இறைத் தூதர் (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவன் திரைப்படம் தயாரித்து வெளியிட்டதை எதிர்த்து கடந்த சில தினங்களாக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளித்து வருகின்றனர்.
உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்தி வரும் போராட்டங்களை கூட மேற்கத்திய எழுத்தாளர்களும், ஊடகங்களும் கொச்சைப்படுத்தி
வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இலண்டனில் இருந்து வெளியாகும் the independent நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டியிருந்தது.
முஸ்லிம்களின் எதிர்ப்புகளும், போராட்டங்களும் இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மதம், முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்பதையே காட்டுகிறது என்று அதில் குறிப்பிட்டிருந்தது.
இக்கட்டுரையை ஐரோப்பாவின் எல்லா நாளிதழ்களும், எகிப்தின் அல் அஹ்ராம் நாளிதழும் மறுபிரசுரம் செய்திருந்தன.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மதம் என்றும், முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் இவர்கள் தான் சகிப்புத்தன்மையற்றவர்கள் என்று தெரிய வரும்.
இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை சகிக்க முடியாததால் தான்  இத்தகைய நாலாந்தர நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் களமிறங்கியுள்ளனர்.
இஸ்லாத்தின்   சகிப்புத்தன்மையும்  தாராளமும்
தொடங்கிய காலத்திலும் சரி, அது  வளர்ந்து பெரிதாகி உலகாளும் மதமாக கோலாச்சிய காலத்திலும் சரி, எப்போதும் சகிப்புத்தன்மையற்று இஸ்லாம் நடந்தது கிடையாது. சகிப்புத்தன்மை மிக்க பல விஷயங்கள் இஸ்லாத்தில் உண்டு.
1. அவரவர் மதத்தில் வாழலாம் எனும் கொள்கை
பல்வேறு கொள்கைகளில் வாழும் மனிதர்களை சத்திய மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் அழைக்க கட்டளையிடும் இஸ்லாம் அதில்(மற்றவரை) நிர்பந்தப்படுத்துவதை ஏற்காது.
கட்டாயப்படுத்தி எவரின் மீதும் இஸ்லாத்தை திணிக்கக் கூடாது என்பது குறித்து இரண்டு வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஒன்று மக்காவில் இறங்கியது.
قال الله تعالي : وَلَوْ شَاءَ رَبُّكَ لَآَمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ 10:99
இன்னொரு வசனம் மதீனாவில் இறங்கியது.
قال الله تعالي : لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ 2:256
மதீனத்து அன்சாரி முஸ்லிம்களில் சிலரின் பிள்ளைகள் கிறிஸ்தவ மதத்தோடும், இன்னும் சிலரது பிள்ளைகள் யூத மதத்துடனும் தொடர்பு வைத்திருந்தனர்.
அப்பிள்ளைகளின் இஸ்லாமிய பெற்றோர்கள் அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிடும்படி நிர்பந்தம் செய்தனர்.
இதனை வன்மையாக கண்டித்தே இவ்வசனம் இறக்கப்பட்டது.
விரும்பியவர் இஸ்லாத்தை ஏற்கலாம் . விரும்பியவர் ஏற்காமல் இருக்கலாம் என்பதே பிற மதத்தினர் விஷயத்தில் இஸ்லாத்தின் கொள்கை
قال الله تعالي : فَمَنْ شَاءَ فَلْيُؤْمِنْ وَمَنْ شَاءَ فَلْيَكْفُرْ   18:29
இஸ்லாம் வெறுப்புக் கொள்கையாகவும், சகிப்புத்தன்மையில்லாத கொள்கையாகவும் இருந்திருந்தால் வலிமையான இஸ்லாமிய அரசு அமைந்த பின்பு இப்படி அறிவித்திருக்க முடியாது.
ஆக பிற மதங்களை இஸ்லாம் சகிக்கிறது. பிற மதத்தவர்கள் தங்களின் மதத்தில் வாழ்வதை ஏற்கிறது.
2. பிற மதத்தவர்கள் தங்களின் மதங்களில் வாழ்வது அல்லாஹ்வின் நாட்டப்படியே எனும் கொள்கை
இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம். மற்றதை அல்லாஹ் ஏற்பதில்லை என்பது அதன் திடமான நம்பிக்கையாகும்.

قال الله تعالي : إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ 3:19
وقال ايضا : وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ 3:85
என்றாலும் இஸ்லாத்தை தவிர வேறு மதங்கள் உலகில் இருக்கக் கூடாது என்ற கொள்கை இஸ்லாத்தில் எப்போதும் இருந்ததில்லை.
மனிதர்கள் பல்வேறு நிறத்தவர்களாகவும், பலவேறு மொழி பேசுபவர்களாகவும் , பல்வேறு இனத்தவர்களாகவும், பல தோற்றங்களில் உள்ளவர்களாகவும் படைக்கப்பட்டிருப்பதைப் போன்று பல கொள்கை உள்ளவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை திருக்குர்ஆன் ஏற்கிறது.
قال الله تعالي : وَلَوْ شَاءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ أُمَّةً وَاحِدَةً وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ 11:118


2. பிற மதங்களையும், பிற மதத்தவர்களையும், பிற மத அடையாளங்களையும், வணக்க வழிபாடுகளையும் மதிக்க வேண்டும் எனும் கொள்கை
மனிதன் எம்மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும், அவனை மதிக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடும்.
قال الله تعالي : وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ 17:70
மதத்தை காரணமாக வைத்து மனிதனை இழிவுபடுத்துவதையும், மரியாதை குறைவாக நடத்துவதையும்  இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.
இறந்த பிற மதத்தவரைக் கூட நபி (ஸல்) மதித்துள்ளார்கள்
1229 - حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ
قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا  رواه البخاري
நஜ்ரான் தேசத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் நபியை சந்திக்க மதீனா வந்தனர். அவர்களின் தொழுகை நேரம் குறுக்கிட்டது. முஸ்லிம்களின் பள்ளிவாசலிலேயே தங்களை வணக்கத்தை நிறைவேற்றிட எழும்பி நின்றார்கள். திடுக்கிட்ட நபித்தோழர்கள் தடுக்க முயன்றனர். நபி (ஸல்) கிறிஸ்தவர்களை பள்ளிவாசலினுள் தொழ அனுமதித்தார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாசலினுல் கிறிஸ்தவ வணக்கம் நபியின் முன்னிலையில் நடைபெற்றது. ( நூல் இப்னு இஸ்ஹாக்)
4. பிற மதத்தவர்களுக்காக ஹராம்களை  சகித்த இஸ்லாம்
பிற மதத்தவர்களின் மத விவகாரங்களில் நபித்தோழர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
اتركوهم وما يدينوه               
இஸ்லாத்தில் மதுவும், பன்றி இறைச்சியும் மிகக் கொடிய ஹராம்களில் ஒன்று. வன்மையாக இஸ்லாம் இதனை தடுத்துள்ளது.
கிறிஸ்தவர்களிடத்தி்ல் இது ஆகுமானதாக கருதப்படுகிறது. இஸ்லாம் ஆட்சி செய்த காலங்களில் இவ்விரண்டையும் சாப்பிட அவர்களுக்கு இஸ்லாம் அனுமதி தந்தது.. இது விஷயத்தில் அவர்களுக்கு  நெருக்கடி எதனையும் தரவில்லை. இஸ்லாத்தை காரணம் காட்டியோ அல்லது பெரும்பான்மைமுஸ்லிம்களுக்கு மதிப்பளியுங்கள் என்று கூறியோ அவர்களுக்கு தடை விதிக்கவுமில்லை. இவ்விரண்டையும் சாப்பிடுவது ஒன்றும் அவர்களின் மதக்கடமைகளில் உள்ளதல்ல. என்றாலும் அவர்கள் அவ்விரண்டையும் சாப்பிட்டு வாழ்வதை தாராளமாக ஏற்றது.
இன்னும் அவ்விரண்டையும் அவர்கள் தங்களுக்குள் வியாபாரம் செய்யவும் அனுமதி தந்தது.
அவர்களில் ஒருவருக்கு சொந்தமான மதுவை அல்லது பன்றியை முஸ்லிம் ஒருவர் அழித்தால் அதற்கு அம்முஸ்லிம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் இஸ்லாம் கூறியது.
இஸ்லாம் சகிப்புத்தன்மையற்ற மார்க்கமாக இருந்திருந்தால் இவ்வளவு தாராளமாக நடந்திருக்குமா?
5. இறைவனையும், இறைத்தூதரையும் பங்கு போடாத இஸ்லாம்.
யூதர்களின் வேதமான திரிக்கப்பட்ட தவ்ராத்தில் (Tora) இறைவனை ‘யூதர்களின் இறைவனே!(رب اسرائل ) என்றே அழைக்கப்படுகின்றது.
ஆனால் இஸ்லாத்தில் இறைவனை எல்லா மக்களின் இறைவன் رب العالمين  என்றும், இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை ‘எல்லா மக்களின் அருட்கொடையாக வந்தவர்’ رحمة للعالمين) ) என்றே கூறப்படுகின்றது.
இறைவனையும், இறைத்தூதரையும் எல்லோருக்கும் சொந்தமானவராக இஸ்லாம் கருதியதால் தான் அவ்விருவரின் கட்டளைகள் மற்ற மதத்தினருக்கு எந்த நெருக்கடியையும் தரவில்லை.
6. நாட்டுக்குள் இன்னொரு நாட்டை அனுமதித்த இஸ்லாம்
பிற மதத்தவர்களின் சட்ட விவகாரங்களி்ல் இஸ்லாம் எப்போதும் தலையிட்டது கிடையாது. இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்துக் கொள்ள இஸ்லாமிய அரசு அனுமதி தந்தது. முஸ்லிம்களின் நீதிமன்றங்களில் ஷரியத் சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டன.
மற்ற மதத்தவர்கள் விஷயத்திலும் , அவர்களின் நீதிமன்றங்களிலும் இஸ்லாமிய அரசு எப்போதும் தலையிட்டதே இல்லை. (பார்க்க  எனது மொழிபெயர்ப்பு நூலான இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினர் உரிமைகள் பக்கம் 41 வெளியீடு சாஜிதா புக் சென்டர்)


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.