இயற்கை மார்க்கமான நமது இஸ்லாமிய மார்க்கம்
கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் தனித மனித, சமூக ஒழுக்கங்களை வலியுறுத்தக்கூடிய மார்க்கமாகும்.

கண்ணியமான வாழ்க்கைக்கும், ஒழுக்கமான செயல்பாடுகளுக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது.

ஏனெனில், ஒழுக்கமே மரியாதையின் மூலதனம். ஆதலால் கண்ணியமான வாழ்க்கை ஒரு மனிதன் வாழ நாடி விட்டால் எல்லா வகையான பாவங்களை விட்டும், ஒழுக்கக் கேடுகளை விட்டும் அவன் விலகி வாழ வேண்டும்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதன் கண்ணியமானவனாக வாழ வேண்டும் என்பதே படைத்த இறைவனின் விருப்பம். ஆதலால் தான் மனிதனை கண்ணியமானவனாகவே அவன் படைத்துள்ளான்.
قال الله تعالي: وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ 17:70
மனிதன் தான் சூழ்நிலையின் காரணத்தினாலும், மனோஇச்சையின் காரணத்தினாலும் பாவத்திலும், தீமைகளிலும் ,ஒழுக்கக் கேடுகளிலும் சிக்கிக் கொள்கிறான்.

நாம் வாழும் இவ்வுலகில் ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடுகின்றன.

‘நாகரிகம்’ என்ற பெயரில் உருவாகியுள்ள கலாச்சார சீர்கேடுகள் கண்ணியமான வாழ்க்கைக்கும், ஒழுக்கப் பண்பாடுகளுக்கும் மிகுந்த சவாலையும், சோதனையையும் ஏற்படுத்தி வருகின்றன.

வேதனைக்குரிய விஷயம், கண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த முஸ்லிம் சமுதாயத்திற்குள்ளும் இத்தகைய கலாச்சார சீர்கேடுகள் நுழைய ஆரம்பித்துள்ளன.

இதன் விளைவு ஆங்காங்கே நமது முஸ்லிம் இளைஞர்களைப் பற்றியும், முஸ்லிம் இளம் பெண்களைப் பற்றியும் கிடைத்து வரும் தகவல்கள் நமது ஈரலை கிழித்தெறிகின்றன.

பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் ஆண் –பெண் பிள்ளைகளை அனுப்பக்கூடிய சூழ்நிலையில், செல்போன், இன்டர்நெட் சாதனங்கள் தாராளமாக புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் ஆண் – பெண் பிள்ளைகளை கண்ணியமானவர் களாகவும்,ஒழுக்கமானவர்களாகவும் வளர்ப்பது அக்கறையுள்ள பெற்றொர்கள் ஒவ்வொருவருக்கும் சவாலான விஷயம் தான்.

கலாச்சார சீரழிவுகளில் பிள்ளைகள் சிக்கிக் கொள்ளாமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளை அரண் போல் நின்று பாதுகாக்க வேண்டும்.

அதற்கு முதலில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தர வேண்டும்.
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا عَامِرُ بْنُ أَبِي عَامِرٍ الْخَزَّازُ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ "مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ"
 رواه الترمذي 1875 واحمد 14856
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு தந்தை பிள்ளைக்கு அழகிய ஒழுக்கத்தை விட சிறந்த ஒரு வெகுமதியை தந்திட இயலாது.” (நூல் :திர்மிதி, முஸ்னத் அஹ்மது)
பிள்ளைகளுக்கு விளையாட்டுச் சாமான்கள், மோட்டார் வாகனங்கள், வீடு வாசல்கள் வாங்கித் தருவதில் அலாதியான கவனம் செலுத்தும் பெற்றோர்கள் ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும்  பிள்ளைகளுக்கு கற்றுத் தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், ஒழுக்கமே பெற்றோர் தரும் பெரிய சொத்து என்கிறார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்.

ஒழுக்கம் மனிதனை வழி தவற விடாது
இன்றைய நமது காலத்தில் முஸ்லிம் இளம் தலைமுறை யினர் குறித்த வருத்தத்தற்குரிய செய்திகள் காதுகளை வந்தடைவதற்கு ‘கண்ணியமான வாழ்க்கை’ அவர்களுக்கு காட்டப்படாமல் இருப்பதே மிக முக்கியமான காரணமாகும்.

ஒன்றை சிந்தனையில் வைக்க வேண்டும். கண்ணியமான வாழ்க்கை எது? என்று பிள்ளைகளுக்கு புரிய வைத்து விட்டால் எந்தக் காலத்திலும் எந்தவொரு ஒழுக்கக் கேட்டிற்கும் அவர்கள் ஆட்பட மாட்டார்கள்.

அண்ணலாரும் அன்னை ஃபாத்திமா(ரழி)யும்

இது விஷயத்தில் அன்னை பாத்திமா (ரழி) அவர்களை இச்சமுதாயம், குறிப்பாக முஸ்லிம் இளம் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் உச்சகட்டமான ஒழுக்கக் கேடுகள் தலைவிரித்தாடிய காலத்தில் வாழ்ந்தவர்கள்.
இன்றைய நவீன ஜாஹிலிய்யாவை விட பண்டைய ஜாஹிலிய்யா மிக மோசமானதே.

திருமண வாழ்க்கைக்கும்- விபச்சாரத்திற்கும் வித்தியாசமில்லாத காலம் அது.

அக்காலத்தில் ஒழுக்கக் கேடுகளுக்கு அஞ்சி ,கண்ணியமான குடும்பத்தார்கள் பெண் பிள்ளைகளை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள்.

அத்தகைய மோசமான காலத்தில் மிக ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள்.
இத்தனைக்கும் அவர்களின் திருமணம் மிக தாமதாகவே நடந்தது. இன்னும் சொல்வதெனில், நபி(ஸல்) அவர்களின் பெண் பிள்ளைகளிலேயே மிகவும் தாமதமாக அவர்களுக்கு தான் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது அவர்களின் வயது 20 ஆகும். (ஏனெனில் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு பத்ரு போருக்கு பின்பு தான் அவர்களுக்கு திருமணம் நடந்தது. நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்து ஆறு மாதத்திற்குள் அவர்கள் மரணமடைந்தார்கள்.மரணித்தின் போது வயது 28 )

திருமணம் பேசி வைக்கப்பட்டு, நாளும் குறிக்கப்பட்ட பிறகு ஓடிப் போகும் பெண்கள் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

மக்கா வாழ்க்கையில் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் திருமணம் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது.

திருமணம் அவர்களுக்கு கானல் நீராகவே இருந்தது.
அவர்களின் வீட்டில் ஏற்கனவே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கொடியவன் அபூலஹபின் இரு மகன்களால் காழ்ப்புணர்ச்சின் காரணமாக தலாக் விடப்பட்ட இரண்டு சகோதரிகள் (ருகையா- உம்மு குல்சூம்) இருக்க, வயதுக்கு வந்த பருவ மங்கையாக இருந்த அவர்களுக்கு திருமணம் நினைத்துக் கூட பார்க்க முடியாமல் இருந்தது.

தாய் உயிருடன் இல்லை. தந்தையின் உயிருக்கு விலை வைக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் ஒழுக்கமாகவும் , பொறுமையாகவும் வாழ்ந்தார்கள் அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள்.

சிறிதளவு அவர்கள் பிசகியிருந்தால் கூட எதிரிகள் நபி (ஸல்) அவர்களை கேவலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கோ மக்கா வாழ்க்கையில் மகளின் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு கூட நேரமில்லாமல் இருந்தது. அவ்வளவு நெருக்கடிகள் அங்கே அவர்களுக்கு தரப்பட்டு வந்தன.

அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் பொறுமையாக இருந்ததற்கும், ஒழுக்கமாக இருந்ததற்கும் காரணம் எது தெரியுமா?

நபி (ஸல்) அவர்கள் ஊட்டிய இறையச்சமும், ஒழுக்கப் பயிற்சியும் தான்.

அன்னை ஃபாத்திமாவுக்கு ஐந்து வயதாக இருக்கும் பொழுது நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் தரப்பட்டது.
சிறுமியான அன்னை ஃபாத்திமாவுக்கும் ஈமானிய பயிற்சியை நபி (ஸல்) அவர்கள் தரவே செய்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமாவிடம் இவ்வாறு பிரச்சாரம் செய்ததாக ஹதீஸ்களில் நாம் காணலாம்.
يَا فَاطِمَةُ أَنْقِذِي نَفْسَكِ مِنْ النَّارِ فَإِنِّي لَا أَمْلِكُ لَكُمْ مِنْ اللَّهِ شَيْئًا غَيْرَ أَنَّ لَكُمْ رَحِمًا سَأَبُلُّهَا بِبَلَالِهَا  رواه مسلم 303
இது இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடந்த பிரச்சாரமாகும்.

மரணத்திலும் ஒழுக்கத்தை கட்டிக் காத்த அன்னை
இவ்வுலக வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்ந்த அன்னை ஃபாத்திமா (ரழி) அவர்கள் மரணத்திற்கும் பின்பு தமது ஒழுக்கத்தை சிந்தித்தார்கள்.

தன்னை கணவர் அலீ (ரழி) மற்றும் சிறிய தந்தையின் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரழி) இருவர் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும், சன்தூக் (பெட்டி) இல் வைத்து தூக்கி செல்ல வேண்டும், இரவில் அடக்கம் செய்ய வேண்டும்  என மூன்று வஸிய்யத்கள் செய்து இருந்தார்கள்.
ولما حضرها الموت قالت لأَسْمَاء بِنْت عميس: يا أَسْمَاء، إني قد استقبحت ما يُصنع بالنساء، يطرح على المرأة الثوب فيصفها. قالت أَسْمَاء يا ابنة رسول الله صلّى الله عليه وسلّم، ألا أريك شيئاً رأيته بأرض الحبشة؟ فدعت بجرائد رطبة فحنتها، ثم طرحت عليها ثوباً. فقالت فاطِمَة: ما أحسن هذا وأجمله! فإذا أنا متُّ فاغسليني أنت وعليّ، ولا تُدخلي عليَّ أحداً. فلما توفيت جاءت عائشة، فمنعتها أَسْمَاء، فشكتها عائشة إلى أبي بكر وقالت: هذه الخثعمية تحول بيننا وبين بِنْت رسول الله صلّى الله عليه وسلّم، وقد صنعت لها هودجاً؟! قالت: هي أمرتني ألاّ يدخل عليها أحد، وأمرتني أن أصنع لها ذلك. قال: فاصنعي ما أمرتك. وغسَّلها عليّ وأَسْمَاء.
وهي أول من غُطّي نعشها في الإسلام، ثم بعدها زينب بِنْت جحش. وصلى عليها علي بن أبي طالب. وقيل: صلى عليها العَبَّاس. وأوصت أن تدفن ليلاً، ففعل ذلك بها. (  اسد الغابة)
குளிப்பாட்டும் இடத்துக்கு அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஒழுக்கமான வாழ்வே வாழ்வில் உயர்வை தரும்
ஃபாத்திமாவுக்காக மறுமையில் எல்லோரும் பார்வையை தாழ்த்துவார்கள்
4711 - أخبرنا أبو بكر محمد بن عبد الله بن عتاب العبدي ، ببغداد ، وأبو بكر بن أبي دارم الحافظ ، بالكوفة ، وأبو العباس محمد بن يعقوب ، وأبو الحسين بن ماتي ، بالكوفة ، والحسن بن يعقوب ، العدل ، قالوا : ثنا إبراهيم بن عبد الله العبسي ، ثنا العباس بن الوليد بن بكار الضبي ، ثنا خالد بن عبد الله الواسطي ، عن بيان ، عن الشعبي ، عن أبي جحيفة ، عن علي عليه السلام قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : « إذا كان يوم القيامة نادى مناد من وراء الحجاب : يا أهل الجمع ، غضوا أبصاركم عن فاطمة بنت محمد صلى الله عليه وسلم حتى تمر » « هذا حديث صحيح على شرط الشيخين ، ولم يخرجاه »   رواه الحاكم والطبراني
சுவர்க்கத்தின் தலைவி எனும் உயர்வு
3808 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ ابْنُ عَثْمَةَ قَالَ حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ وَهْبٍ أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا فَاطِمَةَ يَوْمَ الْفَتْحِ فَنَاجَاهَا فَبَكَتْ ثُمَّ حَدَّثَهَا فَضَحِكَتْ قَالَتْ فَلَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلْتُهَا عَنْ بُكَائِهَا وَضَحِكِهَا قَالَتْ أَخْبَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يَمُوتُ فَبَكَيْتُ ثُمَّ أَخْبَرَنِي أَنِّي سَيِّدَةُ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِلَّا مَرْيَمَ ابْنَةَ عِمْرَانَ فَضَحِكْتُ رواه الترمذي
ஆண்களில் நபி மூஸா (அலை) , நபி யூசுஃப் (அலை)
ஆண்களில் நபி மூஸாவுக்கு அவர்களின் கண்ணியமான நடத்தையே கண்ணியமான மனைவியும், நபித்துவமும் கிடைப்பதற்கு காரணமானது.
قال الله تعالى: { فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ }
قال أبو حازم سلمة بن دينار: لما سمع ذلك موسى أراد أن لا يذهب، ولكن كان جائعًا فلم يجد بُدًا من الذهاب، فمشت المرأة ومشى موسى خلفها، فكانت الريح تضرب ثوبها فتصف ردفها، فكره موسى أن يرى ذلك منها، فقال لها: امشي خلفي ودليني على الطريق إن أخطأتُ، ففعلت ذلك، ( تفسير البغوي )
திருமணமாகாத வாலிப பருவத்திலும் மூஸா நபியின் கண்ணியம் அவர்களுக்கு நபித்துவத்தை தந்தது.

யூசுஃப் நபிக்கு அவர்களின் ஒழுக்கம் தான் கனவுக்கு விளக்கம் சொல்லும் பாக்கியம், நபித்துவம், நாடாளும் பாக்கியத்தை தந்தது.
قال الله تعالى: قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ 12:23
ஒழுக்கத்தை பிள்ளைகளுக்கு தந்து விட்டால் பெற்றோர்கள் பயப்படாமல் இருக்கலாம்
1 அன்னை ஃபாத்திமா (ரழி)
2. பெண் பிள்ளைகளை விட்டு விட்டு மரணத்த இப்னு மஸ்ஊது (ரழி)

وقال أبو ظبية: مرض عبد الله، فعاده عثمان بن عفان، فقال: ما تشتكي؟ قال: ذنوبي! قال: فما تشتهي؟ قال: رحمة ربي. قال: ألا آمر لك بطبيب؟ قال: الطبيب أمرضني. قال: ألا آمر لك بعطاء؟ قال: لا حاجة لي فيه. قال: يكون لبناتك. قال أتخشى على بناتي الفقر، إني أمرت بناتي أن يقرأن كل ليلة سورة الواقعة، إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " من قرأ الواقعة كل ليلة لم تصبه فاقة أبداً " ( اسد الغابة)


5 Comments

  1. assalamu alaikkum nalla sindanaikkuriya ktturai arumai.vassalam

    ReplyDelete
  2. காலத்திற்கேற்ற கட்டுரை. அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஸதக் மஸ்லஹி மற்றும் முபாரக் அலி ஃபாஸில் பாகவி இருவருக்கும் நன்றி..

      Delete
  3. Assalamu alaikum.kalathirku poruthamana katturai.jazakallah...

    ReplyDelete
  4. احمد الله وبركاته

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.