ஹிஜ்ரி 1434 –ம் ஆண்டின் முதல் நாளில்
நாம் உள்ளோம். இவ்வாண்டு ஹிஜ்ரி ஆண்டின் முதல் நாள் வெள்ளிக்கிழமை யாக இருக்கும்
நிலையில் ஹிஜ்ரத் குறித்தும், ஹிஜ்ரத் மூலம் நாம் பெறும் படிப்பினைகள் குறித்தும்
சிந்திக்க வேண்டும்.
நபிமார்களில் நபி (ஸல்) அவர்களுக்கு
முன்பு மூன்று நபிமார்கள் ஹிஜ்ரத் செய்ததாக அல்-குர்ஆன் மூலம் நமக்கு தெரிய
வருகிறது.
1.நபி இபுராஹிம் (அலை)
அவர்களின் ஹிஜ்ரத்
قال الله
تعالي: وَقَالَ
إِنِّي ذَاهِبٌ إِلَى رَبِّي سَيَهْدِينِ 37:99
قال الخازن في تفسيره : أي مهاجر إلى ربي وأهجر
دار الكفر قاله بعد خروجه من النار { سيهدين } أي إلى حيث أمرني بالمصير إليه وهو أرض
الشام فلما قدم الأرض المقدسة سأل ربه الولد .
(மேற்கண்ட வசனத்திற்கு திருக்குர்ஆன் விரிவுரையாளர்
அல்லாமா காசிzன் (ரஹ்) நபி இப்ராஹிம் (அலை) தமது சொந்த நாடான ஈராக்கில் இருந்து
பலஸ்தீனத்திற்கு ஹிஜ்ரத் செய்தார்கள் என்று விளக்கமளித்துள்ளார்கள்.)
2.நபி லூத் (அலை) அவர்களின்
ஹிஜ்ரத்
قال الله
تعالي: فَآَمَنَ لَهُ لُوطٌ وَقَالَ
إِنِّي مُهَاجِرٌ إِلَى رَبِّي إِنَّهُ هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ 29:26
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தில் அன்னாருடன்
நபி லூத் (அலை) அவர்களும் இருந்ததாக நமக்கு வரலாற்று நூல்களில் தெரிய வருகிறது.
3.நபி மூஸா (அலை) அவர்களின் ஹிஜ்ரத்
قال الله تعالي: وَلَقَدْ أَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي
فَاضْرِبْ لَهُمْ طَرِيقًا فِي الْبَحْرِ يَبَسًا لَا تَخَافُ دَرَكًا وَلَا تَخْشَى20:77
நபி மூஸா (அலை)
அவர்கள் எகிப்தில் இருந்து இஸ்ரவேலர்களுடன் ஹிஜ்ரத் செய்தார்கள்.
ஹிஜ்ரத் குறித்த விளக்கம்
ஹிஜ்ரத் என்றால் ஏதோ
ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு புறப்பட்டுச் செல்வதல்ல..
மாறாக வீடு,
சொத்துக்கள், உறவுகள், பிறந்த பூமி ஆகியவற்றை அப்படியே விட்டு விட்டு எதிர்காலம்
சூனியமாக இருக்கும் நிலையில் வழியில் பாதுகாப்போ, போய்ச் சேரும் ஊரில்
முன்னேற்பாடோ இன்றி மார்க்கத்தின் வழியில்
வாழ்வதற்காக அல்லாஹ்வை நம்பி புறப்படுவதே ஹிஜ்ரத் ஆகும்.
ஹிஜ்ரத் ஏன்? எதனால்?
இறுதி நபி ஹிஜ்ரத்
செய்வார் என்று முந்தைய வேதங்களில் கூறப்பட்டு இருந்தது. நபி (ஸல்) அவர்களும்
நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலேயே தாம் பிறந்த ஊரில் இருந்து ஹிஜ்ரத் செய்ய
வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை அறிந்திருந்தார்கள்.
வரகத் இப்னு நவ்ஃபல்
நபி (ஸல்) அவர்களிடம் நபித்துவத்தின்
ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் குறித்து கூறியதாக நபிமொழிகளில் காணப்படுகின்றது.
231 - فَقَالَ لَهُ وَرَقَةُ
هَذَا النَّامُوسُ الَّذِي أُنْزِلَ عَلَى مُوسَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا يَا لَيْتَنِي أَكُونُ حَيًّا حِينَ يُخْرِجُكَ قَوْمُكَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَ مُخْرِجِيَّ هُمْ قَالَ
وَرَقَةُ نَعَمْ لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ وَإِنْ
يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا رواه مسلم
(
சுருக்கமான மொழிபெயர்ப்பு:“அப்போது
வரகத் இப்னு நவ்ஃபல் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உம்மிடம் வந்த (வான)வர் மூஸா
நபியிடம் வந்த நாமூஸ் (ஜிப்ரீல்) அவர்களே. உம்மை உமது சமுதாயத்தவர்கள்
வெளியேற்றிடும் சமயத்தில் நான் உயிருடன் இருக்க வேண்டுமே!
நபி (ஸல்) கேட்டார்கள்.
என்னை அவர்கள் வெளியேற்றுவார்களா?” )
ஹிஜ்ரத்துக்கான காரணம் இஸ்லாத்தை வாழ வைப்பதே
நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிபின்
மரணத்திற்கு பின்பு மக்கா காஃபிர்களின் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள்
அதிகரித்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் நபி (ஸல்) அவர்களை கொலை செய்யவும்
துணிந்தார்கள். இஸ்லாத்தை வாழ வைக்க நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தாக
வேண்டும். ஆதலால் அல்லாஹ் ஹிஜ்ரத் செய்யுமாறு கட்டளையிட்டான். சத்தியமான
மார்க்கமான இஸ்லாத்தை வாழ வைக்கவே நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் ஹிஜ்ரத்
செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்களும்,
நபித்தோழர்களும் உயிர் வாழ மக்காவில் இருந்து மதீனாவுக்கு தப்பித்துச்
செல்லவில்லை. இதனை எதிரிகளும் நன்கு அறிந்திருந்தார்கள்.
ஆதலால் தான் நபி (ஸல்) அவர்களின்
தலைக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாக அறிவிக்கப்பட்டது.நபித்தோழர்களும் ஹிஜ்ரத் செய்ய
விடாமல் தடுக்கப்பட்டனர்.
மக்காவாசிகள் எத்துணை துன்பங்கள்
செய்தாலும் இம்மார்க்கம் அழியாது, நிச்சயம் வாழும். இவ்வுலகில் வெற்றி பெறும்
என்பதை நபி (ஸல்) சஹாபாக்களுக்கு உணர்த்தி இருந்தார்கள்.ஆதலால் தான்
ஹிஜ்ரத்துக்காக எத்துணை பெரிய இழப்பையும்
தாங்கிட சஹாபாக்கள் துணிந்தனர். பின்வரும் நபிமொழி இதற்கு ஆதாரம்.
3343 - حَدَّثَنِي مُحَمَّدُ
بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى عَنْ إِسْمَاعِيلَ حَدَّثَنَا قَيْسٌ عَنْ خَبَّابِ
بْنِ الْأَرَتِّ قَالَ
شَكَوْنَا
إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً
لَهُ فِي ظِلِّ الْكَعْبَةِ قُلْنَا لَهُ أَلَا تَسْتَنْصِرُ لَنَا أَلَا تَدْعُو اللَّهَ
لَنَا قَالَ كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ لَهُ فِي الْأَرْضِ فَيُجْعَلُ
فِيهِ فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَتَيْنِ
وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَيُمْشَطُ بِأَمْشَاطِ الْحَدِيدِ مَا دُونَ
لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ وَاللَّهِ لَيُتِمَّنَّ
هَذَا الْأَمْرَ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ لَا
يَخَافُ إِلَّا اللَّهَ أَوْ الذِّئْبَ عَلَى غَنَمِهِ وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ رواه البخاري
(சுருக்கமான மொழிபெயர்ப்பு:நபித்தோழர் கப்பாப்
இப்னுல் அரத் (ரழி) அவர்கள் மக்காவாசிகளின் கொடுமைகளை நபி(ஸல்) அவர்களிடம்
முறையிட்டு துஆ செய்யுமாறு வேண்டிய பொழுது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின்
மீதாணையாக! யமன் நாட்டிலுள்ள சன்ஆ நகரில் இருந்து ஹள்ர மவ்த் என்ற இடம் வரை பயணம்
செய்யும் ஒருவர் அல்லாஹ்வையும், தமது ஆட்டின் மீது ஓநாயையும் தவிர வேறு யாருக்கும்
பயப்படாமல் பயணம் செய்யுமளவுக்கு இம்மார்க்கம் முழுமையடையும்.)
ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்
அண்ணல் நபி (ஸல்) வாழ்விலும்,
இஸ்லாமிய வரலாற்றிலும் முக்கிய இடம் வகிக்கும் ஹிஜ்ரத்தில் நமக்கு பல படிப்பினைகள்
இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இவ்விடம் தருவோம்.
1.வேகத்தை விட விவேகமே
சிறந்தது.
ஹிஜ்ரத் இரவில் வாசலில்
கொலையாளிகள் நிறுத்தப்பட்டிருந்தனர். காலையில் தம்மை காணவில்லையெனில் நிச்சயம்
குரைஷிகள் தேடுவார்கள். என்ன விலை கொடுத்தாவது பிடிக்க முயற்சிப்பார்கள் என்பது
நபி (ஸல்) அவர்களுக்கு தெரியும். பயணத்தில் எதுவும் நடக்கலாம். வழியில் உயிருக்கு
ஆபத்து ஏற்படலாம். ஆதலால் திடகாத்திரமான வாலிபரான உமர் (ரழி) அவர்களை தம்முடன்
ஹிஜ்ரத் வர தேர்ந்தெடுத்து இருக்கலாம். உமர் (ரழி) அவர்களின் வீரத்தை மக்காவாசிகள்
நன்கறிவார்கள். அவருக்கு அச்சப்படவே செய்வார்கள்.
ஆனால் தம்முடன் வர அபூபக்ர் (ரழி)
அவர்களையே தேர்ந்தெடுத்தார்கள். காரணம் கடினமான சூழ்நிலைகளில் வேகத்தை விட விவேகமே
சிறந்தது. அபூபக்கர் (ரழி) அவர்கள் வேகமானவர்கள் அல்ல..விவேகமானவர்கள் என்பதை
நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எதிரிகள் குகை வாசலில் நின்ற போது
அபூபக்ர் (ரழி) பயப்படவில்லை. அவசரப்பட்டு பாயவில்லை. குகை வாசலில் எதிரிகள்
நிற்கிறார்களே என்ன செய்வது? என்று நபியிடம் மெதுவாகவே கேட்டார்கள்.
3380 - حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ سِنَانٍ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ عَنْ أَبِي بَكْرٍ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ
قُلْتُ
لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا فِي الْغَارِ لَوْ أَنَّ أَحَدَهُمْ
نَظَرَ تَحْتَ قَدَمَيْهِ لَأَبْصَرَنَا فَقَالَ مَا ظَنُّكَ يَا أَبَا بَكْرٍ بِاثْنَيْنِ
اللَّهُ ثَالِثُهُمَا رواه البخاري
("அபூபக்ர் நபியிடம் சொன்னார். அவர்களில் ஒருவர் தமது
பாதங்களின் கீழாக பார்த்தால் நம்மை பார்த்து விடுவார். நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். நாம் இருவர் என்று நீர் நினைக்கிறீரா அபூபக்ர்? மூன்றாமவனாக அல்லாஹ்
உள்ளான்.")
உமரின் ஹிஜ்ரத்: உமர்
(ரழி) அவர்கள் தமது ஹிஜ்ரத்தின் போது முதலில் கஅபாவுக்கு வந்து தவாஃப் செய்து
விட்டு தமது பயணத்தை தெளிவாக அறிவித்தார்கள்.
عن
عبد الله بن العباس قال: قال لي علي بن أبي طالب: ما علمت أن أحداً من المهاجرين هاجر
إلا مختفياً، إلا عمر بن الخطاب، فإنه لما هم بالهجرة تقلد سيفه، وتنكب قوسه، وانتضى
في يده أسهماً، واختصر عنزته، ومضى قبل الكعبة، والملأ من قريش بفنائها، فطاف بالبيت
سبعاً متمكناً، ثم أتى المقام فصلى متمكناً، ثم وقف على الحلق واحدة واحدة، وقال لهم:
شاهت الوجوه، لا يرغم الله إلا هذه المعاطس، من أراد أن تثكله أمه، ويوتم ولده، ويرمل
زوجته، فليلقني وراء هذا الوادي. قال علي: فما تبعه أحد إلا قوم من المستضعفين علمهم
وأرشدهم ومضى لوجهه. (اسد الغابة)
(சுருக்கமான
மொழிபெயர்ப்பு: வாளை தொங்கவிட்டவராகவும், கையில் நாணில் அம்பு ஏற்றப்பட்ட வில்லை
ஏந்தியவராகவும் ஏழு முறை கஅபாவை தவாஃப் செய்த உமர் (ரழி) அவர்கள் அங்கே இருந்த
மக்கா குரைஷிகளைப் பார்த்து கூறினார்கள்.
"தமது தாயை நாதியற்றவளாக்கவும்,
பிள்ளைகளை அநாதையாக்கவும், மனைவியை விதவையாக்கவும் விரும்புபவர் எனது ஹிஜ்ரத்
பயணத்தில் மக்காவுக்கு வெளியே என்னை சந்திக்கலாம்."
துணிச்சலான
இவ்வார்த்தைகள் வேகமானதே தவிர விவேகமானதல்ல..
அத்துடன் உமர்(ரழி) இருபது
நபர்களுடன் ஹிஜ்ரத் சென்றார்கள். இது புகாரியில் இடம் பெறுகிறது.
3632 - حَدَّثَنَا مُحَمَّدُ
بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ
سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
أَوَّلُ
مَنْ قَدِمَ عَلَيْنَا مُصْعَبُ بْنُ عُمَيْرٍ وَابْنُ أُمِّ مَكْتُومٍ وَكَانَا يُقْرِئَانِ
النَّاسَ فَقَدِمَ بِلَالٌ وَسَعْدٌ وَعَمَّارُ بْنُ يَاسِرٍ ثُمَّ قَدِمَ عُمَرُ بْنُ
الْخَطَّابِ فِي عِشْرِينَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ثُمَّ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْتُ أَهْلَ
الْمَدِينَةِ فَرِحُوا بِشَيْءٍ فَرَحَهُمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ حَتَّى جَعَلَ الْإِمَاءُ يَقُلْنَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ فَمَا قَدِمَ حَتَّى قَرَأْتُ سَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
فِي سُوَرٍ مِنْ الْمُفَصَّلِ رواه
البخاري
புகாரி
விரிவுரையான பத்ஹுல் பாரியில் அவர்கள் யார்? யார்? என்ற விபரமும் உள்ளது.
وَقَدْ
سَمَّى اِبْن إِسْحَاق مِنْهُمْ زَيْد بْن الْخَطَّاب وَسَعِيد بْن زَيْد بْن عَمْرو
وَعَمْرو بْن سُرَاقَة وَأَخَاهُ عَبْد اللَّه وَوَاقِد بْن عَبْد اللَّه وَخَالِدًا
وَإِيَاسًا وَعَامِرًا وَعَاقِلًا بَنِي الْبُكَيْر وَخُنَيْس بْن حُذَافَة - بِمُعْجَمَةٍ
وَنُون ثُمَّ سِين مُصَغَّر - وَعَيَّاش بْن رَبِيعَة وَخَوْلِيّ بْن أَبِي خَوْلِيّ
وَأَخَاهُ ، هَؤُلَاءِ كُلّهمْ مِنْ أَقَارِب عُمَر وَخُلَفَائِهِمْ ،(فتح الباري)
ஆனால் அபூபக்ர்
(ரழி) அவர்கள் தனியாக ஹிஜ்ரத் செய்ய முற்பட்டும் நபி(ஸல்) அவர்கள் அவர்களை போக
வேண்டாமென கூறி தம்முடன் வருமாறு கூறினார்கள்.
இது அவர்களின்
விவேகத்திற்கு கிடைத்த வெகுமதி.
2.யார் யார் எதற்கு
தகுதி என்று அறிந்து, அவர்களை பயன்படுத்துவது
ஹிஜ்ரத்தில் நபி
(ஸல்) அவர்கள் எல்லா முஸ்லிம்களையும் பயன்படுத்தவில்லை. ஆறு நபர்களை மட்டுமே
உதவிக்கு பயன்படுத்தினார்கள்..
1.அபூபக்ர்(ரழி),
2.அவர்களின் மகன் அப்துல்லாஹ்(ரழி).3.அவர்களின் அடிமை ஆமிர் இப்னு புஹைரா (ரழி) 4.
அவர்களின் மகள் அன்னை அஸ்மா(ரழி) 5 . அலீ (ரழி) 6. பயண வழிகாட்டியாக வந்த
அப்துல்லாஹ் இப்னு உரைகித் (இவர் அப்போது முஸ்லிமல்லாதவராக இருந்தார்.
ஆக மிக முக்கியமான
ஹிஜ்ரத் பயணத்தில் நபி (ஸல்) பெருங் கூட்டத்தையோ, படை பலத்தையோ பயன்படுத்தவில்லை.
மாறாக தகுதிமிக்க, சமூகத்தில் ஆறு பிரிவினரை பயன்படுத்தினார்கள்.
அபூபக்ர்(ரழி) –
பெரியவர்
அப்துல்லாஹ் இப்னு
அபீபக்ர் (ரழி) – நடுத்தர வயதுடையவர்
அலீ (ரழி) –
திருமணமாகாத வாலிபர்
அஸ்மா (ரழி)- பெண்
ஆமிர் இப்னு
புஹைரா(ரழி) - அடிமை
அப்துல்லாஹ் இப்னு
உரைகித் – முஸ்லிமல்லாதவர்
3.. அல்லாஹ்வுக்காக தியாகம் செய்ய முன் வந்தால் கண்களுக்கு
தெரியாத உதவிகள் கிடைக்கும்
எல்லா வகையான ஏற்பாடுகள், வலிமையான திட்டங்கள், எதற்கும் அஞ்சாத தியாக
உணர்வு ஆகியவற்றுடன் களத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து இறங்கினால் கண்களால்
பார்க்கப்படாத மறைவான தமது படைகளைக் கொண்டு அல்லாஹ் உதவி செய்வான்.
ஹிஜ்ரத்தில் எதிரிகள் குகையை சுற்றி வளைத்தார்கள். இருவருக்கும் உதவி செய்ய
அல்லாஹ் நாடினான். எதிரிகளின் சிந்தனையை திருப்பினான். அவ்வளவு தூரம் வந்த அவர்கள்
குகைக்குள் பார்ப்பதை தவற விட்டார்கள். அதற்கு ஒரு நிமிடம் கூட ஆகாது. ஆனால்
அல்லாஹ் நாடவில்லை.
قال الله تعالي: إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ
نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا
فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ
اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ
الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ
حَكِيمٌ 9:40
قال الله تعالي: وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ
إِلَّا هُوَ 74:31
4.கலப்பற்ற உண்மையான நட்பு நன்மைகளை பெற்றுத்
தரும்
ஹம்ஸா (ரழி) போன்ற
வலிமையான உறவினர்கள் இருந்தும் நபி(ஸல்) அவர்கள் தமது பால்ய நண்பர் அபூபக்ர்(ரழி)
அவர்களையே பயன்படுத்தினார்கள். அபூபக்ரின் ஆழமான நட்பு, தன்னலம் கருதாமல் நபி(ஸல்)
அவர்களுக்கு உதவுவதல் ஆகியவையே நபியுடன் ஹிஜ்ரத் செய்யும் பாக்கியத்தை
அபூபக்ருக்கு தந்தன.
அபூபக்ரின்
கலப்பற்ற அன்புக்கு அடையாளங்கள்
அ)ஹிஜ்ரத் செல்ல
வேண்டிய நிலை ஏற்படும் என்றவுடன் இரண்டு ஒட்டகங்களை எந்நேரமும் தயார் நிலையில்
வைத்திருந்தது.
ஆ)சவ்ர் குகையில்
முதலில் தாம் சென்று எல்லா பொந்துகளையும் அடைத்தது. அடைக்க முடியாத பொந்தினை தமது
விரலால் அடைத்தது.
இ)மதீனாவில்
நபிக்கு துன்பம் ஏற்படும் என்று நினைத்து தன்னை நபியென நினைத்து சந்தித்த
மக்களிடம் நபியை காட்டாமல் இருந்தது.
ஆதலால்
திருக்குர்ஆனில் அவரை நபியின் நண்பர் என்று அல்லாஹ் சாட்சி கூறினான்.
قال الله تعالي: إِذْ يَقُولُ لِصَاحِبِهِ
ஹிஜ்ரத்
சம்மந்தப்பட்ட நீளமான ஹதீஸ்
3616
- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ قَالَ ابْنُ
شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
لَمْ
أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ وَلَمْ يَمُرَّ عَلَيْنَا
يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
طَرَفَيْ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً فَلَمَّا ابْتُلِيَ الْمُسْلِمُونَ خَرَجَ
أَبُو بَكْرٍ مُهَاجِرًا نَحْوَ أَرْضِ الْحَبَشَةِ حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الْغِمَادِ
لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ وَهُوَ سَيِّدُ الْقَارَةِ فَقَالَ أَيْنَ تُرِيدُ يَا
أَبَا بَكْرٍ فَقَالَ أَبُو بَكْرٍ أَخْرَجَنِي قَوْمِي فَأُرِيدُ أَنْ أَسِيحَ فِي
الْأَرْضِ وَأَعْبُدَ رَبِّي قَالَ ابْنُ الدَّغِنَةِ فَإِنَّ مِثْلَكَ يَا أَبَا بَكْرٍ
لَا يَخْرُجُ وَلَا يُخْرَجُ إِنَّكَ تَكْسِبُ الْمَعْدُومَ وَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ
الْكَلَّ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ فَأَنَا لَكَ جَارٌ
ارْجِعْ وَاعْبُدْ رَبَّكَ بِبَلَدِكَ فَرَجَعَ وَارْتَحَلَ مَعَهُ ابْنُ الدَّغِنَةِ
فَطَافَ ابْنُ الدَّغِنَةِ عَشِيَّةً فِي أَشْرَافِ قُرَيْشٍ فَقَالَ لَهُمْ إِنَّ
أَبَا بَكْرٍ لَا يَخْرُجُ مِثْلُهُ وَلَا يُخْرَجُ أَتُخْرِجُونَ رَجُلًا يَكْسِبُ
الْمَعْدُومَ وَيَصِلُ الرَّحِمَ وَيَحْمِلُ الْكَلَّ وَيَقْرِي الضَّيْفَ وَيُعِينُ
عَلَى نَوَائِبِ الْحَقِّ فَلَمْ تُكَذِّبْ قُرَيْشٌ بِجِوَارِ ابْنِ الدَّغِنَةِ وَقَالُوا
لِابْنِ الدَّغِنَةِ مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ فَلْيُصَلِّ
فِيهَا وَلْيَقْرَأْ مَا شَاءَ وَلَا يُؤْذِينَا بِذَلِكَ وَلَا يَسْتَعْلِنْ بِهِ
فَإِنَّا نَخْشَى أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا فَقَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ
لِأَبِي بَكْرٍ فَلَبِثَ أَبُو بَكْرٍ بِذَلِكَ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ وَلَا
يَسْتَعْلِنُ بِصَلَاتِهِ وَلَا يَقْرَأُ فِي غَيْرِ دَارِهِ ثُمَّ بَدَا لِأَبِي بَكْرٍ
فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ وَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ
فَيَنْقَذِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ وَهُمْ يَعْجَبُونَ
مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا بَكَّاءً لَا يَمْلِكُ
عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ وَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنْ الْمُشْرِكِينَ
فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ فَقَالُوا إِنَّا كُنَّا
أَجَرْنَا أَبَا بَكْرٍ بِجِوَارِكَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَقَدْ
جَاوَزَ ذَلِكَ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ فَأَعْلَنَ بِالصَّلَاةِ وَالْقِرَاءَةِ
فِيهِ وَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا فَانْهَهُ فَإِنْ
أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ وَإِنْ أَبَى
إِلَّا أَنْ يُعْلِنَ بِذَلِكَ فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ فَإِنَّا
قَدْ كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ وَلَسْنَا مُقِرِّينَ لِأَبِي بَكْرٍ الِاسْتِعْلَانَ
قَالَتْ عَائِشَةُ فَأَتَى ابْنُ الدَّغِنَةِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ قَدْ عَلِمْتَ
الَّذِي عَاقَدْتُ لَكَ عَلَيْهِ فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ وَإِمَّا أَنْ
تَرْجِعَ إِلَيَّ ذِمَّتِي فَإِنِّي لَا أُحِبُّ أَنْ تَسْمَعَ الْعَرَبُ أَنِّي أُخْفِرْتُ
فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ فَقَالَ أَبُو بَكْرٍ فَإِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ
وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَوْمَئِذٍ بِمَكَّةَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُسْلِمِينَ
إِنِّي أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ ذَاتَ نَخْلٍ بَيْنَ لَابَتَيْنِ وَهُمَا الْحَرَّتَانِ
فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ الْمَدِينَةِ وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ
بِأَرْضِ الْحَبَشَةِ إِلَى الْمَدِينَةِ وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ قِبَلَ الْمَدِينَةِ
فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكَ فَإِنِّي
أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي فَقَالَ أَبُو بَكْرٍ وَهَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ
قَالَ نَعَمْ فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ لِيَصْحَبَهُ وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ
السَّمُرِ وَهُوَ الْخَبَطُ أَرْبَعَةَ أَشْهُرٍ قَالَ ابْنُ شِهَابٍ قَالَ عُرْوَةُ
قَالَتْ عَائِشَةُ فَبَيْنَمَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي
نَحْرِ الظَّهِيرَةِ قَالَ قَائِلٌ لِأَبِي بَكْرٍ هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ مُتَقَنِّعًا فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا فَقَالَ
أَبُو بَكْرٍ فِدَاءٌ لَهُ أَبِي وَأُمِّي وَاللَّهِ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ
إِلَّا أَمْرٌ قَالَتْ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
فَاسْتَأْذَنَ فَأُذِنَ لَهُ فَدَخَلَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ أَخْرِجْ مَنْ عِنْدَكَ فَقَالَ أَبُو بَكْرٍ إِنَّمَا هُمْ
أَهْلُكَ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الْخُرُوجِ
فَقَالَ أَبُو بَكْرٍ الصَّحَابَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ قَالَ أَبُو بَكْرٍ فَخُذْ بِأَبِي
أَنْتَ يَا رَسُولَ اللَّهِ إِحْدَى رَاحِلَتَيَّ هَاتَيْنِ قَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالثَّمَنِ قَالَتْ عَائِشَةُ فَجَهَّزْنَاهُمَا
أَحَثَّ الْجِهَازِ وَصَنَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ فَقَطَعَتْ أَسْمَاءُ
بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مِنْ نِطَاقِهَا فَرَبَطَتْ بِهِ عَلَى فَمِ الْجِرَابِ
فَبِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ قَالَتْ ثُمَّ لَحِقَ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلِ ثَوْرٍ فَكَمَنَا فِيهِ
ثَلَاثَ لَيَالٍ يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ وَهُوَ غُلَامٌ
شَابٌّ ثَقِفٌ لَقِنٌ فَيُدْلِجُ مِنْ عِنْدِهِمَا بِسَحَرٍ فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ
بِمَكَّةَ كَبَائِتٍ فَلَا يَسْمَعُ أَمْرًا يُكْتَادَانِ بِهِ إِلَّا وَعَاهُ حَتَّى
يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلَامُ وَيَرْعَى عَلَيْهِمَا
عَامِرُ بْنُ فُهَيْرَةَ مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ فَيُرِيحُهَا عَلَيْهِمَا
حِينَ تَذْهَبُ سَاعَةٌ مِنْ الْعِشَاءِ فَيَبِيتَانِ فِي رِسْلٍ وَهُوَ لَبَنُ مِنْحَتِهِمَا
وَرَضِيفِهِمَا حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ يَفْعَلُ ذَلِكَ
فِي كُلِّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلَاثِ وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ وَهُوَ
مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيَا خِرِّيتًا وَالْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ
قَدْ غَمَسَ حِلْفًا فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ وَهُوَ عَلَى دِينِ
كُفَّارِ قُرَيْشٍ فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا وَوَاعَدَاهُ غَارَ
ثَوْرٍ بَعْدَ ثَلَاثِ لَيَالٍ بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلَاثٍ وَانْطَلَقَ مَعَهُمَا
عَامِرُ بْنُ فُهَيْرَةَ وَالدَّلِيلُ فَأَخَذَ بِهِمْ طَرِيقَ السَّوَاحِلِ
قَالَ
ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَالِكٍ الْمُدْلِجِيُّ وَهُوَ
ابْنُ أَخِي سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ
سَمِعَ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ
يَقُولُ
جَاءَنَا رُسُلُ كُفَّارِ قُرَيْشٍ يَجْعَلُونَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ دِيَةَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا مَنْ قَتَلَهُ أَوْ
أَسَرَهُ فَبَيْنَمَا أَنَا جَالِسٌ فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ قَوْمِي بَنِي مُدْلِجٍ
أَقْبَلَ رَجُلٌ مِنْهُمْ حَتَّى قَامَ عَلَيْنَا وَنَحْنُ جُلُوسٌ فَقَالَ يَا سُرَاقَةُ
إِنِّي قَدْ رَأَيْتُ آنِفًا أَسْوِدَةً بِالسَّاحِلِ أُرَاهَا مُحَمَّدًا وَأَصْحَابَهُ
قَالَ سُرَاقَةُ فَعَرَفْتُ أَنَّهُمْ هُمْ فَقُلْتُ لَهُ إِنَّهُمْ لَيْسُوا بِهِمْ
وَلَكِنَّكَ رَأَيْتَ فُلَانًا وَفُلَانًا انْطَلَقُوا بِأَعْيُنِنَا ثُمَّ لَبِثْتُ
فِي الْمَجْلِسِ سَاعَةً ثُمَّ قُمْتُ فَدَخَلْتُ فَأَمَرْتُ جَارِيَتِي أَنْ تَخْرُجَ
بِفَرَسِي وَهِيَ مِنْ وَرَاءِ أَكَمَةٍ فَتَحْبِسَهَا عَلَيَّ وَأَخَذْتُ رُمْحِي
فَخَرَجْتُ بِهِ مِنْ ظَهْرِ الْبَيْتِ فَحَطَطْتُ بِزُجِّهِ الْأَرْضَ وَخَفَضْتُ
عَالِيَهُ حَتَّى أَتَيْتُ فَرَسِي فَرَكِبْتُهَا فَرَفَعْتُهَا تُقَرِّبُ بِي حَتَّى
دَنَوْتُ مِنْهُمْ فَعَثَرَتْ بِي فَرَسِي فَخَرَرْتُ عَنْهَا فَقُمْتُ فَأَهْوَيْتُ
يَدِي إِلَى كِنَانَتِي فَاسْتَخْرَجْتُ مِنْهَا الْأَزْلَامَ فَاسْتَقْسَمْتُ بِهَا
أَضُرُّهُمْ أَمْ لَا فَخَرَجَ الَّذِي أَكْرَهُ فَرَكِبْتُ فَرَسِي وَعَصَيْتُ الْأَزْلَامَ
تُقَرِّبُ بِي حَتَّى إِذَا سَمِعْتُ قِرَاءَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَهُوَ لَا يَلْتَفِتُ وَأَبُو بَكْرٍ يُكْثِرُ الِالْتِفَاتَ سَاخَتْ يَدَا
فَرَسِي فِي الْأَرْضِ حَتَّى بَلَغَتَا الرُّكْبَتَيْنِ فَخَرَرْتُ عَنْهَا ثُمَّ
زَجَرْتُهَا فَنَهَضَتْ فَلَمْ تَكَدْ تُخْرِجُ يَدَيْهَا فَلَمَّا اسْتَوَتْ قَائِمَةً
إِذَا لِأَثَرِ يَدَيْهَا عُثَانٌ سَاطِعٌ فِي السَّمَاءِ مِثْلُ الدُّخَانِ فَاسْتَقْسَمْتُ
بِالْأَزْلَامِ فَخَرَجَ الَّذِي أَكْرَهُ فَنَادَيْتُهُمْ بِالْأَمَانِ فَوَقَفُوا
فَرَكِبْتُ فَرَسِي حَتَّى جِئْتُهُمْ وَوَقَعَ فِي نَفْسِي حِينَ لَقِيتُ مَا لَقِيتُ
مِنْ الْحَبْسِ عَنْهُمْ أَنْ سَيَظْهَرُ أَمْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فَقُلْتُ لَهُ إِنَّ قَوْمَكَ قَدْ جَعَلُوا فِيكَ الدِّيَةَ وَأَخْبَرْتُهُمْ
أَخْبَارَ مَا يُرِيدُ النَّاسُ بِهِمْ وَعَرَضْتُ عَلَيْهِمْ الزَّادَ وَالْمَتَاعَ
فَلَمْ يَرْزَآنِي وَلَمْ يَسْأَلَانِي إِلَّا أَنْ قَالَ أَخْفِ عَنَّا فَسَأَلْتُهُ
أَنْ يَكْتُبَ لِي كِتَابَ أَمْنٍ فَأَمَرَ عَامِرَ بْنَ فُهَيْرَةَ فَكَتَبَ فِي رُقْعَةٍ
مِنْ أَدِيمٍ ثُمَّ مَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ الزُّبَيْرَ فِي رَكْبٍ مِنْ الْمُسْلِمِينَ كَانُوا
تِجَارًا قَافِلِينَ مِنْ الشَّأْمِ فَكَسَا الزُّبَيْرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ ثِيَابَ بَيَاضٍ وَسَمِعَ الْمُسْلِمُونَ بِالْمَدِينَةِ
مَخْرَجَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ فَكَانُوا
يَغْدُونَ كُلَّ غَدَاةٍ إِلَى الْحَرَّةِ فَيَنْتَظِرُونَهُ حَتَّى يَرُدَّهُمْ حَرُّ
الظَّهِيرَةِ فَانْقَلَبُوا يَوْمًا بَعْدَ مَا أَطَالُوا انْتِظَارَهُمْ فَلَمَّا
أَوَوْا إِلَى بُيُوتِهِمْ أَوْفَى رَجُلٌ مِنْ يَهُودَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِهِمْ
لِأَمْرٍ يَنْظُرُ إِلَيْهِ فَبَصُرَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
وَأَصْحَابِهِ مُبَيَّضِينَ يَزُولُ بِهِمْ السَّرَابُ فَلَمْ يَمْلِكْ الْيَهُودِيُّ
أَنْ قَالَ بِأَعْلَى صَوْتِهِ يَا مَعَاشِرَ الْعَرَبِ هَذَا جَدُّكُمْ الَّذِي تَنْتَظِرُونَ
فَثَارَ الْمُسْلِمُونَ إِلَى السِّلَاحِ فَتَلَقَّوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بِظَهْرِ الْحَرَّةِ فَعَدَلَ بِهِمْ ذَاتَ الْيَمِينِ حَتَّى نَزَلَ
بِهِمْ فِي بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ وَذَلِكَ يَوْمَ الِاثْنَيْنِ مِنْ شَهْرِ رَبِيعٍ
الْأَوَّلِ فَقَامَ أَبُو بَكْرٍ لِلنَّاسِ وَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ صَامِتًا فَطَفِقَ مَنْ جَاءَ مِنْ الْأَنْصَارِ مِمَّنْ لَمْ يَرَ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَيِّي أَبَا بَكْرٍ حَتَّى أَصَابَتْ
الشَّمْسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَقْبَلَ أَبُو بَكْرٍ
حَتَّى ظَلَّلَ عَلَيْهِ بِرِدَائِهِ فَعَرَفَ النَّاسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ فَلَبِثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ فِي بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً وَأُسِّسَ الْمَسْجِدُ
الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى وَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ فَسَارَ يَمْشِي مَعَهُ النَّاسُ حَتَّى بَرَكَتْ
عِنْدَ مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ وَهُوَ
يُصَلِّي فِيهِ يَوْمَئِذٍ رِجَالٌ مِنْ الْمُسْلِمِينَ وَكَانَ مِرْبَدًا لِلتَّمْرِ
لِسُهَيْلٍ وَسَهْلٍ غُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي حَجْرِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ
هَذَا إِنْ شَاءَ اللَّهُ الْمَنْزِلُ ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ الْغُلَامَيْنِ فَسَاوَمَهُمَا بِالْمِرْبَدِ لِيَتَّخِذَهُ مَسْجِدًا
فَقَالَا لَا بَلْ نَهَبُهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ فَأَبَى رَسُولُ اللَّهِ أَنْ
يَقْبَلَهُ مِنْهُمَا هِبَةً حَتَّى ابْتَاعَهُ مِنْهُمَا ثُمَّ بَنَاهُ مَسْجِدًا
وَطَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَهُمْ اللَّبِنَ
فِي بُنْيَانِهِ وَيَقُولُ وَهُوَ يَنْقُلُ اللَّبِنَ هَذَا الْحِمَالُ لَا حِمَالَ
خَيْبَرْ
هَذَا
أَبَرُّ رَبَّنَا وَأَطْهَرْ
وَيَقُولُ
اللَّهُمَّ إِنَّ الْأَجْرَ أَجْرُ الْآخِرَهْ
فَارْحَمْ
الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ
فَتَمَثَّلَ
بِشِعْرِ رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ لَمْ يُسَمَّ لِي
قَالَ
ابْنُ شِهَابٍ وَلَمْ يَبْلُغْنَا فِي الْأَحَادِيثِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمَثَّلَ بِبَيْتِ شِعْرٍ تَامٍّ غَيْرَ هَذَا الْبَيْتِ
رواه البخاري في
هجرة النبي صلي الله عليه وسلم
5.இஸ்லாத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் ஹிஜ்ரத்
செய்ய வேண்டும்.
வருடந்தோறும் நம்மை சந்திக்கும் ஹிஜ்ரத் நமக்கு சொல்லும்
செய்தி என்னவெனில், இஸ்லாத்திற்கு ஆபத்து ஏற்பட்டால் ஹிஜ்ரத் செய்தாவது இஸ்லாத்தை காப்பாற்ற வேண்டும்; கடைபிடிக்க வேண்டும். அடக்கு முறைகளுக்கு பயந்து இஸ்லாத்தை கைவிட்டு விடக்கூடாது.
2575 - حَدَّثَنَا عَلِيُّ
بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنِي
مَنْصُورٌ عَنْ مُجَاهِدٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
قَالَ
قَالَ
رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا هِجْرَةَ بَعْدَ الْفَتْحِ رواه البخاري
மக்கா
வெற்றிக்கு பின்பு ஹிஜ்ரத் இல்லை என்ற நபிமொழியின் விளக்கம் மக்கா வெற்றிக்குப்
பின்பு ஹிஜ்ரத் செய்து நபி(ஸல்) அவர்களிடம் வரத் தேவையில்லை என்பதாகும்.
கியாமத்
வரை வேறு எந்த நாட்டிலும் ஹிஜ்ரத் இல்லை என்பது அதன் விளக்கமல்ல…
முஸ்லிம்கள்
ஏன் புத்தாண்டு கொண்டாடுவதில்லை?
முஸ்லிம்கள் ஹிஜ்ரி வருடப் பிறப்பை விழாவாக கொண்டாடுவதில்லை.
புத்தாடைகள் உடுத்துவதில்லை. வாழ்த்துக்களை பரிமாறுவதில்லை.
காரணம் என்னவெனில், சஹாபாக்கள்,
தாபியீன்கள், தபவுத் தாபயீன்களில் யாரும் இவ்வாறு செயல்பட்டதில்லை. அத்துடன்
ஹிஜ்ரத் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் நினைக்கப்படக்கூடியதல்ல..
சுகமாகவும், ஆனந்தமாகவும் அதனை கொண்டாட அது
சுகமாகவும் – இதமாகவும் நடக்கவில்லை. மாறாக வலிகள், வேதனைகள், இழப்புகள்,
பிரிவுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் தான் நடந்தது.
ஹிஜ்ரத்தை நினைத்தால் ஒரு முஸ்லிமுக்கு
சஹாபாக்களின் வேதனைகளும், தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் நினைவுக்கு வர
வேண்டும். அத்தகைய தியாகங்கள் நம்மிடம் உள்ளதா? என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
உள்ளத்தில் ஈமானிய எழுச்சியை தர வேண்டும்.
.
SILA THAVARUGAL ULLA PATHIVU
ReplyDelete