மீலாது விழா , மீலாது ஊர்வலம் கூடுமா?
     
(தமிழில்: மௌலவி அபுல் ஹஸன் ஆலிம் ஃபாஸி M.A.,)

எகிப்து அல் அஸ்ஹர் பல்கலை. தாருல் ஃபத்வா பிரிவின் விரிவான ஃபத்வா

கேள்வி. நமது ( எகிப்து ) பேச்சாளர்களில் சிலர் மீலாது விழா, மீலாது ஊர்வலம், திக்ரு ஹல்கா போன்றவை ஙைரு மஷ்ரூஃ (அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறாதவை ) என்று வாதிடுகின்றனர். இது குறித்த மார்க்கத் தீர்ப்பு என்ன?

பதில்:

நமது நபி (ஸல்) அவர்களின் பிறந்ததை கொண்டாடுவதை அமல்களில் சிறப்பானதாகவும், வணக்கங்களில் மேன்மையானதாகவும் தான் கருதப்படும்.

ஏனெனில், அது நபி (ஸல்) அவர்களின் மீதான பிரியம் அவர்களின் பிறப்பினால் உருவான சந்தோஷம் என்றே கூறப்படும்.

நிச்சயமாக அது ஈமானின் அடிப்டைகளில் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ உங்களில் ஒருவர் அவரது தந்தை, குழந்தை மற்றும் எல்லோரையும் விட நான் அவரிடம் பிரியமானவராக ஆகும் வரை உண்மை முஃமின் ஆக முடியாது.”                            
                                                 (நூல் – முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்களின் பிறப்பை விழாவாக கொண்டாடுவது என்பதில் அது மஷ்ரூஃ ( அல்லாஹ் – ரசூல் இது பற்றி கூறியது ) ஆக இருக்க வேண்டும் என்பதில்லை.

ஏனெனில், அண்ணலாரின் பிறப்பு அகிலத்தார்களின் மீது அல்லாஹ் புரிந்த மாபெரும் அருளாகும். அருளுக்கு நன்றி செலுத்துவது புகழுக்குரிய செயல். அதனை செய்பவர் பழிக்கப்பட மாட்டார். மாறாக புகழப்படுவார். நன்றி செலுத்தியவராக கருதப்படுவார்.

இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல் நமக்கு இருக்கவே செய்கின்றது. அவர்கள் தமது பிறந்த நாளில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியுள்ளார்கள்.

பின்வரும் ஸஹீஹான நபிமொழி இதற்கு ஆதாரம். திங்கட் கிழமை அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதற்கு இவ்வாறு காரணம் சொன்னார்கள். அந்நாளில் தான் நான் பிறந்தேன்.
                                                  (நூல்: முஸ்லிம்)

தாம் அந்நாளில் பிறந்ததற்காக அன்று நோன்பு பிடித்து இறைவனின் அருளுக்கு நபி (ஸல்) அவர்கள் நன்றி செலுத்தினார்கள் எனில், அவர்களின் பிறப்புக்கு முஸ்லிம் உம்மத் நன்றி செலுத்திட நிச்சயம் தகுதியானவர்களே..

முஸ்லிம்கள் அனுசரிக்கும்  மீலாது விழாக்களின் நோக்கம் திக்ரு செய்தல், அண்ணல் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து கவிதை படித்தல், அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை பயான் செய்தல், அல்லாஹ்வுக்காக ஏழை, எளிய மக்களுக்கு ஸதகாவாக உணவளித்தல் போன்றவையே.

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மீதான பிரியம், அவர்கள் இவ்வுலகிற்கு வந்த நாளினால் கிடைக்கும் சந்தோஷம்  ஆகியவற்றை வெளிப்படுத்திடவே இந்நற்பணிகள் செய்யப்படுகின்றன.

நபியின் பிறந்த நாளில் இனிப்பு வழங்குவது ஆகுமான காரியமே. அதனை கூடாது என்று தடுத்திடவோ அல்லது அந்நேரமல்லாத நேரத்தில் மட்டும் இனிப்பு ஹலால் என்று கூறிடவோ ஆதாரம் ஏதுமில்லை.

இன்னும் சொல்வதெனில், இதனை உறவினர்களுக்கு கொடுத்தனுப்பும் பொழுது உறவுகள் மலரும், குடும்பத்தார்கள் மகிழ்ச்சியடைவர் எனில் அதனை முஸ்தஹப்பு என்றே கூறலாம். ஸாலிஹான நோக்கமே அதற்கு காரணம்.

இதனை ஹராம் என்பதும், தடுப்பதும் ‘தனத்துஃ’ என்று நபிமொழிகளில் கூறப்படும் மார்க்கத்தில் வரம்பு மீறி செயல்படும் பழக்கம். இதனை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

மீலாது விழாவை முன்னிட்டு சில இடங்களில் மீலாது ஊர்வலம் நடத்தப்படுகிறது. பேரணியில் மார்க்க சம்மந்தப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் ஏந்திச் செல்லப்படுகிறது. நபி புகழ்பாடும் பைத்துகள், உலக வாழ்க்கையின் மீதான பற்றின்மையை விளக்கும் கவிதைகள் அவற்றில் பாடப்படுகின்றன.

அதன் மூலம் மார்க்கத்தின் முக்கிய பணிகளுக்கு பாதிப்பு இல்லை. அத்துடன் மார்க்கம் தடுத்த ஆண் – பெண் இரண்டறக் கலந்தும் அங்கு  இல்லையெனில், அதனை செய்வதில் எந்த குற்றமும் இல்லை.

அவ்வாறே மீலாது ஊர்வலங்களில் தப் அடித்து மகிழ்வதிலும் குற்றமில்லை தான். ஏனெனில் திருமணங்களில் தப் அடித்திட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

“ திருமணத்தை பிரபலபடுத்துங்கள். அதனை பள்ளிவாசலில் நடத்துங்கள். திருமணத்தில் தப் அடியுங்கள்.”
                                                    (நூல் : திர்மிதி)

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பிறப்பை தப் அடித்து கொண்டாடி மகிழ்வது திருமணத்தை விட ஏற்றமானதே. எனினும் ஒழுக்கம், கண்ணியம் இவற்றை பேண வேண்டும்.

திக்ரு ஹல்கா, திக்ரு செய்யும் பொழுது அசையுதல்
குறித்த கேள்விக்கு பதில் பின்வருமாறு,

நிச்சயமாக அல்லாஹ் முஸ்லிம்களிடம் பொதுவாக திக்ரை விரும்பியுள்ளான்.

“ ஈமான் கொண்டவர்களே.. நீங்கள் அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்யுங்கள்.”                          
                                        ( அல் – குர்ஆன் 33:41)

இன்னொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான். “ நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும் அவர்கள் அல்லாஹ்வை திக்ரு செய்வார்கள்.”
                                            (அல்குர்ஆன் 3:191)


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “தமது இறைவனை திக்ரு செய்பவரின் உதாரணமும், திக்ரு செய்யாதவரின் உதாரணமும் உயிருள்ளவரின் உதாரணம் மற்றும் இறந்தவரின் உதாரணமும் ஆகும்.”
                              
                             (நூல் : புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்டார். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமிய வணக்கங்கள்  எனக்கு அதிகமாக தெரிகின்றன. ஆதலால் அவற்றில் ஒன்றை எனக்கு சொல்லுங்கள். அதனை நான் பற்றிப் பிடித்துக் கொள்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமது நாவு அல்லாஹ்வின் திக்ரினால் ஈரமாகவே இருக்கட்டும்.”
                                                 (நூல்: திர்மிதி)
மேற்கண்ட நபிமொழி பொதுவாக திக்ரை ஆர்வப்படுத்துகிறது. அதற்கு குறிப்பிட்ட ஒரு நேரம், குறிப்பிட்ட நிலை என்று நிபந்தனை இடப்படாது.

ஷரிஅத்தில் திக்ரின் போது நிற்பது, அசைவது போன்றவை தடுக்கப்படவில்லை. அப்படியெனில், அது ஆகுமானது என்றே கணக்கிட வேண்டும். அதே நேரத்தில் அசையும் சமயத்தில் திக்ரு செய்பவர் அமைதியாகவும், அல்லாஹ்வின் முன்னிலையில் என்பதையும் கவனித்திருக்க வேண்டும்.

இதனை கூடாது என்பவர் அல்லது ஹராம் என்பவர் அதற்குரிய நேரடியான ஷரிஅத் ஆதாரத்தை காட்டிட வேண்டும்.

நபித்தோழர்களின் திக்ரு குறித்து ஹள்ரத் அலீ (ரழி) அவர்கள் இவ்வாறு அறிவித்துள்ளார்கள்.

“அவர்கள் திக்ரின் போது காற்றுக் காலத்தில் மரங்கள் அசைவது போன்று அசைவார்கள்.”    
                                   (நூல்: ஹில்யதுல் அவ்லியா)


அன்னாரின் கூற்று நபித்தோழர்கள் திக்ரு செய்யும் சமயத்தில் கடுமையாக அசைவார்கள் என்றே தெரிவிக்கிறது.
தொடர்புக்கு: vellimedai2012@gmail.com


دار الإفتاء‏:‏ حلقات الذكر ومواكب الاحتفال جائزة‏..‏ بشروط

ادعي أحد خطباء الجمعة ببلدتنا أن الاحتفال بالمولد النبوي والسير بالموكب وحمل الأعلام والضرب بالدف من أجل المولد غير مشروع‏,‏ كما أفتي بحرمة شراء الحلوي
وإهدائها لمناسبة المولد, وكذلك عدم مشروعية تنظيم حلقات الذكر والتمايل فيها ؟ فما رأي الدين في ذلك ؟
< أجابت دار الإفتاء المصرية, قائلة: الاحتفال بذكري مولد النبي صلي الله عليه وآله وسلم, يعد من أفضل الأعمال وأعظم القربات, لأنه تعبير عن الفرح والحب له صلي الله عليه وآله وسلم, الذي هو أصل من أصول الإيمان, وقد صح عنه صلي الله عليه وآله وسلم أنه قال: لا يؤمن أحدكم حتي أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري.
والاحتفال بمولده صلي الله عليه وآله وسلم هو من قبيل الاحتفاء به, وهو أمر مقطوع بمشروعيته, فهو النعمة الكبري علي العالم, وشكر النعم مطلوب محمود لا يلام فاعله بل يحمد ويشكر.
وقد سن لنا رسول الله صلي الله عليه وآله وسلم بنفسه الشريفة جنس الشكر لله تعالي علي ميلاده الشريف, فقد صح أنه كان يصوم يوم الإثنين ويقول: ذلك يوم ولدت فيه. رواه مسلم من حديث أبي قتادة رضي الله تعالي عنه, فهو شكر منه عليه الصلاة والسلام علي منة الله تعالي عليه وعلي الأمة بذاته الشريفة, فالأولي بالأمـة الاقتداء به صلي الله عليه وآله وسلم بشكر الله تعالي علي منته.
والمراد من الاحتفال المشروع بذكري المولد النبوي هو تجمع الناس علي الذكر, والإنشاد في مدحه والثناء عليه صلي الله عليه وآله وسلم, وإطعام الطعام صدقة لله, وإعلانا لمحبة سيد الخلائق رسول الله صلي الله عليه وآله وسلم, وإعلانا بالفرح بيوم مجيئه الكريم إلي دنيانا صلي الله عليه وآله وسلم.
وما اعتاده الناس من شراء الحلوي والتهادي بها في المولد الشريف أمر جائز في ذاته, لم يقم دليل علي المنع منه أو إباحته في وقت دون وقت, لا سيما إذا انضم إلي ذلك مقصد صالح كإدخال السرور علي أهل البيت أو صلة الأرحام, فإنه يكون حينئذ أمرا مستحبا ومطلوبا يثيب الشرع علي مثله, والقول بتحريمه أو المنع منه ضرب من التنطع المذموم.
وأما ما جري عليه العمل في بعض الأنحاء من عمل موكب يسير فيه المحتفلون بالمولد حاملين رايات ينتقش عليها بعض الشعارات الدينية, ويتغنون فيها بالمدائح النبوية والقصائد الزهدية فلا حرج فيه طالما خلا عما ينافي الشرع من الاختلاط المذموم أو تعطيل المصالح العامة ونحو ذلك. وإذا كان الضرب بالدف في إعلان النكاح أمرا أجازه الشرع من باب إظهار الفرح بالنكاح, وفيه حديث الترمذي: أعلنوا هذا النكاح, واجعلوه في المساجد, واضربوا عليه بالدفوف, فاستعمال الدف لإظهار الفرح بمولد خير الأنام أولي وأحري, وجواز ذلك كله مشروط بمراعاة الأدب المطلوب شرعا في مثل هذا المقام.
أما بخصوص الوقوف في حلقات الذكر والتمايل في أثنائه, فنقول: إن الله تعالي طلب الذكر من المسلمين مطلقا; فقال:( يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا) الأحزاب:41, وقال مادحا عباده المؤمنين:( الذين يذكرون الله قياما وقعودا وعلي جنوبهم), آل عمران:191], وعن أبي موسي الأشعري رضي الله تعالي عنه أن النبي صلي الله تعالي عليه وآله وسلم قال: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت رواه البخاري, وروي الترمذي وابن ماجة من حديث عبد الله بن بسر رضي الله تعالي عنه أن رجلا قال: يا رسول الله, إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به, قال: لا يزال لسانك رطبا من ذكر الله, فالحث علي الذكر جاء علي لسان الشرع الشريف مطلقا, فالأصل أنه لا يقيد بحال دون حال أو بوقت دون وقت.
ولما كان الشرع لم ينه عن الوقوف أو الحركة أثناء الذكر, كان ذلك علي الأصل من الإباحة, طالما التزم الذاكر السكينة والوقار أثناء الحركة, ولم يأت بما يتنافي والأدب المطلوب في حضرة الله تعالي أثناء الذكر, وكان علي مدعي المنع أو التحريم إقامة الدليل علي دعواه التي تخالف الأصل. وقد روي الحافظ أبو نعيم في الحلية عن الإمام علي رضي الله تعالي عنه أنه قال في وصف الصحابة رضي الله عنهم: إذا ذكر الله مادوا كما تميد الشجرة في يوم ريح فانهملت أعينهم حتي تبل ثيابهم, وهذا الأثر صريح في أن الصحابة رضي الله عنهم كانوا يتحركون حركة شديدة في الذكر. والخلاصة أنه طالما انضبط الذكر بالأدب, وعدم تحريف ألفاظ الذكر بما يفسد معناها فلا يظهر معني في المنع


2 Comments

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.