்கி வந்தாலும் அவர்கள் நமது நண்பர்களேகண்ணியமான முறையில் அவர்களை நடத்துவதை நமது கடமையாக கருதுகிறோம்.” (டெய்லி சபாஹ்  துருக்கி)

பாலஸ்தீன மக்களின் இரத்தங்கள் வீணாகாது

இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிக்க அதிகரிக்க எர்துகானின் பேச்சின் வலிமையும் அதிகரித்தது.

அங்காராவில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது,

“காசாவில் சர்வதேச சட்டங்களை காலில் போட்டு மிதித்து தீவிரவாத நாடாக மாறியிருக்கிறது இஸ்ரேல். மனிதநேய மாண்புகளை அது செல்லக்காசாக ஆக்கிவிட்டது.

அப்பாவி மக்களின் இரத்தங்களை வைத்து இஸ்ரேல் கேவலமான விளையாட்டு விளையாடி வருகிறது.

இந்த பயங்கரவாத்தை கண்டும் காணாமல் சர்வதேசம் சமூகம் நீண்ட காலம் மௌனமாக இருக்கப் போகிறதா என்ன??

முழுக்க முழுக்க பாலஸ்தீனத்தில் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். உண்மையில் அங்கே சர்வதேச நீதி கொல்லப்படுகின்றது.

இனி இஸ்ரேலுடன் நமக்கு நார்மலான உறவு இல்லை.(இதற்கு எர்துகான் NO NORMALIZATION WITH ISRAEL' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதன் உண்மைப் பொருள் இனி உன்னை எதிரியாகத் தான் பார்ப்பேன் என்பதாகும்)

இஸ்ரேலின் விமானங்கள் 1.8 மில்லியன் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகளை வீசுகின்றன. அத்துடன் காசா எல்லைப் பகுதியில் தரைப்படையையும் அந்நாடு நிறுத்தி வைத்துள்ளது.

இதுவரை (14.07.14 திங்கட் கிழமை வரை) காசாவில் பெண்கள் - குழந்தைகள் உட்பட 194 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் தரப்பில் ஒருவர் கூட கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை.

அப்பாவி பாலஸ்தீன மக்களின் இரத்தத்திற்கு இஸ்ரேல் நிச்சயம் ஒருநாள் விலை தரும்.”

உலகில் பயங்கரவாத நாடு இஸ்ரேல்

இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்று ஈரான் மட்டுமே சர்வதேச அரங்கில் கூறி வந்த நிலையில் காசா மீதான இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதலை நீடித்ததை தொடர்ந்து சர்வதேச அரங்கில் எர்துகானும் இஸ்ரேலை பயங்கரவாத நாடு என்று விமர்சித்தார். (இப்போது உலகில் தென்னாப்பிரிக்கா, பல்கேரியா, பொலிவியா, வெனிசுலா, சிலி என எல்லா நாடுகளும் இவ்வாறு விமர்சிக்கின்றன.)

18.07.14 ஜும்ஆ தொழுகைக்கு பின்பு இஸ்தான்பூலில் எர்துகான் நிருபர்கள் கூட்டத்தில் பேசியதாவது,

இஸ்ரேல் காசாவில் செய்வது பயங்கரவாதமேஇன அழிப்பு நடவடிக்கையில் அது ஈடுபட்டுள்ளது

ஹமாசுக்கும் பதஹ் இயக்கத்திற்கும் நடந்த கருத்தொற்றுமையையும்ஒன்றுபட்ட பாலஸ்தீனத்தையும் இஸ்ரேல் விரும்பவில்லைஅதற்காகத் தான் இப்போர்.

மத்திய கிழக்கின் அமைதிக்கு இஸ்ரேல் தான் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான நேர்மறையான அணுகுமுறை நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

காசா பிரச்சினையில் துருக்கி தெளிவான நிலையில் இருக்கின்றதுஇஸ்ரேலுடனான எங்களின் உறவு பூஜ்ய நிலைமைக்கு வந்து விட்டதுஇஸ்ரேலுடன் நார்மலான உறவு இனி சாத்தியமில்லை என தெரிகிறது.

எர்துகானின் தொடர் கண்டனங்களுக்கு பின்பு இஸ்தான்பூலில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை துருக்கி மக்கள் முற்றுகையிட்டார்கள்.

துருக்கியின் அனைத்துக் கட்சிகளும் எர்துகானின் நிலைப்பாட்டினை ஆதரித்தன.

அமெரிக்காவின் மீதான விமர்சனம்

ஒருகட்டத்தில் இஸ்ரேல் குறித்து எர்துகான் இவ்வாறு சொன்னார்.

இஸ்ரேலியர்கள் மனசாட்சியற்ற மனிதர்கள்மனித கண்ணியம் அறியாத அவர்கள் மிருகத்தனத்தில் எல்லை மீறி இரவிலும் பகலிலும் ஹிட்லர்களாக வாழ்கிறார்கள்.

இரக்கமற்ற முறையில் பாலஸ்தீனர்களை கொன்று வருகின்றனர். இஸ்ரேலில் வாழும் மக்கள் காசாவின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசுவதை குன்றுகளில் ஏறி நின்று ரசிக்கின்றனர்.

மனித கண்ணியம் அவர்களிடன் உள்ளங்களில் என்றோ இறந்து விட்டது போல.

இதற்கு பதிலளித்த அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜென் ப்சகி (Jen Psakiதுருக்கியின் இப்பேச்சுக்களை மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தாது என்றார்.

மறுநாள் அமெரிக்கா குறித்தும் ஐ.நா. குறித்தும் எர்துகான் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.

அமெரிக்கா குறித்து அவர் கூறியதாவது,

அமெரிக்கா இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை இருக்கின்றது என்று கூறி வருகிறது. இது உண்மையை புதைத்து விட்டு பேசும் பேச்சு. ஏனெனில், காசாவில் தொடர்ந்து மக்கள் இறந்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேலில் யாரும் இதுவரை சாகவில்லை. அப்படியெனில், யார் தன்னைக் காக்க போராடி வருகின்றனர்?

அமெரிக்காவுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன். அது உண்மையின் பக்கம் தன்னை நிறுத்த வேண்டும். இழிவான அறிக்கைகளில் இருந்து தன்னை நீக்கிக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவும், மேற்குலகமும், அமெரிக்க ஊடகங்களும் காசாவில் கொல்லப்படும் குழந்தைகளை ஏன் பார்க்க மறுக்கின்றன.

மேலும் அமெரிக்காவைப் பார்த்து இப்படிக் கேட்டார். இஸ்ரேல் ஹிட்லர் கால படுகொலைகளை செய்து வருகிறது. நீங்கள் ஹிட்லருடன் இருக்கப் போகிறீர்களா என்ன?

ஒபாமாவும் துரோகமும்

அமெரிக்காவில் ரமழான் முதல் வாரத்தில் நடந்த இஃப்தார் விருந்தில் பங்கேற்ற அமெரிக்காவுக்கு விசுவாசமான அரபு தூதர்களுக்கு மத்தியில் ஒபாமா பேசும் போது, இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்றார்.

அதற்கு பதிலளித்து எர்துகான் பேசியதாவது, “சிரியாகாசா விவகாரத்தில் மனசாட்சியின்றி செயல்படும் ஒபாமாவிடம் இனி நான் அந்த விவகாரங்களில் பேசிப் பயனில்லை
சிரியா விவகாரத்தில் பசார் ஆசாத்தின் ராணுவத்திற்கெதிராக அமெரிக்கா உதவி செய்யும் என்று நான் எதிர்பார்த்தேன்
அது போன்று காசா விவாகாரத்தில் அமெரிக்கா மனசாட்சியின்றி செயல்படுகிறது
ஒபாமாஜோபிடேன் ஆகியோருடன் கடந்த காலங்களில் அதிகமாக நான் பேசி வந்தது சமூக நீதியை நிலைநாட்டிடவே.
அவர்களுக்கும் சமூக நீதிக்கும் சம்மந்தம் இல்லை. அவர்கள் மோசமான முறையில் சூழ்ச்சி செய்கிறார்கள். இத்தகைய சூழ்ச்சியாளர்களுடன் நான் பேச தயாரில்லை.
முன்னதாக பத்திரிக்கை பேட்டியில் எர்துகான் அழுதபடி பேட்டி தந்தார்.

பலமுறை எர்துகானுடன் ஒபாமா பேச முயற்சித்தும் கடந்த பிப்ரவரிக்கு பின்பு ஒபாமாவுடன் எர்துகான் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிமேல் அடி வாங்கும் இஸ்ரேல்

ஆரம்பத்தில் வீர வசனம் பேசி தேவையில்லாத முறையில் செய்யாத குற்றத்தை ஹமாஸ் செய்ததாக கூறி காசாவில் கால்வைத்த இஸ்ரேல் இப்போது காலை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.

விமானத் தாக்குதலில் ஆயிரக்கணக்கில் பெண்கள் – குழந்தைகள் உட்பட பொதுமக்களை கொலை செய்த இஸ்ரேல் தரைப்படைத் தாக்குதலில் 17 சதுர மைல் பரப்பளவு கொண்ட காசா நகருக்குள் எளிதில் நுழைந்து விடலாம் என்று நினைத்தது.

நெதன்யாகுவுக்கு காசாவின் மீது நீண்ட நாள் ஆசை. எப்படியாவது அங்கு போய் அடிவாங்க வேண்டும் என்று. 2012 லேயே ஆசைப்பட்டார். நிறைவேறாமல் போனது.

இப்போது துருக்கியின் எச்சரிக்கையையும் மீறி காசாவின் மீது தரைப்படைத் தாக்குதலை  தொடங்கியது இஸ்ரேல்.

தரைப்படைத் தாக்குதலை தொடங்கினால் இஸ்ரேலுடன் போர் புரிந்து ஷஹீத் ஆகுவதை கொள்கை இலட்சியமாக கொண்டு வாழும் எகிப்து இக்வான்கள் ரஃபா எல்லை வழியாக காசாவுக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக ரஃபா எல்லையை மூடி தனது யூத விசுவாசத்தை நிரூபித்தார் எகிப்தின் சிஸி.

எகிப்து இக்வான்கள் இஸ்ரேலுடன் போர் புரிந்திட வர இயலாமல் போனாலும் ஹமாஸ் இயக்கத்தினர் நாங்களும் இக்வான்கள் தான், சஹாபாக்களின் வீரப்பரம்பரையினர் தான் என்பதை நிரூபித்து வருகின்றனர்.

நேரடி யுத்தத்தில் பின்வாங்கும் இஸ்ரேல்
ஆகாயத்தில் இருந்து பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டுகளை வீசி பொதுமக்களை கொலை செய்யும் இஸ்ரேல் நேரடி யுத்தத்தில் பின்வாங்கி ஓடுகிறது.

ஆளில்லா விமானங்களில் இஸ்ரேல் நகரங்களில் தாக்குதல் நடத்திட முடியும் என்று நிரூபித்த ஹமாஸ், தரைப்படைத் தாக்குதலில் இதுவரை (31.07.14) 113 இஸ்ரேல் வீரர்களை கொன்று விட்டது.மேலும் ஆவொல் ஷெரோன் எனும் வீரரை உயிருடன் கைது செய்து விட்டது.

ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு ஹமாசினால் பிடித்துச் செல்லப்பட்டு 2011 வரை ஹமாசிடம் கைதியாக இருந்த கிலட் ஷாலியாத்தை (Gilad Shalit) விடுவிக்க 1000 பாலஸ்தீனர்களை விடுவித்தது இஸ்ரேல்.

ஆவொல் பிடித்துச் செல்லப்பட்டதை இஸ்ரேலும் ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் டெல்அவிவ் உட்பட இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அனைத்தின் மீதும் ஆயிரம் ராக்கெட்களை வீசியது ஹமாஸ். அவை ஒவ்வொன்றும் ஆயிரம் டாலர்கள் மதிப்புள்ளவை தான் என்றாலும் அவை ஏற்படுத்திய சேதங்கள் இலட்சம் டாலர்களை தாண்டின.

இஸ்ரேலின் சூழ்ச்சி

பாலஸ்தீனம் தாக்கப்படும் போதும், அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படும் போது அது பற்றி பேச மறுத்த அமெரிக்காவும், ஐ.நா.வும் இஸ்ரேல் தாக்கப்பட்ட போது சமாதானம் பேச முன்வந்தன. அதுவும் சூழ்ச்சியின் வடிவத்தில்.

எகிப்தை மத்தியஸ்தமாக கொண்டு அரபு லீக் நாடுகளை சம்மந்தப்படுத்தி அமெரிக்கா போர் நிறுத்தம் செய்ய முற்பட்டது. இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.

வெற்றி மேல் வெற்றி கிடைத்து வரும் நிலையில், இதுவரை இறந்தவர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில், எகிப்தின் மத்தியஸ்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்ன ஹமாஸ், பேச்சுவார்த்தைக்கு நான்கு நிபந்தனைகளை விதித்தது.

அவை பின்வருமாறு, 

1. 
காசா மீதான எட்டு ஆண்டு கால தடைகளை நிரந்தரமாக நீக்க வேண்டும்

எகிப்து ரஃபா எல்லையை நிரந்தரமாக திறந்து விட வேண்டும்

3. 
பிடித்து செல்லப்பட்ட பாலஸ்தீன மக்களை விடுதலை செய்ய வேண்டும்

4. 
அமைதிப் பேச்சுவார்த்தையில் துருக்கியும்கத்தாரும் இடம் பெற வேண்டும்.

இதனை ஏற்க மறுத்தால் நாங்கள் போர் செய்ய தயார் என்று அறிவித்தார் ஹமாஸ் தலைவர் வீரமகன் காலித் மிஷ்அல்.

இஸ்ரேல் தரைப்படையை இறக்கியதால் ஹமாசைப் பொருத்தவரை இஸ்ரேலுடன் சண்டையிட இதனை வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கின்றது. ஹமாஸ் வீரர்கள் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் மரணமடைய இதனை அல்லாஹ் தந்த அருளாக நினைக்கின்றனர்.

பாலஸ்தீன தாய்மார்கள் தங்களின் பிள்ளைகளை புன்முறுவலுடன் ஜிகாதுக்கு அனுப்பி வைக்கின்றனர். அரபுகள் நாடுகள் உங்களுக்கு ஆதரவாக இல்லையே என்று நிருபர்கள் கேட்ட போது எங்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்று பதிலளித்தார் ஒரு வீரத்தாய்.

கத்தார் – துருக்கி இடம் பெற்ற பேச்சுவார்த்தை

எப்படியாவது போரை நிறுத்தி இஸ்ரேலை காப்பாற்றியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட அமெரிக்கா கத்தார் – துருக்கி இடம் பெறும் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது.

26.07.14 அன்று துருக்கி, கத்தார், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி,பிரான்ஸ் நாடுகள் இடம் பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் 26.07.14 நடந்தது. காஸா - இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை பாரிஸில் தொடங்கியது
மாநாட்டில் 26, 27 தேதிகளில் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று இஸ்ரேல் - பாலஸ்தீனம் நாடுகளை கேட்டுக் கொள்ளப்பட்டது.

மாநாட்டினை மதித்து இரண்டு நாள் போர் நிறுத்தத்திற்கு மட்டும் ஹமாஸ் சம்மதித்தது.

மாநாட்டில் துருக்கியும், கத்தாரும் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டுமெனில், ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என வலியுறுத்தின.

இது குறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் காலித் அதிய்யா 27 ஆம் தேதி அல்ஜஸீரா தொலைக்காட்சியின் ‘இன்றைய சந்திப்பு’ நேர்காணல் நிகழ்ச்சியில் பாரிஸ் மாநாடு குறித்து இவ்வாறு குறிப்பிட்டார்.

“நாங்களும், துருக்கியும் போர் நிறுத்தம் பற்றி மாநாட்டில் பேசவில்லை. மாறாக இஸ்ரேலின் மிருகத்தனத்தை நிறுத்துவது குறித்தும், எட்டு ஆண்டு கால காசா முற்றுகையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் தான் பேசினோம்.” (அல்ஜஸீரா 27.07.14)

போருக்கு அஞ்சாத ஹமாஸ்

இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்கள் பற்றி காஸாவின் முன்னாள் பிரதமர் இஸ்மாயீல் ஹனீயா அல்-அக்ஸா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,

லஸ்தீனத்தின் அழிவிற்கு முழு உலக நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும். இஸ்ரேல் கடந்த எட்டு வருடங்களாக காஸாவை முழு முற்றுகைக்கு உள்ளாக்கி வந்துள்ளது. இந்த சட்டவிரோத முற்றுகையை உலக நாடுகளும் கண்டிக்கவில்லைஎமது சகோதர அரபு தேசங்களும் கண்டிக்கவில்லை. இப்போது அது காஸாவின் ஒரு பகுதியை அழிக்க முனைகிறது. அப்போதும் இந்த சர்வதேசமும்முஸ்லிம் தேசங்களும் இதனை தடுக்காமல் உள்ளன. யூதர்களின் கொலை வெறிக்கு எமது இரத்தத்தின் மீது உறுதி கூறுகிறோம்நாம் சளைக்காமல் போராடுவோம் என்று. இப்பிரச்சினை யூதர்களின் இரத்தத்தின் மூலம் தான் தீர்வடையும்.

எங்களை இஸ்ரேல் தாக்கும் போதும்எமது சிறார்களையும்எமது குழந்தைகளையும் கொன்றொழிக்கும் போதும் எங்களின் மீது இரசாயன ஆயுதங்களை பிரயோகிக்கும் போதும் அஅமெரிக்காவும் , ஐரோப்பாவும் எதுவும் பேசவில்லை. நாம் பதிலடி தந்தோம். பல வெற்றிகளை பெற்றோம்.

இப்போது போர் நிறுத்தம் என்று அவர்கள் ஓலமிடுகிறார்கள். போரை நிறுத்தம் செய்ய நாமா போரை தொடங்கினோம்?

 இப்போரில் நாம் யார் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை.. எங்களின் அனைத்து நம்பிக்கையும் ஏக இறைவன் மீது மட்டுமே உள்ளது. அவன் எங்களுக்கு உதவுவான் என்று உறுதியாக நம்புகிறோம். அவனது வானவர்கள் எமக்கு உதவ அனுப்பப்படுவார்கள் எனவும் நம்புகிறோம்.

ரபாஃ எல்லையை அடைத்து வைத்து  அத்தியாவசியப் பொருட்களை வரவிடாமல் தடுத்து எமது போராட்டத்தை எகிப்து கட்டுப்படுத்த முடியாது. இது அல்லாஹ்வின் பாதையில் நடக்கும் போராட்டம். கடைசி பாலஸ்தீன முஸ்லிம் உயிருடன் இருக்கும் வரை பலஸ்தீனத்தின் துப்பாக்கிகள் ஓயாது. யூதர்களின் அச்சமும் விலகாது.

உலகம் துவங்கியது முதல் அது முடியும் வரை பலஸ்தீனத்திற்கென்று என்று ஒரு வரலாறு உண்டு. அவ்வரலாற்றின் எந்தப் பகுதியில் நின்று இதை கூறுகின்றேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் பலஸ்தீனர்கள் அல்-அக்ஸாவின் சொந்தக்காரர்கள். உலகின் பெரும் அறிஞர்களும்தளபதிகளிலும் இங்கே தோன்றியுள்ளனர்.

ப்பரம்பரையில் வந்த ஒவ்வொரு பலஸ்தீனியனும் தனது மண்ணுக்காக போராடுவான். விடாமுயற்சி மற்றும் கடுமையான போராட்டத்தின் வழியில் வெற்றி பெறுவோம்.

என் கண் முன் எனது சகோதரிகளும் சகோதரர்களும் கொல்லப்படுவதை கண்டு துடித்து போகிறேன். நாங்கள் வெற்றியின் வாசலை திறந்து விட்டோம். காஸாவின் சண்டைகள் அதற்கான படிக்கட்டுக்கள். அப்படிக்கட்டுக்களின் கீழ் பலஸ்தீனியர்களின் இரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் புதைந்து கிடக்கிறது.

நாம் நாளை இஸ்ரேலை வெற்றி கொள்ள முற்படும் போது எம்மை பயங்கரவாதிகள் என்று கூறி உலகத்தின் சர்வதேசப் படைகள் காஸாவை முற்றுகையிடலாம். அது  எங்களுக்கு தெரியும். அதையும் தாண்டி அல்லாஹ்வின் வானவர்களுடன் சேர்ந்து அவர்களை எதிர்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

காசா இனப்படுகொலை: ஆதரவும் துரோகமும்

பாலஸ்தீனத்தில் மேற்கு கரையில் வாழும் மக்களுக்கும் காசாவில் வாழும் மக்களுக்கும் பில்லியன் கணக்கில் டாலர்களை தந்து உதவும் நாடு கத்தார்.
கத்தார் அமீர் தமீமும்அவரது தந்தை ஹம்தும் பாலஸ்தீனத்துக்கு பன்னெடுங்காலமாக உதவி வருகிறார்கள்.
மேலும் உலகெங்கிலும் இஸ்லாமிய நாடுகள் மற்றும் முஸ்லிமல்லாத நாடுகளில் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படும் இஸ்லாமிய அறிஞர்களுக்கு கத்தார் தான் அடைக்கலம் தருகிறது.
எகிப்து ஆட்சியாளர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவிசவூதி அரசினால் விரட்டப்பட்ட டாக்டர் முஹம்மது அஹ்மரி ஆகியோருக்கு கத்தார் தான் அடைக்கலம் தந்து அவர்களை வைத்து உம்மத்துக்கு கல்வி ஆராய்ச்சிகளை வழங்கி வருகிறது.
மேலும் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல்பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசின் பிள்ளைகள் மற்றும் எகிப்து இக்வான்களுக்கு கத்தார் தான் அடைக்கலம் தந்து உதவி வருகிறது.
இக்வான்களுக்கும்ஹமாசுக்கும் கத்தார் செய்து வரும் உதவிகள் சாதாரணமானவை அல்ல..
கத்தார் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ஜனாதிபதி சிமன்பெரஸ் கத்தாரை கடுமையாக சாடினார். உலகில் தீவிரவாதிகளுக்கு பெருமளவு பண உதவி செய்யும் நாடு கத்தார் என்றார். மேலும் கத்தார் தரும் பணம் தான் இஸ்ரேல் மீது ராக்கெட்களாக விழுகின்றன என்றார்.

மேலும் கத்தாரில் இருந்து செயல்படும் அல்ஜஸீரா
ஊடகப் பணியை செய்யவில்லை. மாறாக அது இரத்தங்களை கழுகும் வேலைகளை செய்து வருகிறது என்று குற்றம் சுமத்தினார்.

(ஏற்கனவே 2001 ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட போது அமெரிக்காவின் இன்னொரு முகத்தை காட்டியதால் அமெரிக்காவின் கோபத்தையும், எகிப்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது முர்சியின் ஆட்சியை ராணுவத்தை பயன்படுத்தி சவூதியும், துபாயும் கவிழ்த்ததை அம்பலப்படுத்திய போது சவூதியின் கோபத்தையும் அல்ஜஸீரா பெற்றிருந்தது.

இப்போது  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவதால் இஸ்ரேலின் ஆத்திரத்தை பெற்றுள்ளது. மேற்கண்ட நாடுகள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பவை என்பது குறிப்பிடத்தக்கவை.)

பெரசுக்கு எர்துகான் பதிலடி


கடந்த 24.07.14 அன்று சி.என்.என். துருக்கி பிரிவு தொலைக்காட்சி நேர்காணலில் எர்துகான் கூறியதாவது.நாங்கள் நேட்டோவில் அணியில் இருக்கிறோம்.

நேட்டோ ஒப்பந்தத்தின் வழியில் நேட்டோவின் சக நாடுகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம்.

நேட்டோ பயங்கரவாதத்தை எதிர்க்கும் அணியாகும். ஒருபோதும் பயங்கரவாதத்தை ஆதரிக்காது. அதனை செய்யவும் செய்யாது.

இப்போது இஸ்ரேல் உலகில் பகிரங்கமான பயங்கரவாத நாடாக மாறியுள்ளது. காசாவில் அது எல்லை மீறி பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது.

நேட்டோவில் இருந்து பயங்கரவாதத்தை எங்களால் ஆதரிக்க இயலாது.

மேலும் கத்தார் பற்றி எர்துகான் இவ்வாறு குறிப்பிட்டார்.

கத்தார் தீவிரவாத நாடும் அல்ல..தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடும் அல்ல.
அது அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கும்பாதிக்கப்பட்டவர்களுக்கும் தான் உதவி வருகிறது. உண்மையில் உலகில் தீவிரவாத நாடு இஸ்ரேல் தான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் காசாவில் பயங்கரவாதத்தை அந்நாடு தான் நிகழ்த்தி வருகிறது.
கத்தாரும் – நாங்களும் (துருக்கி) ஒடுக்கப்பட்டபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதை நிறுத்த மாட்டோம். எதனைக் கூறி களங்கப்படுத்த முயன்றாலும் சரி.
மேலும் எர்துகான் இப்படிக் கேட்டார். உங்களைப் போன்று சிவிலியன்களை கொல்லும் அறிவற்ற செயல்களில் கத்தார் என்றைக்காவது ஈடுபட்டுள்ளதா? (சி.என்.என். துருக்கி பிரிவு)

ஈரான்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்ததைத் தொடர்ந்து இப்பிரச்சினையில் இஸ்லாமிய உலகம் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான். மேலும் அரபு நாடுகளின் மௌனமே இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.


எர்துகானின் அழைப்புக்கு கத்தார் மற்றும் ஈரானைத் தவிர வேறு வளைகுடா நாடுகள் எதுவும் பதில் தரவும் இல்லை. துருக்கியின் தலைமையில் இஸ்ரேலை எதிர்க்கவும் அவை தயாரில்லை.

ஆனால், துருக்கியின் அழைப்புக்கு பின்பு ஈரான் மதத் தலைவர் காமினி ஹமாசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை அறிவித்தார். காசாவில் இறந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்த காமினிகாசாவில் வீரத்தோடு ஹமாஸ் போராடுவதைப் போன்று மேற்குகரை மக்களும் இஸ்ரேலுக்கு எதிராக போரிட வேண்டும்  என்றார்.
தொடர்ந்து பேசிய காமினி அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவை ஆணவம் என்று குறிப்பிட்டார்
இது தான் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் உண்மை முகம். மனித நேயம்மனித உரிமை ஆகியவற்றை முஸ்லிம்களின் விஷயத்தில் அவர்கள் பார்ப்பதில்லை என்ற காமினிஅமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலுக்கு தன்னை காப்பாற்றிக் கொள்ள உரிமை இருக்கிறது என்கிறாரே பாலஸ்தீன மக்களுக்கு அந்த உரிமை இல்லையாஎன்று ஆவேசப்பட்டார்.
இஸ்ரேல் அழிவின் அடையாளம். அது உலகில் இருக்கும் வரை பிரச்சினை தான். உலகில் இருக்கக்கூடாத நாடு அது என்றார் காமினி.
ரமழான் கடைசி வார ஜும்ஆவை அல்குத்ஸ் வாரம் என்று குறிப்பிட்ட காமினி முஸ்லிமகளும், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளும் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அதிகளவில் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றார். (ரஃயுல் யவ்ம் 24.07.14)

காமினியின் அழைப்பை ஏற்று உலகெங்கும் வாழும் ஷியாக்கள் அல்குத்ஸ் வாரத்தை அனுசரித்தார்கள். பாலஸ்தீனத்துக்கு ஆதரவுக் குரல் எழுப்பினார்கள்.

நமது சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பள்ளிவாசலில் ஷியா முஸ்லிம்கள் அஹ்லுஸ் சுன்னா முஸ்லிம்களான காசா மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாஹ் ஆதரவு

லெபனானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஹமாசுக்கும் சிரியா பிரச்சினையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிரியா பிரச்சினையின் விளைவு அதுவரை காசா நிர்வாகத்துக்கு உதவி செய்து வந்த ஈரானும் கூட உதவியை நிறுத்திக் கொண்டது.

ஆனால் காசா – இஸ்ரேல் போர் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சும் முஸ்லிம்கள் அனைவரையும் ஓரணியில் இணைத்து விட்டது.

எர்துகானின் அழைப்புக்கு பின்பு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலை தொடர்பு கொண்டு காசாவில் இஸ்ரேலுக்கு எதிராக போரிடும் ஹமாசுக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.

மிஷ்அலுடன் உரையாடல் குறித்து லெபனானின் மனார் தொலைக்காட்சியில் நஸ்ருல்லாஹ் கூறியதாவது, காசா பிரச்சினையில் எல்லா நிலைமையிலும் ஹமாஸ் எடுக்கும் முடிவை ஹிஸ்புல்லாஹ் ஆதரிக்கும். (அல்குத்ஸ் யு.கே.)

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு

காசாவில் இஸ்ரேல் செய்த பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னாப்பிரிக்கா தனது நாட்டில் இருந்து இஸ்ரேல் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று அந்நாட்டின் ஆளும் கட்சியான ஆப்பிரிக்கா நேஷனல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கோரிக்கை எழுப்பப்பட்டது.

நித்தம் நித்தம் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அவ்வாறே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, தென்கொரியா, மலேசியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பிரிட்டன், பெரு, கனடா, சிலி என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் இஸ்ரேலை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

பல இடங்களில் நடந்த போராட்டங்களில் கிறிஸ்தவர்களும், ஒரு சில இடங்களில் யூதர்களும் முஸ்லிம்களுடன் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்றனர்.

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்ரேலிலும் கூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.

ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம்

காசா தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் மீது விசாரணை கோரியும்ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் சர்வதேச விதிகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

46 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பிரேசில்ரஷ்யாசீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுடன் சேர்ந்து தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. மொத்தம் 29 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 17 ஐரோப்பிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா மட்டும் வாக்களித்தது.

பாலஸ்தீன மக்களுக்கு எகிப்து மற்றும் சவூதியின் துரோகம்

இப்போது காசாவின் இஸ்ரேல் நடத்தி வரும் மிருகத்தனமான  தாக்குதல்களுக்கு எகிப்து மற்றும் சவூதியே காரணம் என்று சர்வதேச அளவில் இஸ்லாமியவாதிகளால் நம்பப்படுகிறது.

எகிப்தில் இக்வான்களின் ஆட்சியை வீழ்த்தி இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் எண்ணத்தை நிறைவேற்றிய நாடு சவூதி. அதற்காக பில்லியன் கணக்கில் டாலர்களை அந்நாடு செலவு செய்தது.

இதனை நாம் ஏப்ரல் 2014 வைகறை வெளிச்சம் இதழில் வெளிச்சம் காட்டினோம்.

ஹமாஸ் மீதான தடை

முர்சி ஆட்சியை கவிழ்ப்பதற்கு சிஸி சொன்ன வெளிப்படையான காரணங்களில் ஒன்று: முர்சி ஹமாசுடன் இரகசிய உறவு வைத்துள்ளார் என்பதாகும்.

மேலும் முர்சி ஆட்சியை வீழ்த்திய பிறகு கடந்த மார்ச் மூன்றாம் தேதி எகிப்தில் கோர்ட் மூலம் ஹமாஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது.

உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்கள் ஹமாசை போராளிகள் இயக்கமாகவே பார்க்கிறார்கள். ஆனால் எகிப்து இஸ்ரேலுடன் நட்பு பாராட்டுகிறது. ஹமாசை தடை செய்கின்றது. சவூதி அந்நாட்டுக்கு உதவி செய்கிறது. ஸலஃபிகள் இத்தணைக்கும் பிறகு அதிபர் தேர்தலில் சிஸிக்கு ஆதரவளிக்கிறார்கள் எனில், இவர்கள் யார்? யாரை இவர்கள் திருப்திபடுத்துகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

2006 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் காசாவை முற்றுகையிட்டுள்ளது. காசா மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை எகிப்தின் ரஃபா எல்லை வழியாக மட்டுமே கொண்டு செல்ல முடியும்.

முர்சி ஆட்சியை கவிழ்த்த பிறகு ரஃபா எல்லை மூடி காசா மக்களை வதைத்து, தமது யூத விசுவாசத்தை நிரூபித்தார் சிஸி. அவருக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக நின்றார்கள் சவூதி, துபாய் மற்றும் சவூதியின் செல்வச் செழிப்பில் மார்க்கம் பேசும் ஸலஃ.பிகள்.

காசா மீதான போரும் எகிப்தும்

காசா மீது இப்போது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவும், எகிப்தும் – சவூதியும் காரணம் என்று டெப்கா இணைய இதழில்(http://www.debka.com/) செய்தி வெளியாகி உள்ளது. இதனை நாம் கடந்த ஏப்ரல் வைகறை வெளிச்சம் இதழிலேயே வெளிப்படுத்தி விட்டோம்.

கடந்த மார்ச் மாதம் எகிப்து ராணுவ அரசு இஸ்ரேலுக்கு எழுதிய கடிதம் ரஃயுல் யவ்ம் இதழில் வெளியாகி இருந்தது. அது பின்வருமாறு,

“இத்தோடு காசாவை அடித்து நொறுக்க வேண்டும். இல்லையெனில், இஸ்ரேல் இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.” (ரஃயுல் யவ்ம் 06.03.14)

கடந்த நான்கு மாதங்களாக திட்டமிட்ட தாக்குதல் தான் ஹமாஸ் – பதஹ் இயக்கங்கள் இணைந்து ‘ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு’ உருவான பிறகு அரங்கேறி உள்ளது.

இஸ்ரேலிய சிறுவர்கள் கடத்தலும் சதியும்

கடந்த ஜுன் மாதம் எகிப்து உளவுத்துறை தலைவர் முஹம்மது துஹமி (Egyptian intelligence chief General Mohamed Al-Tuhamiஇஸ்ரேல் சென்றார்.

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடன் காசா விரிவாக்கம் மற்றும் எகிப்து – இஸ்ரேல் உறவு குறித்து விவாதித்தார். இதனை இஸ்ரேலிய ரேடியோவை மேற்கோள் காட்டி அரசாங்க ஆதரவு பத்திரிக்கையான  எகிப்தின் ‘அல்மிஸ்ர் அல்யவ்ம்’ இதழ் தெரிவித்திருந்தது.

இச்சந்திப்பு நடந்த சில மணி நேரங்களுக்கு பின்பு தான் மூன்று இஸ்ரேலியர்களை கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் நடந்தது. (மிடில் ஈஸ்ட் மானிட்டர் 09.07.14)

அமைதிப் பேச்சுவார்த்தையும் சதியும்

இஸ்ரேல் – எகிப்து கூட்டுச் சதியில் தான் மூன்று இஸ்ரேலிய இளம் வயதினர் கொல்லப்பட்டது அம்பலப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் காசா மீது குண்டுகள் வீசி அப்பாவி மக்களை கொலை செய்யும், எகிப்து போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தமாக இருக்கும் என்றால், ஹமாசும் – உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களும் ஏமாளிகளா என்ன?

ஆதலால் தான் எகிப்தின் மத்தியஸ்தை ஹமாசும், எர்துகானும், கத்தாரும், இக்வான்களும், டாக்டர் யூசுஃப் அல்கர்ளாவியும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய இலட்சியவாதிகளும் ஏற்கவில்லை.

எகிப்தை ஏற்க மறுத்த எர்துகானும் கர்ளாவியும்

கடந்த  27.07.14 ஆம் தேதி கனால் 7 ('Kanal 7')தொலைக்காட்சி நேர்காணலில் எர்துகான் கூறியதாவது,

எகிப்து இஸ்ரேலினால் தான் வழிநடத்தப்படுகிறது. ஆதலால் தான் மனிதாபிமான உதவிகள் கூட காசா மக்களுக்கு கிடைக்க விடாமல் எல்லையை அடைத்து வைத்துள்ளது. எகிப்தை நாங்கள் நம்பத் தயாரில்லை. இப்பிரச்சினையில் அதற்கு சம்மந்தம் ஏதும் இல்லை.

சிஸியை ஓர் அரசியல்வாதி என்றோ, ஒரு நாட்டின் ஜனாதிபதி என்றோ நான் கருதவில்லை. என்னைப் பொருத்தவரை அவர் மனிதர்களை அடக்கி ஆளும் கொடுங்கோலன் ஆவார். அதில் எனக்கு கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. (டெய்லி சபாஹ் 28.07.14)

சிஸியைக் கண்டித்த கர்ளாவி

அல் ஜஸீரா எகிப்து பிரிவு தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் கடந்த 21 ஆம் தேதி திங்கட் கிழமை மாலை பங்கேற்றார் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு தலைவர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி. அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

சிஸியின் கொடுங்கோல் ஆட்சி நிச்சயம் முடிவுக்கு வரும். ஏனெனில், பூமியில் குழப்பம் செய்து மக்களை அடக்கி ஆளும் சர்வாதிகார ஆட்சிகள் முடிவுக்கு வரும் என்கிறது அல்குர்ஆன் (காண்க அல்குர்ஆன் 89:11-14)

இந்த அநியாயக்காரனின் அநியாயங்கள் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டு விட்டனர். நூற்றுக்கணக்கில் கண்ணியமான குடும்ப பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் விரும்புவதெல்லாம் எகிப்து சுதந்திரமான நாடாகவும், ஓர் இஸ்லாமிய நாடாகவும் ஆக வேண்டும் என்பதைத் தான்.

எகிப்து மக்களின் சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். நான் எகிப்தில் தான் பிறந்தேன்.. தற்போதுள்ள அடிமைத்தனம் அகன்று, எனது சொந்த ஊரான சஃபத் துராப் கிராமத்துக்கு சென்று சுதந்திரமும் – சுயமரியாதையும் கிடைக்கப்பெற்ற எகிப்தியர்களின் கரங்களில் முசாஃபஹா செய்ய வேண்டும். இதுவே எனது ஆசை.

அநியாயக்கார ஆட்சியாளர்களை நான் வெறுக்கவே செய்கின்றேன். சத்தியத்தில் கத்தார் நிற்பதால் தான் நானும் கத்தாருடன் நிற்கிறேன்.

இமாம் ஹஸனுல் பன்னா காலத்தில் யூதர்களுக்கெதிரான போரில் நானும் பங்கேற்றேன். இப்போதும் யூதர்களுக்கெதிரான போரில் பங்கேற்று அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக நான் விரும்புகிறேன்.

எகிப்தின் நலன் தான் முக்கியம் என்று கூறி முஸ்லிம் உம்மத்தை விட்டு சிஸி ஒதுங்குகிறார். கடந்த காலங்களில் எகிப்து முஸ்லிம் உம்மத்தை விட்டு ஒதுங்கி நின்றதில்லை.

ஆனால் இப்போது எகிப்து ஒதுங்கி நிற்கிறது. ஒன்றை கூறிக் கொள்கிறேன். எகிப்து ஒதுங்கி நிற்பதினால் முஸ்லிம் உம்மத் ஒன்றும் செத்துப் போய் விடாது. இந்த உம்மத்தை அல்லாஹ் நிச்சயம் காப்பாற்றுவான்.

குர்ஆன் – சுன்னா மற்றும் சங்கைக்குரிய சஹாபாக்களின் வழியில் நின்று இஸ்லாமிய அறிஞர்கள் உம்மத்தை தட்டி எழுப்ப வேண்டும்.

எகிப்து ரஃபா எல்லையை மூடி வைத்துள்ளது. எகிப்தியர்கள் ஏன் அதனை திறக்கக்கூடாது?  எகிப்தியர்களே! நீங்கள் முஸ்லிம்கள் தானே? அரபுகள் தானே?

எகிப்தின் மத்தியஸ்தை ஹமாஸ் நிராகரித்தது ஏன்? என்று கேட்டதற்கு கர்ளாவி இப்படிக் கேட்டார். எகிப்துக்கு அந்த தகுதி இருக்கிறதா?

இக்வான்களை பயங்கரவாதிகள் என்றும், ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றும் அவதூறுப் பழியை அது எறிந்தது!

எகிப்து அமைச்சர் இஸ்ரேல் செல்கிறார். இஸ்ரேலை புகழ்ந்து தள்ளுகிறார். எல்லா விஷயங்களிலும் இருநாடுகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.!

இத்தனைக்கும் பிறகு எகிப்தை நம்ப வேண்டுமா? இப்போது எகிப்து இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு எல்லா வகையிலும் ஹமாசுக்கு எதிரியாக நிற்கிறது. எனவே ஹமாஸ் எகிப்தை நிராகரித்தது சரிதான்.

எகிப்துக்கு மீண்டும் பாலஸ்தீனப் பிரச்சினையில் தலையிடும் தகுதி வர வேண்டுமெனில், இப்போது அதிபர் பதவியில் ஏறி அமர்ந்திருக்கும் யூத கைக்கூலி சிஸியை தூக்கி எறிந்து விட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மது முர்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

காசாவில் போராடும் எமது பாலஸ்தீன சொந்தங்களுக்கு கூறிக்கொள்கிறேன். நீங்கள் யூதர்களை எதிர்த்து தீரமுடன் போர் புரியுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள். அவன் வானவர்களை அனுப்பி உதவி செய்வான். நீங்கள் தான் வெற்றியாளர்கள்.”
இவ்வாறு கர்ளாவி பேசினார்.

இஸ்ரேலின் அணியில் சவூதியும் துபாயும்

உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களாகிய நாம் காசா மக்கள் தாக்கப்பட்ட சமயத்தில் வேதனையால் புழுவாக துடித்தோம். துருக்கி பிரதமரின் வார்த்தையில் கூறுவதெனில், இவ்வருட ரமழான் நமக்கு வேதனை மிக்க ரமழானாக மாறிவிட்டிருந்தது.

காசா மக்கள் தாக்கப்பட்ட சமயத்தில் முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிமல்லாத நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களாகிய நாம் தான் வேதனையால் துடித்தோமே தவிர அரபுலகை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் இது விஷயத்தில் இழிவான மௌனத்தையே கடைபிடித்தார்கள்.

துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானைத் தவிர அவர்களில் யாரும் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இழிவான கோழைத்தனம், வெட்கங்கெட்ட கல்நெஞ்சத்தனம்.

இஸ்ரேலுக்கு சவூதி உதவி?

அரபு நாடுகளில் சவூதி அரேபியாவின் நிலைமை இன்னும் கேவலமானதாகும். ‘மகன் செத்தாலும் சரி மருமகளின் தாலி அறுபடணும்’ என்றொரு முதுமொழி தமிழில் உண்டு. சவூதியின் நிலைமையும் இவ்வாறு தான்.

இஸ்லாமிய எழுச்சியோ, நவீன இஸ்லாமிய ஆட்சியோ ஏற்படுவதை விரும்பாத சவூதி அரசு, அதற்காக எகிப்து இக்வான்களின் ஆட்சியை தமது பணத்தால் வீழ்த்தியது.

இக்வான்களை வீழ்த்திய பின்பு ராணுவத்தின் உதவியில் அமையும் அடுத்த அரசு இஸ்ரேலுக்கு விசுவாசமான அரசாக இருக்கும் என்பது தெரிந்திருந்தே இக்வான்களின் அரசை வீழ்த்தியது சவூதி.

அதற்கு பிறகு இஸ்ரேல் – சவூதி கள்ள உறவு உலக அரங்கில் வெட்ட வெளிச்சமானது. நாம் வைகறை வெளிச்சம் ஏப்ரல் 2014 இதழில் இதனை தெளிவுபடுத்தியிருந்தோம்.

இப்போது காசா – இஸ்ரேல் போரில் சவூதியும், துபாயும் எகிப்துடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு பக்கபலமாக நிற்பது நமது இதயத்தை கனக்கச் செய்கிறது.

பிரபல பிரிட்டன் எழுத்தாளர் டேவிட் ஹெர்ஸ்ட் (David Hirst) ‘தி கார்டியன்’ ஆங்கில நாளிதழில் கட்டுரை எழுதினார். கட்டுரைக்கு அவர் இட்ட தலைப்பு ‘ காசாவின் மீது சவூதி வடிக்கும் முதலைக் கண்ணீர்’.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “ எதனை மறுப்பது சாத்தியமற்றதோ அதனை மறுப்பது கண்டனத்துக்கு உள்ளாகும். அது போலத்  தான் சவூதி அரேபியாவின் நிலைமையும்.

காசாவுக்கு எதிரான இஸ்ரேல் தொடுத்த போர் சவூதியின் பணத்தில் தான் நடந்துள்ளது. இதில் கிஞ்சிற்றும் சந்தேகம் இல்லை.

நான் (டேவிட் ஹெர்ஸ்ட்) முன்னர் எழுதிய கட்டுரைக்கு பதிலாக ஐ.நா.வுக்கான சவூதி தூதர் முஹம்மது நாயிஃப் பதில் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். பாலஸ்தீன அரசுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் எல்லா வகையிலும் துணையாக நிற்போம் என்று. இவ்வாறு சொன்ன அவர், தற்போது உலக அரங்கில் அம்பலப்பட்டுள்ள இஸ்ரேல் – சவூதி உறவைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை.?

மேலும் நான் (டேவிட் ஹெர்ஸ்ட்) கேட்கிறேன். முஹம்மது நாயிஃபுக்கு முன்பு ஐ.நா.வுக்கான சவூதி தூதராக இருந்தவர் அமீர் துருக் ஃபைஸல். இவர் தற்போதைய சவூதி வெளியுறவுத்துறை அமைச்சர் சவூத் ஃபைஸலின் சகோதரர்; மேலும் சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் மருமகன் ஆவார்.

இவர் ‘ஷர்க் அவ்சத்’ அரபு நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். “ தற்போதைய போருக்கு ஹமாஸ் தான் காரணம். போர் நிறுத்தம் செய்யாமல் ஹமாஸ் ஆணவம் பிடித்து திரிகின்றது. ஹமாசின் ஏவுகணைகள் இஸ்ரேலை எதுவும் செய்ய இயலாது.”

முழுக்க முழுக்க இஸ்ரேலிய பிரதிநிதி போன்று பேசிய துருக் பைஸல், கடைசியில் இப்படிச் சொன்னார். போரை நிறுத்த வேண்டுமெனில், ஹமாசிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க வேண்டும் என்றார்.

இதனைத் தானே இஸ்ரேல் கூறுகிறது. இவரும் அதனை கூறுகிறார் எனில், சவூதி யார் பக்கம் நிற்கின்றது? என்பது அறிவுள்ளவனுக்கு தெரியாதா? என்ன?

இங்கே சவூதியின் நிலைப்பாடு நமக்கு தெரிந்தாக வேண்டும். அது பாலஸ்தீன மக்களின் சார்பில் நிற்கின்றதா? அல்லது எட்டாண்டு காலமாக பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், எகிப்து சார்பாக நிற்கின்றதா?

ஹமாஸ் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடுகின்றது. போரை நிறுத்திட எட்டாண்டு கால முற்றுகையை நீக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகிறது. இதனை சவூதி கொச்சைப்படுத்துகின்றது எனில், அது யாரின் சார்பில் நிற்கின்றது? என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

சவூதி – இஸ்ரேல் வர்த்தக உறவு சமாதான திட்டத்திற்காகவா? அல்லது வேறு அரசியல் இலாபங்கள் அதில் இருக்கின்றதா? (என் மீது பாய்ந்து பதில் தரும் முஹம்மது நாயிஃப் பதில் தர வேண்டும்.)

சவூதி உளவுத்துறை தலைவர் அமீர் பன்தருக்கும் (Bandar bin Sultan) , மொசாத் தலைவர் தமீர் பார்டோ (Tamir Pardo) வுக்கும் அகபா ஹோட்டலில் வைத்து நடந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசினார்கள்?

1.பன்தர் – தமீர் இடையே நடந்தது என்ன?
2. குளிர் கால சூரியனை பார்க்க சென்றார்களா?
3.அல்லது ஈரானை அடித்து நொறுக்கும் திட்டம் ஏதும் இருக்கின்றதா?

என மூன்று தலைப்புகளில் அச்சந்திப்பு குறித்து பத்திரிக்கைகளில் தகவல்கள் கசிந்தன.

இஸ்ரேல் அடிவாங்கும் போது அதன் புதிய நண்பர்களான நீங்கள் (சவூதி, துபாய்) ஏன் அலறுகிறீர்கள்?

2003 முதல் 2008 வரை ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதராக இருந்த டான் கில்லர்மேன் (Dan Gillerman) இவ்வார கடைசியில் இவ்வாறு பேட்டியளித்திருந்தார். “ வளைகுடா நாடுகள் காசா பிரச்சினையை முடிக்குமாறு எங்களிடம் வேண்டுகோள் விடுத்தன என்று.

காசாவை ஒரேயடியாக அழிப்பது தான் உங்களின் பார்வையில் காசா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதா? ஆயிரம் அப்பாவி பாலஸ்தீன மக்களை குண்டு போட்டு கொல்வது தான் உங்களின் பார்வையில் பிரச்சினையின் தீர்வா?

பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேல், சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் ஒர் அணியிலும், ஹமாஸ், இக்வான்கள், துருக்கி, கத்தார் மற்றொரு அணியிலும் நிற்கின்றன.

சவூதியின் உதவியில் எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 12 மாதங்களுக்குள் காசா தாக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்விடம் சவூதி அரசையும், சவூதி மக்களின் நிலைப்பாட்டையும் நாம் பிரித்துத் தான் விளங்க வேண்டும். சவூதி அரசு தான் பகைமையின் காரணமாக ஹமாசுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் எதிராக நிற்கின்றதே தவிர சவூதி மக்களின் நிலைமை அவ்வாறில்லை.

95 சதவீத சவூதி மக்கள் ஹமாசுக்கு ஆதரவாகவே உள்ளனர். காசா முற்றுகையை நீக்காமல் ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கக்கூடாது என்று சவூதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் 82 சதவீத சவூதி மக்கள் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஏவுகணைகளை எறிவதை ஆதரிக்கின்றனர்.

சவூதி மக்களின் ஹமாஸ் ஆதரவு நிலைப்பாட்டின் காரணமாக சவூதி அரசு கடும் அச்சத்தில் உள்ளது. சவூதி மக்கள் அரசியலை விரும்பத் தொடங்கியுள்ளனர். இதுவும் மன்னராட்சி ஆட்சியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கி உள்ளது.

இஸ்ரேல் – எகிப்து உறவில் சவூதியின் பங்களிப்பு முக்கியமானது. ஏனெனில், எகிப்து ராணுவ ஆட்சியாளர் சிஸி ரியாத்தில் உள்ள தனது எஜமானர்களின் அனுமதியின்றி காசா எல்லையை மூடி பாலஸ்தீன மக்களை வதைத்தார் என்று கற்பனை செய்திட இயலாது.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு பின்பு உடனே 5 பில்லியன் டாலர்களையும், இப்போது 20 பில்லியன் டாலர்களையும் தந்த எஜமானர்கள் அல்லவா அவர்கள்!

எகிப்து ராணுவ ஆட்சியாளர் சிஸி ஹமாசை இக்வான்கள் இயக்கத்தின் ஒரு பிரிவாக பார்க்கின்றார். அவருக்கு ஒத்து ஊதும் எகிப்து மீடியாக்கள் இஸ்ரேலைப் புகழ்ந்தும், ஹமாசை இகழ்ந்தும் எழுதி வருகின்றன. அத்துடன் ஹமாசை எகிப்தின் விரோதி என்றும் அவை கற்பனை செய்கின்றன.

பாதாள சுரங்கங்களை அழிப்பதாக இஸ்ரேல் போர் செய்கிறதல்லவா! ஒன்றை மனதில் வைக்க வேண்டும். அவற்றை இஸ்ரேல் ராணுவம் மட்டும் அழிக்கவில்லை. இஸ்ரேலுடன் எகிப்து ராணுவமும் சேர்ந்தே அழித்து வருகின்றது. இஸ்ரேலுடன் சேர்ந்து இதுவரை 13 சுரங்கங்களை எகிப்து ராணுவம் அழித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல்கள் சிஸியின் முழு ஆதரவில் தான் நடக்கின்றது. போரை நிறுத்த கிஞ்சிற்றும் அவர் முயற்சிக்கவில்லை. போர் நிறுத்தம் என்ற பெயரில் (கடந்த 12.07.14 ) அந்நாடு நடத்திய பேச்சுவார்த்தையில் ஹமாஸ் இடம் பெறவில்லை. ஹமாசிடம் பேச இயலாது என்று வெளிப்படையாக சிஸி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக ஹுஸ்னி முபாரக் செய்த தவறைத் தான் சிஸி இப்போது செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லாஹ் – இஸ்ரேல் போரில் இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை முழுமையாக துடைத்தெறிந்து விடும் என்று நினைத்தார் முபாரக். ஆனால் கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

தமது மகன் ஜமாலை பெய்ரூத்துக்கு அனுப்பி வைத்து எகிப்து லெபனான் மக்களுக்கு ஆதரவாக உள்ளது என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் முபாரக்கிற்கு உருவானது.

சிஸியும், சவூதியும் ஒன்றை நன்கு கவனத்தில் வைக்க வேண்டும். பாலஸ்தீனத்தை நோக்கி எதனையும் எறிவது மிகப் பெரும் ஆபத்தில் கொண்டு சேர்த்து விடும். சர்வதேச இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தின் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

சவூதி ஆபத்தான பாதையில் செல்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கொண்டு வந்த அமைதிப் பேச்சுவார்த்தை திட்டத்தை நிராகரிக்கும் தைரியத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு தந்தது எது? சவூதியின் ஆதரவு தானே! இஸ்ரேலின் புதிய அரபு நண்பர்களின் தயவு இன்றி அது நடந்திருக்குமா என்ன?

சவூதியின் ஆதரவு இல்லையென்றால் காசாவின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட மிருகத்தனமான தாக்குதல் ஒருநாளைக்கு மேல் நீடித்திருக்க வாய்ப்பில்லை.”

(தி கார்டியன் ஆங்கில இதழை மேற்கோள் காட்டி அல்அரேபிய்யா அரபு நாளிதழ்)

சவூதி மன்னரின் வழிகாட்டலில் காசா மீது தாக்குதல்

மேற்குறிப்பிட்ட பிரிட்டன் டேவிட் ஹெர்ஸ்ட் பிரபல நாளிதழான ‘ஹப்பிங்டன் போஸ்ட (huffingtonpost) இதழில் கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரைக்கு அவரிட்ட தலைப்பு “ சவூதி மன்னரின் வழிகாட்டலில் காசா மீது தாக்குதல்”.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “காசா மீதான தாக்குதல்களுக்கு பின்னாள் பல கைகள் இருக்கின்றன. அமெரிக்காவின் பங்களிப்பை நாம் சொல்லத் தேவையில்லை. இஸ்ரேலுக்கு தம்மை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறி விட்டார்.

எகிப்தை பொறுத்தவரை காசா தாக்கப்பட்டதற்காக துளியும் அந்நாடு கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஹமாசின் ஆலோசனை இன்றி  கடந்த 12 .07.14 அன்று எகிப்து தன்னிச்சையாக மேற்கொண்ட பேச்சுவார்த்தையை ஹமாஸ் நிராகரித்த சமயத்தில் எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சாமிஹ் சுக்ரி இப்படிச் சொன்னார். “ நாகரிக சமுதாயங்கள் ஹமாசுக்கு எதிராக நிற்க வேண்டும்.”

அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு அடுத்தபடியாக காசா மீதான மிருகத்தனமான தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பச்சைக் கொடி காட்டிய மூன்றாவது கூட்டாளி யார் தெரியுமா? சவூதி அரேபியா தான்.

2002 முதல் 2006 வரை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ‘ஷாஉல் முபாஸ்’ ( Shaul Mofaz). இவர் ‘சேனல் 10’ ல் அதிர்ச்சிகரமான பேட்டி ஒன்றினை தந்தார். அதில் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

“ஹமாசிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதற்கு சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்ன செய்ய வேண்டும் என்பதை இஸ்ரேல் வரையறுக்க வேண்டும்.

சவூதியின் பணமும், அமீரகத்தின் பணமும் ஹமாஸ் அழிந்த பிறகே காசாவுக்கு பயன்பட வேண்டும்.” எவ்வளவு வெளிப்படையான பேச்சு இது!

தற்போது இஸ்ரேல் பாதுகாப்புத்துறையில் அரசியல் மற்றும் ராணுவம் இடையேயான தொடர்பாளராக இருப்பவர் ‘அமாஸ் கிலாட்’ (Amos Gilad). அவர் கூறியதையும் இத்துடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அவர் கூறியிருப்பதாவது, “இப்போது அரசியல் விவகாரங்களும், பேச்சுவார்த்தைகளும் பூமிக்கு கீழ் பாதாளத்தில் தான் நடக்கின்றன.

பொதுமக்களுக்கு அவற்றில் எதுவும் தெரிவதில்லை. எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாகும்.

அரசில் மற்றும் பாதுகாப்பில் அரபுலகத்துடன் இப்போது இஸ்ரேலுக்கு ஏற்பட்டிருக்கும் ஒத்துழைப்பு மிகச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது என்றார்.

ஆக தற்போதைய காசா மீதான இஸ்ரேலின் மிருகத்தனமான பயங்கரவாத தாக்குதல் சவூதி மன்னரின் வழிகாட்டலில் தான் நடந்துள்ளது என்று தமது கட்டுரையில் குறிப்பிட்டார் டேவிட் ஹெர்ஸ்ட்.”

(ஹஃப்பிங்டன் போஸ்ட் நாளிதழை மேற்கோள் காட்டி அத்தக்ரீர் அரபு நாளிதழ் 22.07.14)

சவூதி அறிஞர்களின் ஆதரவு

சவூதி அரசு தான் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நிற்கின்றதே சவூதி மக்களும், சவூதி அறிஞர்களும் ஹமாசுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் ஆதரவாகவே உள்ளனர்.

புனித மக்கா ஹரம் ஷரீம் இமாம்களான ஷெய்கு அப்துர் ரஹ்மான் சுதைஸி, ஷெய்கு ஷுரைம் , மஸ்ஜிதுன் நபவீ இமாம் ஷெய்கு சலாகுல் புதைர் ஆகியோர் தங்களின் ஜும்ஆ உரைகளில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் பேச தயங்கவில்லை.

சவூதி இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அரீஃபீ , தமது உரையில் கியாமத் நாள் வரை யூதர்களுக்கு எதிராக ஜிகாத் நடக்கும் என்ற நபிமொழியை மேற்கோள் காட்டி ஹமாசை வெளிப்படையாக ஆதரித்தார்.

புனித மக்கா ஹரம் ஷரீஃப் இமாம்களில் ஒருவரான ஷெய்கு சாலிஹ் இப்னு தாலிப் 08.08.14 அன்று ஜும்ஆ உரையில் பேசியதாவது,

“பாலஸ்தீனத்தில் மக்கள் அவதிப்படுவது அரபுகளின் பெரும் இயலாமையாகும். அரசியல் பேரமே இப்போருக்கு காரணம். பயங்கரவாதத்தை நிகழ்த்தி விட்டு தமது குற்றங்களை இஸ்ரேல் நியாயப்படுத்தப் பார்க்கின்றது.

சர்வதேச அரங்கில் இஸ்ரேலை நாம் விடக்கூடாது. திரையை நாம் அகற்றுவோம். இருளை நீக்கி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருவோம்.

நம்மிடம் தியாக மனப்பான்மை அற்றுப் போனதால் தான் நமக்கு தீங்கு ஏற்படுகின்றது. எத்தனை முஸ்லிம் குடும்பங்கள் சிதறடிக்கப்பட்டு விட்டன.?

இருண்ட இரவில் சிறு ஒளிக் கீற்று தென்படுகின்றது. பூமியின் பல பாகங்களில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் கேட்கின்றன. ஆக்கிரமிப்பு பயங்கரவாதியின் இரத்தவெறியை உலகின் பல தரப்பு மக்களும் விளங்கத் தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேலியர்கள் குழந்தைகளையும், பெண்களையும் கொல்வதைத் தவிர வேறு எதனை சாதித்து விட்டனர். பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள், வீடுகள் என அவர்களின் பயங்கரவாதத்தில் இருந்து கட்டிடங்களும் கூட தப்பவில்லை.

காசா மீதான முற்றுகையை நீக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் உடன்படக்கூடாது என்று பேசிய இமாம் சாலிஹ் இப்னு தாலிப் தமது உரையின் கடைசியில் இப்படி துஆ செய்தார்.

யா அல்லாஹ் பாலஸ்தீன ஷஹீத்களுக்கு ரஹ்மத் செய்வாயாக.. காயமடைந்த மக்களை விரைவில் குணப்படுத்துவாயாக…”
                                         (அல்குத்ஸ் யு.கே.09.08.14)

ஹமாசுக்கு ஆதரவாக 86 சவூதி அறிஞர்கள் ஃபத்வா

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், சவூதி அரசின் இஸ்ரேலிய ஆதரவுக்கு எதிராகவும் சவூதியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 86 சவூதி அறிஞர்கள் கையெழுத்திட்டு ஹமாசுக்கு ஆதரவாக ஃபத்வா வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது, “ஹமாஸ் இயக்கம் காசா முற்றுகையை நீக்க வேண்டும் என்ற தமது நிபந்தனையில் இருந்து அரசியல் நெருக்கடி காரணமாக இறங்கி வரக்கூடாது.

காசா மக்கள் அநீதி இழைக்கப்பட்டவர்கள், பலவீனமானவர்கள். எட்டாண்டு காலமாக முற்றுகையிடப்பட்டு நிர்கதியாக ஆக்கப்பட்டவர்கள். அநியாயமான முறையில் அவர்களின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வீர உணர்வை மழுங்கச் செய்து, சியோனிச இஸ்ரேலுக்கு கீழ்படிய வைக்க வேண்டும் என்பதைத் தவிர அம்முற்றுகைக்கு வேறு என்ன காரணம் உள்ளது?

ஆனால், நமது காசா சொந்தங்கள் இரும்பை விட உறுதியானவர்கள். அவர்களின் வலிமை, மன உறுதி, ஜிகாதிய உணர்வு ஆகியவற்றைக் கண்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என யாரும் அர்ப்பணிப்புக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை எண்ணிப் பார்க்கிறோம்.

பாலஸ்தீன மக்களே.!பொறுமைஇறைவணக்கம்இறையச்சம் ஆகியவற்றைக் கொண்டு உங்களுக்கு நாங்கள் வஸிய்யத் (எனும் உபதேசம்) செய்கிறோம்இஸ்ரேலை எதிர்த்துப் போராடும் ஹமாசுக்கு எல்லா வகையிலும் உதவியாளர்களாக இருங்கள். அவர்களின் பின்னால் நில்லுங்கள்.

உங்களைப் பிரிப்பதற்கும், உங்களைத் துண்டாடுவதற்கும் மேற்கொள்ளப்படும் சதித்திட்டங்களில் இருந்து விலகி ஓரணியில் ஒற்றுமையாக நில்லுங்கள்.

முஜாஹிதீன்களுக்கு நாங்கள் வஸிய்யத் செய்கிறோம். நீங்கள் சியோனிஸ்டுகளை திகைக்க வைத்து விட்டீர்கள். உலகமே உங்களின் வீரத்தைக் கண்டு அதிசயித்து நிற்கிறது. நீங்கள் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளுங்கள். நடுநிலையை பேணுங்கள்.

உங்களுக்கு எதிராக செய்யப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை நீங்கள் ஏறெடுத்தும் பார்க்க வேண்டாம். அவை ஊடகங்களாலும், நமது அரசியல்வாதிகளாலும் உண்டாக்கப்பட்டவை.

இஸ்ரேலுடனான மோதலில் தனக்கென தனி முத்திரைப் பதித்துள்ள ஹமாஸ் இயக்கத்துக்கு உபதேசம் செய்கிறோம். நீங்கள் உறுதியாக நில்லுங்கள். வெளியில் இருந்தும், உள்ளே இருந்தும் வரும் அழுத்தங்களுக்கு நீங்கள் அடிபணியாதீர்கள்.

நிச்சயமாக உங்களின் எதிரியால் போர்க்களத்தில் உங்களை தோற்கடிக்க இயலாது. ஆதலால் தான் அரசியல் ரீதியில் பேச்சுவார்த்தைகள் அரங்கேறுகின்றன.

ஃபத்வாவின் இறுதியில் அறிஞர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இப்போரில் ஹமாசுக்கு எதிராக செயல்பட்டதின் மூலம் அரபு சியோனிஸ்டுகள் இனம் காணப்பட்டு விட்டனர். ஹமாசை பழிப்பதிலும், ஹமாசை தவறாக சித்தரிப்பதிலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் நரித்தனங்களின் வழியில் இவர்கள் ஈடுபட்டனர்.”
                            ( அல்வஃப்து நாளிதழ் 05.08.14)

சவூதி அறிஞர்களான அப்துல்லாஹ் அல் குனைமான், சுலைமான் துவைஜரி, அப்துர் ரஹ்மான் அல் மஹ்மூத், நாசிர் உமர், சல்மான் அவ்தா, அலீ காமிதி, ஃபஹ்து இப்னு முஹம்மது இப்னு அஸாகிர், சஅது அல் கன்னாம், முஹம்மது துவைஷ், முஹம்மது லாஹிம், ஃபவ்சான் பின் அப்துல்லாஹ் அல்ஃபவ்சான் ஆகியோர் ஃபத்வாவில் முதலில் கையெழுத்திட்ட அறிஞர்கள் ஆவர்.. இதில் ஹரம் இமாம் ஷெய்கு ஷுரைம் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோற்றுப் போனது இஸ்ரேல்

அமெரிக்கா, எகிப்து, சவூதி, ஐக்கிய அமீரகம், ஜோர்டான் நாடுகளின் ஆதரவு இருக்கின்றது என்ற நப்பாசையில் போரைத் தொடங்கிய இஸ்ரேல் ஆரம்பத்தில் ஹமாசை துடைத்தெறிந்து விடலாம் என்று தான் நினைத்தது.

ஆனால் தரைப்படையை இறக்கிய பின்பு தான் ஹமாசின் உண்மையான வலிமை இஸ்ரேல் வீரர்களுக்கு தெரிய வந்தது.

முதலில் கடந்த 12.07.14 அன்று எகிப்து ஆலோசனையில் பேரில் தன்னிச்சையான முறையில் போர் நிறுத்தத்தை அறிவித்து போரை நிறுத்திப் பார்த்தது இஸ்ரேல். ஆனால் ஹமாஸ் அதற்கு உடன்படாமல் தாக்குதல்களை தொடர்ந்தது.

பின்பு பாரிஸ் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தமது நிபந்தனைகளில் உறுதியாக நின்றதால் குடியிருப்பு பகுதிகளின் மீது குண்டுகளை வீசி ஆத்திரத்தை தீர்த்தது இஸ்ரேல்.

யுத்தத்தில் நேரடியாகவும், சுரங்கங்களின் வழியாக ஊடுறுவி உட்புகுந்தும் ஹமாஸ் தாக்குவதால் ஹமாஸ் கருத்துப்படி இதுவரை (09.8.14 ) 167 வீரர்களை இஸ்ரேல் இழந்துள்ளது. இஸ்ரேல் தரப்பில் மூன்று சிவிலியன்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் வீரர்களிடம் தோற்று ஓடும் இஸ்ரேல் வீரர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலங்களும், ராணுவத்தை விட்டே வீரர்கள் ஓடிய நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன.

கடந்த 2012 காசா – இஸ்ரேல் போருக்கு பின்பு   நூற்றுக்கணக்கான இஸ்ரேல் வீரர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தோற்றது ஏன்?

‘காசா – இஸ்ரேல் 2014’ போரில் இஸ்ரேல் மிக மோசமான முறையில் தோற்றுப் போனதற்கு மரணத்தை நேசிக்கும் ஹமாஸ் வீரர்களின் கரங்களில் இருந்த ஈரானின் ஆயுதங்கள் என்றால் மிகையில்லை.

ஈரானின் முன்னாள் ராணுவ தளபதியும் தற்போதைய ஈரான் அரசியல்வாதிகளில் ஒருவரான ‘முஹ்சின் ரிளாயி’ (Mohsen Rezaee  ) இன் கட்டுரை ‘ஈரானின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ‘யவ்ம் 7’ (www.youm7.com) நாளிதழில் வெளியாகி இருந்தது. அதில் அவர் கூறியதாவது,

“காசா பகுதியில் வாழும் மக்களை இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து காப்பதற்காகத் தான் ஹமாஸ் சுரங்கக் குழிகளை அமைத்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாசுக்கு ஆயுதங்களை வழங்கினோம். மேலும் வருங்காலத்தில் ராணுவ தொழில் நுட்பங்களை பாலஸ்தீன மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம். இதனால் உள்நாட்டில் பலமான ஆயுதங்களை பாலஸ்தீனர்களால் தயாரித்துக் கொள்ள முடியும். நிச்சயமாக ஈரான் இத்தகைய உதவிகளை வழங்க மிகுந்த ஆர்வமாகவே உள்ளது.” (அல்அரப் அல்யவ்ம் 05.08.14)

தோல்வியை ஒப்புக் கொண்ட இஸ்ரேல்

இப்போரில் பெரும்பாடுபட்டு போரை நிறுத்தியும் இஸ்ரேலுக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பே கிளம்பியுள்ளது.

2005 முதல் 2011 வரை இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷாபாக்கின் தலைவராக இருந்தவர் ‘யுவல் டிஸ்கின்’ (Yuval Diskin).

இவர் கடந்த சனிக்கிழமை 09.08.14 அன்று இஸ்ரேலிய தொலைக்காட்சியான ‘சேனல் 2 ’ க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

“இப்போரில் மிக மோசமான முறையில் இஸ்ரேல் தோற்றுப் போனதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், பாதுகாப்பு அமைச்சர் ‘மூஷி யாலோன்’ (Moshe Ya'alon) உம் தான் காரணம்.

கடந்த 05.08.14 அன்று போர் நிறுத்தம் செய்வது குறித்த செய்தியை  போர் முடிந்து விட்டது என்று கூறி இருவரும் மிக விரைவாக அறிவித்தது ஏன்? அதில் இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்?

அது மட்டுமல்ல.. இஸ்ரேலிய ராணுவத் தலைமைத் தளபதி ‘பென்னி ஜென்ட்ஸ்’ (Benny Gantz) மற்றும் தென்பகுதி கமாண்டர் ‘ஷ்லோமா தர்ஜமன்’ (Shlomo Turgeman) இருவரும் காசா மற்றும் தெற்கு பகுதிகளில் வாழும் மக்களை போர் முடியும் முன்பு வீடுகளுக்கு திரும்புமாறு அழைத்தது ஏன்?

இப்போரில் ராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஹமாசிடம் இஸ்ரேல் தோற்று விட்டது. சர்வதேச அரங்கில் மட்டுமல்ல.. இஸ்ரேலிய பொதுமக்கள் முன்பும் நெதன்யாகுவை ஹமாஸ் குற்றவாளியாக்கி விட்டது.

காசாவுக்கு எதிராக தொடங்கிய போர் எவ்வாறு பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதோ அதே போன்று 05.08.14 அறிவிக்கப்பட்ட 72 மணி நேர போர் நிறுத்தமும் பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது என்றார்.”

மேலும் இஸ்ரேலின் பல்வேறு தலைவர்களும் தோல்வியை ஒப்புக் கொண்டதோடு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இஸ்ரேலிய ஹிப்ரு தொலைக்காட்சியான ‘சேனல் 10’ பகிரங்கமாக தோல்வியை ஒப்புக் கொண்ட இஸ்ரேல் விமானப்படை முன்னாள் தலைவர் ‘அமாஸ் யத்லின்’ (Amos Yadlin) அவர்களில் முக்கியமானவர். அவர் கூறியதாவது,

“எந்த இலட்சியமும் இன்றி இப்போரில் இஸ்ரேல் பங்கேற்றுள்ளது. படாதபாடு பட்டு போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அதுவும் தற்காலிகமாக 72 மணி நேரம் மட்டும். போர் நிறுத்த கால அவகாசம் முடிந்ததும் பாருங்கள். வெள்ளிக்கிழமை காலை (08.08.14) ஹமாஸ் ஏவுகணைகளை எறிகின்றது. எவ்வளவு தைரியம் ஹமாசுக்கு. நாம் எங்கே நிற்கிறோம்? ஏன் இவ்வளவு அதள பாதாளத்தில் விழுந்தோம்?” (ரஃயுல் யவ்ம் 09.08.14)

ஹமாஸ் –எகிப்து பேச்சுவார்த்தை ஏன்?

ஹமாசுடன் நேரடியாக பேச மறுத்து வந்த எகிப்து வேறு வழியின்றி இஸ்ரேலுக்காக பேச்சுவார்த்தை நடத்தியது. ஹமாஸ் சார்பில் அதன் துணைத் தலைவர் அபூ மர்சூக், பதஹ் சார்பில் அஸ்ஸாம் அஹ்மத் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் நேரடியாக பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் முதலில் எகிப்து ஹமாசுடன் பேசுவது, பின்பு இஸ்ரேலுடன் பேசுவது என்று நடந்த இப்பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தனது நிபந்தனைகளில் இருந்து பின்வாங்கவில்லை.

05.08.14 முதல் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்த  ஹமாஸ் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டுமெனில், காசா முற்றுகையை கைவிட வேண்டும் என்று தெளிவாக கூறிவிட்டது.

08.08.14 வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் நிறைவுற்ற அன்று 56 எறிகணைகளை இஸ்ரேல் மீது எறிந்து இஸ்ரேலை சேதப்படுத்தியது ஹமாஸ்.

எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட்டால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டது இஸ்ரேல். முன்பெல்லாம் பதஹ் இயக்கத்தை விலைக்கு வாங்கி தங்களின் காரியத்தை இஸ்ரேலும், எகிப்தும் சாதித்துக் கொள்ளும். ஆனால் இப்போது யாரின் முன்பு பாலஸ்தீனர்களான நாங்கள் குனிய மாட்டோம் என்று அறிவித்து விட்டார் பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ்.

மேற்குகரை மக்களும், காசா மக்களும் உலகெங்கம் வாழும் இஸ்லாமியர்களும் ஹமாசின் முடிவுகளுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

இத்தணை நாட்கள் முனாஃபிக்குகளை பாலஸ்தீன மக்கள் நம்பி வந்த நிலைமை மாறியிருக்கின்றது.

பாலஸ்தீன மக்களுக்கு மெய்யான நண்பர்களாக கத்தாரும், துருக்கியும் கிடைத்திருக்கின்றன. மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடந்து, 10.08.14 அன்று தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் மனிதநேய உதவிகள்

இஸ்ரேல் – காசா போர் தொடங்கிய காலத்தில் இருந்து ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன மக்களின் சார்பில் சர்வதேச அரங்கில் வாதாடியவர் துருக்கி பிரதமர் டாக்டர் ரஜப் தய்யிப் எர்துகான்.


போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்பு காசா மக்களுக்கு தேவையான எல்லா வகையான உதவிகளையும் வழங்குவதில் துருக்கி அரசும், துருக்கி மக்களும் முன் நிற்கின்றனர்.

துருக்கி செம்பிறைச் சங்கத்தின் சார்பில் காசாவில் உள்ள ஐ.நா. பள்ளி வளாகத்தில் வைத்து 15000 பாலஸ்தீன குடும்பங்களுக்கு உணவுதண்ணீர் மற்றும் கம்பளிகள் வழங்கப்பட்டன.
இதனை துருக்கி செம்பிறைச் சங்கம் சனிக்கிழமை (09.09.14) தெரிவித்தது. ஏற்கனவே துருக்கி அரசு சார்பிலும்துருக்கி வாழ் வெளிநாட்டு மக்களின் சார்பிலும் கப்பல்களில் நிவாரண உதவிகள் காசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அரசு சாரா துருக்கி வாழ்வெளிநாட்டு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் மட்டும் 45 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

துருக்கியில் உள்ள 47 தொலைக்காட்சி சேனல்களும் உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
துருக்கி இமாம்கள் பள்ளிவாசல்களில் ரமழானிலும்ரமழானுக்கு பின்பும் காசா மக்களுக்கு உதவி புரியுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இமாம்களின் வேண்டுகோளை ஏற்று துருக்கி மக்கள் காசா மக்களுக்காக வாரி வழங்கியுள்ளனர்.
உணவுஉடைமருந்துகள்சிகிச்சைகள் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் அரசு சார்பில் பொறுப்பேற்றுள்ள நிலையில்இடிந்து போன கட்டிடங்களை சீரமைக்கும் பொறுப்பை கத்தார் ஏற்றுள்ளது.
எல்லா வகையான சிகிச்சைக்கும் பொறுப்பேற்கிறோம்- எர்துகான் அறிவிப்பு

போர் நிறுத்தம் செய்யப்பட்ட பின்பு கடந்த சனிக்கிழமை 09.08.14 அன்று எர்துகான் இவ்வாறு அறிவித்தார்.

காயமடைந்த அனைத்து காசா மக்களுக்கும் எல்லா வகையான சிகிச்சைக்கும் பொறுப்பேற்கிறோம்.

சாதாரண காயம் முதல் மிக மோசமான காயம் வரை பாதிப்படைந்த அனைத்து பாலஸ்தீன மக்களுக்கும் எல்லா வகையான சிகிச்சையையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம்.

காயமடைந்த பாலஸ்தீன சகோதரர்கள் அனைவருக்கும் எங்களால் சிகிச்சை தர இயலும். அதற்காக நாங்கள் கவலைப்படவில்லை.

பாலஸ்தீன மருத்துவமனைகளில் சிகிச்சைக்கான வசதி இல்லையெனில்அங்காராஇஸ்தான்பூல் என துருக்கியின் அனைத்து நகரங்களிலும் உள்ள அதிநவீன மருத்துவமனைகளுக்கு அவர்களை கொண்டு வந்து சிகிச்சை தர தயாராக உள்ளோம். இதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம்.
உயர் சிகிச்சை தேவைப்படும் மக்களை துருக்கி கொண்டு வர பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாசிடமும்இஸ்ரேல் தரப்பிலும் பேசியுள்ளோம்.
இப்போதைய போரில் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையில் இருநூறு குழந்தைகளையும்கிட்டதட்ட நூறு பெண்களையும் கொலை செய்துள்ளது.

மேலும் இரண்டாயிரம் குடும்பங்களின் வாழ்க்கை பாழாக்கப்பட்டு விட்டது. சுமார் 10,000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போரை நிறுத்த துருக்கி கடும் முயற்சி மேற்கொண்டதை குறிப்பிட்ட எர்துகான்எங்களின் நோக்கம் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதே. அதற்கான முறைப்படியான ஆணையை ஐ.நா.விடம் இருந்து விரைவாக எதிர்பார்க்கிறோம். ஐ.நாவின் ஆணை இது விஷயத்தில் எங்களின் பணியை இலகுவாக்கும் என்று கருதுகிறோம் என்றார் எர்துகான். (டெய்லி சபாஹ் 09.08.14)
உலகம் முழுவதும் பாலஸ்தீன மக்களுக்காக உதவ துடிக்கும் முஸ்லிம்களின் சார்பாக எல்லா வகையான உதவிகளையும்சிகிச்சைகளையும் அளிக்க முன்வந்து விட்டார் எர்துகான்.
ஏற்கனவே 72 மணி நேர போர் நிறுத்தத்தின் போது துருக்கியில் இருந்து உணவுதண்ணீர்மருந்துகள்மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எர்துகானின் இந்த அறிவிப்பு பாலஸ்தீன மக்களின் அவலங்களை நினைத்து துடித்துக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நமக்கு மிகுந்த ஆறுதலை தந்துள்ளது. ஏனெனில்இந்திய மக்களாகிய நாம் பாலஸ்தீன மக்களுக்கு எந்த வகையிலும் உதவ இயலாத நிலையில் உள்ளோம்.
நமது இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகள் அனைத்துக்கும் இந்துத்துவ சக்திகளே காரணம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கிய நூல் கர்கரேயை கொலை செய்தது யார்?’எனும் நூல். மகராஷ்டிர முன்னாள் காவல்துறை தலைவர் முஷ்ரிஃப் அவர்கள் எழுதிய இந்நூலை வெளிக்கொண்டு வர உதவியவர் மஜ்லிசே முஷாவரத் தலைவர் டாக்டர் ஜபருல் இஸ்லாம் கான் அவர்கள்.
அவர் கூறியதாக வைகறை வெளிச்சம் ஆசிரியர் அண்ணன் மு. குலாம் முஹம்மது என்னிடம் சொன்னார்.
நமது இந்திய முஸ்லிம்களில் பலர் காசா மக்களுக்கு உதவ முன்வந்தும் இந்திய அரசு அனுமதி தரவில்லை. பண உதவியை மட்டுமல்ல. மருந்துகள்மருத்துவ உபகரணங்கள் அனுப்பக்கூட அனுமதிக்கவில்லை என்றார்.
பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலையில் உள்ளோமே என்று இந்திய முஸ்லிம்களாகிய நாம் ஏங்கி வந்த நிலையில்எர்துகானின் அறிவிப்பு நமது ஏக்கத்தை தணித்துள்ளது.
அல்லாஹ் துருக்கி நாட்டுக்கும்எர்துகானுக்கும்கத்தாருக்கும்அந்நாட்டு அமீருக்கும் உதவி செய்வானாக..ரூஹுல் அமீனைக் கொண்டு அவர்களை பலப்படுத்துவானாக...

தொடர்புக்கு: abulhasanf@gmail.com




































Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.