உலகிலுள்ள எல்லா சமுதாய மக்களும் வருடத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களை முக்கிய பண்டிகை நாட்களாக கொண்டாடவே செய்கின்றனர்.
முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்தில் பண்டிகை நாட்களாக இரு நாட்கள் அல்லாஹ் – ரசூலினால் தரப்பட்டுள்ளன. என்றாலும் மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு.
1 முக்கியமான இஸ்லாமியக் கடமையை நிறைவேற்றிய பின்பு இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
 ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள்
நோன்பு இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை மட்டுமல்ல… அல்லாஹ்வின் அளப்பெரும் அருளையும் , அன்பையும் பெற்றுத்தரும் கடமை. அல்லாஹ் ‘தானே கூலி’ என்று சொன்ன கடமை. வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒப்பற்ற கடமை. சுமார் 30 நாட்கள் எல்லோருக்கும் பசியை உணர்த்திய கடமை. அதற்கு பிறகு ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றன.
 ஈதுல் அள்ஹா எனும் ஹஜ்ஜுப் பெருநாள்
இஸ்லாத்தின் இறுதிக் கடமையும், மிக முக்கியமான கடமையும், வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒப்பற்ற கடமையுமான ஹஜ் எனும் கடமைக்கு பிறகு கொண்டாடப்படுகின்றது.
2. இஸ்லாமிய பண்டிகைகள் மனிதர்களின் பிறப்பு, இறப்பு ஆகியவற்றை மையமாக கொண்டவை அல்ல.
கிறிஸ்துமஸ் இயேசுவின் பிறந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி அரக்கன் ஒருவன் கொல்லப்பட்ட நாளில் கொண்டாடப்படுகிறது
3. இஸ்லாமிய பண்டிகைகள் இறைவணக்கத்தை கொண்டே ஆரம்பிக்கப்படும்.
பெருநாள் அன்று முதல் வேலை தொழுகையே
903 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالْأَضْحَى إِلَى الْمُصَلَّى فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلَاةُ ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ أَوْ يَأْمُرَ بِشَيْءٍ أَمَرَ بِهِ ثُمَّ يَنْصَرِفُ
قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلْ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى أَوْ فِطْرٍ فَلَمَّا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ فَخَطَبَ قَبْلَ الصَّلَاةِ فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ فَقَالَ أَبَا سَعِيدٍ قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لَا أَعْلَمُ فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلَاةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلَاةِ
رواه البخاري

4.இஸ்லாமிய பண்டிகைகள் தர்மத்தை மையமாக கொண்டவை…
.
அ) ஈதுல் ஃபித்ரில் தொழுகைக்கு முன்பு அரிசி அல்லது கோதுமை தர்மம் கொடுக்க வேண்டும்.
1414 - حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كُنَّا نُخْرِجُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفِطْرِ صَاعًا مِنْ طَعَامٍ وَقَالَ أَبُو سَعِيدٍ وَكَانَ طَعَامَنَا الشَّعِيرُ وَالزَّبِيبُ وَالْأَقِطُ وَالتَّمْرُ
رواه البخاري

ஆ) ஈதுல் அள்ஹாவில் தொழுகைக்கு பின்பு வசதி உள்ளவர்கள் ஆடு அல்லது மாடு அல்லது ஒட்டகம் அறுத்து இறைச்சி தர்மம் கொடுக்க வேண்டும்.
இ) முஸ்லிம்கள் கொண்டாட்ட நாட்களிலும் இறைவனையும், ஏழைகளையும் நினைத்து பார்க்கும் சூழ்நிலையை இஸ்லாம் ஏற்படுத்தி தந்துள்ளது.
ஈ) விழா நாட்களில் செல்வந்தர்கள் தர்மம் தர ஏழைகளை தேடியாக வேண்டும். அவர்களை சந்தித்தாக வேண்டும்.
உ) இஸ்லாமிய பண்டிகைகள் வீண் விரயங்களை அடிப்படையாக கொண்டதல்ல. .ஆதலால் தான் முஸ்லிம்கள் பட்டாசு வெடிக்க முக்கியத்துவம் தருவதில்லை.


  

Leave a Reply

பிரிண்ட் எடுக்க

Print Friendly and PDF

மின்னஞ்சலில்

Sign-Up To Our Free Newsletter!

Subscribe on facebook

முக நூலில் கருத்திடுக

@VELLIMEDAI. Powered by Blogger.