இஸ்லாம் பரவும் மார்க்கம்
by அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி 
தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி இசைக் கலைஞர் ஒருவர் கடந்த வாரம் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு தமிழக முஸ்லிம்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

கடந்த 2010 ம் ஆண்டு மார்ச் மாதம்  டாக்டர் பெரியார் தாசன் இஸ்லாத்தை ஏற்ற போது உருவான உற்சாகம் மீண்டும் தமிழக முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் இஸ்லாமிய தஃவா வின் சில அடிப்படை அம்சங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் பரவும் மார்க்கமே

இஸ்லாம் அது தோன்றி காலம் முதல் பரவும் மார்க்கம் ஆகத் தான் இருந்து வருகிறது. பரவுதல் இஸ்லாத்தின் இயல்பாகும்.

ஏனெனில் இஸ்லாம் சத்திய மார்க்கம். சத்தியம் எல்லா காலத்திலும் பரவிக் கொண்டே தான் இருக்கும். இஸ்லாத்தின் தூதுச் செய்தி வந்த சமயத்தில் அபூ சுப்யானிடம் ஹிர்கல் இஸ்லாம் குறித்தும், நபி (ஸல்) அவர்கள் குறித்தும் சில கேள்விகள் கேட்டார்.

அப்போது அவர் கேட்ட கேள்விகளில் ஒன்று . இஸ்லாத்தை ஏற்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதா? அதிகரிக்கிறதா? இதோ புகாரியில் ஆரம்பத்தில் இடம் பெறும் அந்நபிமொழி.

6 - حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ
أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ وَكَانُوا تِجَارًا بِالشَّأْمِ فِي الْمُدَّةِ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادَّ فِيهَا أَبَا سُفْيَانَ وَكُفَّارَ قُرَيْشٍ فَأَتَوْهُ وَهُمْ بِإِيلِيَاءَ فَدَعَاهُمْ فِي مَجْلِسِهِ وَحَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ ثُمَّ دَعَاهُمْ وَدَعَا بِتَرْجُمَانِهِ فَقَالَ أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا بِهَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ فَقَالَ أَبُو سُفْيَانَ فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا فَقَالَ أَدْنُوهُ مِنِّي وَقَرِّبُوا أَصْحَابَهُ فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ فَوَاللَّهِ لَوْلَا الْحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ أَنْ قَالَ كَيْفَ نَسَبُهُ فِيكُمْ قُلْتُ هُوَ فِينَا ذُو نَسَبٍ قَالَ فَهَلْ قَالَ هَذَا الْقَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ قُلْتُ لَا قَالَ فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ لَا قَالَ فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ قَالَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ قُلْتُ بَلْ يَزِيدُونَ قَالَ فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ قُلْتُ لَا قَالَ فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ قُلْتُ لَا قَالَ فَهَلْ يَغْدِرُ قُلْتُ لَا وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لَا نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا قَالَ وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الْكَلِمَةِ قَالَ فَهَلْ قَاتَلْتُمُوهُ قُلْتُ نَعَمْ قَالَ فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ قُلْتُ الْحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ فَقَالَ لِلتَّرْجُمَانِ قُلْ لَهُ سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا الْقَوْلَ فَذَكَرْتَ أَنْ لَا فَقُلْتُ لَوْ كَانَ أَحَدٌ قَالَ هَذَا الْقَوْلَ قَبْلَهُ لَقُلْتُ رَجُلٌ يَأْتَسِي بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ فَذَكَرْتَ أَنْ لَا قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ وَسَأَلْتُكَ هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالْكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ فَذَكَرْتَ أَنْ لَا فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الْكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ فَذَكَرْتَ أَنَّ ضُعَفَاءَهُمْ اتَّبَعُوهُ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ وَسَأَلْتُكَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ فَذَكَرْتَ أَنَّهُمْ يَزِيدُونَ وَكَذَلِكَ أَمْرُ الْإِيمَانِ حَتَّى يَتِمَّ وَسَأَلْتُكَ أَيَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ فَذَكَرْتَ أَنْ لَا وَكَذَلِكَ الْإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ الْقُلُوبَ وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ فَذَكَرْتَ أَنْ لَا وَكَذَلِكَ الرُّسُلُ لَا تَغْدِرُ وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الْأَوْثَانِ وَيَأْمُرُكُمْ بِالصَّلَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ فَقَرَأَهُ فَإِذَا فِيهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ سَلَامٌ عَلَى مَنْ اتَّبَعَ الْهُدَى أَمَّا بَعْدُ فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الْإِسْلَامِ أَسْلِمْ تَسْلَمْ يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الْأَرِيسِيِّينَ وَ
{ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لَا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ }
قَالَ أَبُو سُفْيَانَ فَلَمَّا قَالَ مَا قَالَ وَفَرَغَ مِنْ قِرَاءَةِ الْكِتَابِ كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ وَارْتَفَعَتْ الْأَصْوَاتُ وَأُخْرِجْنَا فَقُلْتُ لِأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الْأَصْفَرِ فَمَا زِلْتُ مُوقِنًا أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَيَّ الْإِسْلَامَ وَكَانَ ابْنُ النَّاظُورِ صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ سُقُفًّا عَلَى نَصَارَى الشَّأْمِ يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ قَدْ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ قَالَ ابْنُ النَّاظُورِ وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الْخِتَانِ قَدْ ظَهَرَ فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الْأُمَّةِ قَالُوا لَيْسَ يَخْتَتِنُ إِلَّا الْيَهُودُ فَلَا يُهِمَّنَّكَ شَأْنُهُمْ وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنْ الْيَهُودِ فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لَا فَنَظَرُوا إِلَيْهِ فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ وَسَأَلَهُ عَنْ الْعَرَبِ فَقَالَ هُمْ يَخْتَتِنُونَ فَقَالَ هِرَقْلُ هَذَا مُلْكُ هَذِهِ الْأُمَّةِ قَدْ ظَهَرَ ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ وَكَانَ نَظِيرَهُ فِي الْعِلْمِ وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْيَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَّهُ نَبِيٌّ فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ ثُمَّ اطَّلَعَ فَقَالَ يَا مَعْشَرَ الرُّومِ هَلْ لَكُمْ فِي الْفَلَاحِ وَالرُّشْدِ وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الْوَحْشِ إِلَى الْأَبْوَابِ فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ وَأَيِسَ مِنْ الْإِيمَانِ قَالَ رُدُّوهُمْ عَلَيَّ وَقَالَ إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ فَقَدْ رَأَيْتُ فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ
رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ وَيُونُسُ وَمَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ
رواه البخاري

பரவுவதில் நிலைத்திருக்கும் இஸ்லாம்

உருவான காலம் முதல் தற்காலம் வரை எதிர்ப்புகளையும், சூழ்ச்சிகளையும், சதிகளையும் எதிர்கொண்ட மார்க்கம் இஸ்லாம்.

அன்று காலம் முதல் இன்று வரை இஸ்லாத்திற்கெதிரான அவதூறுகளுக்கு பஞ்சமில்லை தான்.

காலத்திற்கு காலம் அவதூறுகளின் பெயர்களும், யுக்திகளும் மாறியதே தவிர அவற்றின் நோக்கங்கள் மாறியதில்லை.

நபியின் காலத்தில் திருக்குர்ஆனை சூனிய வார்த்தைகள், கவிதைகள், கதைகள், அவ்வாறே நபி (ஸல்) அவர்களை சூனியக்காரர், பைத்தியக்காரர், கவிஞர், மாய வித்தகர் என்றெல்லாம் அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று தற்காலத்தில் இஸ்லாத்தை ‘தீவிரவாத மதம்’ என்றும், முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்றும் இடைவிடாது அவதூறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இது போன்ற அவதூறு பிரச்சாரங்களை இஸ்லாம் அல்லாத ஒரு மதத்தால், முஸ்லிம் அல்லாத ஒரு சமுதாயத்தால் ஒரு வருடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்ற நிலையில், அத்தணை அவதூறு பிரச்சாரங்களையும், பொய்க் கதைகளையும் தாண்டி இஸ்லாம் இன்றும் பரவும் மார்க்கமாக தன்னை நிலைப்படுத்தி வருகிறது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحُسَيْنِ الْحَذَّاءُ حَدَّثَنَا شَبَابُ بْنُ خَيَّاطٍ حَدَّثَنَا حَشْرَجُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَشْرَجٍ حَدَّثَنِى أَبِى عَنْ جَدِّى عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو الْمُزَنِىِّ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « الإِسْلاَمُ يَعْلُو وَلاَ يُعْلَى »رواه الدارقطني - 3663
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இஸ்லாம் உயர்வடையவே செய்யும். அதனை யாரும் விஞ்ச முடியாது.” (நூல் : தாரகுத்னீ )


இஸ்லாம் பரவுதற்கான காரணங்கள்

இச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் பரவுவதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் பரவும் மார்க்கமாக இருப்பதற்கான முக்கியமான காரணம் அதன் எல்லா அம்சங்களும் மக்களை ஈர்ப்பதாக அமைந்திருப்பதாகும்.

திருக்குர்ஆன்

திருக்குர்ஆனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்திற்கு ஏற்றவர்களும் வரலாற்றில் உண்டு

உமர் (ரழி) இஸ்லாத்தை ஏற்பதற்கு காரணமாக இருந்த வசனம்.
قال الله تعالي : إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي20:14

அம்ரு இப்னு ஜமூஹ் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு சூரத்துல் ஃபாத்திஹா காரணமாக இருந்தது.

طفيل ابن عمرو الدوسي  இஸ்லாத்தை ஏற்பதற்கு سورة الاخلاص وسورة الفلق وسورة الناس  காரணமாக அமைந்தன.

ஜாஹிலிய்யா மீதான வெறுப்பு

அபூதர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு ஜாஹிலிய்யா மீதான வெறுப்பு காரணமாக அமைந்தது.

சத்தியம் மீதான தேட்டம்

சல்மான் ஃபார்சி (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு சத்தியத்தின் மீதான அவர்களின் தேட்டம் காரணமாக அமைந்தது.

நபி (ஸல்) இன் களங்கமில்லா உரை

அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு நபி (ஸல்) அவர்களின் களங்கமில்லா பேச்சு காரணமாக அமைந்தது.

1324 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ وَابْنُ أَبِي عَدِيٍّ وَعَبْدُ الْوَهَّابِ وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ عَوْفِ بْنِ أَبِي جَمِيلَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ قَالَ
لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ انْجَفَلَ النَّاسُ إِلَيْهِ وَقِيلَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجِئْتُ فِي النَّاسِ لِأَنْظُرَ إِلَيْهِ فَلَمَّا اسْتَبَنْتُ وَجْهَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَفْتُ أَنَّ وَجْهَهُ لَيْسَ بِوَجْهِ كَذَّابٍ فَكَانَ أَوَّلَ شَيْءٍ تَكَلَّمَ بِهِ أَنْ قَالَ يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ
رواه ابن ماجه

நபியின் பொறுமை

زيد ابن سعنة  எனும் யூத அறிஞர் இஸ்லாத்தை ஏற்றதற்கு நபி (ஸல்) அவர்களின் பொறுமை காரணமாக அமைந்தது. (நூல் இப்னு ஹிப்பான்) (பார்க்க : பொதுத்தளங்களில் நாகரிம் தேவை – கட்டுரை )

சமூக நீதி

அமெரிக்க கருப்பின தலைவர் மால்கம் X இஸ்லாத்தை ஏற்றதற்கு இஸ்லாத்தை சமூக நீதி காரணமாக அமைந்தது.

நமது தமிழகத்தில் பல தலித் குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்று வருவதற்கு இஸ்லாத்தின் சமூக நீதி முக்கியமான காரணம்.


நபியின் சொல்லுக்கு முஸ்லிம் சமூகம் தரும் மரியாதை

மர்மடியோக் பிக்தால் எனும் ஆங்கில அறிஞர் இஸ்லாத்தை ஏற்றதற்கு நபி (ஸல்) அவர்களின் சொல்லுக்கு மதிப்பு தந்த முஸ்லிம் சிறுவன் காரணம்.

நபியின் மீதான முஸ்லிம்களின் பாசம்

அர்னாடு வேன் டூன் எனும் ஹாலந்து அரசியல்வாதி இஸ்லாத்தை ஏற்பதற்கு 2012 ம் ஆண்டு ‘இன்னோசன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்’ என்ற திரைப்படத்திற்கெதிராக நடந்த போராட்டங்கள் காரணமாக அமைந்தன.
முஸ்லிம்களின் நன்னடத்தைகள்

குவான்டனமா சிறைக் காவலர் டெர்ரி ஹால்ட் புரூக்ஸ் 2003 ல் இஸ்லாத்தை ஏற்பதற்கு முஸ்லிம் கைதிகளின் நன்னடத்தைகள் காரணமாக அமைந்தன.

இவ்வாறு திருக்குர்ஆன், நபியின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய கொள்கைள், இஸ்லாத்தின் சமூக நீதி, இஸ்லாத்தின் சட்டங்கள், இஸ்லாத்தின் ஒழுக்க நெறிகள், கலாச்சாரம் என பல்வேறு விஷயங்கள் இஸ்லாத்தை மக்கள் ஏற்பதற்கு காரணமாக உள்ளன.

நம் முன் உள்ள கடமைகள்

இஸ்லாம் குறித்த செய்திகள் நல்ல விதமாகவோ, கெட்டதாகவோ உலகின் எல்லா பகுதிகளுக்கும், எல்லா வீடுகளுக்கும் சென்று விட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம்.

16344 - حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ قَالَ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ سُلَيْمٍ قَالَ حَدَّثَنِي سُلَيْمُ بْنُ عَامِرٍ عَنْ تَمِيمٍ الدَّارِيِّ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَبْلُغَنَّ هَذَا الْأَمْرُ مَا بَلَغَ اللَّيْلُ وَالنَّهَارُ وَلَا يَتْرُكُ اللَّهُ بَيْتَ مَدَرٍ وَلَا وَبَرٍ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ هَذَا الدِّينَ بِعِزِّ عَزِيزٍ أَوْ بِذُلِّ ذَلِيلٍ عِزًّا يُعِزُّ اللَّهُ بِهِ الْإِسْلَامَ وَذُلًّا يُذِلُّ اللَّهُ بِهِ الْكُفْرَ
رواه احمد

2012 ம் ஆண்டு விஸ்வரூபம் பிரச்சினையின் போது திரைத்துறையில் நிலவிய முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலை இரண்டு ஆண்டு இடைவெளியில், மாறி திரைத்துறையைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் சூழ்நிலை கனிந்திருக்கிறது.
முன்னணி இசைக் கலைஞர் ஒருவர் இஸ்லாத்திற்கு வந்துள்ள நிலையில், இன்னும் சில நடிகர்கள் சிலர் இஸ்லாத்திற்கு வருவதாக சொல்லப்படுகிறது.

இங்கே இசைக் கலைஞர் இஸ்லாத்தை ஏற்றார் என்றால், அவருக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன முஸ்லிம் குடும்பத்தினர் தான் இதற்கு பாராட்டுக்குரியவர்.

முஸ்லிம்களாகிய நாம், நாம் அனுபவிக்கும் சத்திய மார்க்கமான இஸ்லாத்தை மற்ற சமுதாய சகோதரர்களுக்கு எந்தளவுக்கு எடுத்துச் சொல்கிறோம் என்பதை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

பரவும் இயல்பு கொண்ட இம்மார்க்கத்தை நாம் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஆனால் வேதனைக்குரிய விஷயம் நமது பள்ளிவாசல்களில் தஃவா சென்டர்கள் இல்லை.

பள்ளிவாசல்களுக்கு ஓதிப் பார்க்கத் தான் மற்ற சமுதாய மக்கள் வருகிறார்களே தவிர பள்ளிவாசல்களுக்கு வந்து இஸ்லாத்தை பிற சமுதாய ஆண்கள் – பெண்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நாம் நமது பள்ளிவாசல்களை அமைக்கவில்லை.

தஃவாவுக்கு எல்லா வகையிலும் தகுதியான ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம். நாம் தஃவா கொடுப்பதற்கு தகுதியான மக்கள் இந்த நாட்டில் நம்மை விட எண்ணிக்கையில் அதிகம் இருக்கிறார்கள்.

இந்நாட்டில் வாழ்வதை அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்லாத்தை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை இலவசமாக தருதல், இஸ்லாம் குறித்தும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குறித்தும் அதிகமாக இலவச சிற்றேடுகளை வெளியிடுதல், பிற மத்தவர்கள் வாழும் ஊர்களில் முஸ்லிம் ஜமாஅத்துகள் ஈத்மிலன் நிகழ்ச்சிகள் நடத்தி, பிற மத்தவர்களை அழைத்து இஸ்லாம் குறித்த கேள்விகளுக்கு விடையளித்தல், மஹல்லா தோறும் பிற மதத்தவர்களுக்கு அழைப்பு விடுத்து தஃவா நிகழ்ச்சிகள் நடத்துதல், பிற சமுதாயத்தவர்களுடன் இஸ்லாம் குறித்து பொதுத்தளங்களில் உரையாடுதல் போன்றவற்றில் முஸ்லிம் சமூகம் ஈடுபட வேண்டும்.

இவ்விடம் அலீ (ரழி) அவர்களுக்கு கைபர் போருக்கு புறப்படும் பொழுது நபி (ஸல்) அவர்கள் செய்த உபதேசம் நினைவு கூறத்தக்கது.

2724 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ القَعْنَبِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى فَقَالَ أَيْنَ عَلِيٌّ فَقِيلَ يَشْتَكِي عَيْنَيْهِ فَأَمَرَ فَدُعِيَ لَهُ فَبَصَقَ فِي عَيْنَيْهِ فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّه لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ فَقَالَ نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الْإِسْلَامِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ
رواه البخاري
 தொடர்புக்கு vellimedai2012@gmail.com

Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.