கடந்த வருடம் டிசம்பர் மாதம் டெல்லியில் நடந்த கற்பழிப்புக்கு பின்பு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட வர்மா கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டு குற்றவியல் தண்டனைகளில் திருத்தம் செய்ய நமது மத்திய அரசு முடிவு செய்தது.

அதனடிப்படையில் கடந்த வாரம் கூடிய மத்திய  அமைச்சரவை பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக கடுமையான தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

அதில் நகைப்புக்குரிய ஒரு திருத்தத்திற்கு 35 கேபினட் அமைச்சர்கள் கொண்ட இந்திய அமைச்சரவை அளித்த ஒப்புதல் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

சர்ச்சைக்குரிய அந்த திருத்தம் தான் ‘பெண்ணின்  செக்ஸ் சம்மத வயது16’ என்பதாகும்.

நமது இந்திய தேசத்தில் பெண்ணின் திருமண வயது 18 ஆக இருக்கும் நிலையில் பெண்ணின் செக்ஸ் சம்மத வயதை 16 ஆக குறைத்தால் சட்டப்பூர்வ விபச்சாரத்திற்கே அது வழிகோலும் என்பது இந்த படித்த அமைச்சரவை மேதைகளுக்கு தெரியாதா? என்ன!

இன்னும் சட்டம் இயற்ற தெரியவில்லை உங்களுக்கு !

டெல்லி மாணவி கற்பழிப்பு இந்தியாவில் நடக்கும் கற்பழிப்புகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

சர்வதேச அரங்கில் ‘கற்பழிப்பு தேசம்’ எனும் அவப் பெயரை இந்தியாவுக்கு அது பெற்றுத் தந்தது.

அப்பிரச்சினை உருவாக்கிய தீவிரத்தை முன்னிட்டு கற்பழிப்புகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகளில் சிலர் கூச்சல் போட்டனர்
.
ஆனால் எதற்கும் அஞ்சாமல் கற்பழிப்புகள் தொடர்ந்து நடந்தன. கடந்த வாரம் கூட சுவிட்சர்லாந்தில் இருந்து சுற்றுலா வந்த பெண் அவரது கணவர் முன்னிலையில் கற்பழிக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் கற்பழிப்பை தடுக்கிறோம் என்ற பெயரில் ‘செக்ஸ் சம்மத வயது 16 ’ என்றொரு புதிய திருத்தத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. (எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பின்பு இத்திருத்தம் கைவிடப்பட்டது என்பது வேறு விஷயம்)

இதனை திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவை ஆதரிக்கும் மேற்கத்திய கொள்கையின் ஒரு பகுதியாகவே நாம் பார்க்க வேண்டும்.

மேற்கத்திய நாடுகளில் தான் திருமணத்திற்கு முந்தைய சம்மத உறவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கற்பழிப்பு பிரச்சினையை மையமாக வைத்து அதனை இங்கே கொண்டு வந்திட முயற்சசிக்கின்றது மத்திய அரசு.

சட்டம் இயற்றும் தகுதி மனிதர்களுக்கு உண்டா?

இஸ்லாத்தை பொருத்தவரை முழுக்க முழுக்க சட்டம் இயற்றும் தகுதி அல்லாஹ்வுக்கு மட்டுமே.

‘இறையாண்மை’ எனும் தகுதி இஸ்லாத்தில் இறைவனுக்கு மட்டுமே கருதப்படுகின்றது.

ஆட்சியாளர்களுக்கோ, ஆட்சி மன்றமான நாடாளுமன்றத்திற்கோ, நீதிமன்றங்களுக்கோ இருப்பதாக கூறுவதை இஸ்லாம் ஏற்காது.

قال الله تعالي : وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا  33:36

قال الله تعالي : وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 6:115
قال الله تعالي : أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ  5:50
இம்மனித சட்டத்தின் விளைவுகள்

இஸ்லாத்தை பொருத்தவரை திருமணமே பாலியல் உறவுக்குரிய சம்மதமாக பார்க்கப்படுகிறது. திருமணமில்லாத பாலியல் உறவுகள் இஸ்லாத்தில் தண்டைக்குரிய குற்றச் செயல்களே. அது இரு தரப்பு சம்மதத்துடன் நடந்தாலும் சரி.

இப்போது இச்சட்ட திருத்தம் முறியடிக்கப்பட்டாலும் மனிதர்கள் சட்டமியற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கும் வரை இது சில காலம் கழித்து திரும்ப கொண்டு வரப்பட வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.

ஆதலால், இச்சட்டத்தினால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.விபச்சாரத்திற்கு அங்கீகாரம்
படிப்பு இன்ன பிற காரணங்களால் பெண்ணின் சராசரி திருமண வயது அதிகரித்துள்ளதாக இங்கே அறிவு ஜீவிகள் என்று கூறிக்கொள்வோர் பெருமையோடு பேசி வருகின்றனர்.

ஆனால் நவீன உலகில் திரைப்படம் மற்றும் இணைய தொடர்பினால் ஆண் –பெண் பாலியல் வேட்கையின் வயது குறைந்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

இதனை சில சமயங்களில் ஒத்துக் கொள்ளும் இவர்கள் திருமண வயதை குறைத்தால் எங்கே இஸ்லாமிய சட்டங்களை ஆதரித்தது போன்று ஆகிவிடுமோ என்பதற்காக இவர்களின் குறுக்கு புத்தி கண்டுபிடித்த வழியே ‘சம்மத உறவு’ என்பதாகும்.

நிச்சயமாக இது திருமணத்திற்கு முன்பே ஒரு ஆணை அல்லது பெண்ணை இளம் வயதிலேயே விபச்சாரத்திற்கு வழிகாட்டுவதாகும்.

திருமணத்திற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் பாதை தவறும் ஒருவர் திருமணத்திற்கு பின்பும் அதனை தொடர்ந்தால் மனித வாழ்க்கை மிருக வாழ்க்கையாகும் என்பது இங்கே உணரப்படவில்லை.

இஸ்லாம் விபச்சாரத்தை நெருங்கவும் கூடாது என்கிறது.

قال الله تعالي : وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

விபச்சாரத்துக்கு அனுமதி கேட்ட மனிதருக்கு அது கண்ணியமான செயல் அல்ல என்று புரிய வைத்த நபி (ஸல்)
حدثنا يزيد بن هارون، حدثنا جرير، حدثنا سليم بن عامر، عن أبي أمامة قال: إن فتى شابًا أتى النبي (7) صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ائذن لي بالزنا. فأقبل القوم عليه فزجروه، وقالوا: مًهْ مَهْ. فقال: "ادنه". فدنا منه قريبًا (8) فقال (9) اجلس". فجلس، قال: "أتحبه لأمك؟" قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لأمهاتهم" . قال: "أفتحبه لابنتك"؟ قال: لا والله يا رسول الله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لبناتهم" ، قال: "أتحبه لأختك"؟ قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لأخواتهم"، قال: "أفتحبه لعمتك"؟ قال: لا والله جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لعماتهم" قال: "أفتحبه لخالتك"؟ قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لخالاتهم" قال: فوضع يده عليه وقال: "اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن (10) فرجه" قال: فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء
رواه الإمام أحمد2. விபச்சாரத்தை வெளிப்படையாக்குதல்
அரசின் இந்நடடிவடிக்கையை விபச்சார பரவல் திட்டமாகவும், விபச்சாரத்தை வெளிப்படையாக்கும் காரியமாகவும் தான் நாம் கருத வேண்டும்.

இது இழவான செயல்களில் ஒன்று.

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا رواه البخاري

حدثنا عبد الوارث بن إبراهيم قال : نا سيف بن مسكين قال : نا مبارك بن فضالة ، عن المنتصر بن عمارة ، عن أبيه ، عن جده وكان جده أبو ذر الغفاري ، عن النبي صلى الله عليه وسلم قال : « إذا اقترب الزمان كثر لبس الطيالسة (1) ، وكثرت التجارة ، وكثر المال ، وعظم رب المال لماله ، وكثرت الفاحشة ، وكانت إمرة الصبيان ، وكثر الفساد ، وجار السلطان ، وطفف في المكيال والميزان ، ويربي الرجل جرو (2) كلب خير له من أن يربي ولدا ، ولا يوقر كبير ، ولا يرحم صغير ، ويكثر أولاد الزنا ، حتى إن الرجل ليغشى المرأة على قارعة الطريق ، فيقول أمثلهم في ذاكم الزمان : لو اعتزلتم عن الطريق ، يلبسون جلود الضأن على قلوب الذئاب ، أمثلهم في ذلك الزمان المداهن »
رواه الطبراني

3.திருமணமாகாமல் குழந்தை பிறப்பது அதிகரித்தல்

இச்சட்டத்தினால் உருவாகும் மூன்றாவது விளைவு திருமணமாகாமல் குழந்தை பிறப்பது அதிகமாகுவதாகும்.

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الرَّازِيُّ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْفَضْلِ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ لَبِيبَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ رَافِعٍ عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَزَالُ أُمَّتِي بِخَيْرٍ مَا لَمْ يَفْشُ فِيهِمْ وَلَدُ الزِّنَا فَإِذَا فَشَا فِيهِمْ وَلَدُ الزِّنَا فَيُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ عَزَّ وَجَلَّ بِعِقَابٍ رواه احمد 


இதன் விளைவு சமூகத்தில் தந்தையில்லா குழந்தைகள் அதிகமாகுவர். அது இன்னும தீமைகள் அதிகமாகவே வழிகோலும்.

ஆக ஒரு தீமைக்கு இன்னொரு தீமை தீர்வாகும் போது அதனால் கற்பனை செய்ய முடியாதளவு பல தீமைகள் உருவாகும் என்பதற்கு இது பொருத்தமான உதாரணம்.

இதற்கான தீர்வுகள் என்ன?

ஐந்து வயது சிறுமி கற்பழிக்கப்படுகின்றாள் என்றால்,ஐந்து சிறுமியை இந்த காமுகர்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதையும், அவர்களின் அத்துமீறிய பாலியல் வேட்கையையும்  நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதற்கு உரிய தீர்வுகளை அரசும் , சமூகமும் மேற்கொள்ளவில்லையெனில், இனிவரும் காலங்களில் இது அதிகமாகுவதை தவிர்க்க முடியாது.

1.திருமணத்தை லேசாக்குதல்
பாலியல் ஆசை கொண்டவன் திருமணம் செய்வதற்குரிய தடை அகற்றப்பட வேண்டும். பாலியல் வேட்கைக்கு இயற்கையான வடிகால் திருமணமே. அது லேசாக்கப்பட வேண்டும்.

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ قَالَ
دَخَلْتُ مَعَ عَلْقَمَةَ وَالْأَسْوَدِ عَلَى عَبْدِ اللَّهِ فَقَالَ عَبْدُ اللَّهِ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَابًا لَا نَجِدُ شَيْئًا فَقَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ الشَّبَابِ مَنْ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ  رواه البخاري


தற்காலத்தில் திருமணத்திற்கு வயதை தடையாக்கி வைத்திருப்பது போன்று இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களும் படிப்பு, வேலை, வீடு கட்டுதல் , தொழில் ஆரம்பித்தல் என பல காரணங்களினால் திருமணங்களை தள்ளிப் போடுகிறார்கள்.

நகர்ப்புற மயமாக்கலினால் இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்கள் நகரங்களில் பெற்றோர் கண்காணிப்பின்றி நண்பர்களுடன் தங்கி இருப்பது அதிகரித்துள்ள நிலையில், முறை தவறிய உறவுகளுக்கு அவர்கள் வேகமாக இழுக்கப்படுவதற்கு முக்கிய காரணம் திருமணங்களை தள்ளி போடுவதே.

பெரிய பெரிய ஆசைகளால் திருமணத்தை தள்ளிப் போடாமல், இருப்பதை கொண்டு திருமணம் செய்யுமாறு கட்டளையிடும் இஸ்லாம் திருமணத்திற்கு பிறகு அல்லாஹ் வாழ்க்கையை வளப்படுத்துவான் என்று வாக்களி்க்கிறது.


قال الله تعالي : وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ  24:32

2.விபச்சாரத்தை தவறு என உணர்த்துதல்

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ أَخْبَرَنِي عَمْرُو بْنُ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ
كَانَ رَجُلٌ يُقَالُ لَهُ مَرْثَدُ بْنُ أَبِي مَرْثَدٍ وَكَانَ رَجُلًا يَحْمِلُ الْأَسْرَى مِنْ مَكَّةَ حَتَّى يَأْتِيَ بِهِمْ الْمَدِينَةَ قَالَ وَكَانَتْ امْرَأَةٌ بَغِيٌّ بِمَكَّةَ يُقَالُ لَهَا عَنَاقٌ وَكَانَتْ صَدِيقَةً لَهُ وَإِنَّهُ كَانَ وَعَدَ رَجُلًا مِنْ أُسَارَى مَكَّةَ يَحْمِلُهُ قَالَ فَجِئْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى ظِلِّ حَائِطٍ مِنْ حَوَائِطِ مَكَّةَ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ قَالَ فَجَاءَتْ عَنَاقٌ فَأَبْصَرَتْ سَوَادَ ظِلِّي بِجَنْبِ الْحَائِطِ فَلَمَّا انْتَهَتْ إِلَيَّ عَرَفَتْهُ فَقَالَتْ مَرْثَدٌ فَقُلْتُ مَرْثَدٌ فَقَالَتْ مَرْحَبًا وَأَهْلًا هَلُمَّ فَبِتْ عِنْدَنَا اللَّيْلَةَ قَالَ قُلْتُ يَا عَنَاقُ حَرَّمَ اللَّهُ الزِّنَا قَالَتْ يَا أَهْلَ الْخِيَامِ هَذَا الرَّجُلُ يَحْمِلُ أَسْرَاكُمْ قَالَ فَتَبِعَنِي ثَمَانِيَةٌ وَسَلَكْتُ الْخَنْدَمَةَ فَانْتَهَيْتُ إِلَى كَهْفٍ أَوْ غَارٍ فَدَخَلْتُ فَجَاءُوا حَتَّى قَامُوا عَلَى رَأْسِي فَبَالُوا فَظَلَّ بَوْلُهُمْ عَلَى رَأْسِي وَأَعْمَاهُمْ اللَّهُ عَنِّي قَالَ ثُمَّ رَجَعُوا وَرَجَعْتُ إِلَى صَاحِبِي فَحَمَلْتُهُ وَكَانَ رَجُلًا ثَقِيلًا حَتَّى انْتَهَيْتُ إِلَى الْإِذْخِرِ فَفَكَكْتُ عَنْهُ كَبْلَهُ فَجَعَلْتُ أَحْمِلُهُ وَيُعْيِينِي حَتَّى قَدِمْتُ الْمَدِينَةَ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْكِحُ عَنَاقًا فَأَمْسَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيَّ شَيْئًا حَتَّى نَزَلَتْ
{ الزَّانِي لَا يَنْكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنْكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ وَحُرِّمَ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ }رواه الترمذي

3.கவர்ச்சிகரமாக அலங்காரமிட்டு திரிவது பாவம் என பெண்களுக்கு உணர்த்துதல்

قال الله تعلي  وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى 33:33

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه البخاري

4.ஆண் – பெண் இரு பாலருக்கும் கண்ணியமான நடத்தைகளை கற்றுத் தருதல்

முதலில் வெட்கத்தை கற்றுத் தர வேண்டும். நவீன உலகில்வெட்கம் கெட்டத்தனம் மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக நாணத்தின் மறுவுருவமாக திகழ வேண்டிய பெண்களிடம் இது மிக அதிகமாகவே குறைந்துள்ளது.


حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ عَنْ أَبَانَ بْنِ إِسْحَقَ عَنْ الصَّبَّاحِ بْنِ مُحَمَّدٍ عَنْ مُرَّةَ الْهَمْدَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَحْيُوا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَسْتَحْيِي وَالْحَمْدُ لِلَّهِ قَالَ لَيْسَ ذَاكَ وَلَكِنَّ الِاسْتِحْيَاءَ مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ أَنْ تَحْفَظَ الرَّأْسَ وَمَا وَعَى وَالْبَطْنَ وَمَا حَوَى وَلْتَذْكُرْ الْمَوْتَ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الْآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ اسْتَحْيَا مِنْ اللَّهِ حَقَّ الْحَيَاءِ
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبَانَ بْنِ إِسْحَقَ عَنْ الصَّبَّاحِ بْنِ مُحَمَّدٍ رواه الترمذي


வெட்கத்தின் முதல்படி பார்வையை தாழ்த்துவதாகும். பெண்கள் மீதான வன்முறைக்கு பார்வையே முதல் அம்பாக இருப்பதால் இரு பாலரையும் பார்வையை தாழ்த்தும்படி திருக்குர்ஆன் கூறுகின்றது.

قال الله تعالي : قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آَبَائِهِنَّ أَوْ آَبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ 24:30,31

கண்ணியமாக பேசுவதை கற்றுத் தர வேண்டும். பெண்கள் அந்நிய ஆண்களிடம் குழைந்து குழைந்து பேசுவதும், கொஞ்சும் வண்ணம் பேசுவது கண்ணிமல்ல.. அவ்வாறே ஆண்கள் பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவதும் கண்ணிமல்ல..

பார்வைக்கு அடுத்து தீமை அளிப்பதில் பேச்சு முக்கியப் பங்கு வகிக்கும்.
قال الله تعالي: وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا 2:83
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்- பெண் கெட்ட வார்த்தைகளில், ஆபாச வார்த்தைகளை பேசுவதை தவிர்ந்திருக்க வேண்டும்.

قال الله تعالي: لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ 4:148
இதற்கெல்லாம் அப்பால் எல்லை மீறிடுவோர் மீது ஷரிஅத் சட்டங்களை தயங்காமல், தாமதம் செய்யாமல் அமல்படுத்துதல் இவையே குற்றங்கள் குறைய வழி வகுக்குமே தவிர மற்றவை அனைத்தும் குற்றங்கள் அதிகரிக்கவே உதவும்.

Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.