உள்ஹிய்யாவும் பொது சுகாதாரமும்
நாளைய தினமும், அதற்கடுத்த நாட்களும் தனியாகவோ அல்லது கூட்டு என்ற அடிப்படையிலோ நாம் குர்பானியின் அமலை நிறைவேற்ற இருக்கும் நிலையில் சுத்தம்  -சுகாதாரம் குறித்து நமது மார்க்கம் வலியுறுத்தும் கருத்துக்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கொசுக்களால் பல்வேறு நோய்கள் மக்களை தொல்லைப்படுத்தி வருகின்றன. தனி வார்டு ஏற்படுத்தி சிகிச்சை செய்யும் அளவுக்கு டெங்கு காய்ச்சலும் தமிழகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் சுத்தம் – சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியமே.
தனி மனித சுத்தமும் – சுகாதாரமும்
சுத்தமும் சுகாதாரமும் தான் ஆரோக்கியத்தின் முதல் படியாகும். ஆரோக்கியமான வாழ்க்கையை அல்லாஹ்வின் அருள் என்றும்; ஆரோக்கியத்தை பேணுவதில் அலட்சியமாக இருந்து விடக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்தும்.
5933 - حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ هُوَ ابْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ  رواه البخاري
சுத்தம் ஒரு கடமை
சுத்தம் செய்தல் இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக கருதப்படுகிறது. அது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றும் கூட.
இஸ்லாமிய ஷரிஅத் சட்ட நூல்கள் எல்லாமே ‘சுத்தம்’ என்ற தலைப்பில் தான் தொடங்கப்படுகின்றன.
மதம் சார்ந்த, மதம் சாராத வேறு எந்த சட்ட நூல்களிலும் இத்தகைய தொடக்கத்தை காண இயலாது.
மார்க்க சட்டங்களை படிக்கச் செல்லும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாமிய கல்லூரிகளில் முதலில் சுத்தம் சம்மந்தப்பட்ட சட்டம் தான் சொல்லித் தரப்படும்.
சுத்தம் - சுகாதாரமயமாக்கலில் இஸ்லாத்தின் பங்களிப்பு
இன்று மேற்கத்திய நாடுகள் சுத்தம் – சுகாதாரத்தில் உலகில் முன்னுதாரணமாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறே நமது இந்திய தேசத்தில் சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யும் பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் தங்களை சுத்தமான சமுதாயம் என்று புழகாங்கிதம் அடைகின்றனர்.
உண்மையில் சுத்தம் – சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்திய மார்க்கம் இஸ்லாமே.
சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம்.
328 - حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا يَحْيَى أَنَّ زَيْدًا حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَّامٍ حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ رواه مسلم
இஸ்லாமிய மத நம்பிக்கைக்கே ஈமான் என்று கூறப்படும். சுத்தமாக இருப்பதும், சுத்தம் செய்வதும் இஸ்லாமிய மத நம்பிக்கையில் பாதி என்பதே அந்நபிமொழியின் விளக்கம். சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை மத நம்பிக்கையில் பாதி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதற்கு அன்றைய உலகில் மத நம்பிக்கையின் பெயரால் அசுத்த கலாச்சாரம் ஆதரிக்கப்பட்டதே மிக முக்கிய காரணமாகும்.
துறவறத்தில் எல்லை மீறி நடந்த கிறிஸ்தவ துறவிகள் மத நம்பிக்கையின் பெயரால் அசுத்தமாகவும், சுகாதாரக் கேடாகவும் வாழ்ந்தனர்.
கிணறுகள், குகைகள், கல்லறைகள் போன்ற இடங்களில் வாழ்ந்த அவர்கள் உடம்பை சுத்தமாக வைத்திருந்தால் ஆத்மா சுத்தமடையாது என்று கருதினார்கள்.
அவ்வாறே எப்போதும் ஆடை அணியாதவர்களும் அவர்களில் உண்டு. நீண்ட சடை வளர்த்து அதில் தங்களை அவர்கள் மறைத்துக் கொள்வார்கள்.
உடல் உறுப்புகளை கழுகுவதை அவர்கள் பாவமாக நினைத்தார்கள். சுத்தத்தை விட்டும் மிக தூரமாகவும், அழுக்கிலும், நஜீஸிலும் அதிகம் உழல்பவர்களே அவர்களில் மிக இறையச்சம் உள்ளவர்களாக பார்க்கப்பட்டார்கள்.
Macarius of Egypt (ca. 300 – 391) மகாரியூஸ் என்ற துறவி சுமார் ஆறு மாதங்கள் ஆடையின்றி கொசுக்கள் கடிக்கும்படி சதுப்பு நிலத்தில் இருந்தாராம். அத்துடன் எப்போதும் 80 பவுண்டு எடையுள்ள இரும்பை தூக்கிக் கொண்டு தான் நிற்பாராம். அவரது சீடர் ஏசிபியஸ் (Eusebius c. AD 263 – 339) 150 பவுண்டு எடையுள்ள இரும்பை தூக்கிக் கொண்டு நிற்பாராம். பாழும் கிணற்றில் மூன்று ஆண்டுகள் தங்கியவர் அவர்.
பாதிரியார் ஏதனஸியஸ் Athanasius of Alexandria  (b. ca. 296-298 – d. 2 May 373)பெருமையோடு கூறுகிறார்.
”பாதிரியார் அந்தோணி Anthony (ca. 251–356) கால்களை கழுகும் பாவத்தை வாழ்க்கையில் நீண்ட காலம் செய்யவில்லை.”
பாதிரியார் ஆப்ரகாம் தமது முகத்திற்கும் , கால்களுக்கும் ஐம்பது வருடங்கள் தண்ணீரையே காட்டவில்லையாம். இதை நாம் கூறவில்லை. கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் ஒருவரே கூறுகிறார். அவர் தான்
 பிரபல ஐரோப்பிய வரலாற்றாசிரியர்  வில்லியம் எட்வர்ட் ஹார்ட்போல் லேக்கி (William Edward Hartpole Lecky) அவர்
தமது ஹிஸ்டரி ஆஃப் இரோப்பியன் மாரல்ஸ் (History of European Morals) எனும் நூலில் கூறுவதாவது:
For six months, it is said, St. Macarius of Alexandria slept in a marsh, and exposed his body naked to the stings of venomous flies.
He was accustomed to carry about with him eighty pounds of iron.
His disciple, St. Eusebius, carried one hundred and fifty pounds of iron, and lived for three years in a dried-up well. (vol- 2. Chap-4. page 107)
The cleanliness of the body was regarded as a
pollution of the soul, and the saints who were most admired had become one hideous mass of clotted filth.
St. Athanasius relates with enthusiasm how St. Antony, the patriarch of monachism, had never, to extreme old age, been guilty of washing his feet.
St. Abraham the hermit, however, who lived for fifty years after his conversion, rigidly refused from that date to wash either his face or his feet. (vol- 2. Chap-4. page 109) (இந்நூல் இணையதளத்தில் free download ஆக கிடைக்கிறது.)
இவ்விடம் ஒரு விஷயம் சிந்திக்கத்தக்கது. பல்லாண்டுகள் குளிக்காமல், உடல் உறுப்புகளை கழுகாமல் வாழ்ந்த பாதிரியார்கள் மனிதர்கள் தான். ஸ்கலிதம் (ஜனாபத்) ஏற்படாமல் இருக்க அவர்கள் ஒன்றும் வானவர்கள் அல்ல. குளிக்காமல் வாழ்ந்த காலங்களில் ஒரு தடவை கூட இவர்களுக்கு ஜனாபத் (ஸ்கலிதம்) ஏற்படவில்லை என்று கூற முடியாது. இத்தகைய தொடக்கு மனிதர்களே இறை வணக்கங்களுக்கு தலைமையேற்றனர். இறை ஆலயங்களில் வாழ்ந்தனர். இறை ஆலயங்களும், இறை வணக்கங்களும் அசுத்தத்திலும், தொடக்கிலும் சிக்கி; மதம், இறை நெருக்கம், துறவறம் போன்றவற்றின் பெயரால் உலகம் முழுவதும் சுகாதாரக் கேடுகள் தலைவிரித்தாடியதால் தான் ஒரு இறைத்தூதரை அனுப்பி சுகாதாரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டிய நிலையும், ‘சுத்தம் மத நம்பிக்கையில் பாதி’ என்று கூற வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
இஸ்லாம் வலியுறுத்தும் தனிமனித சுகாதாரம்
தனிமனிதர் ஒருவர் தனது உடல், உடை, இருப்பிடம் ஆகியவற்றை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் கட்டளையாகும்.
1.உடல் சுத்தம்
முஸ்லிம் ஒருவா் தினமும் ஐந்து முறை தொழுகைக்காக முகம்,கை, கால்களை கழுக வேண்டும். தலையில் நீரை தடவ வேண்டும். இது மதக் கடமை.
ஜனாபத் ஏற்பட்டால் குளிப்பது கடமை.
قال لله تعالي : يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا 5:6
முகத்தையும், கைகளையும் கழுகுவதை ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் பாவமாக கருதி வந்த காலத்தில் அவற்றை கழுகினால் பாவங்கள் அழியும் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.
360 - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ح و حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ وَاللَّفْظُ لَهُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ أَوْ الْمُؤْمِنُ فَغَسَلَ وَجْهَهُ خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلَاهُ مَعَ الْمَاءِ أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنْ الذُّنُوبِ  رواه مسلم
மல, ஜலம் கழித்த பின்பு நீரால் சுத்தம் செய்தல்
இது இஸ்லாத்தில் தனி மனித சுத்தம் சம்மந்தப்பட்ட கடமைகளில் உள்ளதாகும். மல, ஜலம் கழித்த பின்பு மறைவிடங்களை நீரால் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடும். அதில் அலட்சியம் காட்டுபவர்கள் கப்ரில் வேதனை செய்யப்படுவார்கள் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
19 - حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ قَالَ سَمِعْتُ مُجَاهِدًا يُحَدِّثُ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا يُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ الْبَوْلِ وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ثُمَّ دَعَا بِعَسِيبٍ رَطْبٍ فَشَقَّهُ بِاثْنَيْنِ ثُمَّ غَرَسَ عَلَى هَذَا وَاحِدًا وَعَلَى هَذَا وَاحِدًا وَقَالَ لَعَلَّهُ يُخَفَّفُ عَنْهُمَا مَا لَمْ يَيْبَسَا رواه ابو داود
நீரால் சுத்தம் செய்தலும் பொது சுகாதாரமும்
உலகில் மல, ஜலம் கழித்து நீரால் சுத்தம் செய்யும் சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே.
1963 –ம் பிரிட்டனில் உள்ள துன்தி (Dundee) நகரில் டைஃபாய்டு (Typhoid) காய்ச்சல் பரவியது. காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முயன்றும் முடியவில்லை. மிக வேகமாகவே பரவியது. கடைசியில் நோய் பரவலுக்கு மலம் கழித்த பின்பு தண்ணீர்க்கு பதிலாக பேப்பரை பயன்படுத்தவதே காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. (ஆதாரம்: மஜல்லதுல் கீமா அல் அரேபிய்யா المجلة الخيمة العربية)
நீரால் சுத்தம் செய்த மதீனாவாசிகளைப் புகழ்ந்த திருக்குர்ஆன்
قال الله تعالي: فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ 9:108
பொது கழிப்பிட வசதிகளில் முஸ்லிம் சமுதாயம்
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நாட்டில் கோவில்களை விட கழிப்பறைகள் மிக முக்கியம். நாட்டில் எத்தனை கோவில்கள் உள்ளன என்பது முக்கியமல்ல.. கழிப்பறைகள் தான் மிக முக்கியம் என்று பேசினார் (தினமணி அக் – 8 2012 )
உலகிலேயே ஆலயங்களில் கழிப்பறை வசதி வைத்துள்ள ஒரே சமுதாயம் முஸ்லிம் சமுதாயம் மட்டுமே.
2.உடை சுத்தம்
قال الله تعلي: وَثِيَابَكَ فَطَهِّرْ 74:4
இவ்வசனம் நபித்துவத்தின் ஆரம்ப காலத்தில் இறங்கியதாகும்.
3.சுகாதாரமான இடம்
வசிக்கும் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
2723 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا خَالِدُ بْنُ إِلْيَاسَ عَنْ صَالِحِ بْنِ أَبِي حَسَّانَ قَال سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ
إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا أُرَاهُ قَالَ أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ رواه الترمذي

4205 - حدثنا علي قال : نا زيد بن أخزم الطائي قال : نا أبو داود الطيالسي قال : نا إبراهيم بن سعد ، عن الزهري ، عن عامر بن سعد ، عن أبيه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « طهروا أفنيتكم ، فإن اليهود لا تطهر أفنيتها »  رواه الطبراني في المعجم الاوسط
பொது சுகாதாரம்
1.பொது இடங்களை சுத்தமாக வைத்திருத்தல்
இஸ்லாம் பொது சுகாதாரத்தை வலியுறுத்துகின்றது. பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றது. ஏனெனில் முழு பூமியை அல்லாஹ் சுத்தமாகவே படைத்துள்ளான்.ஆதலால் அதன் சுத்தத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும்.
811 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ عَنْ رِبْعِيٍّ عَنْ حُذَيْفَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فُضِّلْنَا عَلَى النَّاسِ بِثَلَاثٍ جُعِلَتْ صُفُوفُنَا كَصُفُوفِ الْمَلَائِكَةِ وَجُعِلَتْ لَنَا الْأَرْضُ كُلُّهَا مَسْجِدًا وَجُعِلَتْ تُرْبَتُهَا لَنَا طَهُورًا إِذَا لَمْ نَجِدْ الْمَاءَ وَذَكَرَ خَصْلَةً أُخْرَى رواه مسلم
மல, ஜலம் கழிக்கும் சமயங்களில் கட்டடங்களில் அல்லது மறைவில் தடுப்பு ஏற்படுத்தி கழிக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டதின் பின்னணி எல்லா இடத்தையும் அசுத்தப்படுத்தி விடக்கூடாது என்பதே.
2. பொது பாதைகளை சுத்தமாக வைத்திருத்தல்.
பாதைகளை அசுத்தப்படுத்தியவர்கள் சாபத்திற்குரியவர்கள் என்றார்கள் அண்ணல் நபி (ஸல்)
23 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اتَّقُوا اللَّاعِنَيْنِ قَالُوا وَمَا اللَّاعِنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظِلِّهِمْ رواه مسلم
3. பொது நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருத்தல்
மக்கள் குடிக்கும் அல்லது குளிக்கும் பொது நீர் நிலைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடும். அதில் அசுத்தம் கலப்பதே பலவிதமான நோய்களுக்கு காரணமாகிறது.
424 - و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ هِشَامٍ عَنْ ابْنِ سِيرِينَ عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ رواه مسلم
24 - حَدَّثَنَا إِسْحَقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ أَبُو حَفْصٍ وَحَدِيثُهُ أَتَمُّ أَنَّ سَعِيدَ بْنَ الْحَكَمِ حَدَّثَهُمْ قَالَ أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ حَدَّثَهُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ الْبَرَازَ فِي الْمَوَارِدِ وَقَارِعَةِ الطَّرِيقِ وَالظِّلِّ رواه ابو داود
தற்போதைய மழைக் காலத்தில் அரசின் அலட்சியத்தால் சுகாதாரக் கேடுகள் வியாபித்து நிற்கின்றன. இதன் விளைவு டெங்கு, டைஃபாய்டு, காலரா, மலேரியா போன்ற நோய்கள் தமிழகத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் மற்றும் ஊர் புறங்களில் தெருவில் வைத்து குர்பானி கொடுக்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது.வீட்டு வாசலில் வைத்து குர்பானி கொடுப்பது தவறல்ல..என்றாலும் குர்பானி முடிந்த பிறகு அவ்விடத்தை நன்றாக நீராலும், மண்ணாலும் சுத்தம் செய்து விட வேண்டும், ஏனெனில் பாதையை எந்தக் காரணம் கொண்டும் அசுத்தப்படுத்தப்படுத்துவதை நமது மார்க்கம் ஏற்காது.
4747 - حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ أَبَانَ بْنِ صَمْعَةَ حَدَّثَنِي أَبُو الْوَازِعِ حَدَّثَنِي أَبُو بَرْزَةَ قَالَ
قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ قَالَ اعْزِلْ الْأَذَى عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ رواه مسلم
முஸ்லிம்களின் பகுதிகள் அசுத்தமாக இருப்பது ஏன்?
நமது இந்திய தேசத்தில் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் வாழும் பகுதிகள் அசுத்தமாக இருப்பதற்கு முஸ்லிம்கள் காரணமல்ல.. அரசின் அலட்சியமும், பாரபட்சமும் தான் காரணம். முஸ்லிம் பகுதிகள் வேண்டுமென்றே பாரபட்சமாக நடத்தப்படுகின்றன. இஸ்லாமியர்கள் ஆட்சி நடத்தும் முஸ்லிம்க நாடுகள் பொது சுகாதாரத்தில் முன்னணியில் நிற்பதை உலகம் நன்கறியும்.
பொது சுகாதாரத்தில் நமக்கு யாரும் பாடம் நடத்த தேவையில்லை. தனிமனித சுகாதாரத்திலும்,பொது சுகாதாரத்திலும் இவ்வுலகில் புரட்சி கண்டவர்கள் நாம் தான்.
தியாக உணர்வு நிரம்பியும், பொது சுகாதாரத்தை பேணியும் நாம் குர்பானி கொடுத்தால் நிச்சயம் நமது அமல் இவ்வுலகிலும், மறுவுலகிலும் நமக்கும்- மற்றவர்களுக்கும் பலன் தரும். அல்லாஹ் போதுமானவன்.


Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.