இஸ்லாம் மனிதனின் இயல்போடும் இயற்கையோடும் ஒத்துப் போகும் மார்க்கம்.

அதீதமான கற்பனைகளையும், பாரதூரமான வாழ்வியல் முறைகளையும் கொண்டதாக  இஸ்லாத்தை அல்லாஹ் ஆக்கவில்லை.

மாறாக எல்லா தரப்பு மக்களும் பின்பற்றி வாழும் வகையில் தான் இஸ்லாத்தின் சட்டங்கள் , நடைமுறைகள் , வாழ்க்கை வழிமுறைளை அமையப் பெற்றுள்ளன.

ஏனெனில், இம்மார்க்கம் மனிதர்களின் மூளையில், கற்பனையில் உருவான மதம் அல்ல.. மாறாக மனிதனின் எல்லா விதமான பலம்பலகீனத்தை அறிந்த ஏக இறைவனான அல்லாஹ்வால் மனித இயல்புக்கு ஏற்றவாறு உருவாக்கி தரப்பட்ட மார்க்கம்.

விளையாட்டுக்களை இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

மனிதன் இயந்திரம் அல்ல.. கொடுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்வதற்கு..
அவ்வாறே அவன் மலக்கும் அல்ல.. ஏவப்பட்ட இறைக்கட்டளைகள் மற்றும் வணக்கங்களில் மட்டும் ஈடுபடுவதற்கு..
மாறாக அவன் ஆத்மா உள்ளவன். அவனுக்குள் உள்ளம் இருக்கின்றது. அது உணர்ச்சிகளும் ஆசைகளும் கொண்டது.

அவனது உள்ளம் சுறுசுறுப்புடன் இயங்குவது போன்று சோர்வடையவும் செய்யும்.

வேறு அசைவுகள் எதுவும் இன்றி ஒரு காரியத்தில் தொடர்ந்து ஒரு நாள் முழுவதும் கூட அவனால் ஈடுபட இயலாது.

ஆதலால் தான் மனிதனை தன்னை வணங்க மட்டுமே படைத்திருப்பதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிட்டும் எந்நேரமும் இறை வணக்கத்தில் ஈடுபடுமாறு அவனை அவன் கட்டாயப்படுத்தவில்லை..

மேலும் மனிதனின் செயல்கள் அனைத்தும் தொழுகையாகவும், அவன் பேசுவதெல்லாம் திக்ரு ஆகவும், அவனது மவுனம் ஃபிக்ர் (இறை சிந்தனை) ஆகவும், அவன் கேட்பதெல்லாம் குர்ஆனாகவும், ஓய்வு கிடைத்தால் பள்ளிவாசலில் தான் பொழுதை கழிக்க வேண்டும் என்றும் அவன் நிர்பந்திக்கவில்லை.

மனதுக்கு இதமளிக்கும் விளையாட்டு

மனிதன் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி அடையவும் இலட்சியப் பயணத்தில் அவன் புத்துணர்வு பெறவும் விளையாடுவதை இஸ்லாம் அனுமதித்துள்ளது.

சோம்பல் நீங்கி, சுறுசுறுப்பு பெறவும் களைப்பு நீங்கி புத்துணர்வு பெறவும் மனிதனுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.

அந்த ஓய்வு பகுதியில் மனதை குதூகலப்படுத்தும் காரியங்களில் ஈடுபடும் பொழுது அவன் தொடர்ந்த காரியங்களில் முன்பை விட புது வேகத்தில் செயல்படுவான்.

இதை கவனத்தில் கொண்டு தான் பண்டைய காலத்தில் இருந்தே விளையாடும் பழக்கம் மனிதர்களுக்கு மத்தியில் இருந்து வருகிறது.

விளையாடுவது, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது, அதனை பார்ப்பது போன்றவற்றை இஸ்லாம் அங்கீகரிக்கவே செய்கிறது.

போர் சம்பந்தப்பட்ட தற்காப்பு கலை வீர விளையாட்டுக்கள் , உடற் பயிற்சி சம்மந்தப்பட்ட விளையாட்டுக்கள், இஃதன்றி மகிழ்ச்சி , குதூகலத்தை மட்டும் அளிக்கும் விளையாட்டுக்களை கூட நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

நபித்தோழர்களுக்கு மத்தியில் பல தடவை ஓட்டப்பந்தயம் போட்டிகள் நடந்துள்ளன. பெரும்பாலான சமயங்களில் அலி (ரழி) அவர்கள் தான் முதலிடம் பிடிப்பார்கள்.

ஒட்டகப் பந்தயம், குதிரை பந்தயம் ஆகியவற்றை பல தடவை  நபித்தோழர்களுக்கு மத்தியில் நடந்துள்ளன.
                                                   (புகாரி தமிழ் 420)

விளையாட்டுப் போட்டியில் அண்ணல் நபி (ஸல்)

சில போட்டிகளை நபி (ஸல்) அவர்கள் நடத்தியுள்ளார்கள். சிலவற்றை கண்டு ரசித்துள்ளார்கள்.

இன்னும் சில போட்டிகளில் தாமே கலந்து கொண்டுள்ளார்கள்..

இதற்கு வரலாற்றில் ஒளியில் ஒரு நிகழ்வு ஆதாரம்

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ حَدَّثَنَا سَلَمَةُ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَوْمٍ مِنْ أَسْلَمَ يَتَنَاضَلُونَ بِالسُّوقِ

 فَقَالَ ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا وَأَنَا مَعَ بَنِي فُلَانٍ لِأَحَدِ

 الْفَرِيقَيْنِ فَأَمْسَكُوا بِأَيْدِيهِمْ فَقَالَ مَا لَهُمْ قَالُوا وَكَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَ بَنِي 

فُلَانٍ قَالَ ارْمُوا وَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ رواه البخاري


சூதாட்டமாகிப் போன இன்றைய விளையாட்டுக்கள்

விளையாட்டில் வெற்றி பெற்றால் பரிசு தருதல் என்பது வேறு; பணம் வைத்து விளையாடுதல் என்பது வேறு.

விளையாட்டையும், விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தருவதையும் ஆதரிக்கும் இஸ்லாம் பணம், சொத்து, நகை ஆகியவற்றை பணயமாக வைத்து விளையாடும் சூதாட்டத்தை தடுக்கின்றது.


 قال الله تعالي: يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 5:90


சூதாட்டத்தில் இலாபம் கிடைப்பது போன்று தெரிந்தாலும் அதன் நோக்கமும் முடிவும் பெரும் தீமை என்றே இஸ்லாம் கூறுகின்றது.

قال الله تعالي: يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ  2:219

ஏனெனில், சூதாட்டம் தந்திரம் செய்து மனிதர்களை ஏமாற்றும் மோசடி செயலாகும். நல்ல கண்ணியமானவர்களை கூட அது நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விடும்.

நவீன  .பி.எல் சூதாட்டம்

சாதாரண பொழுது போக்கு விளையாட்டாக இருந்து வந்த கிரிக்கெட் விளையாட்டு தற்போது பணம் கொழிக்கும் சூதாட்ட விளையாட்டாக மாறியுள்ளது.

.பி,எல் என்ற பெயரில் ஆடப்படும் கிரிக்கெட் விளையாட்டு அதன் தொடக்கம் முதல் இப்போது வரை கடும் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

வீரர்களை நிறுவனங்கள் பணத்திற்கு  ஏலம் எடுத்தல், அணிகளை நிறுவனங்கள் ஏலம் எடுத்தல், விளையாட்டு ஒளிபரப்பில் ஏகப்பட்ட விளம்பரங்கள் மற்றும் துணை விளம்பரங்கள் என இதன் அம்சங்கள் அனைத்தும் முற்றிலும் சூதாட்டமாகவே திகழ்கிறது.

கிரிக்கெட்டின் மீது பாமர மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை காசாக்கவும், வெளிநாட்டு வங்கிகளில் தேங்கி கிடக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும் அரசு உதவியுடன்  பண முதலைகள் இவ்விளையாட்டினை நடத்துகின்றனர். 

சந்தேகமின்றி சூதாட்டத்தில் நடக்கும் எல்லா நரித்தனங்களும் இதில் இருக்கவே செய்கின்றன.

ஆபாச நடனம், வீரர்களுக்கு இரவு ஆபாச விருந்து , வரி ஏய்ப்பு, ஏலம் எடுக்க இலஞ்சம் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்த .பி.எல் போட்டிகள் தற்போது ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்டப் புகாரிலும் சிக்கியுள்ளது.

பெட் கட்டுதல்

.பி.எல் போட்டிகளில் சூதாட்ட புரோக்கர்கள் குறிப்பிட்ட அணி வெற்றி பெறும் அல்லது தோற்கும் என்று பெட் கட்டுவது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு வெற்றியை பெட் கட்டியவர்கள் வெற்றி பெறவும், தோல்வியை பெட் கட்டியவர்கள் தோற்கவும் அணி வீரர்களை அல்லது குறிப்பிட்ட வீரர்களுக்கு இலஞ்சம் தருகின்றனர்.

இதனால் விளையாட்டின் போக்கு திசை மாறி, அணியின் நல்ல வீரர்களின் உழைப்பை பாழாக்குகின்றது. அத்துடன் நிறுவனரை  மட்டுமல்ல.. பார்வையாளர்களையும் முட்டாளாக்குகின்றது.

நிச்சயமாக இவ்வாறு பெட் கட்டுதலும் சூதாட்டமே. ஆனால் வேதனைக்குரிய விஷயம் புரோக்கர்கள் மட்டுமின்றி, படித்தபாமர இளைஞர்கள், மற்றும் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களிடம் விளையாட்டுகளிலும், இன்ன பிற விஷயங்களிலும் பெட் கட்டும் பழக்கம் தற்போது அதிமாக காணப்படுகின்றது.

இது விஷயத்தில் முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டும்.

விளையாட்டைத் தான் இஸ்லாம் அங்கீகரித்துள்ளதே தவிர சூதாட்டத்தையும், விளையாட்டுக்காக பெட் கட்டுவதையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.



3 Comments

  1. assalamu alikkum ......jazakkallah saik

    ReplyDelete
  2. your topic is very good.alhamdhulillah
    -abdul rahman (ambattur)

    ReplyDelete
  3. your topic is very good.alhamdhulillah
    -abdul rahman (ambattur)

    ReplyDelete

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.