கடந்த ஆண்டு ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற திரைப்படம் வந்த பிறகு இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட எதிர்ப்பலையில் 75 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும் நாடுகளில் ஏற்பட்ட போராட்டங்களினால் ‘முஹம்மது நபி (ஸல்)’ அவர்களைப் பற்றி மீண்டும் ஒருமுறை முஸ்லிமல்லாதவர்கள் பேசும் சூழ்நிலை ஏற்பட்டது.

அச்சமயத்தில் கீழை நாடுகளிலும், மேலை நாடுகளிலும் வாழ்ந்த முஸ்லிமல்லாத படித்த மேல்தட்டு மக்களிடம் அதிகமாக விவாதிக்கப்பட்டவர்; புத்தகங்களிலும், இணையங்களிலும் அதிகமாக படிக்கப்பட்டவர் ‘முஹம்மது (ஸல்) அவர்கள்’. கீழ்காணும் வினாக்கள் அவரைக் குறித்து எழுப்பப்பட்டன.

யார் அந்த முஹம்மது நபி (ஸல்)?

அவர் புனிதமானவரா?

இறைவனின் அவதாரமா?

இறைவனின் மகனா?

இறைவனின் தூதரா?

அல்லது முஸ்லிம்களின் அரசியல் தலைவரா?

அவருக்காக ஏன் முஸ்லிம்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக போராடுகிறார்கள்?

1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த ஒருவர் இன்னும் அவர்களின் நினைவில் எப்படி வாழ்கிறார்?

உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களே கூட்டம் சேர்ப்பதற்காக பணம் – பிரியாணி பொட்டலங்கள் தந்தாலும் வராத   இந்தக் காலத்தில், எப்படி இவ்வளவு எண்ணிக்கையிலான கூட்டம் சேர்ந்தது?

உலகம் அதியசப்பட்டது. அமெரிக்காவும் ஒரு கணம் ஆடிப் போனது. ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தை தள்ளிப் போட்டது.

வாழந்து மறைந்து 1500 ஆண்டுகளுக்கு பின்னரும் சர்வதேச அரசியல் விவகாரங்களில் அவரால் ஏற்பட்ட பெரும் திருப்புமுனையாக அது கருதப்பட்டது.

அப்போது தான் அரசியல் நோக்கர்களும் அவரை உற்று நோக்கினர்.  அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட சர்வதேச அரசியல் மாற்றம் 1500 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் ஒருமுறை பரிணமித்து விடுமோ ?  சர்வதேச தலைமைகள் கைமாறி விடுமோ? என்ற நோக்கில் அரசியல் ஆராய்ச்சிகள் தொடரப்பட்டன.

அவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
.
அவருக்கு முன்பு யாருக்கும் அந்த பெயர்  வைக்கப்படவில்லை. ஆனால் இன்று இலட்சக்கணக்கான மக்கள் அந்தப் பெயரில் வாழ்கிறார்கள்.


‘புகழப்பட்டவர்’ என்பது அவரது பெயரின் பொருள். இன்றைய உலகில் அவரைப் போன்று யாரும் இவ்வளவு புகழப்பட்டதில்லை.

அவரின் பெயரைக் கூறியவுடன் முஸ்லிம்களின் நாவுகளில் இருந்து ‘ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்’ ( அருளையும், அமைதியையும் அவர் மீது அல்லாஹ் பொழிவானாக )  எனும் வார்த்தைகள் தானாக வந்து விழும்.

முஸ்லிம் ஒருவர் தனது ஃபர்ளான வணக்கங்களுக்கு பிறகு அவருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கும் வண்ணம் அவர் மீது ஸலவாத் சொல்வதையே தமது முழு நேர நஃபிலான (உபரி) வணக்கமாக ஆக்கிக் கொண்டாலும் அது நல்லது தான் எனும் அளவுக்கு முஸ்லிம்களின் இதயங்களில் உயர்ந்த இடத்தில் வாழ்பவர்.

عَنْ الطُّفَيْلِ بْنِ أُبَيِّ بْنِ كَعْبٍ عَنْ أَبِيهِ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا ذَهَبَ ثُلُثَا اللَّيْلِ قَامَ فَقَالَ يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا اللَّهَ اذْكُرُوا اللَّهَ جَاءَتْ الرَّاجِفَةُ تَتْبَعُهَا الرَّادِفَةُ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ جَاءَ الْمَوْتُ بِمَا فِيهِ قَالَ أُبَيٌّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُكْثِرُ الصَّلَاةَ عَلَيْكَ فَكَمْ أَجْعَلُ لَكَ مِنْ صَلَاتِي فَقَالَ مَا شِئْتَ قَالَ قُلْتُ الرُّبُعَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ النِّصْفَ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قَالَ قُلْتُ فَالثُّلُثَيْنِ قَالَ مَا شِئْتَ فَإِنْ زِدْتَ فَهُوَ خَيْرٌ لَكَ قُلْتُ أَجْعَلُ لَكَ صَلَاتِي كُلَّهَا قَالَ إِذًا تُكْفَى هَمَّكَ وَيُغْفَرُ لَكَ ذَنْبُكَ      رواه الترمذي
அவர் ஒரு இறைத்தூதர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் அவரது வாழ்க்கையில் உண்டு.

உலகை முன்னோக்க வைத்தவர்

உலகில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில், அன்றைய உலகின் நாகரிக சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பகுதியில் அவர் பிறந்தார். ஆனால் அவரால் உலகமே முன்னோக்கும் பகுதியாக அது ஆனது.

قال الله تعالي: وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ 2:144

யாரிடமும் கல்விக்காக மண்டியிடாதவர்

அவர் எழுத படிக்கத் தெரியாத சமூகத்தில் பிறந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரது சமூகமான குறைஷிகளில் சுமார் 17 நபர்களே ஓரளவுக்கு எழுத படிக்கத் தெரிந்தவர்கள். இருப்பினும் அவர்களுக்கு கணக்கு தெரியாது. (நூல் : அல் ஃபாரூக் )

அவரும் எழுதப் படிக்க யாரிடமும் கற்கவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டுமல்ல.. இன்று வரையிலும் இன்னும் உலகம் உள்ள வரையிலும் எல்லா மனிதர்களுக்கும் அவரே ஆசிரியர். வழிகாட்டி .

قال رسول الله صلي الله عليه وسلم
إِنَّ اللَّهَ لَمْ يَبْعَثْنِي مُعَنِّتًا وَلَا مُتَعَنِّتًا وَلَكِنْ بَعَثَنِي مُعَلِّمًا مُيَسِّرًا
 رواه مسلم

இறைவேதத்தின் முதல் விரிவுரையாளர்

قال الله تعالي: وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ  16:44

எழுத்தறிவை ஆர்வப்படுத்தியவர்

அவர் வாழ்வில் எதையும் எழுதியதில்லை. ‘குர்ஆன் அவரால் எழுதப்பட்டது’ என்ற அவதூறு வந்து விடக்கூடாது என்பதே அதற்கு காரணம்.
قال الله تعالي: وَمَا كُنْتَ تَتْلُو مِنْ قَبْلِهِ مِنْ كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذًا لَارْتَابَ الْمُبْطِلُونَ 29:48

ஆனால் அவருக்கு இறங்கிய முதல் வசனமே எழுத்தறிவை தான் போதித்தது.
قال الله تعالي: عَلَّمَ بِالْقَلَمِ  96:4
அவரது ஓரிறைக் கொள்கை

அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் கற்களையும், மரங்களையும் வணங்கி வந்தனர். ஆனால் அவர் தமது வாழ்வில் (நபித்துவத்திற்கு முன்பும் சரி) ஒரு முறை கூட அவற்றை வணங்கியதில்லை.

எதையும் எதிர்பார்க்காதவர்

‘அல்லாஹ்’ என்ற பெயரை  இறையச்சத்தோடு அவர் உச்சரித்தார். அவன்  இணை – துணை அற்றவன் என்று பிரச்சாரம் செய்தார். அதற்காக எல்லாவற்றையும் தந்தார்.

ஆனால் எதனையும் எதிர்பார்த்ததும் இல்லை. அதனை வைத்து எதனையும் அவர் சம்பாதிக்கவும் இல்லை.

قال الله تعالي:  وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ 26:109
அவர் ஓர் அத்தியாயம்

மூடப்பழக்கங்கள் மிகைத்திருந்த காலத்தில் அவர் வாழ்ந்தார். ஆனால் அறிவுக்கு பொருந்தாத செயலை வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் செய்ததில்லை.

சமூக தீமைகளை முழுவதுமாக அவர் ஒழித்துக் கட்டியதோடு மது, போதைப் பொருள், விபச்சாரம், சூதாட்டம், வட்டி போன்ற சமூக தீமைகளை விட்டும் விலகி வாழும் ஒரு சமூகத்தை நிரந்தரமாக இவ்வுலகில் உருவாக்கியும் காட்டினார். இது அவருக்கு முன்னரும் – பின்னரும் யாரும் செய்து காட்டாத அரிய செயலாகும். இன்று வரை அப்பழக்கங்களில் ஈடுபடாத ஒரு சமுதாயம் உலகில் வாழ்ந்து வருகிறது.

சமத்துவ சமுதாயம் படைத்தவர்

இனம், நிறம், பணம், நிலம், மொழி, குலம் தோற்றம் போன்றவற்றால் பாகுபாடு காட்டப்பட்ட காலத்தில் பிறந்த அவர் அவை அனைத்தையும் ஒழித்துக் கட்டினார். எந்தச் செலவும் இன்றி ‘இறையச்சம்’ எனும் சொல்லால் சமத்துவ சமுதாயத்தை படைத்தார்.

قال الله تعالي:  إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ 49:13

عن أبي هريرة قال: سئل رسول الله صلى الله عليه وسلم: أي الناس أكرم؟ قال: "أكرمهم عند الله أتقاهم"  رواه البخاري

இறையச்சம் இல்லாதவர் அவர் எப்படியிருப்பினும் அவர் கொசுவின் ஒரு இறக்கைக்கு கூட சமமானவர் அல்ல என்றார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ الْعَظِيمُ السَّمِينُ يَوْمَ الْقِيَامَةِ لَا يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ وَقَالَ اقْرَءُوا
{ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا } رواه البخاري
வாய்மையாளர்
அவர் பொய் சொன்னதில்லை. புறம் பேசியதில்லை. செய்து கொண்ட ஒப்பந்தத்தை முறித்ததில்லை. வாக்குறுதி மீறியதில்லை. இறைத்தூதர் என்று தம்மை கூறுவதற்கு முன்பே ‘உண்மையாளர்,’ ‘வாய்மையாளர்’ என்று மக்களால் கூறப்பட்டவர். கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காக இன்னல்களை சந்தித்தவர்.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ
بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ يَا فَتًى لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ
رواه ابو داود

போர்க்களங்களில் மனித தன்மையை காப்பாற்றியவர்

அவர் தமது தோழர்களுக்கு பொறுமையையும் போதித்தார். போராட்டத்திலும் அவர்களை களமிறக்கினார். அவர் நடத்திய போர்கள் கட்டுப்பாடுகள் மிக்கவை. ஒழுக்க நெறி சார்ந்தவை. யாரும் வரம்பு மீற அவர் அனுமதித்ததில்லை.

அவரது போர் நேர்மையும், அவரது பாசறையில் பயின்ற தோழர்களின் போர் நேர்மையும் பல இலட்சணக்கான மக்களை அவரது கொள்கையில் இணைத்தது.

அவரது அவர் 80 யுத்தங்களை அவர் எதிர்கொண்டார். அதில் 27 யுத்தங்களில் அவரே கலந்து கொண்டார். இத்தனையும் 7 ஆண்டுகளில் நடந்தன. ஹிஜ்ரி 2 ல் இருந்து 9 வரை .

யுத்தம் குறித்து மட்டும் அவர் பேசியிருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான் வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் அவர் வழிகாட்டினார்.
உயரத்தில் நின்றும் பணிவாக வாழ்ந்தவர்

உலக மக்களில் அவர் தான் உயர்ந்தவர். இறைத்தூதர் களிலும் அவரே உயர்ந்தவர். தோழர்களும் அவருக்கு அளவற்ற மரியாதை தந்தனர். அவர் சொன்னதெல்லாம் நடக்கவும் செய்தது.

ஆனால் அவர் தன்னை ‘இறைவனின் தூதர்’ என்று தான் சொன்னாரே தவிர தன்னை ‘இறை மகன்’ என்றோ தனக்கு ‘இறைத்தன்மை’ இருக்கின்றது என்றோ அவர் சொன்னதில்லை.

பிற இறைத்தூதர்களை விட தன்னை உயர்த்துவதை கூட அவர் ‘வேண்டாம்’ என்றார் அதனால் தேவையற்ற சர்ச்சைகள் வரக்கூடாது என்பதற்காக.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَتَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا كَرِهَهُ فَقَالَ لَا وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ فَسَمِعَهُ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَامَ فَلَطَمَ وَجْهَهُ وَقَالَ تَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا فَذَهَبَ إِلَيْهِ فَقَالَ أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا فَمَا بَالُ فُلَانٍ لَطَمَ وَجْهِي فَقَالَ لِمَ لَطَمْتَ وَجْهَهُ فَذَكَرَهُ فَغَضِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ ثُمَّ قَالَ لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللَّهِ فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ فَإِذَا مُوسَى آخِذٌ بِالْعَرْشِ فَلَا أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ أَمْ بُعِثَ قَبْلِي وَلَا أَقُولُ إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى رواه البخاري
பிற மதங்களை மதித்தவர்

முதன் முதலில் தானே சத்தியத்தை இந்த உலகிற்கு கொண்டு வந்ததாக அவர் ஒரு போதும் வாதம் புரிந்ததில்லை.

தனக்கு முன்னுள்ள மதங்களை முழுமைப்படுத்திடவே தான் வந்திருப்பதாகவே அவர் சொன்னார்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ صَالِحَ الْأَخْلَاقِ  رواه احمد

இறக்கும் பொழுது எந்த சொத்தும் இல்லாமல் இறந்தவர்.

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَدِرْعُهُ مَرْهُونَةٌ عِنْدَ يَهُودِيٍّ بِثَلَاثِينَ صَاعًا مِنْ شَعِيرٍ
وَقَالَ يَعْلَى حَدَّثَنَا الْأَعْمَشُ دِرْعٌ مِنْ حَدِيدٍ وَقَالَ مُعَلًّى حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ حَدَّثَنَا الْأَعْمَشُ وَقَالَ رَهَنَهُ دِرْعًا مِنْ حَدِيدٍ  رواه البخاري

அவருடைய உருக்கு சட்டை சாப்பாட்டுத் தேவைக்காக அடமானம் வைக்கப்பட்டிருந்தது.


ஆனால் இறவாப் புகழை இந்த உலகில் விட்டுச் சென்றவர்.

அவர் தான் முஹம்மது நபி (ஸல்)அவர்கள்.

  


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.