05.09.2012  புதன்கிழமை தமிழ்நாட்டில் விருதுநகர் அருகே 16 கி.மீ தொலைவிலுள்ள முதலிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர்.
100 க்கும் மேற்பட்டோர் காயம்.
இவ்வளவு எண்ணிக்கையில் உயிர்ப்பலி ஏற்பட்டதற்கு காரணங்கள்
1) தவறான பட்டாசு கலவை
2) பாதுகாப்பு விஷயத்தில்  பட்டாசு ஆலை அதிபர் மெத்தனப்போக்கு
3) அரசு அதிகாரிகளின் அலட்சியம்
4) நிலைமையை கணிக்காமல் வேடிக்கை பார்க்க வரும் மோசமான பழக்கம். ஏனெனில் இறந்த 38 பேரில் 27 பேர் வேடிக்கை பார்க்க வந்தவர்களே.
5) ஆலைகள் அமைந்த பகுதிகளிலிருந்து வெகுதூரத்தில் மருத்துவமனைகள் இருந்தமை
6) முக்கிய காரணம் பட்டாசு வெடித்து பண்டிகை கொண்டாடும் பழக்கம் தான் என்றால் மிகையில்லை.

நவீன உலகில் தொழிலாளர்களை மிஷீன்களாக பார்க்கப்படுகிறது.
அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கும் குடும்பம், தன்மானம் உண்டு என்ற எண்ணமே ஆதிக்க சக்திகளிடம் இருப்பதில்லை.
அடிமைகளை விடவும், இன்னும் சொல்வதெனில் மிருகங்களை விடவும் மோசமாக நடத்தப்படுகின்றார்கள்.

முதலாளித்துவம் மனிதனை மிஷின்களாக பார்க்கின்றது.

கம்யூனிசம் மனிதனை பசி எடுக்கும் வயிறாக பார்க்கின்றது.

இஸ்லாம் தான் மனிதனை ஆத்மாவுள்ளவனாக பார்க்கின்றது.

இச்சமயத்தில் இஸ்லாத்தின் தொழிலாளர் நல பாதுகாப்பு குறித்த செய்திகளைப் பார்ப்போம்.
நிறைவான கூலி : உழைப்பை ஆதரிக்கும் இஸ்லாம் கொத்தடிமைத்தனத்தை ஏற்காது. தொழிலாளி ஒருவனுக்கு வேலைக்குப் பின்பு உடனே கூலி வழங்க உத்தரவிடும்.
2434 - حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا وَهْبُ بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ السَّلَمِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ      رواه ابن ماجه
நிர்ணயிக்கப்பட்ட கூலியை விட கூடுதலாக தருவதையும் இஸ்லாம் ஆதரிக்கும்.
قال الله تعالي : فَأَمَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ وَأَمَّا الَّذِينَ اسْتَنْكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا 4:173
قال الله تعالي : إِنَّ الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا 18:30
தாராளமாக நடப்பவனை புகழ்ந்த நபி (ஸல்)
1193 - و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ يَقُولُ
أَحَبَّ اللَّهُ عَبْدًا سَمْحًا إِنْ بَاعَ سَمْحًا إِنْ ابْتَاعَ سَمْحًا إِنْ قَضَى سَمْحًا إِنْ اقْتَضَى  رواه مالك في المؤطا وابن ماجه

கூலியை கொடுக்காதவனிடம் நான் வாதாடுவேன் என்றார்கள் ஏந்தல் நபி (ஸல்)
2075 - حَدَّثَنِي بِشْرُ بْنُ مَرْحُومٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أُمَيَّةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ ثَلَاثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ  رواه البخاري

பணிப் பாதுகாப்பு : தொழிலாளிக்கு பணிப் பாதுகாப்பு தர வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தும். திடீரென்று வேலையை விட்டும் நீக்குவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளாது.
தொழிலாளிகள் ஒரு முதலாளிக்கு சகோதரர்களே. அவர்களை எல்லா வகையிலும் பாதுகாக்க வேண்டும். அவர்களை சிரமத்திற்குள்ளாக்கக் கூடாது.
قال الله تعالي : وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ 26:215


தொழிலாளர்களிடம் கடினமாக நடக்கும் தீய முதலாளிகள் , நிர்வாகிகள் குறித்த எச்சரிக்கை
3411 - حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ حَدَّثَنَا الْحَسَنُ
أَنَّ عَائِذَ بْنَ عَمْرٍو وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ فَقَالَ أَيْ بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ شَرَّ الرِّعَاءِ الْحُطَمَةُ فَإِيَّاكَ أَنْ تَكُونَ مِنْهُمْ  رواه البخاري
الحطمة :العنيف بالرعاية اي القاسي الذي يظلمهم ولا يرق لهم ولا يرحمهم
 சக்திக்குட்பட்ட வேலை: சக்தி மீறிய அளவு வேலை  ஏவக் கூடாது.
قال الله تعالي : لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا 2:286
قال رسول الله صلي الله عليه وسلم: وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري 6744

ஏவினால் முதலாளி அவருக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய வேண்டும்.
29 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاصِلٍ الْأَحْدَبِ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ لَقِيتُ أَبَا ذَرٍّ
بِالرَّبَذَةِ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلَامِهِ حُلَّةٌ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلًا فَعَيَّرْتُهُ بِأُمِّهِ فَقَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمْ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ وَلَا تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ
رواه البخاري
உயிர்ப் பாதுகாப்பு: எந்த தொழிலும் தொழிலாளியின் உயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது.
மனித உயிர் விலை மதிப்பற்றது. நஷ்டஈடுகள் இழந்த உயிரை திரும்ப கொண்டு வந்து விடாது.

இஸ்லாம் உழைப்பதை ஊக்குவிக்கிறது.
16552 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْعَبَّاسِ حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا بَحِيرُ بْنُ سَعْدٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ أَنَّهُ
سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا أَكَلَ أَحَدٌ مِنْكُمْ طَعَامًا أَحَبَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ عَمَلِ يَدَيْهِ
رواه احمد
عَنِ الْمِقْدَامِ بن مَعْدِي كَرِبٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:مَا أَكَلَ أَحَدٌ مِنْ بني آدَمَ طَعَامًا هُوَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْكُلَ مِنْ عَمِلِ يَدَيْهِ، قَالَ نَبِيُّ اللَّهِ:وَكَانَ دَاوُدُ عَلَيْهِ السَّلامُ يَأْكُلُ مِنْ عَمِلِ يَدَيْهِ. رواه الطبراني في المعجم الكبير

அதே நேரத்தில் உடலுக்கும், உயிருக்கும் தீங்கினையும், ஆபத்தையும் ஏற்படுத்தும் தொழிலை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
قال رسول الله صلي الله عليه وسلم :
 2331 - حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ حَدَّثَنَا إِسْحَقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى أَنْ لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
رواه مالك في المؤطا وابن ماجه واحمد
3151 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ عَنْ لُؤْلُؤَةَ عَنْ أَبِي صِرْمَةَ قَالَ غَيْرَ قُتَيْبَةَ فِي هَذَا الْحَدِيثِ عَنْ أَبِي صِرْمَةَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ مَنْ ضَارَّ أَضَرَّ اللَّهُ بِهِ وَمَنْ شَاقَّ شَاقَّ اللَّهُ عَلَيْهِ
رواه ابوداود وابن ماجه احمد
தொழிலாளியின் பொறுப்பு:
பணம் கிடைக்கிறது என்பதற்காக உயிருக்கு பாதுகாப்பு இல்லாத தொழிலில் ஈடுபடுவது குறித்து அவன் யோசிக்க வேண்டும். ஏனெனில் விபத்து ஏற்பட்டால் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் இத்தொழில் விபத்து ஏற்படாவிட்டாலும் உடலில் தோல் சம்மந்தப்பட்ட நோய்களை நிச்சயம் ஏற்படுத்தவே செய்யும்.
இப்படி ஒரு தொழில் தேவை தானா?
ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக வருடம் முழுவதும் இத்தொழில் நடக்கிறது. அதுவும் புராணங்களை நம்பி
இந்த வருடம் மட்டும் இது வரை இப்போது நடந்த விபத்தையும் சேர்த்து ஏழு தீ விபத்துகள் அங்கே நடந்துள்ளன.
அந்த ஒரு நாள் கொண்டாட்ட நாளிலும் விபத்துகள் ஏற்படுவதுண்டு.
விபத்து ஏற்படாவிட்டாலும் பட்டாசு வெடிப்பதினால் கண் எரிச்சல், ஜலதோஷம், மயக்கம் முதல் கேன்ஸர் வரை கொடிய வியாதிகள் உண்டாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்ல.. சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய மாசு ஏற்படுகிறது.
அரசு சிந்திக்குமா?




Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.