சத்திய
மார்க்கமான இஸ்லாம் ‘மனித வாழ்க்கைக்கு ஏற்ற மார்க்கம்’ என்பதற்கு பல சிறப்பம்சங்கள்
இஸ்லாமிய மார்க்கத்தில் உண்டு.
அவற்றில் ஒன்று,
வாழ்க்கைத் தேவைக்காக மனிதன் உழைப்பதை பாவமாக பார்க்காமல் அதையும் இறைவனின்
கட்டளைகளில் ஒன்றாக கூறுவதாகும்.
இஸ்லாத்தை தவிர
உலக மதங்களில் எதுவும் உழைப்புக்கு இத்துணை முக்கியத்துவம் தருவதாக தெரியவில்லை.
ஆன்மீகம் என்ற
பெயரில், சன்னியாசி வாழக்கை, பிச்சையெடுத்தல், உழைக்காமல் மற்றவர் தருவதில்
இருந்து உண்டு வாழ்தல் போன்றவற்றை பெருமைப்படுத்தும் மதங்கள் உலகில் இருக்கவே
செய்கின்றன.
அவ்வாறே உழைப்பதை
பாவமாக கருதும் மதங்களும் உலகில் இருக்கின்றன.
ஆனால் இஸ்லாம்
உழைப்பதை ஊக்குவிக்கின்றது. உழைத்து சாப்பிடுவதை இறைக்கடமைகளில் ஒன்றாக
கூறுகின்றது. இறைவனின் உணவை உலகில் தேடுமாறு கட்டளையிடுகின்றது.
قال الله تعالي: هُوَ
الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا
مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ 67:15
قال الله تعالي: فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا
فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا
لَعَلَّكُمْ تُفْلِحُونَ 62:10
உழைப்பதை கடமை என்று சொன்ன நபி (ஸல்)
عن علقمة عن عبد الله قال
قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة
رواه البيهقي في السنن الكبري
இஸ்லாம் வழங்கும் தொழிலாளர் நல உரிமைகள்
உழைப்பை ஊக்கப்படுத்தும் இஸ்லாம் உழைப்பாளர்களின்
உரிமைகளைப் பற்றியும் பேசவே செய்கின்றது.
பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பணியாளர்களின்
உரிமைகள் குறித்து இஸ்லாம் பேசியிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும்.
1.நியாயமான சம்பளம்
நியாயமான சம்பளம் பெறுவது தொழிலாளி ஒருவரின் அடிப்படை
உரிமையாகும்.
தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள், தனிமனிதர்கள்
தங்களின் பணியாளர்களுக்கு நியாயமான சம்பளத்தையும் நிறைவான சம்பளத்தையும் தர
வேண்டும்
قال
الله تعالي: فَأَمَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ
أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِهِ4:173
قال
الله تعالي: وَأَمَّا الَّذِينَ آَمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ
أُجُورَهُمْ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ3:57
2.உடனடி சம்பளம்
சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வேலை
முடிந்தவுடன் சம்பளம் பெறுவது தொழிலாளி ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ الْوَلِيدِ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا وَهْبُ
بْنُ سَعِيدِ بْنِ عَطِيَّةَ السَّلَمِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ
زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطُوا
الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ رواه ابن ماجه
தின சம்பளத்தை வேலை முடிந்தவுடனும், வார சம்பளத்தை
வார இறுதி நாளிலும், மாத சம்பளத்தை மாத முடிவிலும் வழங்கி விட வேண்டும்.
அடுத்த மாதம் முதல் தேதி வழங்குவதை விட வேலை செய்த
மாதத்தின் இறுதி நாளில் வழங்கி விடுவதே மிகவும் சரியானதாகும்.
மறு மாதத்தின் ஐந்தாம் தேதி, பத்தாம் தேதி என்று
இழுத்தடிக்கும் செயல் மேற்கூறப்பட்ட நபிமொழிக்கு மாற்றமானதாகும்.
3.விடுமுறை உரிமை
‘விடுமுறை’ தொழிலாளி ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.
விடுமுறை தராமல் வேலை வாங்குவது நியாயம் அல்ல.
ஏனெனில், இஸ்லாம் ஓய்வை அருள் என்கிறது. அதனை முதலாளி
ஒரு தொழிலாளிக்கு வழங்க வேண்டும்.
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ
سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ
عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ
الصِّحَّةُ وَالْفَرَاغُ
رواه
البخاري
வாரத்தில் ஒரு நாள், மாதத்தில் சில நாட்கள், வருடத்தில்
சில நாட்கள் தொழிலாளிக்கு ஓய்வு தரப்பட வேண்டும். விடுமுறை தர மறுப்பது
அநியாயமாகும்.
4. விடுமுறை நாளில் சம்பள உரிமை
வார விடுமுறை நாட்களிலும், மாத விடுமுறை நாட்களிலும்,
பண்டிகை விடுமுறை நாட்களிலும் அவ்வாறே உடல் உபாதை காரணமாக எடுக்கப்படும் மருத்துவ
விடுப்பு நாட்களிலும் அவற்றுக்குரிய சம்பளத்தை தர வேண்டும். அதுவே இறைவனின்
கட்டளை.
அந்நாட்களுக்குரிய சம்பளத்தை பிடித்தம் செய்வது,
சம்பளத்தை மறுப்பது அநீதியே.
قال
الله تعالي: لَا
يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ4:95
عن أنس؛ أن رسول الله صلى
الله عليه وسلم قال: " إن بالمدينة أقوامًا ما سِرْتُم من مَسِير، ولا قطعتم
من واد إلا وهم معكم فيه " قالوا: وهم بالمدينة يا رسول الله ؟ قال: "
نعم حبسهم العذر "رواه البخاري
رواه الترمذي من طريق حجاج،
عن ابن جُرَيج، عن عبد الكريم، عن مِقْسم، عن ابن عباس قال: لا يستوي القاعدون من
المؤمنين غير أولي الضر عن بدر، والخارجون إلى بدر، لما نزلت غزوة بدر قال عبد
الله بن جحش وابن أم مكتوم: إنا أعميان يا رسول الله فهل لنا رخصة ؟ فنزلت: { لا
يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ
நமது தமிழகத்தில் சில பள்ளிவாசல்களில்
முறையான விடுப்பு நாட்களில் கூட ஆலிம்களுக்கு
சம்பள பிடித்தம் செய்வது கொடுமையிலும் மிக மோசமான கொடுமையாகும்.
5.சக்திக்குட்பட்ட வேலை
قال الله تعالي : لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا 2:286
قال رسول الله صلي الله عليه وسلم: وَإِذَا
أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ رواه البخاري
6.பணிப் பாதுகாப்பு உரிமை
செய்யும் வேலையில் பணிப் பாதுகாப்பு பெறுவது
தொழிலாளி ஒருவரின் அடிப்படை உரிமையாகும். உடனடியான வேலை நீக்கம் தனிமனிதனை
மட்டுமல்ல..ஒரு குடும்பத்தையே சோதனைக்குள்ளாக்கி விடும்.
ஆதலால் பணி பாதுகாப்பு விஷயத்தில் தொழிலாளி
ஒருவரிடம் தாராளமாக நடக்க வேண்டும்.
حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ
بْنَ الْمُنْكَدِرِ يَقُولُ
أَحَبَّ اللَّهُ عَبْدًا سَمْحًا إِنْ بَاعَ سَمْحًا إِنْ ابْتَاعَ
سَمْحًا إِنْ قَضَى سَمْحًا إِنْ اقْتَضَى رواه مالك في المؤطا وابن
ماجه
முதலாளிகள்
அல்லது நிர்வாகிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களிடம் இறைவனாக நடப்பதை கைவிட
வேண்டும்.
தங்களுக்கு
கீழ் இருந்தவர்களை ஃபி்அவ்னும், நம்ருதும் அடிமைப்படுத்தி வைத்திருந்தாக
திருக்குர்ஆன் கூறுகின்றது.
ஆனால் நிகழ்கால
உலகில் முதலாளிகள், நிர்வாகிகள் ஃபிர்அவ்ன்களாக மாறி நிற்பது வேதனையிலும் கொடிய
வேதனை.
தொழிலாளர்களிடம் கடினமாக நடக்கும் தீய முதலாளிகள் , நிர்வாகிகள் குறித்த எச்சரிக்கை
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ
حَدَّثَنَا الْحَسَنُ
أَنَّ عَائِذَ بْنَ عَمْرٍو وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ فَقَالَ
أَيْ بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَقُولُ إِنَّ شَرَّ الرِّعَاءِ الْحُطَمَةُ فَإِيَّاكَ أَنْ تَكُونَ
مِنْهُمْ رواه البخاري
الحطمة :العنيف بالرعاية اي القاسي الذي يظلمهم ولا يرق لهم ولا يرحمهم
பாய் இதெல்லாம் எந்தெந்த வசனத்தில் உள்ளன என குறிப்பிடவும்
ReplyDeleteமரியாதைக்குரிய சகோதரர் பிரகாஷ் அவர்களுக்கு,
ReplyDeleteமேலே உள்ள பதிவில் உதாரணமாக 67:15 என்று எண்கள் குறிப்பிடப்பட்டவை திருக்குர்ஆன் வசனங்கள். முதல் எண் அத்தியாயத்தை சுட்டுபவை. இரண்டாம் எண்கள் வசனத்தை சுட்டுபவை.
எண்கள் இன்றி அரபி வாசகம் மட்டும் இருப்பவை நபிமொழிகள். அவை அறிப்பாளர் தொடருடன் மூல ஆதார நூல்களின் பெயர்கள் குறிப்பிட்டு அரபு மொழியில் தரப்பட்டுள்ளன.