பாவம் செய்தல் மனிதனின் பிறப்பு அம்சங்களில் ஒன்று. மனிதன் மலக்கு அல்ல அவன் பாவத்தை அறியாமல், தெரியாமல் இருப்பதற்கு.

இஸ்லாம் மனிதனை மனிதனாகத் தான் பார்க்கின்றது. அவன் நல்லதையும் அறிந்தவன். கெட்டதையும் தெரிந்தவன் என்ற கண்ணோட்டத்தில் தான் மனிதனை அணுகுகிறது.

நல்லதை மட்டும் அறிந்த வானவர்களாக மனிதர்களை இஸ்லாம் பார்க்கவில்லை. அவ்வாறே நல்லது கெட்டது எது? என்று அறியாத விலங்குகளின் பட்டியலிலும் அவர்களை சேர்க்கவில்லை.

பாவம் செய்யும் இயல்பில் மனிதன் படைக்கப்பட்டதாக கூறும் இஸ்லாம் பாவ மன்னிப்பின் வாசல்களை அவனுக்காக திறந்தே வைத்துள்ளது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا رواه مسلم

படைத்த ஏக இறைவன் அல்லாஹ் திருக்குர்ஆனில் பல இடங்களில் தன்னை மன்னிப்பாளன்என்று கூறுவதின் நோக்கமும் இது தான்.

பாவ மன்னிப்பு தேடுங்கள்

பாவம் செய்த மனிதன் உடனே இறைவனிடம் மன்னிப்பு தேட வேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு மூன்று நிபந்தனைகளை கூறியுள்ளது.

1.செய்த பாவத்திற்காக வருந்துதல். இப்படியொரு பாவகரமான செயலை செய்து விட்டோமே என்று வருத்தப்படுவது.

நிச்சயமாக இது திருந்துவதற்கு வழிவகுக்கும். ஆதலால் தான் இவ்வாறு வருத்தப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْكَرِيمِ قَالَ أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَبِي مَرْيَمَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلِ بْنِ مُقَرِّنٍ قَالَ
دَخَلْتُ مَعَ أَبِي عَلَى عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَقَالَ أَنْتَ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ النَّدَمُ تَوْبَةٌ قَالَ نَعَمْ وَقَالَ مَرَّةً سَمِعْتُهُ يَقُولُ النَّدَمُ تَوْبَةٌ رواه احمد
2.ஏற்கனவே இருந்த நிலையை விட்டு நீங்குதல்
பாவம் செய்தவன் அவன் பாவ மன்னிப்பை இறைவனிடம் பெற வேண்டுமெனில், முதலில் தமது பாவத்தை கைவிட வேண்டும். பாவம் செய்து கொண்டே பாவ மன்னிப்பு தேடுதல் என்பது நகைப்புக்குரியதாகும்.

3. இனிமேல் அப்பாவத்தை செய்யவே கூடாது என்று உறுதி கொள்வதாகும்.

இம்மூன்றையும் பாவ மன்னிப்பு ஏற்கப்படுவதில் இஸ்லாம் நிபந்தனையிடுகிறது. இறைவனுக்கு இணை வைப்பதைத் தவிர எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுவதாகவே இஸ்லாம் கூறுகிறது.

பாவ மன்னிப்பு வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் தானா?

மனிதனுக்கு பாவ மன்னிப்பினை ஒருமுறை மட்டும் இஸ்லாம் வழங்கவில்லை.

மனிதன் எத்தனை முறை பாவங்கள் செய்தாலும் அத்தனை முறையும் பாவ மன்னிப்பின் வாசல்களை இஸ்லாம் திறந்தே வைத்துள்ளது.

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ قَالَ
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ عَبْدًا أَصَابَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ وَرُبَّمَا قَالَ أَصَبْتُ فَاغْفِرْ لِي فَقَالَ رَبُّهُ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَصَابَ ذَنْبًا أَوْ أَذْنَبَ ذَنْبًا فَقَالَ رَبِّ أَذْنَبْتُ أَوْ أَصَبْتُ آخَرَ فَاغْفِرْهُ فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثُمَّ مَكَثَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أَذْنَبَ ذَنْبًا وَرُبَّمَا قَالَ أَصَابَ ذَنْبًا قَالَ قَالَ رَبِّ أَصَبْتُ أَوْ قَالَ أَذْنَبْتُ آخَرَ فَاغْفِرْهُ لِي فَقَالَ أَعَلِمَ عَبْدِي أَنَّ لَهُ رَبًّا يَغْفِرُ الذَّنْبَ وَيَأْخُذُ بِهِ غَفَرْتُ لِعَبْدِي ثَلَاثًا فَلْيَعْمَلْ مَا شَاءَ رواه البخاري

யாரின் பாவங்களையும் யாரும் சுமக்க மாட்டார்.

قال الله تعالي: وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى 6:164

இவ்வசனம் திருக்குர்ஆனில் ஐந்து இடங்களில் பெறுகிறது. யாரும் யாருடைய பாவங்களையும் சுமக்கவில்லை என்றே திருக்குர்ஆன் அறுதியிட்டு கூறுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் பாவத்திற்கு அவரவரே பொறுப்பு என்றே திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்வுலக வாழ்வில் ஒருவரின் பாவத்திற்கு இன்னொருவர் பொறுப்பேற்க இயலாது. அவரவர் பாவத்திற்கு அவரவரே பொறுப்பு.

கிறிஸ்தவத்தில் எல்லோரின் பாவங்களுக்காகவும் இயேசு சிலுவையில் தன்னை மாய்த்தார்என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.

இவ்வாசகத்தை யோசித்து பார்த்தே தான் இஸ்லாத்தை ஏற்றதாக கூறுவார் தற்போது அமெரிக்காவில் இஸ்லாமிய அழைப்பாளராக பணியாற்றி வரும் ஜெர்மெய்ன் போடி அவர்கள். (இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கான காரணத்தை இம்மாத  (மே 2013 ) வைகறை வெளிச்சம் பத்திரிக்கையில் ‘நான் ஏன் முஸ்லிமானேன்’ எனும் தலைப்பில் விரிவாக எழுதியுள்ளேன்.)

எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும் ஷிர்க்கைத் தவிர

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ شُعْبَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ قَتَلَ تِسْعَةً وَتِسْعِينَ إِنْسَانًا ثُمَّ خَرَجَ يَسْأَلُ فَأَتَى رَاهِبًا فَسَأَلَهُ فَقَالَ لَهُ هَلْ مِنْ تَوْبَةٍ قَالَ لَا فَقَتَلَهُ فَجَعَلَ يَسْأَلُ فَقَالَ لَهُ رَجُلٌ ائْتِ قَرْيَةَ كَذَا وَكَذَا فَأَدْرَكَهُ الْمَوْتُ فَنَاءَ بِصَدْرِهِ نَحْوَهَا فَاخْتَصَمَتْ فِيهِ مَلَائِكَةُ الرَّحْمَةِ وَمَلَائِكَةُ الْعَذَابِ فَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَقَرَّبِي وَأَوْحَى اللَّهُ إِلَى هَذِهِ أَنْ تَبَاعَدِي وَقَالَ قِيسُوا مَا بَيْنَهُمَا فَوُجِدَ إِلَى هَذِهِ أَقْرَبَ بِشِبْرٍ فَغُفِرَ لَهُ
رواه البخاري

திருந்தியவனை குறை கூறக்கூடாது

கடந்த காலத்தில் தவறு செய்து விட்டு பின்பு ஒருவன் திருந்தி வாழ தொடங்கி விட்டான் எனில், அவனை கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டி குறை கூறுவதை இஸ்லாம் ஏற்கவில்லை..

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا بَشِيرُ بْنُ الْمُهَاجِرِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ
أَنَّ مَاعِزَ بْنَ مَالِكٍ الْأَسْلَمِيَّ أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ ظَلَمْتُ نَفْسِي وَزَنَيْتُ وَإِنِّي أُرِيدُ أَنْ تُطَهِّرَنِي فَرَدَّهُ فَلَمَّا كَانَ مِنْ الْغَدِ أَتَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَرَدَّهُ الثَّانِيَةَ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى قَوْمِهِ فَقَالَ أَتَعْلَمُونَ بِعَقْلِهِ بَأْسًا تُنْكِرُونَ مِنْهُ شَيْئًا فَقَالُوا مَا نَعْلَمُهُ إِلَّا وَفِيَّ الْعَقْلِ مِنْ صَالِحِينَا فِيمَا نُرَى فَأَتَاهُ الثَّالِثَةَ فَأَرْسَلَ إِلَيْهِمْ أَيْضًا فَسَأَلَ عَنْهُ فَأَخْبَرُوهُ أَنَّهُ لَا بَأْسَ بِهِ وَلَا بِعَقْلِهِ فَلَمَّا كَانَ الرَّابِعَةَ حَفَرَ لَهُ حُفْرَةً ثُمَّ أَمَرَ بِهِ فَرُجِمَ قَالَ فَجَاءَتْ الْغَامِدِيَّةُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ زَنَيْتُ فَطَهِّرْنِي وَإِنَّهُ رَدَّهَا فَلَمَّا كَانَ الْغَدُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ لِمَ تَرُدُّنِي لَعَلَّكَ أَنْ تَرُدَّنِي كَمَا رَدَدْتَ مَاعِزًا فَوَاللَّهِ إِنِّي لَحُبْلَى قَالَ إِمَّا لَا فَاذْهَبِي حَتَّى تَلِدِي فَلَمَّا وَلَدَتْ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي خِرْقَةٍ قَالَتْ هَذَا قَدْ وَلَدْتُهُ قَالَ اذْهَبِي فَأَرْضِعِيهِ حَتَّى تَفْطِمِيهِ فَلَمَّا فَطَمَتْهُ أَتَتْهُ بِالصَّبِيِّ فِي يَدِهِ كِسْرَةُ خُبْزٍ فَقَالَتْ هَذَا يَا نَبِيَّ اللَّهِ قَدْ فَطَمْتُهُ وَقَدْ أَكَلَ الطَّعَامَ فَدَفَعَ الصَّبِيَّ إِلَى رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ ثُمَّ أَمَرَ بِهَا فَحُفِرَ لَهَا إِلَى صَدْرِهَا وَأَمَرَ النَّاسَ فَرَجَمُوهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ رواه مسلم



One Comment

  1. அறுமையான செய்தி புதிய கண்ணோட்டம்

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.