(குறிப்பு: 11.01.2013 தொடங்கவுள்ள சென்னை புத்தக கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பு நூலான ‘இஸ்லாமிய வழியில் நேர நிர்வாகம்’ நூல் சாஜிதா வெளியீட்டில் வெளிவர உள்ளது. அல்லாஹ் நிறைவானவன்)

உயிருக்கு உயிரான உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த ரபீஉல் அவ்வல் மாதம் நம்மை வந்தடைய இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக இவ்வருடம் அம்மாதம் திங்கட்கிழமை தொடங்குவது சிறப்பினில் இன்னொரு சிறப்பாகும். ஏனெனில் திங்கட்கிழமை அண்ணல் (ஸல்) அவர்கள் இப்பூலகில் பிறந்த தினமாகும்.

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ رواه مسلم

இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுணர்வோடு நமது நாயகம் (ஸல்) அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

மக்களை நேர்வழிப்படுத்திட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் அவர்கள் உயர்வானவர்கள் மட்டுமல்ல…
எல்லா இறைத்தூதர்களைக் காட்டிலும் தமது உம்மத்திற்காக அதிகம் உழைத்தவர்களும் கூட.
ஆம்! நமக்காக , இந்த உம்மத்திற்காக தமது வாழ்க்கை முழுவதையும் அவர்கள் அர்ப்பணித்து வாழ்ந்தார்கள்.

வாழ்க்கையின் விளிம்பில், மரணப் படுக்கையில் இருந்த போதும் தமது உம்மத்தை நினைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்)

மரண வேதனை மற்றவர்களைக் காட்டிலும் கடினமாகவே அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இருந்தது.

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ عَنْ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ
دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلَانِ رواه البخاري 4663
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் கடும் வேதனையில் இருந்தார்கள். அன்னாரின் கைகளை நான் தொட்டு கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடின வேதனையில் இருக்கிறீர்கள்?
நபி (ஸல்) சொன்னார்கள். ஆம்! உங்களில் இருவரின் வேதனை எனக்கு தரப்பட்டிருக்கின்றது.” (நூல்: புகாரி)

அந்த கடின நிலையில் தான் தனது உம்மத்தை நினைத்தார்கள் அண்ணல் நபி (ஸல்)

قال رسول الله صلعم لجبريل : مَنْ لأُمَّتِي الْمُصْفَاةِ مِنْ بَعْدِي ؟ قَالَ : أَبْشِرْ يَا حَبِيبَ اللَّهِ ، فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ ، يَقُولُ : " قَدْ حُرِّمَتِ الْجَنَّةُ عَلَى جَمِيعِ الأَنْبِيَاءِ وَالأُمَمِ حَتَّى تُدَاخِلَهَا أَنْتَ وَأُمَّتُكَ يَا مُحَمَّدُ " ، قَالَ : " الآنَ طَابَتْ نَفْسِي  رواه الطبراني في المعجم الكبير 2610
“மரண சமயத்தில் ஜிப்ரில் (அலை) அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத் குறித்து வினவுகிறார்கள்.
ஜிப்ரில் (அலை) கூறுகிறார்கள். நீங்களும், உங்களின் உம்மத்தும் சுவர்க்கத்தில் நுழையும் வரை மற்ற நபிமார்கள் மற்றும் அவர்களின் உம்மத் அதில் நுழைய முடியாது.
நபி (ஸல்) கூறினார்கள். இப்போது தான் எனது ஆத்மா மணமடைகிறது.” (நூல் : தப்ரானி)

மறுமையிலும் நமக்காக மன்றாடும் மாநபி

மறுமை நாளில் இந்த உம்மத்திற்காக அல்லாஹ்விடம் மன்றாடி போராடுபவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல.. நபிமார்கள் கூட  يا نفسي-  يا نفسي (நான்- நான்) என்று கூறிக் கொண்டிருக்கும் நாள் அது.
அந்நாளில் يا امتي – يا امتي   (எனது உம்மத் – எனது உம்மத்) என்று அல்லாஹ்விடம் சஜ்தாவில் இருந்த நிலையில் மன்றாடுவார்கள். நரகத்திற்கு தகுதியானவர்களை நரகில் இருந்து மீட்டுவார்கள் நமது  நபி (ஸல்).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أُتِيَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَشَ مِنْهَا نَهْشَةً ثُمَّ قَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ يُسْمِعُهُمْ الدَّاعِي وَيَنْفُذُهُمْ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ وَالْكَرْبِ مَا لَا يُطِيقُونَ وَلَا يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ فَيَأْتُونَ آدَمَ عَلَيْهِ السَّلَام فَيَقُولُونَ لَهُ أَنْتَ أَبُو الْبَشَرِ خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَمَرَ الْمَلَائِكَةَ فَسَجَدُوا لَكَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ أَلَا تَرَى إِلَى مَا قَدْ بَلَغَنَا فَيَقُولُ آدَمُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ نَهَانِي عَنْ الشَّجَرَةِ فَعَصَيْتُهُ نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى نُوحٍ فَيَأْتُونَ نُوحًا فَيَقُولُونَ يَا نُوحُ إِنَّكَ أَنْتَ أَوَّلُ الرُّسُلِ إِلَى أَهْلِ الْأَرْضِ وَقَدْ سَمَّاكَ اللَّهُ عَبْدًا شَكُورًا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي عَزَّ وَجَلَّ قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنَّهُ قَدْ كَانَتْ لِي دَعْوَةٌ دَعَوْتُهَا عَلَى قَوْمِي نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى إِبْرَاهِيمَ فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ يَا إِبْرَاهِيمُ أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنْ أَهْلِ الْأَرْضِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ لَهُمْ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَدْ كُنْتُ كَذَبْتُ ثَلَاثَ كَذِبَاتٍ فَذَكَرَهُنَّ أَبُو حَيَّانَ فِي الْحَدِيثِ نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُوسَى فَيَأْتُونَ مُوسَى فَيَقُولُونَ يَا مُوسَى أَنْتَ رَسُولُ اللَّهِ فَضَّلَكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلَامِهِ عَلَى النَّاسِ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَإِنِّي قَدْ قَتَلْتُ نَفْسًا لَمْ أُومَرْ بِقَتْلِهَا نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى عِيسَى ابْنِ مَرْيَمَ فَيَأْتُونَ عِيسَى فَيَقُولُونَ يَا عِيسَى أَنْتَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَكَلَّمْتَ النَّاسَ فِي الْمَهْدِ صَبِيًّا اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَيَقُولُ عِيسَى إِنَّ رَبِّي قَدْ غَضِبَ الْيَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ قَطُّ وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ وَلَمْ يَذْكُرْ ذَنْبًا نَفْسِي نَفْسِي نَفْسِي اذْهَبُوا إِلَى غَيْرِي اذْهَبُوا إِلَى مُحَمَّدٍ فَيَأْتُونَ مُحَمَّدًا فَيَقُولُونَ يَا مُحَمَّدُ أَنْتَ رَسُولُ اللَّهِ وَخَاتِمُ الْأَنْبِيَاءِ وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ أَلَا تَرَى إِلَى مَا نَحْنُ فِيهِ فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ أُمَّتِي يَا رَبِّ فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لَا حِسَابَ عَلَيْهِمْ مِنْ الْبَابِ الْأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنْ الْأَبْوَابِ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَحِمْيَرَ أَوْ كَمَا بَيْنَ مَكَّةَ وَبُصْرَى رواه البخاري 4343
உம்மத்தின்  மீதான நபியின் பாசம்

இந்த உம்மத்தின் மீது  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வைத்திருந்த பாசம் அளவிடற்கரியது.

ஒரு தந்தை தமது பிள்ளையின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட , ஒரு தலைவர் தமது சமுதாயத்தவர்கள் மீது வைத்திருக்கும் பாசத்தை விட, ஓர் ஆட்சியாளர் தமது குடிமக்களின் மீது வைத்திருக்கும் பாசத்தை விட பன்மடங்கு பெரிதான பாசத்தை தமது உம்மத்தின் மீது வைத்திருந்தார்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.

அல்லாஹ் அல்-குர்ஆனில் அதனை இவ்வாறு கூறுவான்.
قال الله تعالي: بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ 9:128

இறுதி ஹஜ்ஜில் நமக்காக மன்றாடிய அண்ணல் நபி(ஸல்)

பிரார்த்தனை ஒப்புக் கொள்ளப்படும் நேரமும், இடமும் ஒருங்கே பெற்ற அமல் ஹஜ்ஜுடைய அமலாகும்.

அதிலும் உம்மத்தையே நினைத்தார்கள். உம்மத்திற்காகவே பிரார்த்தனை செய்தார்கள்.

حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْهَاشِمِيُّ حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ السُّلَمِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ كِنَانَةَ بْنِ عَبَّاسِ بْنِ مِرْدَاسٍ السُّلَمِيُّ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا لِأُمَّتِهِ عَشِيَّةَ عَرَفَةَ بِالْمَغْفِرَةِ فَأُجِيبَ إِنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ مَا خَلَا الظَّالِمَ فَإِنِّي آخُذُ لِلْمَظْلُومِ مِنْهُ قَالَ أَيْ رَبِّ إِنْ شِئْتَ أَعْطَيْتَ الْمَظْلُومَ مِنْ الْجَنَّةِ وَغَفَرْتَ لِلظَّالِمِ فَلَمْ يُجَبْ عَشِيَّتَهُ فَلَمَّا أَصْبَحَ بِالْمُزْدَلِفَةِ أَعَادَ الدُّعَاءَ فَأُجِيبَ إِلَى مَا سَأَلَ قَالَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَالَ تَبَسَّمَ فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنَّ هَذِهِ لَسَاعَةٌ مَا كُنْتَ تَضْحَكُ فِيهَا فَمَا الَّذِي أَضْحَكَكَ أَضْحَكَ اللَّهُ سِنَّكَ قَالَ إِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيسَ لَمَّا عَلِمَ أَنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَدْ اسْتَجَابَ دُعَائِي وَغَفَرَ لِأُمَّتِي أَخَذَ التُّرَابَ فَجَعَلَ يَحْثُوهُ عَلَى رَأْسِهِ وَيَدْعُو بِالْوَيْلِ وَالثُّبُورِ فَأَضْحَكَنِي مَا رَأَيْتُ مِنْ جَزَعِهِ
رواه ابن ماجه  3004

சிறப்பு துஆவை உம்மத்திற்காக பயன்படுத்தும் நபி (ஸல்)
 عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ نَبِيٍّ سَأَلَ سُؤْلًا أَوْ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ قَدْ دَعَا بِهَا فَاسْتُجِيبَ فَجَعَلْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ رواه البخاري  ومسلم

நம்மை தனது சகோதரர்கள் என்று குறிப்பிட்ட நபி (ஸல்)

أَخْبَرَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ إِخْوَانَنَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا إِخْوَانَكَ قَالَ بَلْ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانِي الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ رواه النسائي 150

நபித்துவத்திற்கு சஹாபிகள் தந்த மரியாதை

இவ்விடம் சங்கைக்குரிய சஹாபிகளை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நபியின் சொற்களை நேரடியாக அல்லது பிறர் மூலமாக செவிமடுத்த அடுத்த கணமே அதனை செயல்படுத்த முன் வந்தார்கள்.

நபிக்கு பிடிக்கவில்லை என்பதனால் கட்டிய வீட்டை இடித்தவர்களும் அவர்களில் உண்டு.

விலையுயர்ந்த ஆடையை எரித்தவர்களும் அவர்களில் இருக்கவே செய்கின்றனர்.

தங்க ஆபரணத்தை தூக்கி எறிந்தவர்களும் அவர்களில் உண்டு.

எல்லாவற்றையும் நபியிடம் தந்து விட்டு இதயத்தில் அவர்களை சுமந்தவர்களும் அவர்களில் உண்டு.

நபியின் மரணத்திற்கு பின்பும் அன்னாரை மறவாத சஹாபிகள்

நபியின் மரணத்திற்கு பின்பும் அன்னார் விட்டுச் சென்ற பணிகளை மறவாமல் நபித்துவத்தின் பணிகளை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தார்கள் அருமை சஹாபிகள்.

அதில் எந்தக் குறையையும் அவர்கள் வைக்கவில்லை.
வரலாற்று வானில் மின்னும் ஒரு நிகழ்வு

جاء رجل إلى أبي عبيدة فقال: إني قد تهيأت لامري فهل لك من حاجة إلى رسول الله صلى الله عليه وسلم ؟ قال: نعم، تقرئه عني السلام وتقول: يا رسول الله إنا قد وجدنا ما وعدنا ربنا حقا.(البداية والنهاية)

“யர்மூக் யுத்தத்தின் போது ஒரு நிகழ்வு. ஒரு மனிதர் தலைமைத் தளபதி அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடம் வந்து, நான் மரணத்திற்கு தயாராகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்கு ஏதேனும் செய்தி இருக்கின்றதா? என்று கேட்டார்.
அபூ உபைதா (ரழி) அவர்கள் அந்நபரிடம் சொன்னார்கள். நபிக்கு என்னுடைய ஸலாமை கூறுங்கள். பின்பு அல்லாஹ்வின் தூதரே.. எங்களின் இறைவன் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று கூறுங்கள்..” (நூல்: அல் பிதாயா வன் நிஹாயா )

(இங்கே நமது காலமாக மட்டும் இருந்தால் மரணமானவுடன் நபியை சந்திப்பதா? மறுமையில் தானே சந்திக்க முடியும்.. என்று பெரிய விவாதமே நடந்திருக்கும்)

நபி நம்மிடம் எதிர்பார்ப்பது எது?

நம் மீது , இந்த உம்மத்தின் மீது இத்துணை பாசம் வைத்திருந்த நமது நபி (ஸல்) அவர்களின் மீது நாம் எத்துணை மகத்தானதொரு பாசம் கொண்டிருக்க வேண்டும்.?

அவர்களுக்கு நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் தந்து வாழ வேண்டும்?

அவர்களின் வார்த்தைகளை எந்தளவுக்கு இதயங்களில் சுமந்து வாழ வேண்டும்?

நம்மை நாம் ஏறிட்டுப் பார்க்க வேண்டும். நபியின் வாழ்க்கை மெய்யான முறையில் நம்மிடம் வந்துள்ளதா?

அவர்களின் வார்த்தைகளுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.?

நபித்துவத்திற்கு நாம் தரும் மரியாதை தான் என்ன?

சங்கைக்குரிய சஹாபிகள் நபியை மதித்தார்கள், நபித்துவத்தை மதித்தார்கள், நபியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார்கள் என்றால் ஒன்றை கவனத்தில் வைக்க வேண்டும்.

நமது நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்காக மட்டும் உழைக்கவில்லை. சஹாபாக்களின் மீது மட்டும் பாசம் வைக்கவில்லை.

நமக்காகவும் தான் உழைத்தார்கள், நம் மீதும் தான் பாசம் வைத்திருந்தார்கள்.

பொய் – பித்தலாட்டங்கள், நேர்மையற்ற சம்பாத்தியங்கள், உலகமே கதி என்ற வாழ்க்கை, மார்க்கத்தின் மீது சிறிளவும் அர்ப்பணிப்பு உணர்வற்ற வாழ்க்கை இது தானே இன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையாக உள்ளது.


பள்ளிவாசல்களில் ஊழல் நடக்கின்றதே.. இது எதனை காட்டுகிறது?

ஜகாத் பணத்தை சாப்பிடுவதற்காக அறக்கட்டளை நிறுவுபவர்களின் எண்ணிக்கையும், அமைப்பு ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே.. இது எதன் அடையாளம்?

(முன்பெல்லாம் செல்வந்தர்கள் தங்களின் சொந்த சொத்தை வக்ஃப் செய்து அறக்கட்டளை நிறுவுவார்கள் மறுமை வாழ்க்கையின் நன்மையை நாடி.

ஆனால் இக்காலத்தில் எந்த சம்பாத்தியமும் இல்லாதவர்கள் வசூலை நம்பி அறக்கட்டளை தொடங்கி, பணக்காரர்களாகி விடுகிறார்கள்.)

ஒவ்வொரு முஸ்லிமும் உம்மத்திற்கு நன்மை செய்வதின் மீது தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உம்மத்தை வைத்து சம்பாதிப்பதில் கவனம் செலுத்தக் கூடாது.

நபி விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும். இதில் முஸ்லிம்கள் ஒவ்வொருக்கும் பங்குண்டு. எல்லோருக்காகவும் தான் நபி (ஸல்) அவர்கள் உழைத்தார்கள். மறுமையில் பிரார்த்தனையில் செய்வார்கள்.





  


One Comment

  1. மாஷா அல்லாஹ் மிகவும் அருமை

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.