அல்லாஹ்வின் மகத்தான அருளால் நாளை இரவு அல்லது நாளை மறுநாள் இரவு இன்ஷா அல்லாஹ் நாம் பரக்கத்தான ரஜப் மாதத்தை அடைய உள்ளோம்.

ரஜப் மாதம் வந்து விட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு துஆ செய்வார்களாம்.

حدثنا علي بن سعيد الرازي قال : نا عبد السلام بن عمر الجني قال : نا زائدة بن أبي الرقاد قال : نا زياد النميري ، عن أنس بن مالك قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال : « اللهم بارك لنا في رجب ، وشعبان ، وبلغنا رمضان »
رواه الطبراني في المعجم الاوسط

நன்மைகளின் ஊற்றாக திகழும் மாதம் புனித ரமழான் மாதம். இன்னும் இரண்டு மாதங்களில் ரமழான் வந்து விடும் என்று அறிவிப்பு செய்யும் மாதம் தான் ரஜப் மாதம்.

ரஜப் மாதம் வந்தவுடன் மேற்கண்ட துஆவை நபி (ஸல்) ஓதியுள்ளார்கள்.


இங்கே இந்த துஆவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரஜப் மற்றும் ஷஅபான் மாதங்களில் பரக்கத்தை படைத்த இறைவனிடம் கேட்கிறார்கள்.

பரக்கத் என்ற பதத்திற்கு அருள், அபிவிருத்தி, நற்பாக்கியம் என்று பல அர்த்தங்கள் உண்டு.

இவ்விடம் இந்நபிமொழியில் இடம் பெறும் ‘பரக்கத்’ எனும் சொல்லுக்கு நிஃமத் (அருள்) என்ற பொருளை தந்தோமெனில், நிஃமத்களில் சிறந்த நிஃமத்தான ஆரோக்கியத்தை நபி (ஸல்) கேட்டதாக நாம் பொருள் கொள்ளலாம்.
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ رواه البخاري

அவ்வாறு தந்தோமெனில், ‘ரஜப் மாதத்திலும், ஷஅபான் மாதத்திலும் ஆரோக்கியத்தை தருவாயாக’ என்று பொருள் கிடைக்கும்.

உண்மையில் ரமழானை நாம் முழுமையாக அனுபவிப்பதற்கும், அதில் முழு அளவில் அமல் செய்வதற்கும் ஆரோக்கியம் தேவை.

ஆதலால் தான் முந்தைய இரண்டு மாதங்களிலும் ஆரோக்கியத்தை கேட்டார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

எனவே நாம் இப்போதிருந்தே ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். துஆ கேட்பதோடு இந்த இரண்டு மாதங்களிலும் உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும்.

பல்வேறு நோய்கள் நடமாடி வரும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். புதிய புதிய பெயர்களில் புதிய புதிய நோய்கள். சில நோய்களின் பெயர்கள் கூட வாயில் நுழைவதில்லை.

எனவே ரமழலான் வீணாகாமல், ரமழானின் நன்மைகள் வீணாகாமல் இருக்க ஆரோக்கியம் அவசியம்.
மேற்கண்ட துஆ ரமழானுக்கு முன்பு நமக்கு ஆரோக்கியத்தை தர போதுமானது.

புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தில் பரக்கத்

பரக்கத் என்ற சொல்லுக்கு அருள் எனும் பொருள் இருப்பது போன்று ‘அபிவிருத்தி’ என்ற பொருளும் இருக்கின்றது.

மனிதர்களின் வாழ்வில், பொருளில், ஆயுளில், நேரத்தில், சந்ததியில், வாழ்வாதாரத்தில் பரக்கத் கண்டிப்பாக தேவை.

குறிப்பாக வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வேளைகளில் கண்டிப்பாக அபிவிருத்தி இருக்க வேண்டும்.

திருமணமும் பரக்கத்தும்

அந்த அடிப்படையில் தான் திருமணத்தின் போது மணமக்களை இவ்வாறு வாழ்த்த கற்றுத் தந்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ رواه ابو داود والترمذي

ஏனெனில், திருமணம் மணமக்கள் இருவருக்கும் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்.

ஆதலால் இருவருக்கும் பரக்கத்திற்கு துஆ செய்யுமாறு கூறப்பட்டது.

புதிய ஊரின் வாழ்க்கையும் பரக்கத்தும்

தொழிலுக்காக அல்லது இன்ன பிற தேவைகளுக்காக ஒரு ஊரில் அல்லது ஒரு வீட்டில் புதிதாக குடியேறுகிறோம் எனில், நிச்சயமாக அது ஒரு தொடக்கம். அதில் அபிவிருத்தியும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும்.

மதீனாவுக்கு வந்த ஆரம்பத்தில் சில நபித்தோழர்களுக்கு மதீனா நகரம் ஒத்துக் கொள்ளவில்லை. அபூபக்கர் (ரழி), பிலால் (ரழி) போன்ற நபித்தோழர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

அப்போது மதினா நகரத்தின் விளைச்சல் பொருட்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் பரக்கத் செய்யுமாறு அல்லாஹ்விடம் நபி (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள்.

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وُعِكَ أَبُو بَكْرٍ وَبِلَالٌ فَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الْحُمَّى يَقُولُ كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ
وَالْمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ
وَكَانَ بِلَالٌ إِذَا أُقْلِعَ عَنْهُ الْحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يَقُولُ أَلَا لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً
بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ
وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ
وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ
قَالَ اللَّهُمَّ الْعَنْ شَيْبَةَ بْنَ رَبِيعَةَ وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ كَمَا أَخْرَجُونَا مِنْ أَرْضِنَا إِلَى أَرْضِ الْوَبَاءِ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَفِي مُدِّنَا وَصَحِّحْهَا لَنَا وَانْقُلْ حُمَّاهَا إِلَى الْجُحْفَةِ قَالَتْ وَقَدِمْنَا الْمَدِينَةَ وَهِيَ أَوْبَأُ أَرْضِ اللَّهِ قَالَتْ فَكَانَ بُطْحَانُ يَجْرِي نَجْلًا تَعْنِي مَاءً آجِنًا
رواه البخاري
قَوْله : ( قَالَتْ فَكَانَ بُطْحَان )
يَعْنِي وَادِي ، الْمَدِينَة
قَوْله : ( تَعْنِي مَاء آجِنًا )
بِفَتْحِ الْهَمْزَة وَكَسْر الْجِيم بَعْدهَا نُون أَيْ مُتَغَيِّرًا

ரமழான் ஒரு புதிய அத்தியாயம்

ரமழான் மனித வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும்.

மனிதன் வருடம் முழுவதும் செய்யும் பாவங்களுக்கு பரிகாரத்தை தந்து வாழ்க்கையில்  புதியதொரு அத்தியாத்தை அம்மாதம் தொடங்கி வைக்கும்.

அழிவுக்கு பின்பு புதிய வாழ்க்கையை தொடங்கிய நபி நூஹ் (அலை) அவர்களிடம் வல்லோன் அல்லாஹ் பரக்கத்தை நற்செய்தியாக கூறியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

قال الله تعالي: قِيلَ يَا نُوحُ اهْبِطْ بِسَلَامٍ مِنَّا وَبَرَكَاتٍ عَلَيْكَ وَعَلَى أُمَمٍ مِمَّنْ مَعَكَ وَأُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِنَّا عَذَابٌ أَلِيمٌ 11:48
அது போன்றே ரமழான் பாவங்களை அழித்து புதிய பல நன்மைகளை தருகிறது.

ரமழானிலும் - ரமழானுக்கு பின்பும் முஸ்லிம்களின் வாழ்வில் வசந்தம் வீச வேண்டும். அதற்கு அருளும் அபிவிருத்தியும் தேவை. அத்தகைய அருளை , அபிவிருத்தியை நாம் அல்லாஹ்விடத்தில் மேற்கண்ட நபி (ஸல்) அவர்கள் ஓதிய துஆவின் மூலம் நாம் கேட்போம்.

ரஜபை கண்ணியப்படுத்துவோம்

وأخبرنا أبو عبد الله الحافظ ، حدثنا خلف بن محمد الكرابيسي ، ببخارى ، حدثنا حفص بن أحمد بن نصير ، حدثني جدي نصير بن يحيى ، حدثنا عيسى بن موسى ، عن نوح بن أبي مريم ، عن زيد العمي ، عن يزيد الرقاشي ، عن أنس بن مالك ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « خيرة الله من الشهور شهر رجب وهو شهر الله ، من عظم شهر الله رجب فقد عظم أمر الله ، ومن عظم أمر الله أدخله جنات النعيم ، وأوجب له رضوانه الأكبر ، وشعبان شهري فمن عظم شهر شعبان فقد عظم أمري ، ومن عظم أمري كنت له فرطا (1) وذخرا يوم القيامة ، وشهر رمضان شهر أمتي فمن عظم شهر رمضان ، وعظم حرمته ولم ينتهكه ، وصام نهاره ، وقام ليله ، وحفظ جوارحه خرج من رمضان وليس عليه ذنب يطلبه الله به » . قال الإمام أحمد : « هذا إسناد منكر بمرة ، وقد روي عنه عن أنس غير هذا تركته فقلبي نافر عن رواية المناكير التي أتوهمها لا بل أعلمها موضوعة والله يغفر لنا برحمته ، وأما الحديث الذي »
رواه البيهقي في شعب الايمان


 

Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.